PDA

View Full Version : மகிழம்பூ மனசில் பூக்கும் பூக்கள் எத்தனை..?!!



பூமகள்
03-08-2008, 06:59 AM
தமிழில் சங்க காலத்தில் வழங்கப்பட்ட மலர்களின் பெயர்கள் சமீபத்தில் ஒருதிருமண மண்டபத்தில் மணமக்களை வாழ்த்த கொடுக்கப்பட்ட புத்தகத்தில்அமைந்திருந்தது.படித்ததும் பூமனம் இதழ் விரித்து புன்னகைத்தது.. எத்தனை நாட்கள் இதனைத் தேடியிருப்பேன்..!


அந்த நறுமணத்தை உங்களில் வீச இதோ வருகிறது நூறு பூக்களின் அணி வகுப்பு..!!


ஒரு பூ காணலை… அதற்கு பதில் இந்தப் பூமகளை ஒன்றாக கருதிக் கொள்ளலாம் தானே??!! :D:D
காந்தள்
ஆம்பல்
அனிச்சம்
குவளை
குறிஞ்சிப்பூ
வெட்சி
செங்கொடுவேரி
தேமா
செம்மணிப்பூ
பெருமூங்கிற்பூ
கூவிளம்
எறுளம்பூ
மராமரம் பூ
கூவிரம்
வடவனம்
வாகை
வெட்பாலைப்பூ
செருவிளை
கருவிளம்பூ
பயனி
வாணி
குரவம்
பச்சிளம்பூ
மகிழம்பூ
சாயாம்பூ
அவிரம்பூ
சிறுமூங்கிற்பூ
சூரைப்பூ
சிறுபூளை
குன்றிப்பூ
குருகலை
மருதம்
கோங்கம்
மஞ்சாடிப்பூ
திலகம்
பாதிரி
செருந்தி
அதிரம்
செண்பகம்
கரந்தை
காட்டுமல்லிகை
மாம்பூ
தில்லை
பாலை
முல்லை
கில்லை
பிடவம்
செங்கருங்காலி
வாழை
வள்ளி
நெய்தல்
தாழை
தளவம்
தாமரை
ஞாழல்
மௌவல்
கொகுடி
சேடல்
செம்மல்
சிறுகும்குரலி
வெண்கோடல்
கைதை
சிரபுன்னை
கபஞ்சி
கருங்குவளை
பாங்கர்
மரவம்
தனக்கம்
ஈஙகை
இலவம்
கொன்றை
அரும்பு
ஆத்தி
அவரை
பகன்றை
பலாசம்
அசோகம்
வஞ்சி
பித்திகம்
கருதநாச்சி
தும்பை
துழாய்
நந்தி
நரவம்
தோன்றி
புன்னாகம்
பாரம்
பீர்க்கம்
குருக்கத்தி
சந்தனம்
அகிற்பூ
புன்னை
நரந்தகம்
நாகற்பூ
நள்ளிருள்நாறி
குறுந்தகம்
வேங்கை
எருக்கு
ஆவாரம்பூகுறிப்பு:

மொத்தம் எத்தனை பூக்கள் உள்ளன எனத் தெரியவில்லை.. ஏதேனும் தவறு அல்லது விடுபட்டிருந்தால் சான்றோர்கள் இங்கு சொல்லித் திருத்தும் படி கேட்டுக் கொள்கிறேன்..!:icon_ush::icon_rollout:

poornima
03-08-2008, 07:28 AM
பூமகள் மொத்தம் 104 பூக்கள் என்று நினைக்கிறேன்.பூவெல்லாம் கேட்டுப் பார் படத்தில் கூட சூர்யா சொல்வார் எல்லாப் பூக்களின் பெயர்களை..

இளசு
03-08-2008, 09:09 AM
படித்து நுகர்ந்ததை பகிர்ந்தமைக்கு நன்றி பாமகளே!

சில பூக்கள் மட்டுமே என் சொற்களஞ்சியத்தில் இருப்பதை எண்ணிப்பார்க்கிறேன்.

பூர்ணிமா சொன்ன காட்சி - பொருத்தமான பின்னூட்டம்.

மன்மதன் ஐவகை மலர்களால் எய்வானாமே... அத்தனையும் இங்கிருக்கிறதா?

