PDA

View Full Version : ரஜினி ஒரு சந்தர்ப்பவாதி



வவுனியன்
01-08-2008, 04:44 AM
"ஒகேனக்கல் விவகாரத்தில் நான் தவறாகப் பேசிவிட்டேன். இனி மீண்டும் அந்தத் தவறை திரும்பச் செய்ய மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்"

உன்னுடைய ஒவ்வொரு திரைப்பட வெளியீட்டிற்கும் தன் குடும்பத்தை மறந்து, தன் குழந்தைக்கு குடிக்க கஞ்சியில்லாத போதும் உன்னுடைய கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் பண்ணியவன் உன்னுடைய பாழாய் போன தமிழ் ரசிகன். தமிழ் நாட்டில் சம்பாதித்தை எல்லாம் கர்நாடகாவில் முதலீடு செய்த உன்னை தான் தமிழ் ரசிகன் முழு முதற் கடவுளாய் பார்க்கிறான்.

காலத்திற்கு தகுந்தாற் போல் மாறுவது பெரிய மனிதனுக்கு அழகா?. என்றும் ஒரே பேச்சு பேசுபவன் தான் பெரிய மனிதன்.தமிழ் நாட்டு ரசிகன் முன்பு "தமிழன்" என்று கூறியே பல கோடிகளை சம்பாதித்து, இன்று கன்னட அமைப்புகள் முன்பு கன்னடத்திலேயே மன்னிப்பு கேட்டவரின் பேச்சுகள் சில...

1995 - பாட்சா:

இது காசு கொடுத்து சேர்த்த கூட்டம் இல்லை...அன்பால தானா சேர்ந்த கூட்டம்....!

2007 - சிவாஜி:

பன்னிங்கதான் கூட்டமா வரும்....!

1996 - சட்டசபை தேர்தல்:

ஜெயலலிதாக்கு ஒட்டு போட்டா தமிழ் நாட்டை ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது....!

2004 - மக்களவை தேர்தல்:
சகோதரி ஜெயலலிதா ஆதரவு பெற்ற கட்சிக்கு ஒட்டு போட்டேன்....!
சகோதரி ஜெயலலிதா ஒரு தைரியலக்ஷ்மி....!

2008 - ஒகேனக்கல் உண்ணாவிரதம்:

நம்ம உரிமைய தடுக்குறவங்கள உதைக்க வேண்டாமா?

2008 -குசேலன்:

அய்யா மன்னிச்சுடுங்க.....என் தப்பை உணர்ந்துட்டேன்....தயவு செய்ஞ்சு என் படத்தை ரிலீஸ் பண்ண அனுமதி கொடுங்க.....! ஐய்யா....அம்மா....!


தமிழா!! மாற்றானுக்கு மண்டியிட்டது போதும்... ஆண்டாண்டு காலமாக திரையுலகினற்கு நீ தீப்பந்தமாய் இருந்தது போதும்..

தமிழனே, இனியாவது விழித்துக்கொள்!


நன்றி:- thatstamil இணையம்

arun
01-08-2008, 06:00 PM
ஒரு சராசரி அரசியல்வாதிக்குரிய அனைத்து அம்சங்களும் ரஜினிக்கு இருந்தாலும் அவர் ஏன் இன்னும் அரசியலுக்கு வரவில்லை?

ராஜா
01-08-2008, 06:20 PM
இது உண்மையென்றால் ரஜினியின் செயல்பாடுகள் கண்டனத்துக்குரியவை..

எனினும் நம் மன்ற மாண்பு கருதி, சில சொற்களை நீக்கினால் நன்றாயிருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

அமரன்
01-08-2008, 07:14 PM
வவுனியன்...
நீங்கள் படித்தவற்றை புன்னகையுடன் நாகரிகமாகப் பகிர்ந்திருக்கலாம். விளம்பரங்களுக்கும் பிரச்சாரங்களும் மன்றத்தில் என்றுமே இடமில்லை என்பதையும் தெரிந்திருக்கலாம். இந்த இருக்கலாம்கள் இல்லாததால் உங்கள் பதிவை தணிக்கை செய்துள்ளேன்..

நன்றி.

மாதவர்
15-08-2008, 09:58 AM
தன்னலமே வாழ்க்கை வாழ்க அவர் நாமம்!
அவர் தமிழனுக்கு போட்ட நாமம்!!

தங்கவேல்
15-08-2008, 01:13 PM
இப்போதான் தெரிகிறதா உங்களுக்கு. ஒரு உண்மையைச் சொல்கிறேன் கேளுங்கள். மக்களை சினிமாக்காரர்களின் மீது மோகம் கொள்ளும்படி செய்தால் தான் சினிமாக்காரர்கள் சுகமாக வாழமுடியும். ஆகையால் தான் கட் அவுட்டுகள், பால் அபிஷேகம் என்றெல்லாம் நடக்கின்றன. நடிகர்களின் காசில் தான் மன்றத் தலைவர்கள் கூத்து அடிக்கிறார்கள். மீடியாக்களும் அதனை பெரும் செய்தி ஆக்குகின்றன. ஏமாந்தவனிருக்கும் வரை ஏமாற்றுபவருக்கு கொண்டாட்டம் தானே.