PDA

View Full Version : கிரிக்கெட் ஒரு ஃபிராடு கேம். எப்படி..?



ஓவியன்
30-07-2008, 04:21 AM
1. கையில பாலை வச்சுக்கிட்டே ‘நோபால்’னு சொல்லுவாங்க

2. ‘ஓவர்’னு சொல்லிட்டு ஓவர்மேல ஓவரா போடுவாங்க

3. ‘ஆல்அவுட்’னு சொல்வாங்க. ஆனா, பத்து பேர்தான் அவுட்டாகி இருப்பாங்க

4. ‘ஒரு ஓவருக்கு ஆறுபால்’னு சொல்லிட்டு ஒரே பால்தான் வச்சிருப்பாங்க

5. ஓரு பேட்ஸ்மேன் அவுட் ஆனா அம்பயர் ஒரு கையை தூக்குறார். அப்போ ரெண்டு கையையும் தூக்கினா, ரெண்டு பேர் அவுட்டுன்னுதானே அர்த்தம்? ஆனா, ‘சிக்ஸ்’னு சொல்றாங்க.

நன்றி - சு. தங்கலீலா, ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரி, திருச்சி, யூத்புல் விகடன்

meera
30-07-2008, 04:27 AM
ஆஹா ஓவியன் அண்ணா, சூப்பருங்கோ கிரிக்கெட் ஃபிராடு கேம்முங்கறதுக்கு இவ்ளோ தான் காரணமா????

இன்னும் நிறைய இருக்கே அதையெல்லாம் விட்டுட்டீங்களே!!!!!
:lachen001::aetsch013:

mania
30-07-2008, 04:33 AM
ஹா.....ஹா....ஹா.... நல்லா ரசிக்கும் படி உள்ளன. நன்றி ஓவியன்:D
அன்புடன்
மணியா:D

சிவா.ஜி
30-07-2008, 04:34 AM
அசத்தல் ஓவியன். சரியாத்தான் சொல்லியிருக்காங்க மக்கா. சொல்றது ஒண்ணு நிஜத்துல வேறொன்னு...என்னமா ஏமாத்துறாய்ங்க....

மதி
30-07-2008, 05:54 AM
அட..எங்க ஊர் பொண்ணுங்களுக்கு நெசமாவே அறிவு ஜாஸ்திங்கோ..
நன்றி ஓவியரே..

shibly591
30-07-2008, 05:59 AM
அட ஆமால்ல (ஆமாவா? இல்லையா ன்னு சண்டைக்கு வந்திடாதீங்க)...

aren
30-07-2008, 06:41 AM
உண்மைதான் ஓவியன். எப்படி இது கிரிக்கெட் போர்டுகளுக்குத் தெரியாமல் போனது.

poornima
30-07-2008, 08:15 AM
எப்படி இப்படி எல்லாம்..? :-)

அவுட்டாகி ஆள் மாறும் நேரத்தில உட்கர்ந்து யோசிப்பாங்களோ..?

இதயம்
30-07-2008, 08:41 AM
அட.. ஆமால்ல..?!!
இது இத்தனை நாளா நமக்கு தோணலையே..!! யாருப்பா சொன்னது "பெண் புத்தி பின் புத்தி"ன்னு..?!! அவரை மன்றத்தில் வச்சி கட்டிப்போடுங்க..!!

அன்புரசிகன்
30-07-2008, 11:11 AM
உண்மைதான் ஓவியன். எப்படி இது கிரிக்கெட் போர்டுகளுக்குத் தெரியாமல் போனது.

இப்போது கூட ஒன்றும் தாமதமில்லை.....

நேசம்
30-07-2008, 02:39 PM
கிரிக்கெட் போர்டுக்கு தெரியாமல் இருப்பது தான் நல்லது.தெரிஞ்சா நொந்து போய்டுவாங்க. அசத்தலா இருந்தது ஒவியன்.

அறிஞர்
30-07-2008, 03:09 PM
ஹிஹிஹி எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க.....
அருமை ஓவியன்..

அமரன்
30-07-2008, 03:10 PM
இந்த ஃபிராடில் பலதரப்பினர் சம்மந்தப்படிருக்க ஒரு ஃபிராடு கேமென்று சொல்லும் சம்மந்தப்பட்ட தரப்பினரை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

minmini
30-07-2008, 03:24 PM
ஆ- ஹா..................
என்னமா கலாய்க்கிராங்க:lachen001::lachen001::lachen001:
சூப்பரப்பு :icon_b::icon_b:

arun
30-07-2008, 05:58 PM
என்னவோ சீரியசா சொல்ல வறீங்கன்னு வந்து படிச்சா சிரிக்க வச்சிட்டீங்க :D

sujan1234
18-12-2008, 07:50 AM
நல்லா இருக்கு

anna
18-12-2008, 08:50 AM
நான் என்னமோ சூதாட்டம் நடந்திருக்கு போல என நினைத்து வந்தால் இங்கே காமெடில பண்ணியிருக்கீங்க.

"பொத்தனூர்"பிரபு
19-12-2008, 05:40 AM
mmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

சூரியன்
19-12-2008, 07:32 AM
கரெக்டா தான் சொல்லியிருக்காங்க.

Mathu
05-01-2009, 06:10 AM
இந்த ஃபிராடில் பலதரப்பினர் சம்மந்தப்படிருக்க ஒரு ஃபிராடு கேமென்று சொல்லும் சம்மந்தப்பட்ட தரப்பினரை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

வர வர தேர்ந்த அரசியல்வாதி ஆகிட்டீங்க அமரன். :D:traurig001:

கா.ரமேஷ்
05-01-2009, 06:27 AM
ஏதோ பயங்கரமான விவாதம்னு வந்தா...ஹாஹாஹா நல்லதொரு நகைச்சுவை....!
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா...?

ஓவியன்
06-01-2009, 03:13 AM
அந்த பொண்ணு எவ்வளவு சீரியசாக யோசனை பண்ணி, கவலையுடன் எழுதி இருக்காங்க...
நீங்க எல்லோரும் அதனை வாசித்து விட்டு இப்படி சிரித்துக் கொண்டிருந்தால் என்னாவது...??