(இருவாட்சி என மலர் உண்டா?
முருங்கைப்பூ?)

(தலைவருக்கும், அறிஞருக்கும் -
நம் மன்ற விரிவாக்கத்தின்போது பூப்பெயர் தேட பட்டியல் தயார்..)

பூமகள்
03-08-2008, 09:12 AM
ஆமாம் சகோதரி பூர்ணிமா..! தாங்கள் சொன்ன எண்ணிக்கை சரியெனில்.. விடுபட்ட பெயர்களை வழங்கலாமே??!!

பூவெல்லாம் கேட்டுப்பார் - படத்தில் நான் பார்த்ததிலிருந்தே..
சூர்யா சொன்ன பெயர்களை நானும் மனனம் செய்து சொல்ல வேண்டுமென்ற ஆசை..!!

இன்று தான் கிடைத்தது.. மிச்சமுள்ள 5 பூக்கள் என்னென்ன என்று யாரேனும் சொல்லுங்களேன்..!

இளசு
03-08-2008, 09:21 AM
செம்பருத்தி, ரோஜா எல்லாம் சங்ககாலத்துக்குப்பின்னால் வந்தவை என நினைக்கிறேன்.

அத்திப்பூ இப்பட்டியலில் இல்லை.

மனோரஞ்சிதம் மலர்தானே?

(காலிஃப்ளவரும், கொத்தமல்லிப்பூவும்தான்...ஹிஹி..)

மௌவல்தான் - தாமரையா?

மாம்பூவே சிறுமைனாவே
செந்தூரப்பூவே
மல்லிகையே மல்லிகையே
கொத்தமல்லிப்பூவே
பூவரசம்பூ பூத்தாச்சு
தங்கத்தாமரை மகளே

என மலர்ப்பாட்டாய் பதித்த
''நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள்''
என்ற பழைய திரி நினைவாடலில்..

வாசம் பரப்பிய பாமகளுக்கு மீண்டும் நன்றி..

பூமகள்
03-08-2008, 09:29 AM
(இருவாட்சி என மலர் உண்டா?
முருங்கைப்பூ?)
இருவாட்சி என்று ஒரு பூ இருப்பதாக இணையம் சொல்கிறது அண்ணலே..!!

அப்படியெனில்

100. இருவாட்சி

முருங்கைப் பூவை இவையோடு சேர்க்கலாமா??

இன்னும் சில இணையத்தில் கிட்டியது..
அதன் சுட்டி இதோ (http://mathy.kandasamy.net/musings/archives/2005/04/22/186)..!

ஒரு சந்தேகம்..


பிச்சிப் பூ
தாழம் பூ
இவை எல்லாம் சொல்லப்பட்டு விட்டதா இங்கே என்றும் யாரேனும் தெளிவு படுத்தவும்..

இளசு
03-08-2008, 09:32 AM
52 - தாழை சொல்லியாச்சுடா..

54. தாமரை தனியாகவே இருக்கு.. அப்போ பூம்பாவாய் புன்னகை மௌவல்னா என்னா?

98.எருக்கம்பூ - எழுத்துப்பிழை என எண்ணுகிறேன். எருக்கு என வரும்.

சுட்டியைத் தட்டினால் பட்டியல் நீளுதே!

தி.ஜா. எழுதிய செம்பருத்தி நாவலில் யாரும் மதிக்காமல் மிதிக்கும்
வரப்புப்பூ பற்றி சிலாகித்திருப்பார்..

பூமகள்
03-08-2008, 09:35 AM
மனோரஞ்சிதம் பூவும் சேர்க்கலாமெனக் கருதுகிறேன்..

அத்திப் பழம் உண்டிருக்கிறேன்.. அத்திப் பூ.. பார்த்ததே இல்லையே...

"அத்திப் பூத்தாற் போல" என்ற சொல்லாடலுக்கேற்ப.. அத்திப் பூ பூப்பது காண்பதற்கரிய காட்சியா பெரியண்ணா??

அதையும் சேர்க்கலாம்..

இப்போது எண்ணிக்கை..

101. மனோரஞ்சிதம்
102. அத்திப் பூ

ரோஜா இப்போது வந்த பெயரென்றால்.. அப்போது வேறு பெயர்களில் நிச்சயம் சுட்டியிருப்பார்களல்லவா??

