PDA

View Full Version : சிரி... சிரி....அறிஞர்
30-07-2008, 10:41 PM
நம் மன்ற உறவுகள் பலர் படித்த சிரிப்புகளை கொடுக்கிறார்கள்.

இணையத்தில் தேடினால்.. பல இருந்தது...

உண்மையான படைப்பாளிகளுக்கும், வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கும் நன்றிகள் பல...

அதில் சில
----------
1. ''டப்பிங் ஆர்ட்டிஸ்ட் நிறைய பேரை நம்ம கட்சியிலே சேர்க்கணும்னு தலைவர் சொல்றாரே... ஏன்?''
''காவிரி, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி ஏற்றம்னு நிறைய பிரச்னைகளுக்குத் குரல் கொடுக்க வேண்டியிருக்கே!''
- தஞ்சை தாமு, (ஆனந்த விகடன் 28.8.05)

2. ''உனக்காக எங்க அப்பா - அம்மாவை விட்டுட்டு ஓடி வந்தேனே... என்னோட காதல்தான் பெரிசு!''
''கிடையவே கிடையாது! உங்களுக்காக என் கணவனையே விட்டுட்டு ஓடிவந்தேனே... என்னோட காதல்தான் பெரிசு!''
- சி.ரகுபதி, (ஆனந்த விகடன் 28.8.05)

3. ''டெய்லி இந்த ஓட்டலுக்கு வந்து, கொஞ்ச நேரம் உக்கார்ந்துட்டு, எதுவுமே சாப்பிடாம போயிடுறியாமே... ஏன்...?''
''ஒரு மாசத்துக்கு, ஓட்டலுக்குப் போய் எதுவுமே சாப்பிடக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரே..!''
- கோவி. கோவன், (ஆனந்த விகடன் 28.8.05)

4. ''என்னப்பா இது... சாப்பிடுறதுக்கு முன்னாலயே வெத்தலையை கொண்டாந்து வைக்கிறே?''
''மினி மீல்ஸ்'தானே கேட்டீங்க... இந்த இலையிலதான் போடுவோம். மொத்தமா சுருட்டி வாய்ல போட்டுக்கணும்!''
- கோவி. கோவன், (ஆனந்த விகடன் 28.8.05)

5. ''ஏம்ப்பா நாயையும் கூட்டிட்டு வந்திருக்கே..?''
''கறிக்குழம்பு வெச்சிருக்கிற வீட்டை, மோப்பம் பிடிச்சு கண்டுபிடிக்கத்தான் தாயே!''
- ராசா தேசிங்கு, (ஆனந்த விகடன் 28.8.05)


6. ''கடவுள்கிட்ட சாப்பாடு கேட்டேன். ஒரு ஒட்டல்லே கொடுத்தார்.''
''அப்புறம்?''
''கடவுள்கிட்ட துணி கேட்டேன். ஒரு துணி கடையே கொடுத்தார்.''
''அடடா?''
''கடவுள்கிட்ட ரூபாய் பத்தாயிரம் கேட்டன். உங்க செல் நம்பர் கொடுத்தார். எப்ப வரட்டும்.''
-தேவா, (கல்கி 21.8.05)

7. ''என்ன இது ராப்பிச்சைக்காரன் நமது மன்னரை 'வாடா, போடா' என்று அழைக்கிறானே...''
''மன்னர் தினமும் இரவில் நகர்வலம் போன போது ·பிரெண்ட் ஆயிட்டானாம்''
- ஜி. ஜெபமாலை, (குமுதம் 24.8.2005)

8. ''அப்பா, தம்பி ஜன்னல் கண்ணாடியை உடைச்சுட்டான்...!''
''எப்படிடா...?''
''நான் அவன் மேலே கல்லெறிஞ்சப்போ திடீர்னு குனிஞ்சிட்டான்...!''
- க.முத்துக்குமார், (குமுதம் 24.8.2005)


9. ''அரசே, தாங்கள் இளவரசருக்கு 'பாக்கெட் மணி' தரவில்லையா என்ன?''
''எதற்காக கேட்கிறீர்கள் அமைச்சரே?''
''நமது பட்டத்து யானையை கொண்டு போய் இளவரசர், சர்க்கஸ்காரர்களிடம் விற்றுவிட்டாரே...!''
- ஜி. ஜெபமாலை, (குமுதம் 24.8.2005)

