PDA

View Full Version : 23-ஆம் எலிகேசி - பாகம் 3



lenram80
01-08-2008, 12:10 PM
அரசன்: அமைச்சரே! வெளியில் தலை காட்ட முடியவில்லை. மக்கள் காரி துப்புகிறார்கள்!
அமைச்சர்: அரசே! அதற்கு தான் தாங்கள் கிரீடம் போடுகிறீர்களே! பிறகு என்ன கவலை?

============

அரசன்: அமைச்சரே! மக்கள் என்னைப் பற்றி என்ன பேசுகிறார்கள்?
அமைச்சர்: காது கொடுத்து கேட்க முடியவில்லை அரசே!
அரசன்: உங்கள் காதை கொடுத்தால் யார் வாங்குவார்கள்? கொஞ்சம் காசு கொடுத்து கேட்டுப் பாருங்கள்!

============

அரசன்: அமைச்சரே! இந்த வருடத்திற்கான பட்ஜெட் போட்டு விட்டீர்களா?
அமைச்சர்: எப்படி பார்த்தாலும், துண்டு பட்ஜெட் தான் வருகிறது அரசே!
அரசன்: ம்ம்ம்...பரவாயில்லை. பட்ஜெட் ஓலையை வேட்டியில் மடித்து "வேட்டி பட்ஜெட்!" என்று புத்திசாலித்தனமாக சொல்லி முடித்து விடுங்கள்!

============

அமைச்சர்: அரசே! இன்று இரவு நகர் வலம் போகலாமா?
அரசர்: வேண்டாம் அமைச்சரே! போன தடவை சென்ற போது, என்னை மக்கள் திருடன் என நினைத்து கட்டி வைத்து அடித்ததை நினைத்தால், ஈரக் குழி நடுங்குகிறது!
அமைச்சர்: இந்த தடவை அப்படி நடக்காது அரசே!
அரசர்: எப்படி சொல்கிறீர்கள்!
அமைச்சர்: இந்த தடவை நான் பணம் கொடுத்து யாரையும் ரெடி பண்ணி வைக்கவில்லை அரசே!

============


அமைச்சர்: அரசே! ஒரு பசு மாடு நம் மனு நீதி மணியை அடிக்கிறது!
அரசர்: ஓ! அப்படியா? கட்டிப்போட்டு ஒரு லிட்டர் பாலை கறந்து விடுங்கள்.

============

அமைச்சர்: அரசே! நம் மாணவர்கள் எவ்வளவு புத்திசாலிகளாக உள்ளார்கள் பார்த்தீர்களா?
அரசர்: ஓ! அப்படியா?
அமைச்சர்: "களிமண் எங்கே உள்ளது?" என்று கேட்டால், நம் அரசரின் தலையில் என்று பதில் சொல்கிறார்கள்.

============

அமைச்சர்: அரசே! எல்லா மக்களும் திருவிழாக்கு சென்று விட்டர்கள்! நாடே வெறிச்சோடிக் கிடக்கிறது!
அரசர்: "வாருங்கள், போய் கொள்ளை அடிக்கலாம்" என்கிறாயா?

============

அமைச்சர்: அரசே! நாட்டில் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது!
அரசர்: எனக்கும் டிக்கெட் புக் பண்ணி விடு. நானும் அதன் ஆட்டத்தைப் பார்க்க வேண்டும்!

============

அரசர்: என்ன அமைச்சரே? நாடு முழுக்க ஒரே பரபரப்பு! ஒரே வெடி சத்தம்! என் பிறந்த நாள் கூட இன்றில்லையே!
அமைச்சர்: யாரோ நீங்கள் இறந்து விட்டதாக வதந்தி பரப்பி விட்டான், அரசே!

============

அரசர்: அமைச்சரே! நாட்டின் நலம் கருதி, நான் தினமும் 16 மணி நேரம் வேலை செய்யப் போகிறேன்!
அமைச்சர்: பிறந்த வீட்டிற்கு சென்றிருந்த அரசியார் திரும்பி வந்து விட்டாரா அரசே?

