PDA

View Full Version : விகடனின் கருத்துக்கணிப்பின் முடிவு...அன்புரசிகன்
01-08-2008, 07:51 AM
பிரமிப்பூட்டும் விகடனின் கருத்துக்கணிப்பு...

நிச்சயம் தமிழீழம் வேண்டும். பிரபாகரன் கைதாகவேண்டும்...


http://img26.picoodle.com/img/img26/3/8/1/f_Capturm_989397e.jpg
சுட்டி (http://www.vikatan.com/vc/2008/jul/vc.asp)

இதுதொடர்பாக விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் நடேசன் அவர்கள் விகடனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சுட்டி - விகடன்" கருத்துக்கணிப்பில் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி: பா.நடேசன் (http://www.puthinam.com/full.php?2beWPE6fh2cc00q6MnQee4d44FDcKiad0e0oqi7IE34d34ZdWVObb0bcc3d7fCdce0301Xs4b33b4c5IrJtdde)

ஓவியன்
01-08-2008, 08:34 AM
ஈழம் தொடர்பான நல்ல புரிந்துணர்வு தாய்த் தமிழகத்தில் வளர்ச்சியடைந்து வருவது சந்தோசமான விடயமே...

புதியவன்
02-08-2008, 04:56 PM
:aktion033: பெருமைக்குரிய சஞ்சிகையான ஆனந்தவிகடனின் கருத்துக்கணிப்பிற்கு தங்களின் மேலான நல்லாதரவை தந்து தமிழீழ மக்களையும் அவர்களின் விடுதலை போராட்டத்தையும் ஆதரித்த தமிழக மக்கள் அனைவருக்கும் புலம்பெயர் தமிழர்கள் சார்பாகவும் தமிழீழ மக்களின் சார்பாகவும் எமது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம்.
நன்றி
வணக்கம்.
விகடனை ஆரத்தழுவுகின்றோம்.

தமிழீழச்செய்திகளின் தொடுப்புகளுக்கு
இங்கே (http:// www.thamizthai.blogspot.com)சொடுக்கவும்

மறத்தமிழன்
03-08-2008, 03:22 AM
உயிரினும் மேலான தமிழக உறவுகளே!
எதுவரினும் வரட்டும். இதைவிட இழிவான நிலைவரினும் ஈழ உறவுகளை எதற்காகவும் நாம் கைவிடப்போவதில்லை என்று சத்தியவாக்கு கொடுத்தது போல உங்கள் ஆதரவுக்கரம் நீண்டிருக்கிறது. "ஆனந்த விகடன்" பொருத்தமான வேளையில் செய்த இந்த கணிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. தங்கள் இதயபூர்வ நல்லாதரவை தந்துதவிய அனைத்து உள்ளங்களுக்கும் தமிழீழ மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள். எம் விடிவு வரை உதவுங்கள். வாழ்வு முடியும் வரை விரிவோம்.

நன்றிகள்.

அறிஞர்
03-08-2008, 03:35 AM
பத்திரிக்கை செய்தியை பகிர்ந்த கொண்டதற்கு நன்றி.. அன்பு.

ஈழத்தில் எப்படியாவது... அமைதி, சமாதானம் திரும்பவேண்டும் என்பதே மன்றத்தின் ஆவல்....

இந்த பதிவின் மூலம் யாரும் யாரையும் வலுமையாக தாக்கியோ... புண்படுத்தியோ, ஆதரித்தோ... பேசவேண்டாம்...

மன்றம் நடுநிலையோடு இருக்கிறது என்பதை மனதில் கொள்ளவும்.

இளசு
03-08-2008, 06:20 AM
இன்றைய தமிழின மனநிலையின் பிரதிபலிப்பாய் இருக்கிறது..

செய்திப் பகிர்வுக்கு நன்றி அன்பு..

