PDA

View Full Version : தடுத்தாண்டவர் - அ.மை -33



இளசு
29-07-2008, 08:08 PM
அறிவியல் மைல்கற்கள் - 33

----------------------------------------------
அ.மை- 32: நிலமகள் பரமதம் - இங்கே:
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16433

-----------------------------------------------

அறிவியல் மைல்கற்கள் - 33


தடுத்தாண்டவர்


எட்வர்ட் ஜென்னர் -Edward Jenner ( 1749 - 1823)

---------------------------------


''இன்னும் ஏன் சிந்தனை?
செய்துவிடு பரிசோதனை!''

தம் சீடனான ஜென்னருக்கு மூத்த மருத்துவர் ஜான் ஹண்ட்டர்
சொன்ன அறிவுரை இது..!

எதைப் பற்றி ஜென்னர் சிந்தித்தார்?
என்ன செய்ய யோசித்தார்?


ஜென்னர் இங்கிலாந்தின் பெர்க்லி நகரில் பிறந்தவர்.
பறவைகள் உள்ளிட்ட இயற்கையைப் படிப்பதே அவர் முதல் காதல்.
உள்ளூரில் ஒரு மருத்துவரிடம் உதவியாளராக பல ஆண்டு பணியாற்றியதால்
மருத்துவம் மேல் மறுகாதல்!

பின் இலண்டன் சென்று முறையாய் முழுமையாய் மருத்துவம் படித்து,
பிறந்த ஊர் திரும்பி, மளமளவென பிரபல மருத்துவர் ஆனார்!

மருத்துவக் கல்லூரியில் அவர் ஆசான் ஹண்ட்டர்.
பெர்க்லிக்குத் திரும்பினாலும், ஆசானுடன் எப்போதும் தொடர்பிலிருந்தார் ஜென்னர்.

ஜென்னர் வாழ்ந்த அந்த காலகட்டத்தில் :

--------------------------------------------------------------
ஒரு தகவல்:

ஊரில் ஆயிரம் பேர் இருந்தால் -
அதில் அறுநூறு பேருக்கு பெரியம்மை வரும்...!
வந்தவரில் இருநூறு பேர் மாண்டு போவார்கள்!!
பிழைத்தவர்களில் முகத்தழும்பும், கண்ணிழப்புமாய் நின்றவர்கள் நிறைய்ய்ய்ய்ய!

கொள்ளை (பிளேக்), பேதி ( காலரா) வுடன் பெரியம்மையும் சேர்ந்து
முப்பெரும் அரக்கர்களாய் உலகை அடிக்கடி காலி செய்த காலம் அது..!

----------------------------------------------------------------------

ஒரு முயற்சி :

பெரியம்மை வந்தவர்களின் கொப்புள நீரை மற்றவர் வலிந்து தோலுக்குள் ஏற்றிக்கொண்டால்
(Variolation) - அவர்களுக்கு வரும் அம்மைநோய் வீரியம் கொஞ்சம் குறைந்து வந்தது.

ஆனாலும், இது சட்டியில் இருந்து அடுப்பில் விழுவதைப்போல..
பலநேரம் தடுப்புக்காக வலிந்து ஏற்ற நோயே காவு வாங்கி பயமுறுத்தியது..

--------------------------------------------------------------------------------

ஜென்னரின் கவனிப்பு:
பால் கறப்பவர்கள் கைகளில் மாட்டம்மை தொற்றும்.
அப்படி மாட்டம்மை வந்தவர்களுக்கு, பெரியம்மை வருவதில்லை..!

------------------------------------------------------------------------

ஜென்னரின் சிந்தனை :

வலிய மாட்டம்மை வரவழைத்துக் கொண்டால்
பெரியம்மையிலிருந்து தப்பலாம்..

மாட்டம்மை வீரியம் குறைந்த நோய்..விபரீத வாய்ப்புகள் குறைவு..