10. ''தலைவர் எதுக்குக் கம்ப்யூட்டரோட அலையறாரு?''
''அவருக்கு 'மவுசு' இருக்கறதைக் காட்டிக்கத்தான்!''
- இடைப்பாடி ஜெ.மாணிக்கவாசகம், (குமுதம் 24.8.2005)

11. ''சாப்பிட்ட உடனே ஓடவே முடியலை டாக்டர்...''
''சாப்பிட்ட உடனே எதுக்கு ஓடறீங்க?''
''ஓட்டல் முதலாளி துரத்திட்டு வர்றாரே...''
- வி. சாரதி டேச்சு, (கல்கி 21.8.2005)

12. ''டாக்டர்! நான் எது பண்ணாலும் மறந்து போய் ரெண்டாவது தடவை பண்றேன்.''
''இப்பத்தானே இந்த வியாதிக்கு மருந்து வாங்கிட்டுப் போனீங்க...''
- வி. சாரதி டேச்சு, (கல்கி 21.8.2005)


13. ''சர்தார்ஜி நர்ஸைக் காதலிக்கிறாராம்.''
''அப்புறம் ஏன் நர்ஸ் கோபமா இருக்காங்க?''
''ஐ லவ் யூ சிஸ்டர்னு சொல்லிட்டாராம்!''
- ஆர். தங்கராஜ், (கல்கி 21.8.2005)

14. ''தன்னோட கல்யாண நாள்ல கமலா தன் புருஷனை வெட்டிட்டாளா... ஏன்?''
''வெட்டிங் டே'ங்கிறதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டா..!''
- தஞ்சை தாமு, (குமுதம் 31.8.05)

15. ''என்னது?! அந்த குத்துச் சண்டை வீரருக்கு ஜோசியமெல்லாம் தெரியுமா?''
''ம்.. 'குத்து மதிப்பா' பலன் சொல்வாரு!''
- யமுனா ரெங்கநாதன், (குமுதம் 31.8.05)

16. ''என்னய்யா சர்வர், சாம்பார்ல சாராய வாசனை அடிக்குது?''
''நான்தான் சொன்னேனே, எங்க ஓட்டல்ல சரக்கு மாஸ்டர் நிறையப் பேரு இருக்காங்கன்னு.''
- பா. ஜெயக்குமார், (குமுதம் 31.8.05)


17. ''இந்த பாரும்மா... 'ஓடி வந்த உங்களுக்கு' நாங்க கல்யாணம் பண்ணிவச்சிருக்கலாம்... அதுக்காக இங்க வந்து 'ஆடிசீர்' கேட்கிறது... கொஞ்சம் கூட நல்லாயில்லை...''
- T.R. ராஜேஷ், (குமுதம் 31.8.05)

18. ''அந்த டாக்டர் உன்னைப் பத்தி நல்லாவே புரிஞ்சு வச்சிருக்காரே..?''
''எப்படிங்க..?''
''பாரு.. மாத்திரையெல்லாம் 'சீரியலுக்கு முன்' 'சீரியலுக்கு பின்'னு எழுதிக் கொடுத்திருக்காரே!''
- 'பாணால்' பிரகாஷ், (குமுதம் 31.8.05)

19. ''தலைவர் செருப்புகூட போடமாட்டாரு. அவ்வளவு எளிமை.''
''அதுக்காக, வருங்கால முதல்வரேனு சொல்றதுக்குப் பதிலா, அவரை வெறுங்காலு முதல்வரேனு சொல்றது நல்லாயில்லை.''
-பா. ஜெயக்குமார், (குமுதம் 31.8.05)

20. ''தெரியாத்தனமா ஒரு திருடன் வீட்லயே திருடப் போய்ட்டேன்!''
''அவன் திருடன்னு எப்படி தெரிந்தது?''
''மரியாதையா பீரோ சாவிய எடுனு மிரட்டினதுக்கு யார் வீட்டு பீரோ சாவி வேணும்னு கேட்கறான்!''
- அம்பை தேவா, (குமுதம் 31.8.05)


21. ''ராத்திரி நேரத்தில் சைக்கிளில் லைட் இல்லாமல் வர்றியே, ஐம்பது ரூபா எடு!''
''அதனால தானே சார் நான் தள்ளிக்கிட்டு.. வர்றேன்?''
''என்ன, தள்ளிக்கிட்டு வர்றியா? அப்ப திருட்டு கேஸ். நூறு ரூபா எடு!''
-அதிரை புகாரி, தஞ்சை, (குமுதம் 31.8.05)

22. ''என் பொண்டாட்டியோட சமையல்ல உப்பு, காரம் எதுவுமேயில்ல''
''ஏன்?''
''அவ சர்க்கரைப் பொங்கல் பண்ணியிருந்தா''
- சாத்துக்கூடல் கா.இளையராஜா, (பாக்யா 19.8.05)

23. ''நீங்க தலைவர் பதவியை வெறுக்கறவராக இருக்கலாம் அதுக்காக ரேஷன் கார்டில் குடும்பத் தலைவர் அப்படீங்கிறதை குடும்பத் தொண்டன்னு எல்லாம் போட முடியாது''
-இளை.ராஜா, (பாக்யா 19.8.05)

24. ''எதுக்காக ஆயுள் தண்டனை மட்டும் வேண்டாம்னு சொல்றே?''
''எனக்கு கொலஸ்ட்ரால் இருக்குது எசமான். ஆயில் ஆகாது அதான்!''
-இளை.ராஜா, (பாக்யா 19.8.05)


25. ''என் பையன் இந்த சின்ன வயசிலேயே எடக்கு மடக்கா பேச ஆரம்பிச்சிட்டான்''
''எதை வச்ச சொல்றே?''
''அட.. நான் வெளியே புறப்படும்போது டாடான்னு காண்பிச்சா அவன் 'பிர்லா'ன்னு சொல்வான்னாப் பாரேன்''
-இளை.ராஜா, (பாக்யா 19.8.05)

26. ''என்னை 'குண்டர்' சட்டத்துல கைது செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்''
''ஏன்?''
''நான் 'ஒல்லி'யாக இருக்கிறேனே''
- எசு.கே.செல்வகுமார், (பாக்யா 19.8.05)


27. ''உங்க பொண்ணு சென்னையில இருக்கற யார் கூடவோ போன்ல மணிக்கணக்குல பேசுறாளே... நீங்க எதுவும் கேட்க மாட்டீங்களா?''
''ஏன் கேட்கணும்? தமிழ்நாடு ·புல்லா இப்ப லோக்கல் கால்தானே?''
- எம்.வினோத், சங்கரன்கோவில், (பாக்யா 19.8.05)

28. ''பால்காரனின் மகனைத் தோட்ட வேலைக்குச் சேர்க்க வேண்டாம்னு சொன்னேனே கேட்டீங்களா?''
''ஏன், என்ன பண்றான்?''
''செடிகளுக்கெல்லாம் ஒரேடியாகத் தண்ணீரை விட்டு அழுகிப் போச்சுங்க!''
- எம்.அசோக்ராஜா, (பாக்யா 19.8.05)

29. ''கேடி கபாலியோட தாராள மனசு யாருக்கு வரும்?''
''அப்படி என்ன செய்துட்டான்?''
''ரிட்டயரான போலீஸ்காரங்களுக்கு மாமூல் கொடுக்க ஒரு அறக்கட்டளை அமைச்சிருக்கான்''
- அஜித்லால், (பாக்யா 19.8.05)


30. ''மாடிப்படியில் உருண்டு விழுந்து மண்டை உடைஞ்சி கிடந்தும் அரைமணி நேரம் கழிச்சி வர்றியே நியாயமா?''
''உங்களை யாருங்க சீரியல் நடக்கிற நேரம் விழச் சொன்னது?''
- ஜோசப் காமராஜ், (தேவி 24.8.05)

31. ''எனக்கும் என் மனைவிக்கும் 6-6-2004-ல் இருந்தே சண்டைதாங்க''
''என்னங்க... தேதி... மாசம்... வருஷமெல்லாம் சரியா ஞாபகம் வச்சிருக்கீங்க...''
''அன்னைக்குத்தானே எங்க கல்யாணம் நடந்தது...''
- த.ஜெகன், (தேவி 24.8.05)