============

அமைச்சர்: அரசே! வாயிக்குள் விரலை விட்டு இப்படி விசில் அடிக்காதீர்கள்?
அரசர்: ஏன்? சிறு பிள்ளைத் தனமாக இருக்கிறதா?
அமைச்சர்: இல்லை ! என் மேல் உங்கள் எச்சில் படுகிறது!

============

புலவர்: அரசே! என் பாடலுக்காக பரிசு கொடுத்தீர்கள். இப்போது நீங்கள் ஏன் பாடுகிறீர்கள்?
அரசர்: கொடுத்த பரிசுகளை திருப்பி வாங்கத் தான்!

============

தளபதி: போர் முரசு ஒலித்து விட்டது. எங்கே போனீர்கள்?
அரசர்: எங்கும் போகவில்லை! நான் இங்கே ஒளிந்திருக்கிறேன்.

============

தளபதி: அரசே! போர் முரசைக் காணவில்லை! இப்போது என்ன செய்வது?
அரசர்: நீங்கள் போருக்குப் போங்கள். நான் தேடிக் கண்டு பிடித்து எடுத்து வைத்திருக்கிறேன்!

மதி
01-08-2008, 12:31 PM
ஹாஹா...
களிமண் ஜோக் அநியாயத்துக்கும் சிரிக்க வைத்து விட்டது..
நல்ல நகைச்சுவை லெனின்..
பாராட்டுக்கள்..

arun
01-08-2008, 06:37 PM
அருமை லெனின் பாராட்டுக்கள் தொடருங்கள்

poornima
02-08-2008, 08:14 AM
அருமை அருமை லெனின் எல்லாமே உங்கள் கற்பனையா பாராட்டுகள்..
இரண்டாவது உரையாடலை வடிவேலுவும் - இளவரசுவும் பேசுவதாக கொஞ்சம் நினைத்துப் பார்த்தேன்..

எல்லாமே நன்றாக இருக்கிறது.தொடர்ந்து ஹி--ஹிம்சைகள் தொடரட்டும்

இளசு
02-08-2008, 11:41 AM
விகடனில் வரும் அரச கிண்டல்களைத் தூக்கிச் சாப்பிடும் போல..

கலக்கும் லெனினுக்கு வாழ்த்துகள்!

பூமகள்
02-08-2008, 11:49 AM
எல்லா நகைப்புகளும்.. நைட்ரஸ் ஆக்சைட் தடவி வந்திருந்தது..

புலவர் நகைப்பு... ரசிக்க வைத்தது..

வயிற்று வலிக்கு மருந்து இப்போதே பெரியண்ணாவிடம் வாங்கி வைத்துக் கொள்கிறேன்..!! :D:D

தொடருங்கள் சரவெடியை..!!
பாராட்டுகள் லெனின் அவர்களே..!! :)

சூரியன்
02-08-2008, 12:15 PM
புலவர் ஜோக் அருமை.

மன்மதன்
02-08-2008, 12:34 PM
அனைத்துமே கலக்கல்ஸ்..

ரசித்தேன்....சிரித்தேன்...

lolluvathiyar
03-08-2008, 07:20 AM
ஆகா லென்ராம் ஒரே தொடர்ச்சியாக பல அரசன் அமைச்சர் ஜோக்களை போட்டு வயிரு வெடிக்க வைத்து விட்டார். பாராட்டி 100 இபணம் தருகிறேன்

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
06-08-2008, 11:08 AM
அமைச்சர்: அரசே! ஒரு பசு மாடு நம் மனு நீதி மணியை அடிக்கிறது!
அரசர்: ஓ! அப்படியா? கட்டிப்போட்டு ஒரு லிட்டர் பாலை கறந்து விடுங்கள்.

=
ஒன்றும் இல்லையென்று புகார் கொடுக்கச் செல்பவன் கூட சில்லரைகளை இறைக்க வேண்டியதிருக்கிறது. அருமை லெனின் தொடருங்கள்.

lenram80
06-08-2008, 08:41 PM
மதி
கிஷோர்
அருண்
பூர்ணிமா
இளசு
பூமகள்
சூரியன்
மன்மதன்
லொள்ளுவாத்தியார்
எஸ்.எம். சுனைத் ஹஸனீ

நன்றி நண்பர்களே!!