-------------------------------------------

செய்தார் சோதனை :

1796; மே 14 - மனித வரலாற்றில் ஒரு பொன்னாள்.
சாரா என்ற பால்காரியின் மாட்டம்மை கைப்புண் சீழை
ஜேம்ஸ் ஃபிப்ஸ் என்ற எட்டு வயது சிறுவனுக்கு ஊசியால் ஏற்றிய நாள்.

இலேசான காய்ச்சல்.. கொஞ்சம் ஊசி போட்ட இடத்தில் கொப்புளம்.
சில நாளில் ஆறித்தேறிவிட்டான் ஜேம்ஸ்!

ஆறாவது வாரம், அவனுக்கு பெரியம்மைச் சீழை ஏற்றினார் ஜென்னர்!
எத்தனை மனத்தவிப்பு... அதை மீறும் எத்துணை அறிவியல் முனைப்பு..?
ஜென்னரின் கரங்களின் அக்கண நிலையை ஒரு கணம் எண்ணிப்பாருங்கள்!


கவனிப்பு.. சிந்தனை.. அதையொட்டிய முடிவு!
ஜேம்ஸ் நலமாய் இருந்தான்.
ஜென்னர் - வென்றார்..
மனித குலமே பலன் கண்டது..
-----------------------------------------------------------

உலக நாயகன்:

உலகெங்கும் ஜென்னரின் கோட்பாடு ஏற்கப்பட்டு
பெரியம்மைத் தடுப்பு அமலாக்கப்பட்டது..

இறுதியாய் 14 ஆண்டுகள் முனைப்பாய்ச் செயலாக்கி
1980-ல் பெரியம்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டது..!

ஜென்னர் காட்டிய வழியில் பின்னர் வந்த லூயி பாஸ்டர்
காலரா, ஆந்த்ராக்ஸ், ரேபீஸ் - தடுத்தாண்டார்.

அதன்பின் பலர் ஹெப்படைட்டிஸ் பி முதல் டைபாய்டு வரை
இன்னும் இன்னும் தடுத்தாண்டனர்..

சகமனிதர் நோய்கண்டு, அது தடுக்கும் முறை கண்டு
கோடிக்கணக்கானோரைக் காப்பாற்ற வழி சொன்ன
ஜென்னர் போன்றவர்களே உண்மையான உலக நாயகர்கள் , இல்லையா நண்பர்களே!

mukilan
29-07-2008, 08:52 PM
நோய் வருமுன்னரே அதைத் தடுத்தாண்டால் எப்படி என சிந்தித்த எட்வர்ட் ஜென்னருக்கு தடுத்தாண்டவர் என்ற பெயர் சரியான பொருத்தம்.

கூர்ந்து கவனித்தலே இன்று நாம் ஆரோக்கியமாக (ஓரளவேணும்) இருப்பதற்கான வழிவகை காண அடிகோலியிருக்கிறது. முள்ளை முள்ளால் எடுத்த முத்தான யோசனை அவருக்குத் தோன்றியதாலேயே இன்று பெரும்பாலான நாடுகளில் பெரியம்மை காணாமல் போய்விட்டது.

அந்த நாளில் ஆராய்ச்சிகள் முறைப்படுத்தப் படவில்லையோ? ஒரு ஆராய்ச்சிக்காகச் சிறுவனின் உடலில் மாட்டம்மை கிருமிகளைச் செலுத்துவதும் பின்னர் அக்கிருமிகளின் எதிர்ப்பு சக்தி கண்டறிய மற்றொரு நோய்க்கிருமியைச் செலுத்துவதும் எளிதாக நடந்திருக்கிறதே!.

தடுத்தாண்டவர் எட்வர்ட் ஜென்னர் என்றால் அப்படி ஒரு அரிய முயற்சிக்கு தன் உடலைக் கொடுத்தாண்டவர் ஜேம்ஸ் ஃபிப்ஸ் அல்லவா?

