PDA

View Full Version : கடவுளை காண...!!



சுகந்தப்ரீதன்
30-07-2008, 11:37 AM
அகிலனுக்கு அநேகமாக வயது எட்டை எட்டியிருக்கக்கூடும்..!! அவனிடம் அந்த வயதுக்கே உரிய குறும்பும் அறிந்துக்கொள்ளும் ஆர்வமும் சற்றுக் அதிகமாகவே இருந்தது எனலாம்..!! திடீரென ஒருநாள் அவனுக்கு கடவுளைக் காண வேண்டும் என்ற ஆவல் வந்தது..!! அப்போது "கடவுளைக் காண நீண்டதூரம் செல்ல வேண்டும்" என்று ஒருமுறை அவன் தாய் சொல்லியிருந்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது..!! ஆகையால் வழியில் உண்பதற்காக ஒரு கைப்பையில் சில உணவு பண்டங்களையும் ஜூஸ் பாட்டில்களையும் எடுத்துப்போட்டுக் கொண்டு கடவுளை சந்திக்க புறப்பட்டான் அகிலன்..!!

சிறிது தூரம் சென்றதும் வழியில் ஒரு பூங்காவினை கண்டான் அகிலன்..!! சரி இங்கே சற்று ஓய்வெடுத்துவிட்டு பயணத்தை தொடரலாமென எண்ணி அங்கிருந்த மரபெஞ்சின் மீது சென்று அமர்ந்தான்..!! அதில் ஏற்கனவே ஒரு வயதான பாட்டி தன் எதிரே மேய்ந்துக் கொண்டிருந்த பறவைகளை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்..!! அகிலன் அவளருகில் அமர்ந்து தன் கைப்பையை திறந்து ஜுஸை எடுத்து குடிக்க எத்தனிக்கையில் அருகிலிருந்த பாட்டியை பார்க்கிறான்..!! அப்போது அவள் பசியோடு இருப்பதாக அவனுக்கு தோணவே தன்னிடமிருந்த திண்பண்டத்தில் சிலவற்றை எடுத்து அந்த பாட்டியிடம் கொடுக்கிறான்..!! அவளும் மிகுந்த சந்தோசத்தோடு அதை ஏற்றுக்கொண்டு அகிலனை நோக்கி புன்னகைக்கிறாள்..!!

அந்த பாட்டியின் புன்னகை அவனை கவரவே, அதை மீண்டும் காண வேண்டி தன்னிடமிருந்த ஜீஸை அவளுக்கு அளிக்கிறான்..!! அதை வாங்கிக்கொண்டு திரும்பவும் அந்த பாட்டி அகிலனை நோக்கி புன்னகைக்க அவன் மிகுந்த உற்சாகமடைகிறான்..!! அதன்பின் அன்று மாலைவரை இருவரும் மாறிமாறி உண்பதும் புன்னகை புரிவதுமாக தங்களின் பொழுதை கழித்தனர்..!! ஆனால் இருவரும் தங்களுக்கிடையே ஒரு வார்த்தைக்கூட பேசிக்கொள்ளவில்லை..!!

மேற்கில் கதிரவன் மறைய ஆரம்பித்ததும்.. அகிலனுக்கு வீட்டுக்கு திரும்ப வேண்டுமென்ற எண்ணம் தோன்றவே பூங்காவிலிருந்து புறப்பட்டான்..!! அமர்ந்திருந்த இடத்திலிருந்து சில அடித்தூரம் சென்ற அகிலன், சட்டென்று திரும்பி பாட்டியை நோக்கி ஓடிவந்து அவளை இறுக்கி அன்பாய் அணைத்துக் கொண்டான்..!! அகிலனின் அந்த செயலில் பாட்டியின் உள்ளம் பூரிப்படைந்து அவனைநோக்கி பாட்டி மிகப்பெரிய புன்னகையொன்றை பூத்தாள்..!!

அதன்பின் அகிலன் தன் வீட்டையடைந்தபோது அவனது முகத்தில் இருந்த சந்தோசத்தை கண்டு அவனது தாய் மிகவும் ஆச்சரியமடைந்தாள்..!! அவள் அவனிடம், "இன்று என்ன செய்தாய் இவ்வளவு சந்தோசமாக இருக்கிறாய்?" என்றாள்..!! அதற்கு அகிலன் "இன்று நான் கடவுளுடன் உணவருந்தினேன்" என்றான்.. தொடர்ந்து தாயை பேசவிடாமல் "உனக்கு தெரியுமா அம்மா..?? இதுவரைக்கும் நான் பார்த்திராத மிக அழகான ஒரு சிரிப்பை இன்று கடவுளிடம் கண்டேன்ம்மா" என்றான்..!!