நிலம், உடைமை, உறவு இழந்து வாடும் நம் தமிழ்ச்சகோதரர்கள் துயரம் நீங்கி வாழவேண்டும் என்பதில் மட்டும்
ஒரே எண்ணமே நம் எல்லாருக்கும்.
நல்லது விரைவில் நடக்கட்டும்.

சூரியன்
03-08-2008, 10:57 AM
ஈழத்தில் விரைவில் அமைதி திரும்ப காத்திருப்போம்..

உதயசூரியன்
03-08-2008, 12:35 PM
இக்கருத்தை எனது கருத்தாக இத்தருணத்தில் தெரிவித்து கொள்கிறேன்..நன்றி வெப் உலகம்
தமிழனின் உண்மை உணர்வுகளை பிரதிபலிக்கச்செய்த ஆனந்தவிகடனுக்கும் , தங்கள் உணர்வுகளை வாக்குகளாக பதித்த தமிழ் நெஞ்சங்களுக்கும் எங்கள் சங்கே முழங்கு இணையம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

அம்பு எய்த ஓநாய்களை தண்டித்துவிட்டு அம்பினை தண்டிக்க செய்வோம். தமிழீழம் மலர எதிர்க்கும் மற்ற ஊளையிடும் நரிக்கூட்டங்கள் முதலில் இலங்கை தமிழனின் வரலாறு படிக்கட்டும்.

உண்மை உலகம் அறியும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.

வெற்றி முரசு கொட்ட இருக்கும் எங்கள் தலைவர் மாவீரன் பிரபாகரன் அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
நன்றி வெப் உலகம்
சங்கே முழங்கு

சுகந்தப்ரீதன்
03-08-2008, 01:47 PM
நன்றி உதயசூரியன் அவர்களே..!!

ஈழப் பிரச்சனையில் எப்படியெல்லாம் தமிழக தமிழர்களின் உணர்வுகளும் உரிமைகளும் ஒடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிய இங்கே சொடுக்கவும்..!!

http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=423

குறிப்பு: யாரையும் தாக்கும் நோக்கிலோ புண்படுத்தும் நோக்கிலோ இதை நான் மன்றத்தில் தரவேற்றவில்லை... எனக்கு கிடைத்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில்தான் இதை பதிவேற்றியுள்ளேன்..!!

தேவன்1
20-08-2008, 11:08 PM
பத்திரிக்கை செய்தியை பகிர்ந்த கொண்டதற்கு நன்றி.. அன்பு.

ஈழத்தில் எப்படியாவது... அமைதி, சமாதானம் திரும்பவேண்டும் என்பதே மன்றத்தின் ஆவல்....

இந்த பதிவின் மூலம் யாரும் யாரையும் வலுமையாக தாக்கியோ... புண்படுத்தியோ, ஆதரித்தோ... பேசவேண்டாம்...

மன்றம் நடுநிலையோடு இருக்கிறது என்பதை மனதில் கொள்ளவும்.

நடுநிலை என்ற பேர் காப்பாற்றப் படுவதற்க்காக எத்தனைதடவையும் நியாயம் நிர்க்கதி ஆக்கப்படலாம் என்பாதா இதன் பொருள்?

mukilan
20-08-2008, 11:23 PM
சர்ச்சைக்குரிய வகையிலோ மோதல் போக்கினைத் தூண்டும் வகையிலோ விவாதங்கள் ஏற்படவேண்டாம் என்பதுதான் இதன் பொருள் நண்பரே!

