PDA

View Full Version : 23-ம் எலிகேசி - பாகம் 2lenram80
30-07-2008, 12:04 PM
அமைச்சர்: அரசே! பக்கத்து நாட்டு அரசன் அவனே தன் கைப்பட "ஓலை ஓலை" எழுதி அனுப்பியுள்ளான்.
அரசன்: அமைச்சரே! எனக்கு படிக்கத் தெரியாது என்பதை குத்தி காட்டியது போதும். படித்துத் தொலையுங்கள் ஓலையை!

=============

அமைச்சர்: அரசே! அந்த கிரீடத்தை கழட்டி வைத்து விட்டு, இந்த துண்டை தலையில் போட்டு கொள்ளுங்கள்!
அரசன்: ஏன் என்ன ஆயிற்று? அமைச்சரே!
அமைச்சர்: எதிரி நாட்டு அரசன் நம் மீது போர் தொடுத்து வந்து விட்டான்!

============

அமைச்சர்: அரசே! வரி என்ற பெயரில் மக்கள் பணத்தை இப்படி கொள்ளை அடிக்கிறோமே?
அரசன்: தாங்கள் கூட தான் "சம்பளம்" என்ற பெயரில் என்னிடம் இருந்து கொள்ளை அடிக்கிறீர்கள். நான் ஏதாவது கேள்வி கேட்கிறேனா?

=============

அமைச்சர்: அரசே! அந்த மூன்றாவது தெருவில் நம் கஜானாவை வைத்தால் என்ன?
அரசன்: ம்ம்ம்ம்ம்ம்...
அமைச்சர்: என்ன அரசே யோசனை?
அரசன்: இல்லை...உனது வீடு அதற்கு பக்கத்தில் இருப்பதால் தான் யோசிக்கிறேன்!

============

அமைச்சர்: வெள்ளத்தில் பல வீடுகள் இடிந்து விழுந்தும், நம் அரச சபை மண்டபத்துக்கு ஒன்றும் ஆகவில்லை அரசே!
அரசன்: ஏன்? இடிந்து விழுந்தால் இரண்டு நாட்கள் லீவ் போடலாம் என்று எண்ணியிருந்தாயா?

============

அரசன்: அமைச்சரே! ஒரே காய்ச்சலாக இருக்கிறது. நம் அரண்மனை மருத்துவரை அழைத்து வரச் சொல்லுங்கள்!
அமைச்சர்: இரண்டு நாட்களுக்கு முன் அவர் இந்த விஷக் காய்ச்சலால் இறந்து விட்டார் மன்னா!
அரசன்: அய்யோ...
அமைச்சர்: பதறாதீர்கள் மன்னா! அதான் இளவரசருக்கு வயது 20 ஆகி விட்டதே மன்னா!

============

அரசன்: அமைச்சரே! போரில் தோற்றும், கண்ணுக்கு எட்டிய நிலம் வரை நமது நிலமே!
அமைச்சர்: எதிரிக்கு பயந்து மூடிய கண்டெய்னரில் மறைந்து கொண்டும் எப்படி மன்னா உங்களால் இப்படி பீலா விட முடிகிறது?

============

அரசன்: (அரசியைப் பார்த்து) அரசியே!...குலமகளே!...இந்த நாட்டின் குணமகளே! நகை அணிந்து ஒளி வீசும் பொன் மகளே!
அமைச்சர்:: மன்னா...நாசமா போச்சு..அவள் அரசி இல்லை. பணிப்பெண். அந்தப் புரத்தில் இருந்து இருந்து தங்களுக்கு அரசியையே மறந்து விட்டதா?

============

அரசன்: என்ன அமைச்சரே? என் அரச சபை இப்படி பிண வாடை அடிக்கிறது!
அமைச்சர்: அரசே! அது தங்கள் உடம்பிலிருந்து தான் வருகிறது. தாங்கள் குளித்து மாதக் கணக்காகிறது.
(குளிக்க போன அரசர் திரும்பி ஓடி வருகிறார்)
அமைச்சர்: என்ன அரசே! ரத்தக் காயங்களுடன்...? எப்படி நடந்தது?
அரசன்: நீச்சல் குளம் என்று நினைத்து அகழி*யில் இறங்கி விட்டேன். முதலைகள் பிறாண்டி விட்டன...
அமைச்சர்: சே!! ஜஸ்ட்-லெ தப்பிவிட்டீர்கள் மன்னா! அது நீச்சல் குளம் தான். நாங்கள் தான் அங்கே இருந்த பாம்புகளை பிடிப்பதற்காக இரண்டு முதலைகளை உள்ளே விட்டோம்!

அகழி* - கோட்டையை சுற்றி பெரிய பள்ளம் வெட்டி அதில் முதலைகளை விட்டிருப்பர்கள். வெளியாட்கள் யாரும் உள்ளே வரக்கூடாது என்பதற்காக. இதற்குப் பெயர் தான் அகழி.