தமிழகத்தில் சங்க காலத்தில் ரோஜா இருக்கவில்லையா பெரியண்ணா??

இளசு
03-08-2008, 09:40 AM
காண அரிதாய் நொடிக்குள் நிகழ்ந்து மறைவதை -
அத்தி பூத்தாற்போல் என்பார்கள்..


எட்டாம் வகுப்பில் இதை வாக்கியத்தில் அமைத்து நான் எழுதி
என் தமிழாசான் பாராட்டிய வாசகம்:

தொகுதிக்குள் தம் பிரதிநிதியைப் பார்ப்பது
மக்களுக்கு அத்திப் பூத்தாற்போல் ஆனது..:)


(அப்பவே அரசியல் நிலை இப்படித்தானாக்கும்..)




------

ரோஜாவின் பிறந்தகம் - ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, மத்திய ஆசியா.. அவள் நம் மருமகள்..

தாமரைதான் நம் வீட்டு மகள். நம் தேச மலர்.

(மல்லிகை பாகிஸ்தானின் தேசியமலர்..)

பிச்சிப்பூ வேறு பெயரில் பட்டியலில் இருக்கிறதா எனத் தெரியவில்லை.

வாழைப்பூ இருக்கும்போது முருங்கைப்பூ இருக்கக்கூடாதா என
முருங்கப்பாக்கம் முருகேஷ் முனகுகிறார் பாமகளே!
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4959

------------------------------------

மார்கழி வாசல் அலங்கரிக்கும் பூசணிப்பூ எங்கேம்மா?

பூமகள்
03-08-2008, 09:44 AM
(காலிஃப்ளவரும், கொத்தமல்லிப்பூவும்தான்...ஹிஹி..)ஹீ ஹீ.. அப்படியெனில்..
வாழைப்பூவை சேர்த்தது போல் காலிஃப்ளவருக்கும் ஒரு தமிழ் பெயரிட்டு சேர்த்துடுங்க பெரியண்ணா??!! :D:D

மாதுளம்பூவையும் பட்டியலில் சொல்லலாமா அண்ணா??

54. தாமரை தனியாகவே இருக்கு.. அப்போ பூம்பாவாய் புன்னகை மௌவல்னா என்னா?மௌவல் எனில்.. தமிழ் அகராதியில் தாமரை,முல்லை(lotus; jasmine) என்று அர்த்தம் சொல்லப்பட்டிருக்கிறது பெரியண்ணா..

அப்போ மௌவல் என்றாலும் தாமரையே தான் அல்லவா??!!

பூமகள்
03-08-2008, 09:51 AM
தி.ஜா அவர்கள் சொல்லிய வரப்புப் பூ சேர்த்துக் கொள்ளலாம் எனக் கருதுகிறேன்.. ஆனால் அந்தப் பூ ஒருவேளை சங்க காலத்தில் வேறு பெயர்களில் சுட்டியிருந்தால்??

குழப்பமாக உள்ளதே பெரியண்ணா...

முருகேஷ் முனகுகிறாரெனில் அதனையும் சேர்ப்பது தான் சிறப்போ... அப்போ பூவாகிக் கனியாகும் அத்தனை பூவையும் சொல்லியாக வேண்டுமே..!!

73. ஆத்தி -- இது அச்சுப் பிழையாக இருக்குமோ என்ற சந்தேகம்.. ஆத்திப் பூ சங்ககாலத்தில் வழங்கப்பட்டு வந்திருக்கிறதா என்று சொல்லுங்கள்..
அத்திப் பூ என்று வந்திருக்க வேண்டுமோ??!!

இளசு
03-08-2008, 09:52 AM
மாதுளம்பூவையும் பட்டியலில் சொல்லலாமா அண்ணா??
[/COLOR]

மாதுளம் சொல்லும் பூ.. மறுக்க முடியுமா அண்ணனால்?

-----------------------------

மொட்டு, முகை,அரும்பு, மலர் போல் மௌவலும் பாதி விரிந்த பருவநிலை சொல்லும் சொல் என எண்ணியிருந்தேன்.

