PDA

View Full Version : மீண்டும் சந்திப்போமாஅமரன்
31-07-2008, 06:04 PM
கனவுகளால்
உறக்கம் களவாடப்பட்ட
இரவுகளின் வரிசையில்
இன்றும்.

இடந்தெரியா இடத்தில்
இடறி விழுந்த பொழுதில்
தூக்கிவிடுகிறது ஒரு கை
கடவுளென்ற அறி(யா)முகத்துடன்..

தேடுவோர் பலரிருக்க - எனை
தேடி வந்த காரணமென்ன
நினைக்கும்போதே கேட்கிறது
நெறி பிறழா வாழ்க்கை
உன்னது வென்ற பதில்..

பதிலுடன் கடவுள் கரைந்துவிட
விழிகளிள் பாரம் உறைந்துவிட
மறு சந்திப்புக்காய் காத்திருக்கிறேன்
உனது நெறிகள்-எங்கே
கிடைக்குமென்ற கேள்வியுடன்

பூமகள்
31-07-2008, 06:12 PM
வழக்கம் போல்...
புரிந்தும் புரியாத நிலை..!!

நெறி பிறழா வாழ்வெனச் சொன்னபின்..
நெறியான நெறி தேடி ஏன் ஓட்டம்??

புரியாமல் இன்னும் பூ.....!!

விளங்கிய பின்.. விளக்குகிறேன்.. மன்னித்தருளுங்கள் அமர் ஜி..!!


கனவுகளால்
உறக்கம் களவாடப்பட்ட
இரவுகளின் வரிசையில்
இன்றும்.
இவ்வரிகள் அற்புதம்..!!
கடவுளைத் தரிசித்தமைக்கு பாராட்டுகள்..!!

meera
01-08-2008, 03:36 AM
எனக்கும் புரியலை பூ. அமரன் அண்ணா கொஞ்சம் விளக்குங்களேன்.

aren
01-08-2008, 04:04 AM
கை கொடுத்து தூக்குபவர் கடவுளுக்கு இணையானவர் என்று சொல்கிறீர்களா?

shibly591
01-08-2008, 05:13 AM
இடந்தெரியா இடத்தில்
இடறி விழுந்த பொழுதில்
தூக்கிவிடுகிறது ஒரு கை
கடவுளென்ற அறி(யா)முகத்துடன்..இப்படி தூக்கி விடும் கரங்கள் இப்போதெல்லாம் வெகுவாக குறைந்து விட்டது...

பாராட்டுக்கள் நண்பரே....நசித்தோம் மீண்டும் மீண்டும்

சிவா.ஜி
01-08-2008, 05:30 AM
கனவில் தோன்றிய கடவுள் அளித்த நற்சான்றிதழை நிஜத்தில் பெற விழைந்து, இதுவரை சற்றாவது நெறி பிறழ்ந்த வாழ்க்கை வாழ்ந்தவன், இனி ஆண்டவன் சொல்லும் நெறிகளுக்குட்பட்டு வாழ எத்தனித்து, சொல்லும் வார்த்தைகளாய் எனக்குப் படுகிறது. இனி அமரன்தான் சொல்ல வேண்டும். பூ குறிப்பிட்ட வரிகளே எனையும் கவர்ந்தவை. வாழ்த்துகள் அமரன்.

shibly591
01-08-2008, 05:38 AM
கனவில் தோன்றிய கடவுள் அளித்த நற்சான்றிதழை நிஜத்தில் பெற விழைந்து, இதுவரை சற்றாவது நெறி பிறழ்ந்த வாழ்க்கை வாழ்ந்தவன், இனி ஆண்டவன் சொல்லும் நெறிகளுக்குட்பட்டு வாழ எத்தனித்து, சொல்லும் வார்த்தைகளாய் எனக்குப் படுகிறது. இனி அமரன்தான் சொல்ல வேண்டும். பூ குறிப்பிட்ட வரிகளே எனையும் கவர்ந்தவை. வாழ்த்துகள் அமரன்.


நீங்கள் சொல்வதையே அமரனும் ஆமோதிப்பார் என நினைக்கிறேன்...

நல்லதொரு பின்னூட்டம் சிவா.ஜி

இளசு
03-08-2008, 12:01 AM
சில பெண்கள் மிக அழகு..
அவர்கள் அழகாய் இருக்கிறோம் என்ற தன்னுணர்வின்றி இருப்பதால் ----

இங்கே நெறி என்னென்று அறியாமலே
அது பிறழா வாழ்க்கை என்பதால்..
இவன் மிகப் புண்ணியன்..

இறை வந்ததில் வியப்பில்லை!

இது --- இதுதான் ( எங்கள்) இறை..
இவை... இவை மட்டுமே இறை தந்த நெறி...
எனக் கூறுபோட்டு வாழும் மனித மந்தையில்
எது நெறி என இவன் இன்னும் தேடுவதும் அவன் தவறில்லை!


வாழ்த்துகள் அமரா!
இன்னொரு உயர் தட்டில் உன் கவிதை ஏறிய வளர்ச்சிக்கு
அண்ணனின் உற்சாகப் பாராட்டு!

poornima
03-08-2008, 07:10 AM
கனவுகளால் உறக்கம் களவாடப்பட்ட என்ற வரிகளில்
கொஞ்சம் முரண்படுகிறேன் அமரன் அண்ணா.. உறங்கினால்தானே கனவுகளும் கனவில் தானே கடவுள் சந்திப்பும் நிகழ முடியும்..?

தூக்கங்கள் தொலைத்த சில இரவுகளின் வரிசையில் என்று உங்கள்
கவிதை துவங்கியிருந்தால் அந்த தொடர்ச்சி - முடிவு எல்லாம் நன்றாய் இருந்திருக்குமோ என தோன்றுகிறது.

நான் சிலசமயம் அப்படித்தான் அச்சு-பிச்சு மாதிரி எழுதிருவேன் தப்பிருந்தா மன்னிச்சிக்கங்க அமரன் அண்ணா..

பூமகள்
03-08-2008, 09:14 AM
ஆழ்ந்த உறக்கம் எனில்..
கனவுகள் வராது சகோதரி பூர்ணிமா..

ஒருவேளை அமரன் அண்ணா அந்த ஆழ்ந்த உறக்கத்தைத் தான் கனவுகள் வந்து களவாடிவிட்டதாகச் சொல்கிறார் என்று நினைக்கிறேன்..

மிகுதி அமரன் அண்ணாவே விளக்குவாரென எதிர்பார்க்கிறேன்.

நாகரா
03-08-2008, 11:50 AM
சில பெண்கள் மிக அழகு..
அவர்கள் அழகாய் இருக்கிறோம் என்ற தன்னுணர்வின்றி இருப்பதால் ----

இங்கே நெறி என்னென்று அறியாமலே
அது பிறழா வாழ்க்கை என்பதால்..
இவன் மிகப் புண்ணியன்..

இறை வந்ததில் வியப்பில்லை!

இது --- இதுதான் ( எங்கள்) இறை..
இவை... இவை மட்டுமே இறை தந்த நெறி...
எனக் கூறுபோட்டு வாழும் மனித மந்தையில்
எது நெறி என இவன் இன்னும் தேடுவதும் அவன் தவறில்லை!


வாழ்த்துகள் அமரா!
இன்னொரு உயர் தட்டில் உன் கவிதை ஏறிய வளர்ச்சிக்கு
அண்ணனின் உற்சாகப் பாராட்டு!

கவிதையின் ஆன்மீகப் பரிமாணத்தைக் கச்சிதமாய்ப் பிடித்திருக்கிறார் இளசு.

அமரரின் கவிதை அருமை

இளசுவின் பின்னூட்டம் இறை நெறி அன்பின் நிபந்தனைகளேதுமற்ற விசாலத்தைக் கவிதையின் கருவாய் உணர்த்துவது அருமையிலும் அருமை.

வாழ்த்துக்கள் அமரன், இளசு, தொடரட்டும் உம் ஞான யோகம், அது எம்மை எமக்கு இன்னும் இன்னும் தெளிவாய் விளக்கட்டும்.

நாகரா
03-08-2008, 12:28 PM
கனவுகளால்
உறக்கம் களவாடப்பட்ட
இரவுகளின் வரிசையில்
இன்றும்.

இடந்தெரியா இடத்தில்
இடறி விழுந்த பொழுதில்
தூக்கிவிடுகிறது ஒரு கை
கடவுளென்ற அறி(யா)முகத்துடன்..

தேடுவோர் பலரிருக்க - எனை
தேடி வந்த காரணமென்ன
நினைக்கும்போதே கேட்கிறது
நெறி பிறழா வாழ்க்கை
உன்னது வென்ற பதில்..

பதிலுடன் கடவுள் கரைந்துவிட
விழிகளிள் பாரம் உறைந்துவிட
மறு சந்திப்புக்காய் காத்திருக்கிறேன்
உனது நெறிகள்-எங்கே
கிடைக்குமென்ற கேள்வியுடன்

கனவுகளும்
உறக்கமும்
இமைகளோடு ஒதுங்கி விட
அதீத விழிப்பில்
நள்ளிரவில் பட்டப்பகல் வெளிச்சம்

என் கழுத்தில்
கடவுளின் ஒளி முகம் முளைக்க
என் மெய்யில் பதியும்
கடவுளுண்மை

இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடந்தேடி
எங்கெங்கோ அலைந்து
களைத்துப் பின்
இருக்கும் இடத்துக்கே
திரும்பிய கணம்
ஞானத் தங்கமாய் ஜொலிஜொலிக்கும்
கடவுள் என்னில் அறிமுகம்

என் மெய்
கடவுளுண்மையில்
கரைந்து விட
கடவுளுண்மை
அன்பின் திடமாய்த்
திரள்கிறது
நான் இருக்கும் இடத்தில்

இருதய நெறியில்
இரவில் விடிகிறது
என் வாழ்க்கை!
விடியுமுன்
என் அறியா முகமாயிருந்த
கடவுளே
இனி என் அறிமுகம்!

அமரன்
08-08-2008, 01:25 PM
கவிதைகள் புரிந்து கொள்ளப்பட
கவிஞன் மனம் பூரிப்படைகிறது..
அண்ணனால் அப்பேறு பெற்றேன்..

புரியும் படி எழுத இயலாதபோது
புரியும் படி எழுதத் தூண்டும்
பிரியமானவர்களை கண்ணுறும்போதும்
அதே மகிழ்வு..நன்றி அனைவருக்கும்..

நாகரா அய்யாவின் கவிநயம் அதிரசம்.

அமரன்
08-08-2008, 01:33 PM
கனவுகளால் உறக்கம் களவாடப்பட்ட என்ற வரிகளில்
கொஞ்சம் முரண்படுகிறேன் அமரன் அண்ணா.. உறங்கினால்தானே கனவுகளும் கனவில் தானே கடவுள் சந்திப்பும் நிகழ முடியும்..?

தூக்கங்கள் தொலைத்த சில இரவுகளின் வரிசையில் என்று உங்கள்
கவிதை துவங்கியிருந்தால் அந்த தொடர்ச்சி - முடிவு எல்லாம் நன்றாய் இருந்திருக்குமோ என தோன்றுகிறது.

நான் சிலசமயம் அப்படித்தான் அச்சு-பிச்சு மாதிரி எழுதிருவேன் தப்பிருந்தா மன்னிச்சிக்கங்க அமரன் அண்ணா..

தன்னை மறந்து சொல்லும் உண்மைகளும் உளறல்கள்தான் பூர்ணிமா.. எண்ணத்தில் தோய்த்தெடுத்து பிழைகளை பிழிந்தெடுத்து உங்களைப்போன்றவர்கள் தந்தால் உடுத்துக்கொள்ளக் கசக்குமா என்ன. நன்றிங்க..