32. ''எடுக்கும் போது கலர்ப்படம்னு சொல்லிட்டு இப்ப என் கருப்பு வெள்ளைப் படத்தைக் கொடுக்கிறியே!''
''சாரி சார்! கழுவும் போது சாயம் போயிடுச்சு!''
- வியாசை.கிருஷ்ணன், (தேவி 24.8.05)

33. ''நம்ம மாப்பிள்ளைக்கு சுறுசுறுப்பு ரொம்பத்தான்ன எதை வச்சி சொல்றே?''
''நம்ம பொண்ணு குளிச்சிட்டு புடவை மாத்திட்டு வந்தவுடன் துவைக்க ஆரம்பிச்சிடுறாருங்க!''
- புன்னகை மன்னன், திருத்தங்கல். (தேவி 24.8.05)


34. ''இப்ப வந்துட்டுப் போற பையனோடு என்ன தகராறு?''
''ஏழெட்டு வருஷமா மெகா சீரியல்ல என் பையனா நடிச்சிட்டிருக்கானாம். அதனால சொத்தில பங்கு கேட்க வந்துட்டான்.''
- பெ. கலாசாமி. (ஆனந்த விகடன் 28.8.05)

35. ''என்னது திடீர்னு உங்க தாத்தா தொண்டை ஹாரி பாட்டர் மாதிரி ஆயிருச்சா?''
''ஆமா. எக்கச்சக்கமா விக்குது.''
- தஞ்சை தாமு, (ஆனந்த விகடன் 28.8.05)


36. ''கையில ஏன் கிளவுஸோடு வர்றே?''
''ஆஸ்பத்திரிக்குப் போகும்போது வெறும் கையோடு போகாதீங்கன்னு என் மனைவி சொன்னா.''
- வசந்தி வள்ளுவன் (ஆனந்த விகடன் 28.8.05)

37. ''நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். நெருப்பாய் எரிகிறது?''
''அடச்சே. கூறுகெட்ட மனுஷா இன்னுமா மப்பு தெளியலை.''
- சிக்ஸ் முகம், (ஆனந்த விகடன் 28.8.05)

38. ''டி.வி.யில செய்தி வாசிக்க என்ன தகுதி வேணும்.''
''தினம் ஒரு புதுப் புடவை கட்டணும்.''
- ஆர்.பூபதி, கன்னிவாடி. (தேவி 24.8.05)

39. ''என்ன இது பக்கத்துப் பக்கத்துல ரெண்டு வாசல்படி வெச்சிருக்கிறீர்கள்?''
''வாஸ்துப்படி இப்படி வைக்கணுமாம்...''
''அப்ப ஒண்ணு வாசல்படி... இன்னொன்னு வாஸ்துப்படின்னு சொல்லுங்க!''
-எம். அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி. (தேவி 24.8.05)


40. ''நீங்க என்னிடம் கடன் தானே கேட்க வந்திருக்கிறீர்கள்??''
''ஹி..ஹி.. எப்படி கண்டுபிடித்தீர்கள்?''
''சிரிப்பே வரலைன்னாலும் கூட, நான் சொல்றதுக்கெல்லாம் சிரிச்சுக்கிறீங்களே.. அதான்..''
-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிபட்டி. (தேவி 24.8.05)

41. ''மன்னருடன் பர்சனாலிட்டியா வருபவர் யார்?''
''நமது புதிய தளபதி மகராணி.''
''அப்போ தளதளபதின்னு சொல்லு.''
-சம்பத்குமாரி, (குமுதம் 31.8.05)

42. ''யோவ் சாப்பாட்டுல கல் கிடக்குன்னு சொன்னா எறும்பு பிடிச்சி விடறே.''
''எறும்பு ஊர கல்லு தேயும் சார்.''
-எம். ஆர்த்திபீர்முகம்மது, கல்யாணிபுரம். (குமுதம் 31.8.05)


43. ''எப்பவும் மத்தவங்களை அழவச்சு வேடிக்கை பார்ப்பானே உங்க பையன் இப்ப என்ன பண்றான்?''
''மெகா சீரியல் டைரக்டர் ஆயிட்டான்.''
-தஞ்சை அனார்கலி (குமுதம் 31.8.05).