வழக்கம் போல சுருங்கச் சொல்லி விரிவாக விளங்க வைக்கும் உங்களின் அற்புதமான படைப்பு. அறிவியல் மைந்தர்களைச் சந்திப்பதில் பேரானந்தம் அண்ணா.

பாரதி
30-07-2008, 01:29 AM
எட்வர்ட் ஜென்னர்...! ஜேம்ஸ் ஃபிப்ஸ்...!!

சிறந்த சாதனை செய்தவர்களை, அவர்கள் எடுத்த கடும் முயற்சிகளை இதுவரை அறியாமலே இருந்தது கண்டு மனம் வருந்துகிறேன். போதிய வசதிகள் இல்லாமல் இருந்த காலத்தில் துணிந்து பரிசோதித்து, வெற்றி கண்டவர்களைக் கண்டு வியக்கிறேன். மனிதகுலத்திற்கு அவர்கள் செய்த பேருதவிக்கு நன்றி கூறி மகிழ்கிறேன்.

அவ்வப்போது இதைப்போல தடுத்தாட்கொள்ளும் இனிய அண்ணனுக்கு அன்பு.

செல்வா
30-07-2008, 10:51 AM
சிலச் சித்த மருத்துவப் புத்தகங்களை வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
அதில் குறிப்பிட்டுருக்கும் மருந்துகள் அவற்றின் அளவுகள் பக்குவங்கள்
கலக்க வேண்டியவை கலக்க வேண்டிய சமயங்கள் பக்குவம் தவறினால் தவறிப்போகும் மருந்துகள் என .....
அப்பப்பா... நுண்ணிய அளவீடுகள். இவற்றை எல்லாம் சோதித்து ஆராய்ந்து கண்டவர் யார்... அதற்கு அவர்கள் செலவாக்கிய உழைப்பு பலநேரங்களில் உயிரையே கூட.
தொடர்ந்து அழகியத் தமிழில் அறிவியல் மைல் கற்களை வழங்கிவரும் அண்ணனுக்கு நன்றிகள்.

shibly591
30-07-2008, 10:57 AM
வித்தியாசமான ஆனால் அதிக பயனுள்ள தகவல்..

நன்றிகள் இளசு அண்ணா....

சிவா.ஜி
31-07-2008, 06:06 AM
பெரியம்மை என்ற கொடு நோயை, சிறு நோயின் உதவியால் தடுத்தாட்கொண்ட ஜென்னர்...உண்மையிலேயே ஒரு வின்னர். அதற்காக தன் உடலையே பரிசோதனைக்கூடமாக்க ஒத்துழைத்த ஜேம்ஸ் ஃபிப்ஸ்..மனமுவந்து பாரட்டப்படவேண்டிவர். அழகு தமிழில் தடுத்தாண்டவரையும், கொடுத்தாண்டவரையும்(நன்றி முகிலன்) அறியத்தந்த இளசுவுக்கு நன்றி. பாராட்டுகள்.

poornima
31-07-2008, 08:51 AM
அறிவியல் பற்றி தமிழில் எழுதும்போது நிறையவே எச்சரிக்கையாக
இருக்க வேண்டி இருக்கிறது. அதிகம் தமிழ்படுத்தினோம் என்பதிலும் சற்று அபாயம் இருக்கிறது - சுஜாதா.

எளிமையும் இனிமையும் கலந்த பயனுள்ள பதிவைத் தந்துக் கொண்டிருப்பதால் தான் இன்னமும் "இளசு"வாகவே இருக்க முடிகிறதோ என்னவோ.. பாராட்டுகள்.

பூமகள்
31-07-2008, 10:54 AM
தடுத்தாண்டவரின் பெரியம்மை மீதான தாண்டவம்..
கோடான கோடி மக்களின் நல வாழ்வுக்கு வழி வகுத்திருக்கிறது..!!

ஜென்னர் சிறந்த சீடரென்பதும்..
ஹண்ட்டர் சிறந்த குரு என்பதும்..
அந்த எட்டு வயது சிறுவன்..
தன்னை அற்பணித்து
கொடுத்தாண்டவரானதும்...