தொலைப்பதில் எமது பங்கின் விழுக்காடு அதிகம்.. களவு கொடுப்பதில் அதுசற்றுக் குறைவு. அதனாலேயே அவ்வரிகளை அவ்வாறு அமைத்தேன்.. நீங்கள் சொன்ன மாற்றத்துக்கான காரணத்தை சொன்னால் நன்மை பயக்கும்..

ஆர்வத்துடன்,

செல்வா
15-08-2008, 12:23 PM
கவிதைகளைப் புரிந்து கொள்ள முயலும் எனது...

புரிதல் சரியா எனச் சொல்லுங்கள் குருவே....

கடவுளை நினையா ஒருவன்....
தனக்கென்ற ஒரு நெறியில்
பிறர்க்கின்னா செய்யாமல் வாழ்கிறான்.

காலச்சுழலில் தவித்து வீழ்ந்த வேளையில்
கரம் கொடுத்துத் தூக்கிய கடவுளை

காரணம் கேட்கிறான் தூக்கியது ஏன் என?

உனது வாழ்க்கை தான்...?

இங்கே... தான் குறிப்பிருக்கிறது...

உன்னைத் தேடுவோர் பலரிருக்க...
என்னைத் தேடிவந்த காரணம் என்ன?

என்றால் இவன் தேடாமலே
இவனது நெறிபிரளா வாழ்க்கையைப் பார்த்து
கடவுள் இவனைத் தேடி வந்துள்ளார்....

அதன் பிறகு இவன்
கடவுளைத் தேடுகிறான்...
அதாவது கடவுளின் நெறிகளைத் தேடுகிறான்...

இன்னும் கிடைக்கவில்லை....

மறுபடியும் காத்திருக்கிறான் கடவுளைத் தேடி...

ஆனால் எதற்காகக் காத்திருக்க வேண்டும்...
காத்திராமல் தன் மனசாட்சிப் படி வாழ்ந்ததால் தானே கடவுளெ வந்து
சந்தித்தார்....

காத்திருந்த பலரை விட்டு தேடாத காத்திராத தன்னைத் தேடி வந்ததிலிருந்தே புரியவில்லையா...

கடவுளைத் தேடுபவரை விட கடமையைச் செய்பவரையே அவர் தேடுகிறார் என்பது.

உண்மை தெரிந்த பின்னும்.... தேடுதல் ஏனோ....?
---------

உன்னது வென்ற பதில்.. - என்ற பதில்.. என்றல்லவா வரவேண்டும் குருவே..

அமரன்
22-08-2008, 07:56 PM
சரிதான் குருவே...
முதல்ல வாழ்ந்த மாதிரியே வாழ வேண்டியதுதானே... எதுக்கு கடவுளுக்காகக் காத்திருக்கனும்..
கடவுள் வந்து போய்விட்டார்.. போகும்போது நீ நெற்பிறழாது வாழ்கிறாய் என்று உயர்த்தி விட்டுப் போகின்றார். அதாவது ஒழுங்கா சைக்கிள்ள போயிட்டு இருக்கிறவனை பார்த்துப் போடா என்று சொல்கிறார். பார்த்துப் போன்னு சொல்றாங்களே..ஊரு வேற கெட்டிருக்கு.. ஜாக்கிரதையாகப் போகனும்ன நினைப்பே அவனது கவனத்தை சிதைக்க நெறியை தேடுகிறான்.. கிடைத்தபாடில்லை.. கடவுளைகேட்கக் காத்திருக்கிறான்...

ஷீ-நிசி
23-08-2008, 01:10 AM
நானும் புரியாமல் விழித்திருந்தேன்....

அமராவின் கவிதைகள் இளசு ஜி யினால் இனம் காணப்படுகிறது!.....

ரொம்ப நல்லாருக்கு! ரொம்ப! வாழ்த்துக்கள்!


கடவுளென்ற அறி(யா)முகத்துடன்..

இந்த கவியமைப்பு அருமை!

அமரன்
23-08-2008, 09:16 AM
மிக்க நன்றி ஷீ..
எல்லாரையும் எளிதில் அடையும் விதமாக எழுதத்தான் நானும் விரும்புகின்றேன். அதற்கான முயற்சிகளைத் தொடர்வேன்.