சிவாஜி படப்பாடல் வந்தபின் தாமரை எனச் சொன்னார்கள்..

இப்போது முல்லையும் சேர்ந்ததால், பூக்கடையில் குழம்பி நிற்கிறேன்..

--------------------------------------------------------

அவரைக்குப் பூ அழகு..

வைரமுத்துவின் அழகுப்பாடல்களால் கூடுதல் குழப்பம்...

பூமகள்
03-08-2008, 10:00 AM
103. முருங்கைப் பூ
104. மாதுளம் பூ

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பெரியண்ணாவே குழப்பத்தில் என்பதால் இப்போதைக்கு தாமரை வேறு.. மௌவல் வேறாகவே பட்டியலில் அமைந்திருக்கட்டும்.. விரைவில் தெளிந்தபின் மாற்றலாமெனக் கருதுகிறேன் பெரியண்ணா..

அரளிப் பூ காணலையே... சொல்லலாமல்லவா அண்ணா??!!

பூமகள்
03-08-2008, 10:02 AM
அவரைக்குப் பூ அழகு..
வைரமுத்துவின் அழகுப்பாடல்களால் கூடுதல் குழப்பம்...
"பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப் பூ..
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ.." - என்ற பாடல் ஒன்று வருமே பெரியண்ணா..!

இன்னும் குழம்ப நானும் கேட்டு வருகிறேன்..!!

poornima
03-08-2008, 10:05 AM
மன்மதன் ஐவகை மலர்களால் எய்வானாமே... அத்தனையும் இங்கிருக்கிறதா?



மன்மதனுக்கு ஐந்து மலர் அம்புகள் உண்டு.1.தாமரை 2. மாம்பூ 3. அசோகம் 4. முல்லை 5.நீலம்

poornima
03-08-2008, 10:08 AM
இந்தப் பகுதியே கமகமவென்று மணக்கிறது.. நன்றி பூமகளுக்குன் இளசு அவர்களுக்கும்

இளசு
03-08-2008, 11:00 AM
வாசலிலே பூசணிப்பூ வச்சதென்ன வச்சதென்ன.. (ராமராஜன் +கௌதமி படம்)

செவ்வரளித் தோட்டத்திலே உன்ன நெனச்சு
சேந்துகிட்டு பாடுதம்மா இந்த மனசு.. (இளையராஜா குரலில்..)

செம்பருத்தி செம்பருத்தி
பூவைப்போலப் பெண்ணொருத்தி..

தாராபுரம் தாம்பரம் -உன்
தலையில கனகாம்பரம்

குங்குமப்பூவே கொஞ்சுபுறாவே

வசந்தமுல்லை போலே வந்து

அடுக்கு மல்லிகை - அது ஆள் புடிக்குது..

--- பல பண்பலைகளும் ஒன்றாய் மோதும் இசைக்கடற்கரையோரம் நான்..

பூமகள்
03-08-2008, 11:07 AM
பாரிஜாதப் பூவே... என்
தேவலோகத் தேனே..!

செண்பகமே... செண்பகமே..!
தென் பொதிகை சந்தனமே..!

முல்லை மலர் மேலே..
மௌய்க்கும் வண்டு போலே..!

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்..
என் மீது மோதுதம்மா..!

லில்லி மலருக்கு கொண்டாட்டம்..!

மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவா??!!

மார்கழிப் பூவே.. மார்கழிப் பூவே..
உன் மடி மேலே ஓர் இடம் வேண்டும்..!

இன்னும் கொஞ்ச பாடல்கள் உங்களோடு ரசித்தபடியே நானும் பெரியண்ணா..!! :)

இளசு
03-08-2008, 01:00 PM
மன்மதனுக்கு ஐந்து மலர் அம்புகள் உண்டு.1.தாமரை 2. மாம்பூ 3. அசோகம் 4. முல்லை 5.நீலம்


உங்களைப்பற்றிய என் கணிப்புகள் பூரணம் ஆகத் தொடங்கியிருப்பதில் மகிழ்கிறேன் பூர்ணிமா..


-----------------------

பாமகளின் இதய அலைவரிசை இனிமையும் வாசமுமாய்..

