PDA

View Full Version : நாவுகளின் வேஷம்



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
30-07-2008, 06:47 PM
கண்களுக்கு முன்னால்
கண்டு கொண்டும்
மூக்கிற்கு முன்னால்
மோப்பம் கொண்டும் விடுகிறது
நாவுகள்

தேனிலும் பாகிலும்
ஊறிக்கொண்டு சிலநேரம்

அறுத்துப் போட்ட
மிளகாயின் காட்டமாய்
அதுவும் பல நேரம்

தீயிலிட்ட உப்பாய்
சீறியும் வெடிக்கும் சில நேரம்

இஸ்திரியிட்ட விறைப்பாய்
விரோதிகளிடம் சில நேரம்

சிரத்திற்கு முன்னால்
தன் சிரம் சாய்க்கும்
சிலருக்கும்
சில நேரங்கள்

முகமேற்கும் வேடங்களை
மிஞ்சி விடுகின்றன
சில நேரங்களில்
சில நாவுகள்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி

அறிஞர்
30-07-2008, 07:12 PM
முகமேற்கும் வேடங்களை
மிஞ்சி விடுகின்றன
சில நேரங்களில்
சில நாவுகள்.
நாவுகள்.. பற்றி வித்தியாசமான கண்ணோட்டம்...

உணவு ருசிக்கும் காரணம்..

பேச்சின் வேறுபாட்டிற்கு காரணம்..

பல பல வேஷங்கள்..
அருமை... அன்பரே..

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
31-07-2008, 07:52 AM
மிக்க நன்றி அறிஞர் அவர்களே.

poornima
31-07-2008, 08:36 AM
முகத்திற்காகவது பல்வேறு முகமூடிகள் இருக்கின்றன.என்ன ஒரு பிரச்னை என்றால் வெவ்வேறு மனிதர்களுக்காகவும், சூழலுக்காகவும் வெவ்வேறு முகமூடிகள் அணிந்து வளைய வரும்போது உண்மையான முகமே ஒருநாள் மறைந்துவிடக்கூடிய அபாயம் இருக்கிறது..

ஆனால் நாவுக்கு..?

அதனால் தான் பற்களுக்கிடையே பூட்டப்பட்டிருக்கிறது நாக்கு..
யாகவராயினும் நாகாக்க என்று வள்ளுவர் வேறு வலியுறுத்துகிறார்.

//முகமேற்கும் வேடங்களை
மிஞ்சி விடுகின்றன
சில நேரங்களில்
சில நாவுகள்.
//

உண்மையாகவும் இருக்கலாம். இருப்பினும் நாவினால் சுட்டவடு என்பது முகமூடிகளை விட கொஞ்சம் கடுமையானதுதான்.

நாவுகளின் வேஷம் - நிதர்சனம்

shibly591
01-08-2008, 05:20 AM
கண்களுக்கு முன்னால்
கண்டு கொண்டும்
மூக்கிற்கு முன்னால்
மோப்பம் கொண்டும் விடுகிறது
நாவுகள்

தேனிலும் பாகிலும்
ஊறிக்கொண்டு சிலநேரம்

அறுத்துப் போட்ட
மிளகாயின் காட்டமாய்
அதுவும் பல நேரம்

தீயிலிட்ட உப்பாய்
சீறியும் வெடிக்கும் சில நேரம்

இஸ்திரியிட்ட விறைப்பாய்
விரோதிகளிடம் சில நேரம்

சிரத்திற்கு முன்னால்
தன் சிரம் சாய்க்கும்
சிலருக்கும்
சில நேரங்கள்

முகமேற்கும் வேடங்களை
மிஞ்சி விடுகின்றன
சில நேரங்களில்
சில நாவுகள்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி

கவிதை நன்றாக இருக்கிறது...

இன்னும் சற்று அழுத்தம ஊட்டியிருக்கலாமோ என்று தோனடறுகிறது...

பாராட்டுக்கள்

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
02-08-2008, 11:31 AM
உள்ளதை உள்ள படி சொன்னதிற்கு மிக்க நன்றி ஷிப்லி.

இளசு
02-08-2008, 11:46 AM
இதனை அடக்கச் சொல்லியவர்கள் பலர்..
இறைத்தூதர் சல் முதல் தமிழய்யன் வள்ளுவன் வரை..

இதனுடானான மனிதனின் மல்லுக்கட்டு மட்டும்
இன்னும் முடியாமல்..

ஜூனைத்தின் சமூகப்பார்வை நாக்கைப் படம் பிடித்த பாங்கு அருமை!

நாகமாய் படம் எடுத்து அவ்வப்போது ஆடும் நாக்கின் விஷம் அகற்ற முயன்றுகொண்டே இருப்போம்..
நல்லது நடக்கலாம் ஒரு சிலருக்காவது..


பாராட்டுகள் ஜூனைத்!