தேவன்1
21-08-2008, 12:04 AM
ஐயா ஈழமக்களின் துன்பங்களுக்கு பிராத்தனை மட்டும்தான் எங்களால் வளங்கப்படக்கூடிய அதி உச்சப் பங்களிப்பா?

mukilan
21-08-2008, 12:27 AM
தேவன், மன்றம் என்பது பலர் வந்து உலாவும் ஒரு இடம். இங்கு எனக்கிருக்கும் உணர்வு மற்றொரு உறுப்பினருக்கு இருக்கும் என எதிர்பார்க்க முடியாதல்லவா? இங்கு ஈழச் சொந்தங்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நம் மன்றத்தின் சொந்தங்கள் எந்தளவிற்கு ஈழத்தின் அமைதியை விரும்புகிறார்கள் எனத் தெரியும். உங்களுக்கும் வெகு விரைவில் புரியும். நம் மன்றம் தமிழ் என்ற உணர்வாலேயே ஒன்றுபட்டிருக்கிறது.

ஈழத்துச் சொந்தங்களுக்கு தமிழகமும் தமிழன் என்ற உணர்வு உள்ள அனைத்து மக்களும் தங்களால் ஆன உதவியை அளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.ஆனால் ஈழம் குறித்த ஒரே நிலைப்பாடு என்பது எளிதில் எட்டி விட முடியாத விடயம். அதனால்தான் வேறு யார் மனமும் புண்படாத அளவில் விவாதங்கள் நடை பெற வேண்டும் என நிர்வாகி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்

praveen
21-08-2008, 05:02 AM
தமிழ் மன்றத்தில் இந்த தகவல்களை பதிந்த அன்பு ரசிகனுக்கு நன்றி.

தமிழ் ஈழம் என்பது உலகளவில் உள்ள அனைத்து தமிழ் மக்களின் பல நாள் ஆசை. அது விரைவில் நிறைவேறும் என்பதில் ஐயம் இல்லை.

விகடனில் அந்த கட்டூரை படித்த போது எனக்குள் ஏற்பட்ட உணர்ச்சியை எப்படி சொல்வதென்று தெரிவதில்லை. உண்மையிலே விகடன் பத்திரிக்கை மூலம் தமிழர்களின் ஏகோபித்த ஆதரவு தமிழ் ஈழத்திற்கு உண்டு என்பது தெளிவாக தெரிகிறது.

தீபன்
21-08-2008, 07:12 AM
ஆதரவுக்கரம் நீட்டிய சொந்தங்களுக்கு நன்றி.
2வது கேள்வியில் சின்ன சந்தேகம்...
ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்ட பிரபாகரன் கைது செய்யப்படவேண்டுமென்று கிடைத்த வாக்குகள் 42.02% மட்டுமே. குற்றமற்றவர் என்று 16.9%மும் மன்னித்து விட்டுவிடாலாமென்று 40.07%மும் வாக்குகள் கிடைத்துள்ளன. இதிலிருந்து கிடைக்கும் முடிவுப்படி, கைது செய்யவேண்டுமென்று 42%மும் கைது செய்யத்தேவையில்லை (குற்றமற்றவர் அல்லது மன்னித்து விட்டுவிடலாமென்றால் கைது செய்ய தேவையில்லையென்றுதானே கொள்ளவேண்டும்...) என்று மிகுதி 58%மும் வாக்குகள் பதிவாகியுள்ளன. எனவே, முடிவு, பிரபாகரன் கைது செய்யப்பட தேவையில்லை என்றுதானே இருந்திருக்க வேண்டும்...! விகடனும் சரி, இங்கு பதிந்த ரசிகனும் சரி ஏன் இப்படி தவறான தலைப்பை கொடுத்தனர்...?

praveen
21-08-2008, 08:20 AM
2வது கேள்வியில் சின்ன சந்தேகம்...

ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்ட பிரபாகரன் கைது செய்யப்படவேண்டுமென்று கிடைத்த வாக்குகள் 42.02% மட்டுமே. குற்றமற்றவர் என்று 16.9%மும் மன்னித்து விட்டுவிடாலாமென்று 40.07%மும் வாக்குகள் கிடைத்துள்ளன. இதிலிருந்து கிடைக்கும் முடிவுப்படி, கைது செய்யவேண்டுமென்று 42%மும் கைது செய்யத்தேவையில்லை (குற்றமற்றவர் அல்லது மன்னித்து விட்டுவிடலாமென்றால் கைது செய்ய தேவையில்லையென்றுதானே கொள்ளவேண்டும்...) என்று மிகுதி 58%மும் வாக்குகள் பதிவாகியுள்ளன. எனவே, முடிவு, பிரபாகரன் கைது செய்யப்பட தேவையில்லை என்றுதானே இருந்திருக்க வேண்டும்...! விகடனும் சரி, இங்கு பதிந்த ரசிகனும் சரி ஏன் இப்படி தவறான தலைப்பை கொடுத்தனர்...?

குற்றம் செய்யப்பட்டவர் என்று ஊர்ஜிதம் ஆவதால். அதாவது 42+41 = 83% பேர் அவர் குற்றம் செய்தவர் என்று உறுதியாக நம்புவதால். மண்ணித்து விடலாம் என்று சொல்லும் போதே அவர் குற்றம் புரிந்தார் என்று ஒத்துக்கொள்கிறார்கள். எனவே அந்த தலைப்பு சரியே. அவர் குற்றமே செய்ய வில்லை என்று சொல்பவர் மொத்தம் 17 சதவிகித்தனரே (என்னை மாதிரி).

இது பற்றி மேலும் விவாதித்து திரியை தடம் புரள செய்து விடாதீர்கள்.

தீபன்
21-08-2008, 11:32 AM
குற்றம் செய்யப்பட்டவர் என்று ஊர்ஜிதம் ஆவதால். அதாவது 42+41 = 83% பேர் அவர் குற்றம் செய்தவர் என்று உறுதியாக நம்புவதால். மண்ணித்து விடலாம் என்று சொல்லும் போதே அவர் குற்றம் புரிந்தார் என்று ஒத்துக்கொள்கிறார்கள். எனவே அந்த தலைப்பு சரியே. அவர் குற்றமே செய்ய வில்லை என்று சொல்பவர் மொத்தம் 17 சதவிகித்தனரே (என்னை மாதிரி).

இது பற்றி மேலும் விவாதித்து திரியை தடம் புரள செய்து விடாதீர்கள்.தலைப்பு குற்றம் செய்தாரா இல்லையா என்பதல்லவே...? கிடைத்த வாக்குகளின்படி கொடுக்கப்பட்ட தலைப்பு தவறென்பதைத்தான் சொன்னேன். (83% குற்றம் செய்ததாக சொன்னாலும் 42%தான் ஆய்வின் கூற்றாக அமைந்த கைது செய்ய வேண்டுமென்பதை ஆதரித்தனர். ஏனைய 58%மானோர் கைது செய்ய தேவையில்லை என்ற முடிவைத் தரக்கூடிய மற்றைய இரு கூற்றுக்களையும் ஆதரித்துள்ளனர்).

திரியின் தலைப்பே தவறென்று சொல்வது எப்படி திரியின் போக்கை தடம் புரள செய்யுமென புரியவில்லை. (இதில் நான் அரசியல் பேசவில்லை. சாதாரண கணிதம்தான் பிழைப்பதை சுட்டினேன். அவ்வளவே.)

praveen
21-08-2008, 01:50 PM
#17,

நண்பரே பிற தள மற்றும் பத்திரிக்கை செய்திகளை இங்கே தரும் போது அதனை அப்படியே தருவது தான் நாகரீகம் மற்றும் முறை. இங்கே திரி ஆரம்பித்த அன்பர் அன்புரசிகனும் அவ்வாறே, ஆனந்த விகடன் என்ன தலைப்பு தந்ததோ அதனை அப்படியே தந்திருக்கிறார். கூடுதலாகவோ ஜோடித்தோ தலைப்பை மாற்றியோ அல்லது அதில் நமக்கு தேவையான ஒரு பகுதியை மட்டும் தராமல் நடுநிலை மாறாமல் முழுதும் தந்திருக்கிறார்.