44. ''ஆபீஸ் டயத்திலே அடிக்கடி வீட்டுக்கு போனது தப்பாப் போச்சு... என்கிறீர்களே ஏன்...?''
''எனக்கு தூக்கத்திலே நடக்கிற வியாதி என்று மனைவி சொல்கிறார்.''.
-டாக்டர் சி. ராஜேந்திரன், திருவொற்றியூர் (பாக்யா 1-9-05)

45. ''அவருக்கு ரொம்பத்தான் சந்தேக குணம்.''
'எப்படிச் சொல்றே?''.
''தபாலை கூரியர்ல அனுப்பிட்டு, சரியா போய் சேர்ந்திடுச்சான்னு ஒரு நடை போய் பார்த்துட்டு வருவார்னா பார்த்துக்கோயேன்.''
-பூங்கொடி ஆனந்தன், (பாக்யா 1-9-05)

46. ''உங்க வீட்டுல திருடினவனை அடையாளம் காட்ட முடியுமா?''
''போலீஸ்ல அடையாளம் காட்டினா உங்களை எல்லாம் அடையாளம் தெரியாம பண்ணிடுவேன்னு மிரட்டி இருக்கானே?''
-சி.பி. செந்தில்குமார், (பாக்யா 1-9-05)


47. ''இதோ பாருங்க! மனுஷனுக்கு மானம் பெருசா? உயிர் பெருசா?''
''டாக்டர்! இப்படி பொதுவா கேட்டாக்க மானம்தான் பெருசுன்னு சொல்லிடுவேன்னு நினைச்சுடாதீங்க. இப்போதைக்கு எனக்கு உயிர்தான் பெருசு. அதனால தயவு செய்து எனக்கு நீங்க ஆபரேஷன் செய்யாதீங்க.''
எல். சேவுகபாண்டியன் (பாக்யா 1-9-05)

48. ''என்ன மணி... நம்ம காதலுக்கு பரிசா பஞ்சு மிட்டாயை §¡ய் வாங்கித் தர்ரீங்களே!''
''நீதான் சொன்ன... நான் எந்த பரிசை வாங்கிக் கொடுத்தாலும், வீட்டுக்கு கொண்டு போனா கண்டு பிடிச்சிடுவாங்கன்னு!''
-டால்ரிக்ஸ் (தேவி 31-8-05)

49. ''நான் கடன் கேட்டபோதெல்லாம் பணம் கொடுத்தவன் இன்று இல்லை என்று சொல்லிவிட்டான்.''
''அவனுக்கு என்ன கஷ்டமோ? நீங்க யாருகிட்ட கடன் கேட்டீங்க?''
''நம்ம ராப்பிச்சைக் கிட்டத்தான்!''
-மு.ரா.பாலாஜி (தேவி 31-8-05)


50. ''உன் மனைவிக்கு ஹோட்டல்ல சாப்பாடு வாங்கப் போறியா ஏன்?''
''இன்னைக்கு அவளே சமைக்கிறா அவளுக்கு அவ சமைக்கிறா சாப்பாடு ஒத்துக்காதாம்!''
-எல். சேவுகபாண்டியன் (பாக்யா 1-9-05)
-----
நன்றி - அப்புசாமி.காம்

ஓவியன்
31-07-2008, 05:48 AM
''உங்க வீட்டுல திருடினவனை அடையாளம் காட்ட முடியுமா?''
''போலீஸ்ல அடையாளம் காட்டினா உங்களை எல்லாம் அடையாளம் தெரியாம பண்ணிடுவேன்னு மிரட்டி இருக்கானே?''

ஹீ, ஹீ.......!!!

பகிர்வுக்கு நன்றிணா..!! :)

mania
31-07-2008, 07:07 AM
அடேயப்பா.... இத்தினி ஜோக் போட்டா எப்படி படிக்கறது...??? கொஞ்சம கொஞ்சமா போடலாமே...??? வயிறும் கெட்டுப்போகாது....!!!
அன்புடன்
மணியா...:D:D

சிவா.ஜி
31-07-2008, 07:16 AM
அறிஞரின் கலெக்ஷனெல்லாம் டாப். பழைய, புதிய என்று கலந்துகட்டி கலக்கியிருக்கிறார். நிறைய ஜோக்குகள் படிக்காதவை. இப்போது படித்து சிரிக்க வைத்தவை. பகிர்வுக்கு நன்றி அறிஞர்.

