PDA

View Full Version : காதல் பரிணாமங்கள்



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
02-08-2008, 03:16 PM
இமைகளை உரசிச் செல்லும்
நாலாம் பக்க
பெட்டிச் செய்தியாகத்தான்
அறிமுகமானாள்

கண்களை சுருக்கி
புருவங்களை குவித்து
எதிர் நோக்கப்படும்
தொலை தூர
பரிச்சய முகமாய்
எதிர் நோக்கப்பட்டாள்
அடுத்த சந்திப்புகளில்

மணி நேரத்திற்கு முன்பாக
தொலைக்காட்சியின்
விருப்பத் தொடருக்காய்
காத்தமர்ந்து நிற்கும்
இல்லத்தரசிகளாய்
ஓவ்வொரு வருதல்களிலும்
முச்சந்தி முச்சந்தியாய்
மண்டியிட்டமர வைத்தாள்

அணைந்து போன
பெரு விஷயங்களின்
அணையாத அதன் சலசலப்புகளாய்
ஒவ்வொரு
பார்வை பரிமாற்றங்களிலும்
ஒவ்வொரு அழகுகளை
இறக்கி விட்டுச் சென்றாள்

கழுத்தை கட்டி
களைய மறுக்கும்
உறவினக் குழந்தையாய்
ஒவ்வாரு விடை பெறுதல்களிலும்
வலுக்கட்டாய உந்துதல்களில்
பிய்த்துக்கொண்டு சென்றாள்

'சொந்தக்காரங்களுக்கு சொல்லி அனுப்புங்க"
கரம் விடப்பட்ட நோயாளியாய்
இனி இருந்தும் உபயகரப்படாத
உயிரை மட்டும் சொச்சமாய்
மிச்சமிட்டுச் சென்றாள்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி

shibly591
02-08-2008, 04:04 PM
இமைகளை உரசிச் செல்லும்
நாலாம் பக்க
பெட்டிச் செய்தியாகத்தான்
அறிமுகமானாள்

கண்களை சுருக்கி
புருவங்களை குவித்து
எதிர் நோக்கப்படும்
தொலை தூர
பரிச்சய முகமாய்
எதிர் நோக்கப்பட்டாள்
அடுத்த சந்திப்புகளில்

மணி நேரத்திற்கு முன்பாக
தொலைக்காட்சியின்
விருப்பத் தொடருக்காய்
காத்தமர்ந்து நிற்கும்
இல்லத்தரசிகளாய்
ஓவ்வொரு வருதல்களிலும்
முச்சந்தி முச்சந்தியாய்
மண்டியிட்டமர வைத்தாள்

அணைந்து போன
பெரு விஷயங்களின்
அணையாத அதன் சலசலப்புகளாய்
ஒவ்வொரு
பார்வை பரிமாற்றங்களிலும்
ஒவ்வொரு அழகுகளை
இறக்கி விட்டுச் சென்றாள்

கழுத்தை கட்டி
களைய மறுக்கும்
உறவினக் குழந்தையாய்
ஒவ்வாரு விடை பெறுதல்களிலும்
வலுக்கட்டாய உந்துதல்களில்
பிய்த்துக்கொண்டு சென்றாள்


எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி

அருமை நண்பரே...

இயல்பான வரிகள் அழகாக வெதுக்கப்பட்டுள்ளன..

வாழத்துக்கள்..

மென்மேலும் எதிர்பார்க்கிறேன்..

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
02-08-2008, 06:06 PM
காதல் கவிதைக்கும் எனக்கும் ஏக தூரம். தானாய் உதித்த கரு. பார்க்கலாமென்று எழுதி பார்த்தேன். சுமாராய் இருந்தாலும் நல்லாயிரக்கு என்றதற்கு நன்றிகள் ஷிப்லி.

இளசு
02-08-2008, 11:25 PM
ஜூனைத்

காதல் கவிதை என்றாலும் உங்கள் முத்திரையான வாழ்வின் ஆதாரத்தைத் துளைக்கும் வித்தியாசத் தேடல் பார்வைகள் இங்கும் பாய்ந்திருக்கின்றன.

பாராட்டுகள்!

poornima
03-08-2008, 07:14 AM
//உபயகரப்படாத //

உபயோகப்படாத என்ற பொருளில் வருவதாக் நினைக்க்றேன்.சரியா?

//கழுத்தை கட்டி
களைய மறுக்கும்
உறவினக் குழந்தையாய்
ஒவ்வாரு விடை பெறுதல்களிலும்
வலுக்கட்டாய உந்துதல்களில்
பிய்த்துக்கொண்டு சென்றாள்
//

தளைகளை எல்லாம் உடைத்துக் கொண்டு புறப்பட்டு வரும் வரிகள் என்பது சில சமயங்களிலேயே நிகழ்கிறது. மிக அறிதாய்..

நல்ல கவிதை.. பாராட்டுகள்

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
03-08-2008, 10:07 AM
பாராட்டுக்கு மிக்க நன்றி இளசு அண்ணா.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
03-08-2008, 10:09 AM
//
தளைகளை எல்லாம் உடைத்துக் கொண்டு புறப்பட்டு வரும் வரிகள் என்பது சில சமயங்களிலேயே நிகழ்கிறது. மிக அறிதாய்..


இந்த வரிகள் கொஞ்சம் விளங்க வில்லை பூர்ணிமா. விளக்க இயலுமா?

poornima
03-08-2008, 10:21 AM
விளங்க வைக்க கூடிய அளவுக்கெல்லாம் நான் பெரிய ஆளில்லை :-)

இருப்பினும் முயற்சிக்கிறேன்

கழுத்தைக் கட்டி களைய மறுக்கும் உறவினக்குழந்தை என்பது உவமை.ஆனால் இதைப் பொருத்தும் வரிகளில் ஒவ்வாரு விடை பெறுதல்களிலும் வலுக்கட்டாய உந்துதல்களில் பிய்த்துக்கொண்டு சென்றாள்
எனும்ப்போது ஒட்டியிருத்தலும் பிய்த்தலுமான பொருத்தம் அங்கு சரியாய் காண்பிக்கப்படவில்லை...

ஒட்டியிருந்தது எது - பிரிக்கப்பட்டது எது.. கவிதையை மற்றொரு முறை வாசிக்க எது ஒட்டிக் கொண்டது என்பதை சொல்லாமல் பிய்த்துக் கொண்டு சென்றால் மட்டும் தொக்கி நிற்கிறது என்பதைதான் அவ்விதம் சொன்னேன்.

//கழுத்தை கட்டி
களைய மறுக்கும்
உறவினக் குழந்தையாய்
???????????
ஒவ்வாரு விடை பெறுதல்களிலும்
வலுக்கட்டாய உந்துதல்களில்
பிய்த்துக்கொண்டு சென்றாள்

நான் கேள்விக்குறியிட்ட இடத்தில் மறைந்திருக்கும் வார்த்தையே இந்தக் கவிதையின் இந்த பகுதியை முழுமையாக்குகிறது.உவமையும் உவமானமும் சேரும் இடத்தில் மறைந்திருக்கும் போல உவம உருபு போல் கவிதையில் மறைந்திருக்கும் அந்த வார்த்தை இடம்பெறாமலேயே கவிதை தன்னுடைய முழுமையை நோக்கி பாய்கிறது என்பதாலேயே அப்படி சொன்னேன்

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
03-08-2008, 11:20 AM
உங்கள் அளவிற்கு எனக்கு இலக்கண அறிவு பத்தாது பூர்ணிமா நீங்கள் ;சொல்லியதற்கு பிறகு படிக்கையில்தான் ஏதோ ஒன்று விடுபட்டது போல் தெரிகிறது. இது மற்றவர்களுக்க எப்படி படுகிறது என்பது எனக்கு தெரியவில்லை.எல்லாரின் சார்பாக இளசு அண்ணாவை கேட்டு விடலாம். அண்ணா உங்களுக்கு ஏதாச்சும் படுகிறதா? ஆமென்றால் வந்து கொஞ்சம் தெளிவு படுத்துங்களேன். கற்றுக் கொள்கிறேன்.

இளசு
03-08-2008, 12:57 PM
அன்பு ஜூனைத்

நீங்கள் எதையும் விட்டுவிடவில்லை..
நீங்கள் சொன்னதிலேயே - பிய்த்தலுக்கு முந்திய எதிர்மறையான ஒட்டுதலும் உய்த்துணர முடிகிறது..

எழுதாத சொல்லையும் விளங்க வைக்கும் வரிகளை
சிலாகித்து புகழ்கிறார் பூர்ணிமா..

கவிஞன் படைப்பான், ரசிகன் அதை மேலும் முழுமையாக்குவான் -
இதை நீங்கள் இருவரும் அழகாய்ச் செய்கிறீர்கள்.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
03-08-2008, 01:14 PM
வேண்டுகோளுக்கு பதிலளித்தமைக்கு மிக்க நன்றி அண்ணா.

poornima
03-08-2008, 02:49 PM
நல்லவேளை.. சுனைத் தவறான புரிதலுக்கு போய்விடுவீர்களோ என்று கொஞ்சம் அச்சப்பட்டேன்.. ஆனால் அறிதலுக்கு முயன்றதில் ஒரு பண்பட்ட கவிஞரின் தன்மையை நிரூபித்துவிட்டீர்கள்..

நன்றி அண்ணலே உங்கள் விளக்கத்துக்கு..