மலைக்க வைக்கிறது..!! :eek::eek: :sprachlos020::sprachlos020:

ஹென்னர் கையில் பெரியம்மை கிருமி கொண்டு சிறுவனுக்கு ஏற்றும் அந்த ஒரு கணம் சிந்திக்கையில் உடல் சிலிர்க்கிறது...!! :icon_b::icon_b:

ஜென்னர் முதல் ஜேம்ஸ் வரை..

உண்மையான உலக நாயகர்களின் பட்டியலை வெளியிட்டு வரும் பெரியண்ணாவே எனக்கு மிகச் சிறந்த உலக நாயகர்..!! :)

தொடருங்கள் அண்ணலே..!!

(தாமதமான பின்னூட்டத்துக்கு இந்த தங்கையை மன்னியுங்கள்.:icon_rollout:)

இளசு
10-08-2008, 12:41 PM
அந்த நாளில் ஆராய்ச்சிகள் முறைப்படுத்தப் படவில்லையோ?
தடுத்தாண்டவர் எட்வர்ட் ஜென்னர் என்றால் அப்படி ஒரு அரிய முயற்சிக்கு தன் உடலைக் கொடுத்தாண்டவர் ஜேம்ஸ் ஃபிப்ஸ் அல்லவா?

.

நன்றி முகில்ஸ்..

1) அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ப சட்டங்கள் - நியாயங்கள் மாறி வருகின்றன ..இல்லையா?

இன்று அப்படி ஒரு சோதனை செய்வதை எண்ணவும் இயலாதே!

எதிக்ஸ் என்னும் மனித நெறி, மற்றும் ஆராய்ச்சி முறைமைக் குழுக்களிடம் இப்படி ஒரு சோதனை என எழுதிக் கொடுத்தவுடனே நம்மை ஒரு வழி ஆக்கிவிடுவார்கள்..

2) கொடுத்தாண்டவர் - சாலப்பொருத்தம்!

இந்த வகை ஆராய்ச்சிகள் இருகை ஓசைகள்..
மறுகையையும் சமச்சொல்லால் சீராட்டிய உனக்கு என் அன்பு!

இளசு
10-08-2008, 12:43 PM
எட்வர்ட் ஜென்னர்...! ஜேம்ஸ் ஃபிப்ஸ்...!!

. போதிய வசதிகள் இல்லாமல் இருந்த காலத்தில் துணிந்து பரிசோதித்து, வெற்றி கண்டவர்களைக் கண்டு வியக்கிறேன். மனிதகுலத்திற்கு அவர்கள் செய்த பேருதவிக்கு நன்றி கூறி மகிழ்கிறேன்.

.

மாறா அன்புடன் எனைத் தொடர்ந்து ஊக்கும் உனக்கு என் பதில் அன்பு - பாரதி!

வசதிகள் குறைவை மீறிச் சாதித்த அவர்கள் மீது மதிப்பு பல்குவது சரிதான்!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
10-08-2008, 12:50 PM
பயனுள்ள ஆரோக்கியமான தகவல். நன்றி இளசு அண்ணா.

Keelai Naadaan
10-08-2008, 01:09 PM
எளிய தமிழில் சுவைபட விவரித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

இளசு
29-08-2008, 07:18 PM
.....
அப்பப்பா... நுண்ணிய அளவீடுகள். இவற்றை எல்லாம் சோதித்து ஆராய்ந்து கண்டவர் யார்... அதற்கு அவர்கள் செலவாக்கிய உழைப்பு பலநேரங்களில் உயிரையே கூட.
.

நன்றி செல்வா..

தடம் பார்த்து நடப்பதற்கே பெருமிதம் கொள்கிறோமே!!
தடம் பதித்தவர்கள் சேவையும் ஆற்றலும்... அப்பப்பா!


வித்தியாசமான ஆனால் அதிக பயனுள்ள தகவல்..

....