அதேசமயம் பாட்டியும் முகத்தில் மிகுந்த சந்தோச ரேகைகளுடன் தன்வீட்டை அடைந்திருந்தாள்..!! என்றைக்குமில்லாமல் இன்றைக்கு தன் தாயின் முகத்தில் இருந்த உற்சாகத்தை கண்டு வாயடைத்துப்போன அவளின் மகன் அவளிடம்," என்னம்மா ஆச்சு உனக்கு..? இன்றைக்கு இவ்வளவு சந்தோசமா இருக்கீங்க.." என்றான்..!! அதற்கு பாட்டி தன் மகனிடம், "இன்றைக்கு நான் கடவுளுடன் சேர்ந்து பூங்காவில் உணவருந்தினேன் மகனே" என்று கூறிவிட்டு தொடர்ந்து அவனிடன், "உனக்கு தெரியுமா..? கடவுள் நான் எதிர்பார்த்ததைவிடவும் மிகச் சிறியவராக இருக்கிறார்" என்றாள்.

நீதி போதனை:

பெரும்பாலும் புன்சிரிப்பு, கனிவான வார்த்தை, மற்றவர்களின் வார்த்தைகளை கூர்ந்து கேட்டல், அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுதல் மற்றும் அன்புடன் சிறுசிறு பரிசளித்தல் போன்ற செயல்கள் வாழ்வின் போக்கையே மாற்றியமைக்கக் கூடிய சக்தி படைத்தவை என்பதை மனிதர்களாகிய நாம் மறந்து அவற்றை குறைவாக மதிப்பிட்டு விடுகிறோம்..!!

நம் வாழ்நாள் முழுதும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பல்வேறு காரணங்களுக்காக மனிதர்கள் அன்றாடம் நம் வாழ்வில் வருவதும் போவதுமாக இருப்பார்கள்..!! எல்லோரிடமும் அன்பாகவும் கனிவாகவும் நடந்துக்கொள்ளுங்கள்.. யாரையும் குறைத்து மதிப்பீடு செய்யாமல் சமநிலையில் வைத்து போற்றுங்கள்..!!

மகிழ்ச்சி என்பது உடலுக்கு இடப்படும் வாசனை திரவியம் போன்றது..!! உங்கள்மீது ஒருசில துளிகளை இட்டுக்கொள்ளாமல் உங்களால் மற்றவர்களுக்கு வாசனையையோ மகிழ்ச்சியையோ அளிக்க முடியாது..!! எனவே எப்போதும் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருந்து மற்றவர்களையும் மகிழ்வித்து மகிழுங்கள்..!!


நன்றி: சந்தை துணுக்குகள்

shibly591
30-07-2008, 11:49 AM
[COLOR=black][FONT=TheneeUni]மகிழ்ச்சி என்பது உடலுக்கு இடப்படும் வாசனை திரவியம் போன்றது..!! உங்கள்மீது ஒருசில துளிகளை இட்டுக்கொள்ளாமல் உங்களால் மற்றவர்களுக்கு வாசனையையோ மகிழ்ச்சியையோ அளிக்க முடியாது..!! எனவே எப்போதும் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருந்து மற்றவர்களையும் மகிழ்வித்து மகிழுங்கள்..!!


நன்றி: சந்தை துணுக்குகள்

உடன்படுகிறேன்...

நன்றிகள் நண்பரே..

பூமகள்
30-07-2008, 04:11 PM
இத்தனை அழகான பதிவுக்கு பதில் பதிவுகள் காணோமே...!!
சுகு.. மிக முக்கியமான தேவையான பதிவு..!

சில புன்னகைகள்.. சில அன்பு வார்த்தைகள்..
ஆறாத காயங்களையும் ஆற்றும் பேறு பெற்றது...!!

மனதின் மெல்லிய துணுக்குகளில் ஒளிந்திருக்கும்
இருளைப் போக்கும்.. சக்தி படைத்தது..!!

மலையையும் வெல்லும் வீரம் தர வல்லது...!!

மகிழ்ச்சியாக இருந்தால்.. ஆயுள் நீடிக்குமாம்..!!

ஆகவே.. சந்தோசமாய் நலமுடன் பல்லாண்டு வாழ சில ஸ்நேகப் பூக்களை தூவ மறக்காமலிருப்போம்..!! :)

பகிர்ந்ததுக்கு நன்றிகள் சுகந்தப்ரீதன்.

mukilan
30-07-2008, 05:26 PM
அருமையான போதனை சுகு. யாரோ சொன்னது" நீங்கள் வாழ்வில் ஏறுமுகத்தில் வழியில் எதிர்படுபவர்களிடம் அன்பாயிருங்கள்; இறங்குமுகம் காணுகையில் நீங்கள் அவர்களைத்தான் திரும்பக் காண வேண்டும்"

நம்மை மகிழ்வித்து அடுத்தவரையும் மகிழ்விக்கும் பண்பு முக்கியமான் ஒன்று. நீதிக்கதைகள் அமர்க்களம்.:icon_b:

arun
30-07-2008, 05:51 PM
மிகவும் அருமையான அழகான அவசியமான பதிவு

பகிர்தலுக்கு நன்றி

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
30-07-2008, 07:01 PM
அருமையான தேவையான பதிவுதான். அதையே நான் வழி மொழிகின்றேன் அன்பரே.

அறிஞர்
30-07-2008, 07:09 PM
அன்பான பேச்சு, பண்பான செயல்.....
மற்றவரை மதித்து அன்பு பாராட்டினாலே....
கடவுள்தான்....

நன்றி சுகந்தப்ரீதன்

(படித்த செய்தியாக இருப்பதால் இடத்தை மாற்றுகிறேன்)