PDA

View Full Version : பரிணாமம்



ஆதி
29-07-2008, 07:40 PM
வேறு கோளுக்கு ஏற்ற முற்றோம்
வெவ்வேறு மண்டலத்தின் தோற்றம் கண்டோம்
யாரும் எங்களின் சகோதரர் என்றே
யாவரையும் பாவிக்கும் பக்குவம் கொண்டோம்
பாரின் எல்லையை பலநூறு மடங்கு
பல்வேறு திசையில் படர வைத்தோம்
ஆறுகள் அனைத்தையும் ஒன்றென் றாக்கி
அனைவர்க்கும் சமநீர் பகிவுர்கள் தந்தோம்

ஆக்கங்கள் மறுதலை முறைக்கு ஆக்கினோம்
பாப்பாக்கள் விளையாட ரோப்போக்கள் படைத்தோம்
நோக்கங்கள் நேர்மையாய் இருந்தால் அதனை
நுகர்ந்திட என்றைக்கும் யோசிக்க மாட்டோம்
மூக்கினில் மூக்குத்தி போலொரு கருவி
மூச்சு காற்றை வடிகட்ட தரித்தோம்
தூக்கற்ற சட்டம் தொகுத்தோம் சாக்கு
போக்கு சொல்லாமல் திட்டங்கள் நிறைவேற்றினோம்

மதங்களை மறந்தோம் மனிதம் உடுத்தினோம்
வறுமை கோடென்ற வார்த்தை அழித்தோம்
சதங்களுக் குறைவின்றி ஜனங்களுக்கு எல்லாம்
சமமாய் கிடைத்திட சாத்திரம் எழுதினோம்
விதங்களில் இருந்த வேறுபாடுகள் களைந்தோம்
மேம்பா லங்கள் நாட்டுக்குநா டமைத்தோம்
மிதவா தங்களின் வேர்களை எரித்தோம்
மிகுமின்ப வெளியினில் குடித்தனம் பெயர்ந்தோம்

இளசு
29-07-2008, 08:29 PM
வரிக்கு வரி அப்படியே பலிக்க வாழ்த்துகிறேன் ஆதி!

விடுதலை நாளை மனக்கண்ணில் கண்டு
ஆடுவோமே எனப் பள்ளு பாடிய
பாரதியும் மகிழ்வான்..
ஆதியின் இக்கவி கண்டு!

அறிஞர்
29-07-2008, 11:35 PM
மதங்களை மறந்தோம் மனிதம் உடுத்தினோம்
வறுமை கோடென்ற வார்த்தை அழித்தோம்
சதங்களுக் குறைவின்றி ஜனங்களுக்கு எல்லாம்
சமமாய் கிடைத்திட சாத்திரம் எழுதினோம்
விதங்களில் இருந்த வேறுபாடுகள் களைந்தோம்
மேம்பா லங்கள் நாட்டுக்குநா டமைத்தோம்
மிதவா தங்களின் வேர்களை எரித்தோம்
மிகுமின்ப வெளியினில் குடித்தனம் பெயர்ந்தோம்
பரிணாமத்தின் மாற்றங்கள்.
ஆதியின் வரிகளில்...
எல்லாம் சரியாக நடந்தால் மகிழ்ச்சியே..

நாகரா
30-07-2008, 04:39 AM
வேறு கோளுக்கு ஏற்ற முற்றோம்
வெவ்வேறு மண்டலத்தின் தோற்றம் கண்டோம்
யாரும் எங்களின் சகோதரர் என்றே
யாவரையும் பாவிக்கும் பக்குவம் கொண்டோம்
பாரின் எல்லையை பலநூறு மடங்கு
பல்வேறு திசையில் படர வைத்தோம்
ஆறுகள் அனைத்தையும் ஒன்றென் றாக்கி
அனைவர்க்கும் சமநீர் பகிவுர்கள் தந்தோம்