நன்றி ஷிப்லி..தொடர்ந்து வாசித்து ஊக்குங்கள்.


பெரியம்மை என்ற கொடு நோயை, சிறு நோயின் உதவியால் தடுத்தாட்கொண்ட ஜென்னர்...உண்மையிலேயே ஒரு வின்னர். அதற்காக தன் உடலையே பரிசோதனைக்கூடமாக்க ஒத்துழைத்த ஜேம்ஸ் ஃபிப்ஸ்..மனமுவந்து பாரட்டப்படவேண்டிவர். .

நன்றி சிவா!

ஒரு மனிதர் பலகோடி உயிர்களைக் காத்தவர் என்றால்
அவர் ஒரு வகையில் ''ஆண்டவர்தான்'' - இல்லையா?


அறிவியல் பற்றி தமிழில் எழுதும்போது நிறையவே எச்சரிக்கையாக
இருக்க வேண்டி இருக்கிறது. அதிகம் தமிழ்படுத்தினோம் என்பதிலும் சற்று அபாயம் இருக்கிறது - சுஜாதா.
.

நன்றி பூர்ணி...
பொருத்தமான மேற்கோளைப் பொருத்தமான இடத்தில் இட
உங்களிடம் கற்கவேண்டும்..


தடுத்தாண்டவரின் பெரியம்மை மீதான தாண்டவம்..
கோடான கோடி மக்களின் நல வாழ்வுக்கு வழி வகுத்திருக்கிறது..!!

ஜென்னர் சிறந்த சீடரென்பதும்..
ஹண்ட்டர் சிறந்த குரு என்பதும்..
அந்த எட்டு வயது சிறுவன்..
தன்னை அற்பணித்து
கொடுத்தாண்டவரானதும்...

மலைக்க வைக்கிறது..!! :eek::eek: :sprachlos020::sprachlos020:

ஹென்னர் கையில் பெரியம்மை கிருமி கொண்டு சிறுவனுக்கு ஏற்றும் அந்த ஒரு கணம் சிந்திக்கையில் உடல் சிலிர்க்கிறது...!! :icon_b::icon_b:

ஜென்னர் முதல் ஜேம்ஸ் வரை..

..!!




நன்றி பூ தங்கைக்கு!
பொன்னான பின்னூட்டம் இட்ட கைகளுக்கு தனி நன்றி!



பயனுள்ள ஆரோக்கியமான தகவல். .

நன்றி ஜூனைத்! தொடர்ந்து ஆதரிக்கவும்..


எளிய தமிழில் சுவைபட விவரித்திருக்கிறீர்கள். .

நன்றி நண்பர் கீழைநாடனே!

உங்கள் ஊக்கமருந்தால் விரைந்து அடுத்த நாயகரை அழைத்து வருவேன்..

முன் குறிப்பு : அவர்......
மின்சேமிப்பு, மின்கலன் (பேட்டரி) முதலில் அமைத்த மின்சாரக்கண்ணன்!

பூமகள்
02-09-2008, 08:40 AM
செய்தார் சோதனை :

1796; மே 14 - மனித வரலாற்றில் ஒரு பொன்னாள்.
சாரா என்ற பால்காரியின் மாட்டம்மை கைப்புண் சீழை
ஜேம்ஸ் ஃபிப்ஸ் என்ற எட்டு வயது சிறுவனுக்கு ஊசியால் ஏற்றிய நாள்.


பெரியண்ணா..

செய்தித் தாளின் இந்த வார இலவச இணைப்புப் புத்தகத்தில் கடந்த ஞாயிறு அன்று ஒரு கட்டுரை படித்தேன். அதில்.. ஹென்னர் பற்றி எழுதியிருந்தார்கள்.

ஏற்கனவே அண்ணலின் தடுத்தாண்டவர் படித்ததால் அதில் என்ன சொல்லியிருக்கிறார்களென படித்ததில் குழப்பமே எஞ்சியது.

