Log in

View Full Version : மேகமோதி ரதி மோகமே



தீபா
01-08-2008, 06:19 PM
மோதவா மோனமா கலா மேகமோ தாகமோ
கதா மோக மேலாக மானமோ வாதமோ


காதல் தமோகரம் மாக மோது வருவம் போல போம்
வருவது மோகமாம் ரகமோதல் தகா

படித்துவிட்டு என்னை (க)அடிக்காமல் இருந்தால் சரி.... :D :D


பிகு : தமோகரம் - சந்திரன்

தொடரும்...:D

arun
01-08-2008, 06:34 PM
ஒரே ஒரு வார்த்தைக்கு மட்டும் விளக்கம் கொடுத்தால் எப்படி? ஒன்றும் புரியவில்லை

புரிந்தவர்கள் யாரேனும் விளக்கினால் நன்றாக இருக்கும்

தீபா
02-08-2008, 04:12 AM
ஒரே ஒரு வார்த்தைக்கு மட்டும் விளக்கம் கொடுத்தால் எப்படி? ஒன்றும் புரியவில்லை

புரிந்தவர்கள் யாரேனும் விளக்கினால் நன்றாக இருக்கும்

என்னங்க இப்படி பொசுக்குனு சொல்லிப்புட்டீங்க. ??

மத்த வார்த்தையெல்லாம் நமக்குத் தெரிஞ்சதுதானே!! ஆனா கொஞ்சம் குழப்பம் இருக்கிறாப்ல எனக்கே தெரியது. யாராச்சும் விளக்கம் கொடுத்தா பிழைச்சுக்குவேன்.. :)

இளசு
03-08-2008, 12:17 AM
தாமரை, சாம்பவி, அல்லிராணி - எல்லாம் எங்கேப்பா?

சிவா.ஜி
03-08-2008, 06:20 AM
சரக்கடிச்ச குடிமகன், அந்தக்காலத்துப் பாடலை அவிழ்த்துவிடுவதைப்போல இருக்கிறது....தமிழ் என்பது மாத்திரம் தெரிகிறது.

poornima
03-08-2008, 07:01 AM
எந்த மொழியில் புனையப்பட்ட கவிதை என்ற பின்குறிப்பிருந்தால் படித்து தெரிந்துக் கொள்ள வசதியாயிருக்கும் :-)

ஒருவேளை இதுதான் அண்மையின் புதுக்கவிதையா..? :-)

shaktii
03-08-2008, 09:58 AM
மாலை மாற்றி மயக்கும் கவிதை. :icon_b:
வார்த்தை விளையாட்டின் மர்மம் இதேனா. :rolleyes:

வாத ஆள் ரேக்க லக கலக் கரேளாத வா. :cool:

பூமகள்
03-08-2008, 11:19 AM
தலைப்பு - மேகமோதி ரதி மோகமே

மேக மோதிர அதி மோகமே..! - மேகத்தில் மறைந்திருக்கும் பாதி நிலவு கண்டு அதன் அழகில் மயங்கிய நிலையோ??!! :icon_ush::confused:

ஏதோ ஏழைக்கேத்த எள்ளுரண்டை போல.. பூவால் முடிந்த பொருளாய்வு..!! :icon_rollout::icon_ush:

சிறு பிள்ளை விழுந்து விழுந்து நடை பழகும் அழகைப் போல்.. நானும் விழுந்து எழும் முயற்சியில் இருக்கிறேன்..! :icon_rollout:

பொருள் சுட்டல் தவறாயின் மன்னியுங்கள் தமிழ்ச் சான்றோரே..!! :icon_ush: