PDA

View Full Version : புதிய தேடுதளம் (CUIL)அறிஞர்
01-08-2008, 03:24 AM
கூகுளை விட 3 மடங்கு திறன் அதிகம்

உலகிலேயே அதிவேக தேடுதல் இணையதளம் ‘கூல்’ அறிமுகம்

நியூயார்க், ஆக.1: உலகின் மிகப் பெரிய, அதிவேகமான தேடுதல் இணையதளம் ‘கூல்’ (cuil.com) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இப்போதைக்கு கூகுள் (google.com) இணைய தளம்தான் நம்பர் 1 ஆக உள்ளது. அதைவிட 3 மடங்கு அதிக திறன் வாய்ந்தது கூல் என அந்த இணையதள உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

இணையதளத்தில் உலா வருபவர்கள், பொதுவாக ஏதாவது விஷயம், படம், செய்தி தேவைப்பட்டால் கூகுள், யாகூ, எம்எஸ்என் இணையதளங்களுக்கு செல்கின்றனர். இதில் கூகுள் இணையதளம்தான் நம்பர் 1 ஆக உள்ளது. எம்எஸ்என் இணையதளத்தை விட 10 மடங்கு அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் கூகுள் இணையதளத்தை தூக்கி சாப்பிடும்விதமாக கூல் இணையதளம் அறிமுகமாகி உள்ளது. கூல் இணையதளத்தில் என்ன விஷயம் தேவை என டைப் செய்தால், 12,161 கோடி இணைய பக்கங்களை தேடி தகவல் தருமாம். இது கூகுளை விட 3 மடங்கு அதிகம்.

கூல் இணையதளத்தை ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் டாம் காஸ்டெல்லோ, அவரது மனைவியும் முன்பு கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்தவருமான அன்னா பாட்டர்சன் ஆகியோர் இணைந்து ஆரம்பித்து உள்ளனர். ‘‘எல்லாவிதங¢களிலும் கூகுள் இணையதளத்தை விட இது மேலானது. அதிவேகமானது, அதிக இணைய பக்கங்களை தேடும்’’ என்கிறது இந்த ஜோடி.

ஒரு வார்த்தையை வாடிக்கையாளர் டைப் செய்தால், அந்த விஷயத்தை பற்றி மட்டுமல்லாமல், அது தொடர்பான பிற விஷயங்களையும் இந்த இணையதளம் கொட்டிவிடுமாம்.

நன்றி-தினகரன்

aren
01-08-2008, 04:01 AM
நல்ல செய்திதான். ஆனால் இது கூகிளைவிட அதிக பிரபலம் ஆகுமா என்று தெரியவில்லை.

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இந்த புதிய கம்பெனியை மைக்ரோசாஃப்ட் வாங்கும் நாள் இன்னும் வெகுதூரத்தில் இல்லை என்றே தெரிகிறது.

மதி
01-08-2008, 04:03 AM
சில நாள் முன்பு தான் இதைப்பற்றி கேள்விப்பட்டேன்.. கூகுள் மாதிரியே இருந்தது. ஆயினும் வேகம் பற்றி..தெரியவில்லை..

தீபா
01-08-2008, 04:56 AM
அப்படித்தான் தோன்றுகிறது,..

பார்ப்போம்.

செல்வா
01-08-2008, 08:33 AM
வேகமாகத்தான் இருக்கிறது...
ஆனால் தமிழில் சொன்னால் அதற்கு தெரியவில்லை

நல்ல போட்டி தான்.... பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.

meera
01-08-2008, 08:50 AM
யாரோ போட்டியில் மக்களுக்கு நன்மை விளைந்தால் சரி.

தகவலுக்கு நன்றி அறிஞர் சார்..

மயூ
02-08-2008, 04:36 AM
நான் தொடர்ந்து பாவித்து வருகின்றேன். தேடல் முடிவுகளில் கூகிளை விட பல மடங்கு பின் நிற்கின்றது. எதையோ தேடினா அதனுடன் சம்பந்தப்பட்ட பல விடையங்களைக் காட்டுது ஆனா தேவையான விசயத்தைக் காட்டுதில்லை...

எல்லாவற்றிக்கும மேல் தமிழ் தேடல் இல்லை... என்ன குயில் காரங்கள் தமிழனை இழிச்சவாயன் என்று நினைச்சிட்டானா... கூகிளே என் தெரிவு.. குயில், குயில் மாதிரி வேப்பமரத்தில் நின்று கொஞ்ச நாளைக்கு கூவிவிட்டு இல்லாமல் போகப்போவது உறுதி.

தீபா
02-08-2008, 04:51 AM
நான் தொடர்ந்து பாவித்து வருகின்றேன். தேடல் முடிவுகளில் கூகிளை விட பல மடங்கு பின் நிற்கின்றது. எதையோ தேடினா அதனுடன் சம்பந்தப்பட்ட பல விடையங்களைக் காட்டுது ஆனா தேவையான விசயத்தைக் காட்டுதில்லை...

எல்லாவற்றிக்கும மேல் தமிழ் தேடல் இல்லை... என்ன குயில் காரங்கள் தமிழனை இழிச்சவாயன் என்று நினைச்சிட்டானா... கூகிளே என் தெரிவு.. குயில், குயில் மாதிரி வேப்பமரத்தில் நின்று கொஞ்ச நாளைக்கு கூவிவிட்டு இல்லாமல் போகப்போவது உறுதி.

அடடா!! அப்ப கூல் (cuil) கூல் (cool) இல்லையா? சரி விடுங்க மயூ!

மிகப்பெரும் கூகிளாத்தா இருக்கும் போது குட்டியூண்டு கூலாத்தா எல்லாம் எத்தனை நாளைக்கு!!!

கூல் தேடுபொறியில் படத்தேடல் இல்லை போலிருக்கே!!! எனக்கு அதன் வடிவமைப்பு பிடித்துவிட்டது. கட்டங்கட்டி முடிவு தருகிறார்கள். ஆனால் முடிவு எத்துணை சரியானது என்பது சரியாகத் தெரியவில்லை.. :)

சூரியன்
02-08-2008, 09:11 AM
நல்ல செய்திதான் பயன்படுத்தி பார்ப்போம்.

மன்மதன்
02-08-2008, 01:10 PM
kuselan in mumbai movie timing

இந்த வார்த்தையை குயில் மற்றும் கூகுளில் தேடி பாருங்கள்.. வித்தியாசம் தெரியும்..

குயில் என்னால் ஒரு வெப்சைட் கூட கண்டுபிடிக்க முடியல என்று கூவியது..

அறிஞர்
03-08-2008, 03:43 AM
மயூ, கிஷோர், மன்மதன் வாதத்தை ஆதரிக்கிறேன்...
-----
இந்த பதிவை பதியும் முன்னரே.. சிலர் குறிப்புகளை தேடினேன்...
கூகுள் தருவதில் பாதியை கூட சரியாக தரவில்லை.
பதிவிற்கு சம்பந்தமில்லாத... விடைகளை தருகிறது.

இப்பொழுதைக்கு கூகுளே சிறந்தது.

போட்டி வளர்ச்சிக்கு நல்லது...

aren
03-08-2008, 03:43 AM
இப்பொழுதுதானே வந்திருக்கிறது. பல பிரச்சனைகள் அவர்களுக்கு இருக்கும். ஒவ்வொன்றாக களைந்து கூகிளை வெல்லும் வகையில் வருவார்கள். அதற்கு நாம் வாழ்த்துவோம்.

இரண்டு பேர் இப்படி இருந்தால் நமக்கு பல புதிய விஷயங்கள் கிடைக்கும்.

அறிஞர்
04-08-2008, 04:16 PM
இரண்டு பேர் இப்படி இருந்தால் நமக்கு பல புதிய விஷயங்கள் கிடைக்கும்.ஓசியில... புதிய விசயங்கள் கிடைக்கிறது என்றால் சும்மாவா.....

வாழ்க வளர்க...

ராஜா
04-08-2008, 05:13 PM
தமிழ் சார்ந்த தேடல்களுக்கு கூகிளாண்டவரே முன்னணியில் அருள் பாலிக்கிறார்..

அவருக்கு இணையாக கூழ்(ல்) ஊத்த யா(ஹா)ராலும் ஆகாது..!

aren
05-08-2008, 01:51 AM
ஓசியில... புதிய விசயங்கள் கிடைக்கிறது என்றால் சும்மாவா.....

வாழ்க வளர்க...

அறிஞரே, யாரும் தம் சொந்த பணத்தைப் போட்டு ஓசியில் நமக்கு எதுவும் கொடுக்கமாட்டார்கள். அவர்கள் இன்னும் கொஞ்ச நாளில் பில்லியன் கணக்கில் விளம்பரம் மூலம் பணம் ஈட்டுவார்கள். ஆகையால் நாம்தான் அவர்களுக்கு உதவி செய்கிறோம்.

tamilambu
15-08-2008, 02:54 AM
எது எப்படியோ எமக்குத் தேவையானதை கூகுள் 99% சரியாக செயற்படுகிறது.

இப்போதைக்கு அது போதும்.

shibly591
15-08-2008, 05:59 PM
பயன்படுததலாம்...ஆயினும் கூகிளை மிஞ்சவில்லை

சுட்டிபையன்
28-08-2008, 01:30 PM
நானும் பாவித்துப் பார்த்தேன் ஆனால் அதிகபிரசங்கிதனமாக தேடி தருகிறது.
ஒரு சின்ன உதாரணம்
தமிழ்மன்றம் கூகிள் தேடலில் http://www.google.lk/search?hl=en&q=tamilmantram&meta=
தமிழ்மன்றம் கூலில் http://www.cuil.com/search?q=tamilmantram

இப்போதுதானே ஆரம்பம் போக போகப் பார்ப்போம் கூகிள் போல் 3மடங்கு மற்றும் மைகிரேசிப்ட் போல் 10மடங்கு திறன் கொண்டது எங்கிறார்கள்

poornima
28-08-2008, 01:57 PM
இந்த புதிய கம்பெனியை மைக்ரோசாஃப்ட் வாங்கும் நாள் இன்னும் வெகுதூரத்தில் இல்லை என்றே தெரிகிறது.

என்ன ஒரு தீர்க்க தரிசனம்.. மைக்ரோசாஃப்ட் விலைபேசிக் கொண்டிருக்கிறது..இன்னும் ஒரு சில வாரங்களில் அந்த நிறுவன அடையாளத்துடன் வலம் வரக்கூடும்

அறிஞர்
28-08-2008, 03:35 PM
எப்படியோ.... புதிய யுக்திகள் பல வந்து... நமக்கு உதவினால் சரிதான்.