பரவட்டும் இன்னும் இன்னும்..
வாசத்தில் வானமும் வசப்படட்டும்..

poornima
03-08-2008, 02:59 PM
உங்களைப்பற்றிய என் கணிப்புகள் பூரணம் ஆகத் தொடங்கியிருப்பதில் மகிழ்கிறேன் பூர்ணிமா..


சமயத்தில் நீங்கள் புரியாத புதிர் - விளங்காத விடை

poornima
03-08-2008, 02:59 PM
லில்லி மலர், மெல்போர்ன் மலர்,சைப்ரஸ் மலர் இவையெல்லாம் வெளிநாட்டு மலர்களாச்சே.. இதற்கு பூமகள் சபையில் இடம் உண்டா?

செல்வா
03-08-2008, 03:41 PM
பூப்பூவாப் பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ
பூவிலேச் சிறந்தப் பூ என்ன பூ?
அன்பு....
இந்தப் பூக்கு இங்கே இடம் உண்டா....

(கோச்சுக்காதீங்க...
ஆளாளுக்கு நிறைய சொல்லுறீங்க ஏதோ எனக்குத் தெரிஞ்சது சொல்றேன்)

யவனிகா
03-08-2008, 05:27 PM
அண்ணனும் தங்கையும் சேர்ந்து பூ ஆராய்சி செய்ய ஆரம்பிச்சாச்சு போல..அப்பப்ப நானும் வந்து வாசம் புடிச்சுக்கிறேன்...

யவனிகா
03-08-2008, 05:28 PM
பூப்பூவாப் பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ
பூவிலேச் சிறந்தப் பூ என்ன பூ?
அன்பு....
இந்தப் பூக்கு இங்கே இடம் உண்டா....

(கோச்சுக்காதீங்க...
ஆளாளுக்கு நிறைய சொல்லுறீங்க ஏதோ எனக்குத் தெரிஞ்சது சொல்றேன்)

என்ன செல்வா இது...அன்புக்கு வாசனை உண்டா...?வம்புக்கு சொல்லிருக்கீங்களா?

mukilan
03-08-2008, 05:45 PM
சங்ககாலத்தின் பூக்களின் அணிவருசை!
நிகழ்காலத்தின் பாக்களின் தனிவருசை!

என தகவல்கள் கொட்டிக்கிடக்கும் பூக்காடு இது!

அனைவரும் அறிய ஏதுவாய் அந்தப் பூக்களின் பட்டியலைப் பதிந்திட்ட "பூ" மகளுக்கும் அதோடு சுவையான பல தகவல்கள் வழங்கிய பூர்ணிமாவிற்கும், பெருமதிப்பிற்குரிய முருங்கப்பாக்கம் முருகேஷிற்கும் என் நன்றி!

பூமகள்
03-08-2008, 05:52 PM
அண்ணனும் தங்கையும் சேர்ந்து பூ ஆராய்சி செய்ய ஆரம்பிச்சாச்சு போல..அப்பப்ப நானும் வந்து வாசம் புடிச்சுக்கிறேன்...
யவனி அக்கா...
வாசம் மட்டும் பிடிச்சிட்டு போனா விடுவோமா?? :eek::eek:
உங்க கைப்பக்குவத்துக்காகத்தானே நான் காத்துட்டு இருக்கேன்..!! :rolleyes::icon_ush:
விடுபட்ட பூவை இந்த பூவுக்காக சொல்லிட்டு போங்களேன்..!! :icon_ush::icon_rollout:

மாதவர்
03-08-2008, 05:53 PM
99 மலர்களை கூறி முடித்தால்
100 வதாக வருவது
சிரிப்பு
ஆமாம் அது
இனிப்பூ!!!

ஆதி
08-08-2008, 01:25 PM
செங்கழுநீர் மலர் விட்டு போச்சோ ?

கழுநீர், கழனி நீரில் படரும் கொடிவகை..

தொகுத்து கொடுத்தமைக்கு பூமகளுக்கு நன்றியும் பாராட்டுக்களும்

arun
20-08-2008, 07:36 PM
ஆகா பூக்களில் இத்தனை வகைகளா உண்மையில் இன்று தான் தெரிந்து கொண்டேன்

தெரிந்து கொண்டு இங்கு பகிர்ந்தமைக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் பூமகளுக்கு...:icon_b: