PDA

View Full Version : பேருபதேசம்



நாகரா
02-08-2008, 07:05 AM
உதடுகளை அழுத்தி மூடி
நாவை மேலே சுழித்து
வாய்க்குள் அதனைப் பூட்டி
ஓடும் மனத்தைப் பிடித்து
இருதய அமைதியில் நிறுத்தி
சும்மா இருந்தேன் சொல்லற!
பேருணர்வாய் என்னுள் எழுந்து
"இரு தயவாய்" என்ற
பேருபதேசந் தந்தாய்
பேரருளாளன் நீ!