எனவே இந்த வாதத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி, இதோ போட்டாச்சு.

அன்புரசிகன்
21-08-2008, 03:20 PM
தலைப்பு குற்றம் செய்தாரா இல்லையா என்பதல்லவே...? கிடைத்த வாக்குகளின்படி கொடுக்கப்பட்ட தலைப்பு தவறென்பதைத்தான் சொன்னேன். (83% குற்றம் செய்ததாக சொன்னாலும் 42%தான் ஆய்வின் கூற்றாக அமைந்த கைது செய்ய வேண்டுமென்பதை ஆதரித்தனர். ஏனைய 58%மானோர் கைது செய்ய தேவையில்லை என்ற முடிவைத் தரக்கூடிய மற்றைய இரு கூற்றுக்களையும் ஆதரித்துள்ளனர்).

திரியின் தலைப்பே தவறென்று சொல்வது எப்படி திரியின் போக்கை தடம் புரள செய்யுமென புரியவில்லை. (இதில் நான் அரசியல் பேசவில்லை. சாதாரண கணிதம்தான் பிழைப்பதை சுட்டினேன். அவ்வளவே.)

நண்பர் தீபன் அவர்களுக்கு...

நானும் பிரபாகரன் கைதாகவேண்டும் என்ற கூற்றை விரும்பாதவன் தான். ஆனால் நான் தந்த தலைப்பு விகடனில் வந்ததை அப்படியே பதிந்திருந்தேன்...

சரி கணித ரீதியில் இதை பார்க்கமுடியாது. வேண்டுமானால் புள்ளிவிபரவியல் ரீதியில் தான் பார்க்கவேண்டும். காரணம் இது அபிப்பிராய வாக்குகளே. அப்படிப்பார்த்தால் ஆகாரமாக வருவது தலைவர் பிரபாகரன் கைதாகவேண்டும் என்பதே...

இந்த திரி விவாதமாக மாற எனக்கும் விருப்பமில்லை. ஆனால் திரி தொடங்கியவன் என்ற காரணத்தினால் பதிலளிக்கவேண்டிய ஒரு கடப்பாடு இருப்பதாக உணர்ந்தே பதிகிறேன்...

எது நடக்கவிருக்கிறதோ அத்தனையும் நன்றாகவே நடந்தேறும்... கவலைவேண்டாம் சகோதரர்களே...

இந்த திரி செய்தி ஒன்றை மட்டுமே கொண்டிருக்கட்டும்..

தீபன்
22-08-2008, 04:37 AM
குற்றம் செய்யப்பட்டவர் என்று ஊர்ஜிதம் ஆவதால். அதாவது 42+41 = 83% பேர் அவர் குற்றம் செய்தவர் என்று உறுதியாக நம்புவதால். மண்ணித்து விடலாம் என்று சொல்லும் போதே அவர் குற்றம் புரிந்தார் என்று ஒத்துக்கொள்கிறார்கள். எனவே அந்த தலைப்பு சரியே.


#17,

நண்பரே பிற தள மற்றும் பத்திரிக்கை செய்திகளை இங்கே தரும் போது அதனை அப்படியே தருவது தான் நாகரீகம் மற்றும் முறை. இங்கே திரி ஆரம்பித்த அன்பர் அன்புரசிகனும் அவ்வாறே, ஆனந்த விகடன் என்ன தலைப்பு தந்ததோ அதனை அப்படியே தந்திருக்கிறார். கூடுதலாகவோ ஜோடித்தோ தலைப்பை மாற்றியோ அல்லது அதில் நமக்கு தேவையான ஒரு பகுதியை மட்டும் தராமல் நடுநிலை மாறாமல் முழுதும் தந்திருக்கிறார்.