ஆக்கங்கள் மறுதலை முறைக்கு ஆக்கினோம்
பாப்பாக்கள் விளையாட ரோப்போக்கள் படைத்தோம்
நோக்கங்கள் நேர்மையாய் இருந்தால் அதனை
நுகர்ந்திட என்றைக்கும் யோசிக்க மாட்டோம்
மூக்கினில் மூக்குத்தி போலொரு கருவி
மூச்சு காற்றை வடிகட்ட தரித்தோம்
தூக்கற்ற சட்டம் தொகுத்தோம் சாக்கு
போக்கு சொல்லாமல் திட்டங்கள் நிறைவேற்றினோம்

மதங்களை மறந்தோம் மனிதம் உடுத்தினோம்
வறுமை கோடென்ற வார்த்தை அழித்தோம்
சதங்களுக் குறைவின்றி ஜனங்களுக்கு எல்லாம்
சமமாய் கிடைத்திட சாத்திரம் எழுதினோம்
விதங்களில் இருந்த வேறுபாடுகள் களைந்தோம்
மேம்பா லங்கள் நாட்டுக்குநா டமைத்தோம்
மிதவா தங்களின் வேர்களை எரித்தோம்
மிகுமின்ப வெளியினில் குடித்தனம் பெயர்ந்தோம்

உம் தீர்க்கதரிசனக் கவி அருமையிலும் அருமை ஆதி

பாப்பாக்கள் விளையாடத் தோட்டங்கள் அமைத்தோம்

மூச்சினில் பேரன்பு வெள்ளத்தை உண்டு
பேச்சினில் கனிபோன்ற இனிமையைக் கொண்டோம்

ரோபோக்களும், மூச்சுக் காற்றை சுத்திகரிக்கும் கருவிகளும் அழகுக் கவிதையில் உறுத்தலாய்த் தோன்றுகிறது எனக்கு

சிவா.ஜி
30-07-2008, 04:46 AM
உயர்ந்த சிந்தனை ஆதி. அத்தனையும் நடந்தால், மரிக்கவே மானிடர் தயங்குவர். பரிணாம மாற்றம் இப்படி நிகழ்ந்தால்...எத்தனை நன்றாக இருக்கும். நிகழ வேண்டுமென்பதே ஆவல். விளையாட ரோபோக்களும், அசுத்தம் வடிகட்ட மூக்குத்தியும் அழகான கற்பனை. வாழ்த்துகள் ஆதி.

ஆதி
30-07-2008, 10:38 AM
வரிக்கு வரி அப்படியே பலிக்க வாழ்த்துகிறேன் ஆதி!

விடுதலை நாளை மனக்கண்ணில் கண்டு
ஆடுவோமே எனப் பள்ளு பாடிய
பாரதியும் மகிழ்வான்..
ஆதியின் இக்கவி கண்டு!

முதல் பின்னூட்டமே கவிதை பலிக்கட்டும் என்னும் வாழ்த்துடன் வந்திருப்பது கண்டு நெகிழ்கிறேன் அண்ணா.. பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் அண்ணா..

செல்வா
30-07-2008, 11:00 AM
காணி நிலம் வேண்டும் பராசக்தி.... காணிநிலம் வேண்டும்...
படிக்கையில் ஏனோ இடைவந்து இடித்தது...
வாழ்த்துக்கள் கவியும் நனவாக...

shibly591
30-07-2008, 11:13 AM
மதங்களை மறந்தோம் மனிதம் உடுத்தினோம்
வறுமை கோடென்ற வார்த்தை அழித்தோம்
சதங்களுக் குறைவின்றி ஜனங்களுக்கு எல்லாம்
சமமாய் கிடைத்திட சாத்திரம் எழுதினோம்
விதங்களில் இருந்த வேறுபாடுகள் களைந்தோம்
மேம்பா லங்கள் நாட்டுக்குநா டமைத்தோம்
மிதவா தங்களின் வேர்களை எரித்தோம்
மிகுமின்ப வெளியினில் குடித்தனம் பெயர்ந்தோம்

உங்கள் எதிர்பார்ப்புக்கள் விரைவில் ஈடேற வேண்டும்...

நல்லதொரு படைப்பு

lenram80
30-07-2008, 08:21 PM
காணி நிலம் வேண்டும்...
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்...
தமிழில் குயில் பாட வேண்டும்...
என்ற வரிசையில் உங்களதும்..

கவிஞனின் கனவுகள் தொடரட்டும்!!!