PDA

View Full Version : நீ யாரோ..?!



சுகந்தப்ரீதன்
29-07-2008, 01:41 PM
தூரத்தில் புள்ளியாய்
வானத்தில் பலவிதமாய்
நரம்புகளில் விரைந்தோடும்
இரத்தத்தின் சிறுதுளியாய்...
என்பாலைவன படுகையிலே
பாய்ந்தோடும் ஜீவநதியாய்..
நினைவுகளில் நிறைந்தோடி
சிந்தனைகளில் சிதறும்...
சின்னப்பூவே நீ யாரோ..?!

சிவா.ஜி
29-07-2008, 01:50 PM
வேறு யார்....? நாளை...மாலையாகக் காத்திருக்கும் கன்னிப்பூதான். கட்டுப்பாடின்றி ஓடும் காட்டாற்று வாழ்க்கைக்கு கரைகளாய் வரப்போகும் நிறைமகள்தான். வாழ்த்துகள் சுபி.

ஷீ-நிசி
29-07-2008, 02:03 PM
பாலைவன படுக்கையிலே பாய்ந்தோடும் ஜீவநதி.... நல்ல வித்தியாசமான வரியமைப்பு....

ஜீவநதி ஓடிவந்தாயிற்று... இனி அது பாலைவன படுக்கையல்லவே....

வாழ்த்துக்கள் ப்ரீதன்!

பூமகள்
29-07-2008, 02:22 PM
கொஞ்சம் கண்ணைத் திறந்து பார்த்தால் தெரிஞ்சிடப் போகுது சுகு??!!

கனவுல தானே இத்தனையும் பார்த்தே??!! (சும்மா லுலுவாய்க்கு... :D:D)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வருங்காலத்துக்காக
வரவேற்புக் கம்பளமா??!!

கடந்த காலத்தின்
வழியனுப்பு திருவிழாவா??!!

எதுவாகினும்... நிம்மதியும் சந்தோசமும்..
வானத்து நீலம் போல்
என்றும் நிலைக்க வாழ்த்துகள் சுகு...!! :)

அமரன்
29-07-2008, 02:38 PM
தூரத்துப் பறவையாய்
பிறந்து..
வானத்தில் பலவிதமாய்
பறந்து..
உன் உதிரத்தில் பரந்து..
உளத்தில் நிறைந்திருக்க..
எங்கே தேடுகிறாய்?

உன்னை நீ அறியலையோ??

ஓவியா
29-07-2008, 03:18 PM
அந்த ஃபீலீங்க்சை அப்படியே அமிர்தமாய் வடித்துள்ளாய். சபாஷ்.

ரசித்தேன்.

மதி
29-07-2008, 03:40 PM
தினமும் இப்படி கேள்வியா கேட்டுக்கிட்டு இருந்தா....
சிவாண்ணா சொல்றது உண்மைன்னா.. வாழ்த்துகள்.. :)

shibly591
29-07-2008, 03:58 PM
கண்ண முழிச்சி உலகத்த பாருங்க.....

யாருன்னு புரியும்..(உங்கட அம்மா தண்ணீர் ஊற்ற முன் எழும்பிடுங்க)

இளசு
29-07-2008, 07:34 PM
''தமிழ் மன்றம்'' என ஒளிரும்
கணினித் திரையா சுகந்தா?




கவிதைக்கு வாழ்த்துகள்!

நாகரா
30-07-2008, 03:46 AM
தூரத்தில் புள்ளியாய்
வானத்தில் பலவிதமாய்
நரம்புகளில் விரைந்தோடும்
இரத்தத்தின் சிறுதுளியாய்...
என்பாலைவன படுகையிலே
பாய்ந்தோடும் ஜீவநதியாய்..
நினைவுகளில் நிறைந்தோடி
சிந்தனைகளில் சிதறும்...
சின்னப்பூவே நீ யாரோ..?!