பெரியண்ணாவின் தகவல் தரும் நம்பகத்தன்மையை நம்புபவள் நான். ஆயினும் என் போல் பலர் குழம்பக் கூடாதென்ற நோக்கில் இங்கு அந்த சந்தேகத்தைப் பதிக்கிறேன்.

அதில் சொல்லப்பட்டது, (வார்த்தை மாறாமல் அப்படியே..)
"....
அம்மை நோய்க்கு மருந்து கண்டுபிடித்த எட்வர்ட் ஜென்னர் அதை முதலில் பரிசோதனை செய்தது, தன்னுடைய ஒரு வயதே ஆன சொந்தக் குழந்தையின் மீது தான்.(பிறகு அம்மை வந்துவிட்டது).."

இப்படி சொல்லப்பட்டிருந்தது.

இது எந்த அளவுக்கு உண்மை?? அவரின் பரிசோதனையில் மருந்து கண்டுபிடிக்கும் முனைப்பில் நடந்ததா இது..? அல்லது என்னிடத்தில் புரிதல் பிரச்சனையா என்று சொல்லுங்கள் பெரியண்ணா. :icon_ush::icon_rollout:

இளசு
02-09-2008, 11:56 AM
அன்பு பாமகளுக்கு

மன்றக்கட்டுரையில் அளிக்கப்பட்ட தகவல் முறையான நூல்கள், ஆதாரங்கள் மூலம் பெறப்பட்டது. நம்பலாம்.

தம் சொந்த மகன், ஒரு வயது குழந்தை என்பது - உணர்ச்சிகளை உசுப்ப மெல்லப் பூசப்பட்ட வண்ணமாக இருக்கலாம்.

ஆப்பிள் விழுந்ததால்தான் ஈர்ப்பைக் கண்டார் நியூட்டன் என்றால்
அது ஒரு கவரும் தன்மை கூடிய செய்தியாகிவிடுகிறதல்லவா?

( ஜான் ஹண்ட்டர் சிஃபிலிஸ் கிருமியை தன் முன்கையில் செலுத்திய சோதனை பல நூற்றாண்டுகளுக்கு முன்,
மார்ஷல் வயிற்று அல்சர் தரும் கிருமி ஹெலிகோபேக்டர் பைலோரி என நிரூபிக்க
அவரே அதை விழுங்கிய நிகழ்வு - இருபது ஆண்டுகளுக்கு முன்..

இவை உண்மை நிகழ்வுகள்.
சாதனை படைத்த இச்சோதனையாளர்கள் பயன்படுத்தியது
தம் சொந்த உடல்களை..)

பூமகள்
02-09-2008, 03:23 PM
அன்பு பெரியண்ணா..

உங்களின் அறிவியல் சார் கட்டுரைகளின் அதி தீவிர ரசிகை நான். நான் உங்கள் தகவல்களை 100% நம்புபவள்.

என் பதிவு உங்களின் மனதில் ஏதும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் மன்னியுங்கள் பெரியண்ணா..

எனக்கு வந்த குழப்பம், அவர்கள் சொன்னது பற்றியது தான்.

தகுந்த செய்திக் கோவையோடு வந்து புதிய தகவல் கொண்டு தெளிவாக்கி அசத்திவிட்டீர்கள்..

உடன் வந்து பதிலிட்டு மகிழ்வித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் அண்ணலே..!!

தடுத்தாண்டவரோடு மின்சாரக் கண்ணன் வந்துவிட்டார். அடுத்தது எந்த கண்ணனோ(ரோ)??!! ;) :D

Narathar
29-09-2008, 10:23 PM
இந்த தடுத்தாண்டவர்கள் இல்லாத உலகத்தில் ஒரு கணத்தை கற்பனை செய்து பார்த்தால் தலையே சுற்றுகிறது.......

இவர்கள் இப்பூஉலகுக்கு எத்தனை பெரிய சேவை செய்துள்ளார்கள்.

அவர்கள் நினைவை மீட்டுத்தந்த இளசுவுக்கு நன்றிகள்