எனவே இந்த வாதத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி, இதோ போட்டாச்சு.
உங்கள் இரண்டாவது பதில் சரி. அதயே முதலில் சொல்லியிருந்தால் முதலே முற்றுப்புள்ளி தானகவே விழுந்திருக்கும்.சரி கணித ரீதியில் இதை பார்க்கமுடியாது. வேண்டுமானால் புள்ளிவிபரவியல் ரீதியில் தான் பார்க்கவேண்டும். காரணம் இது அபிப்பிராய வாக்குகளே. அப்படிப்பார்த்தால் ஆகாரமாக வருவது தலைவர் பிரபாகரன் கைதாகவேண்டும் என்பதே...

இந்த திரி செய்தி ஒன்றை மட்டுமே கொண்டிருக்கட்டும்..

கணித ரீதியாகவென்றால் தனியே கூட்டல் களித்தல் மட்டுமல்ல, எடுக்கப்படும் விடயம் என்ன என்பதை பொறுத்து எந்த முறை அங்கு பயன்படுத்த வேண்டுமோ அதை பிரயோகிப்பதும்தான் கணிதம். இங்கு புள்ளிவிபரவியல் ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் பார்க்கப்படுவதே சரியான கணித ரீதியான அணுகுமுறை. (புள்ளிவிபரவியலும் கணிதம்தான்...).

உங்களில் தவறில்லை. ப்ரவீன் சொன்னதுபோல் நடுநிலையோடு கிடைத்த செய்தியை அப்படியே தந்துள்ளீர்கள். அதை ஏற்றுகொள்கிறேன். ஆனால் அதற்காக அந்த செய்தியில் நமக்கேற்படும் ஐயங்களை இங்கு பகிர்வது எப்படி தவறாகும்...?
செய்தி ஒன்று செய்தியாகவே இருக்கட்டுமென்றால் அத்தோடு அதை பூட்டிவிடுவது நல்லது.

இப்பின்னூட்டம்கூட அதிகபிரசங்கித்தனமாக கருதினால், இதை நீக்கி விடுங்கள்.

நன்றி.

அன்புரசிகன்
22-08-2008, 05:05 AM
கணித ரீதியாகவென்றால் தனியே கூட்டல் களித்தல் மட்டுமல்ல, எடுக்கப்படும் விடயம் என்ன என்பதை பொறுத்து எந்த முறை அங்கு பயன்படுத்த வேண்டுமோ அதை பிரயோகிப்பதும்தான் கணிதம். இங்கு புள்ளிவிபரவியல் ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் பார்க்கப்படுவதே சரியான கணித ரீதியான அணுகுமுறை. (புள்ளிவிபரவியலும் கணிதம்தான்...).புள்ளிவிபரவியலில் கணிதம் பயன்படுத்தப்படுமே தவிர இரண்டும் ஒன்றல்ல... + - * / இவை தான் கணிதத்தின் அடிப்படை. அதை வைத்து விருத்தி செய்யப்படுபவை தான் கணிப்புக்கள்...

கணிதங்களில் எடுகோள்கள் எடுக்கப்படலாம். புள்ளிவிபரவியலில் எடுகோள்கள் கிடைக்கும் தரவுகளை கொண்டு தான் எடுக்கப்படும்.... கணிதத்தின் முடிவும் புள்ளிவிபரவியலின் முடிவும் ஒன்றல்ல...

மதி
22-08-2008, 06:49 AM
அன்பு மன்ற உறவுகளுக்கு
இந்தத் திரி விகடனில் வந்த கருத்துக் கணிப்பை தெரிவிக்கும் வகையிலேயே செய்திச் சோலை பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்விடத்தில் கருத்துக் கணிப்பை பற்றிய அலசல்களும் விவாதங்களும் திசை மாறி பயணிப்பதை மன்றத்தினர் யாரும் விரும்புவதில்லை.

அதனால் தற்காலிகமாக இந்தத் திரியைப் பூட்டுகிறோம். உங்கள் புரிதலுக்கு நன்றி.