அறிஞர்
31-07-2008, 05:31 PM
அடேயப்பா.... இத்தினி ஜோக் போட்டா எப்படி படிக்கறது...??? கொஞ்சம கொஞ்சமா போடலாமே...??? வயிறும் கெட்டுப்போகாது....!!!
அன்புடன்
மணியா...:D:D
இணையத்தில் இன்னும் பல இருக்கு...
மக்கள் காப்பியடித்து.. போட்டு பலரை குழப்புவதால் இப்படி...

அறிஞர்
31-07-2008, 05:31 PM
அறிஞரின் கலெக்ஷனெல்லாம் டாப். பழைய, புதிய என்று கலந்துகட்டி கலக்கியிருக்கிறார். நிறைய ஜோக்குகள் படிக்காதவை. இப்போது படித்து சிரிக்க வைத்தவை. பகிர்வுக்கு நன்றி அறிஞர்.
இணையத்தில் கிடைப்பது இது போல் இன்னும் தொடரும்..

மதுரை மைந்தன்
31-07-2008, 07:21 PM
இணையத்தில் கிடைப்பது இது போல் இன்னும் தொடரும்..

பல ஜோக்குகளைப் படித்தாலும் ஒரு சில நீங்காமல் நினைவில் நிற்கின்றன. உங்களது தொகுப்பு அருமை. அதிலும் ஜோக்குகளின் உண்மையான படைப்பாளிகளையும் அவற்றை வெளியிட்ட பத்திரிகைகளையும் குறிப்பிட்டிருப்பது மிக அருமை. மிக்க நன்றி அறிஞர் அவர்களே

arun
31-07-2008, 08:08 PM
ஜோக்குகளின் கலெக்ஷன் அருமை தொடருங்கள்

mukilan
04-08-2008, 08:25 PM
அறிஞர் ஆராய்ச்சியெல்லாம் இப்போ ஒரே கல கல ரகமா இருக்கே! எல்லாரும் உக்கர்ந்து யோசிச்சிருக்காய்ங்க. பணிப்பளுவிலும் எங்களுடன் பகிர்ந்து கொண்ட அறிஞருக்கு என் நன்றி.

இளசு
04-08-2008, 10:03 PM
நல்ல தொகுப்பு அறிஞரே..

என் தர வரிசை :

முதல்: சன்னல் கண்ணாடி உடைத்த ரெட்டை வால் ரெங்குடு

இரண்டு : சீரியல் சமயத்தில் மாடிப்படியில் மண்டை உடைந்தவர்

மூன்று : கடவுளிடம் அலைபேசி எண் வாங்கிக் கடன் கேட்டவர்

நான்கு : மினிமீல்ஸ் வெற்றிலையில் சுருட்டி...

ஐந்து : எந்த வீட்டு பீரோ சாவி என்ற சகத் திருடன்!

அறிஞர்
05-08-2008, 04:27 PM
அறிஞர் ஆராய்ச்சியெல்லாம் இப்போ ஒரே கல கல ரகமா இருக்கே! எல்லாரும் உக்கர்ந்து யோசிச்சிருக்காய்ங்க. பணிப்பளுவிலும் எங்களுடன் பகிர்ந்து கொண்ட அறிஞருக்கு என் நன்றி.
இதுக்கு எதுக்குபா உட்கார்ந்து யோசிக்கனும்...

சிம்பிள் கூகுளிங்க்...

அறிஞர்
05-08-2008, 04:28 PM
நல்ல தொகுப்பு அறிஞரே..

என் தர வரிசை :

முதல்: சன்னல் கண்ணாடி உடைத்த ரெட்டை வால் ரெங்குடு

இரண்டு : சீரியல் சமயத்தில் மாடிப்படியில் மண்டை உடைந்தவர்

மூன்று : கடவுளிடம் அலைபேசி எண் வாங்கிக் கடன் கேட்டவர்

நான்கு : மினிமீல்ஸ் வெற்றிலையில் சுருட்டி...

ஐந்து : எந்த வீட்டு பீரோ சாவி என்ற சகத் திருடன்!
இவ்வளத்தையும்
படித்து..
ரசித்து..
வரிசைப்படுத்திய
இளசுவுக்கு நன்றி...