PDA

View Full Version : சுத்தத் தமிழ்



மதுரை மைந்தன்
30-07-2008, 11:39 AM
மன்றத்தில் முற்றிலும் தமிழிலேயே அனைவரும் பதிவது மிக்க மகிழ்ச்சி. ஆனால் சில பதிவுகளில் தமிழ் தவறாக இருக்கிறது. உதாரணமாக ஒரு பதிவு "அன்னைத் தமிழ்" என்பதற்கு பதிலாக "அண்ணைத் தமிழ் என்று இருக்கிறது. மன்றத்து பொறுப்பாளர்களும் அமைப்பாளர்களும் பதிவாளர்களுக்கு இத்தகைய தவறுகளை சுட்டிக் காடடி சுத்தத் தமிழில் பதிவு செய்தால் நலமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

அன்புடன்

மதுரை வீரன்

அமரன்
30-07-2008, 11:47 AM
ஆலோசனைகளும் கருத்துகளும் மெருகுக்கு சொல்லும் கட்டியம்.. இவை கட்டாயமும் கூட.. நன்றி மதுரைவீரன் அவர்களே!

தவறுகளை காணுமிடத்து திருத்தியோ, அல்லது தனிமடலில் சொல்லியோ எம்மால் இயன்றவரை பிழையில்லாத் தமிழால் மன்றத்தை பொலிவுறச் செய்ய முயல்கிறோம். எம் கவனத்தில் இருந்து தப்பிக்கும் பிழைகளும் உள்ளன. அவற்றை நம் மன்ற மக்கள் எம் கவனத்துக்கு எடுத்துவந்தும் உள்ளனர்..

நிற்க,

நீங்கள் சொன்ன அண்ணைத்தமிழ் போன்றவை சொல்லாடல் வகையை சேர்ந்தவை.. இவை சில திரிகளுக்கு அவசியமானவை.

எப்படியானாலும்,

உங்கள் கருத்தை கருத்தில் கொண்டு அவதானத்துடன் பணியாற்றுகிறோம்.

நன்றி.

அறிஞர்
30-07-2008, 03:13 PM
நீங்கள் சொன்ன அண்ணைத்தமிழ் போன்றவை சொல்லாடல் வகையை சேர்ந்தவை.. இவை சில திரிகளுக்கு அவசியமானவை.
.
அண்ணை என்பதை தெளிவாக விளக்கி விடுங்களேன்.
இளசுவை பாராட்டியதின் உள்நோக்கம் தெரியட்டும்.

அன்னையின் தமிழ் அன்னைத்தமிழ் என்றால்,
அண்ணனின் தமிழ் அண்ணைத்தமிழ் தான்.!!
(இது சரிதானே)

அமரன்
30-07-2008, 03:16 PM
சரிதான் அறிஞரே!
அண்ணாவை ஈழத்தில் அண்ணை என்றும் அழைப்போம். பிரித்து மேய்தல் தொழில் நுட்பத்தில் இன்னபிறவும் சிக்கலாம்.