============

அமைச்சர்: அரசே! இனிமேல் எறுமை மாட்டுப் பண்ணை பக்கம் போகாதீர்கள்!
அரசன்: ஏன் அமைச்சரே? மாடுகள் என்னை முட்டி விடும் என்ற அக்கரையா?
அமைச்சர்: இல்லை அரசே! உங்களுக்கும், அதற்கும் வித்தியாசம் தெரியாமல், நான் அடிக்கடி confuse ஆகி விடுகிறேன்!

============

தளபதி: அரசே! நம் நாட்டைச் சுற்றி போர் மேகம் சூழ்ந்து விட்டது.
அரசன்: எப்படியோ! மழை பெய்தால் சரி தான்!

============

தளபதி: அரசியார் கோவிலுக்கு சென்ற போது, நம் எதிரிகள் கோயிலை கைப்பற்றி விட்டார்கள் அரசே!
அரசன்: அப்பாடா!
தளபதி: பிறகு, நாங்கள் போரிட்டு அரசியாரை மீட்டு வந்து விட்டோம்.
அரசன்: அடப்பாவிகளா!

============

shibly591
30-07-2008, 12:17 PM
ஆஹா....முதல் பாகம் படித்து புண்ணாய்ப்போன வயிறு இன்னும் ஆறவில்லை....

அதற்குள் அடுத்ததா...????

தொடருங்கள்

தாமரை
30-07-2008, 12:47 PM
ஆழி - கடல்
அகழி - கோட்டையை சுற்றி பெரிய பள்ளம் வெட்டி அதில் முதலைகளை விட்டிருப்பர்கள். வெளியாட்கள் யாரும் உள்ளே வரக்கூடாது என்பதற்காக.

அறிஞர்
30-07-2008, 03:08 PM
கலக்கல் லெனின்...

இன்னும் பல பாகங்கள் வெளி வரட்டும்...

அரசரின் பீலாவும்.. நம்பிக்கையான வேலையாட்களும் சூப்பர்..


அரசன்: அமைச்சரே! போரில் தோற்றும், கண்ணுக்கு எட்டிய நிலம் வரை நமது நிலமே!
அமைச்சர்: எதிரிக்கு பயந்து மூடிய கண்டெய்னரில் மறைந்து கொண்டும் எப்படி மன்னா உங்களால் இப்படி பீலா விட முடிகிறது?
============

தளபதி: அரசியார் கோவிலுக்கு சென்ற போது, நம் எதிரிகள் கோயிலை கைப்பற்றி விட்டார்கள் அரசே!
அரசன்: அப்பாடா!
தளபதி: பிறகு, நாங்கள் போரிட்டு அரசியாரை மீட்டு வந்து விட்டோம்.
அரசன்: அடப்பாவிகளா!

============

arun
30-07-2008, 05:56 PM
சூப்பர் அனைத்தும் கலக்கல் பட்டையை கிளப்புங்கள்

மதி
31-07-2008, 01:29 AM
எலிகேசியின் ஒவ்வொரு வசனமும் தனி ரகம்...
அசத்தல்...

meera
31-07-2008, 03:12 AM
ஹ ஹ ஹா சூப்பருங்கோ.

aren
31-07-2008, 04:27 AM
எங்கேயிருந்து இந்தமாதிரியான ஜோக்குகளை பிடித்துவிருகிறீர்களே தெரியவில்லை. அனைத்தும் சூப்பர். தொடருங்கள்.

poornima
31-07-2008, 06:43 AM
லெனின்.. நீங்க அடிச்சி ஆடுங்க.. உங்கள் இரண்டு பாகங்களுக்கான நகைச்சுவைகளை 23 ஆம் புலிகேசியில் சேர்த்திருந்தால் இன்னும் படம்
ஜோராய் போயிருக்கும்.. அசத்துங்க

lolluvathiyar
03-08-2008, 07:16 AM
இந்த பகுதி ஜோக்களும் சூப்பர் அதுவும் கடைசி ஜோக் மிக மிக சூப்பர்

இளசு
03-08-2008, 09:24 AM
எல்லாமே ந(கை)ச்(சுவை)!

அசத்துறீங்க லெனின்..

(அகழிக்கு ஆங்கிலத்தில் Moat.)

பூமகள்
03-08-2008, 10:11 AM
எல்லா நகைப்புகளின் அருமை..!!

ரசித்துச் சிரித்தேன்..!!

முக்கியமாக அந்த கடைசி இரு துணுக்குகளையும் மிக ரசித்தேன்..!!

தொடருங்கள்..!!
பாராட்டுகள் லெனின்..!! :)

lenram80
06-08-2008, 08:39 PM
மிக்க நன்றி நண்பர்களே!!!