PDA

View Full Version : வேள்வி!



நாகரா
02-08-2008, 06:59 AM
ஞான யோக மெய்க்குண்டத்துள் எழுந்த
சுடச் சுடச் சுடரும் அருட்கனலில்
இருள் சேர் இரு வினை யாவும் பொசுங்க
கற்பூரம் போல் கரைகிறதே மெய்!

ஓவியன்
02-08-2008, 07:20 AM
வினையகற்றும் அருள் எங்கும் பரவட்டும்
அதைத் தேடிப் பற்றும் ஞானம் எங்கும் ஓங்கட்டும்..!!

அவை பாடும் நாகரா அண்ணனின் கவிதைகள்
மன்றமெங்கும் நிறையட்டும்...!!

நாகரா
02-08-2008, 09:51 AM
உம் உற்சாக வரிகளுக்கு நன்றி ஓவியன்

இளசு
02-08-2008, 10:51 AM
வாளாவிருந்து காலக்காற்றால் கரைந்துபோகாமல்
அருட்கனலில் கரைவதே கற்பூரத்துக்கு நன்மை!

பாராட்டுகள் நாகரா அவர்களே!

பூமகள்
02-08-2008, 11:22 AM
தரிசாகும் மெய்யை விட..
உழைத்து துரும்பாகும் மெய்.. மகத்தானது..!!

புரிந்து கொண்டேன்..!!
பாராட்டுகள் நாகரா அண்ணா..!!

வாளாவிருந்து காலக்காற்றால் கரைந்துபோகாமல்
அருட்கனலில் கரைவதே கற்பூரத்துக்கு நன்மை!
பெரியண்ணா.. ஒரு சந்தேகம்..

வாழாவிருந்தா?? வாளாவிருந்தா?? :confused:

வாளாவிருந்தெனில் என்ன அர்த்தமென சொல்லுங்கள் அண்ணா..!:icon_rollout:

இளசு
02-08-2008, 11:26 AM
வாளாவிருந்து என்றால் - முயற்சியின்றி சும்மாவேனும் தேமே என இருப்பது..

கற்பூரம் சும்மா இருந்தால் காற்றில் கரையும்.
ஞானம் தேடி அனல் பற்றினால் எரியும்..

முடிவு ஒன்றுதான்.. வழிகள் இரண்டு..

பூமகள்
02-08-2008, 11:31 AM
தெளிந்தது அண்ணலே..!!
அந்த ஒரு வார்த்தையின் அர்த்தம் தான் புரியவில்லை..

மற்றபடி.. உங்கள் கருத்து வெல்லச் சுவையாக படித்ததும்.. இனித்தது..!! :)

நாகரா
03-08-2008, 11:36 AM
இளசு, பூமகள், உம் பாராட்டுக்களுக்கு நன்றி.