தூரத்தில் - சுத்தவெளியில்(வெட்டவெளியில்)
புள்ளியாய் - அருளொளியாய்
வானத்தில் பலவிதமாய் - பருவெளியில்(Material Space) அண்டங்களாய்(Universes), நட்சத்திர மண்டலங்களாய்(Galaxies), நட்சத்திரங்களாய்(Stars, Suns), கிரகங்களாய்(Planets), உபக்கிரகங்களாய்(Moons)
நரம்புகளில் விரைந்தோடும் - அறிவாய்(மனமாய்)
இரத்தத்தின் சிறுதுளியாய்... - உணர்வாய்(இருதயமாய்)
என்பாலைவன படுகையிலே - மெய்யாய்(அது மெய்யாகவே மெய்யாய் நிலைக்கும் வரை வரண்டது தானே!)
பாய்ந்தோடும் ஜீவநதியாய்.. - அன்பின் வெள்ளமாய்
நினைவுகளில் நிறைந்தோடி
சிந்தனைகளில் சிதறும்... - எண்ணங்களில் நிறைந்து வழியும்
சின்னப்பூவே நீ யாரோ..?! - ஆன்ம நேய ஒருமையோ?!

சின்னப்பூ ஆன்ம நேய ஒருமையால் மட்டுமே மலர்விக்க முடிந்த தைமஸ் சுரப்பியைக்(Mystic Heart, Sacred Heart, Etheric Heart, தூய இருதயம்) குறிக்கிறது!

ஆழமான குறியீட்டுக் கவிதையைத் தந்து மெய்ஞ்ஞானம் புகட்டி அசத்தி விட்டாயே சுகந்தத் தம்பி! சபாஷ்! கவிதை நனி மிகச் சிறிது, அது சொல்லும் மெய்ஞ்ஞானம் அரிது, பெரிது! ப்ரீதத் தம்பி, அண்ணன் தலை வணங்குகிறேன், நன்றி

மயூ
30-07-2008, 03:57 AM
அண்ணாச்சி வயசுக்கு வந்துட்டார்.. அவருக்கு காதல் வந்துடுச்சி... வாழ்த்துகள்... சீக்கிரமே முடிவ கேட்டு எங்களுக்கும் தெரியப்படுத்துங்க :P

meera
30-07-2008, 04:08 AM
உங்க அவதாருக்கு ஏத்த கவிதை தான். முகம் மூடி வெக்கம் வந்தது இதனால் தானா?

ம்ம் தொடரட்டும் சுகந்தன்....

சுகந்தப்ரீதன்
30-07-2008, 04:08 AM
வேறு யார்....? நாளை...மாலையாகக் காத்திருக்கும் கன்னிப்பூதான். கட்டுப்பாடின்றி ஓடும் காட்டாற்று வாழ்க்கைக்கு கரைகளாய் வரப்போகும் நிறைமகள்தான். வாழ்த்துகள் சுபி.ஆரம்பமே அண்ணனோட ஆசிர்வாதத்தில் அமைந்திருக்கிறது.. மிக்க நன்றியண்ணா..!!
பாலைவன படுக்கையிலே பாய்ந்தோடும் ஜீவநதி.... நல்ல வித்தியாசமான வரியமைப்பு....

ஜீவநதி ஓடிவந்தாயிற்று... இனி அது பாலைவன படுக்கையல்லவே....
வாழ்த்துக்கள் ப்ரீதன்! கவிஞரே.. உம் வாழ்த்தை கண்டதில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன்..நன்றி நண்பரே..!!
கொஞ்சம் கண்ணைத் திறந்து பார்த்தால் தெரிஞ்சிடப் போகுது சுகு??!!

கனவுல தானே இத்தனையும் பார்த்தே??!! (சும்மா லுலுவாய்க்கு... :D:D):)ஆமாம்...அதெப்படி உனக்கு தெரியும்.. அப்ப நீயும் இப்படித்தான் உன்னோட ராசகுமாரனை கனவுல பார்த்தியா..??
ம்ம்ம்.. என்னை வாழ்த்துற அளவுக்கு வளந்துட்டீங்களா சகோதரி..??:fragend005:

மிக்க நன்றி..பூம்மா..!!

உன்னை நீ அறியலையோ??ஆஹா..கவிதையோட்டத்தை அப்படியே திசைதிருப்பி விட்டுட்டிங்களே.. நீங்க பெரிய ஆளுங்கண்ணா..??:wuerg019: உங்களின் கோணத்தை ரசித்தேன்..வியந்தேன்..மகிழ்ந்தேன்.. மிக்க நன்றியண்ணா..!!

சுகந்தப்ரீதன்
30-07-2008, 04:19 AM
அந்த ஃபீலீங்க்சை அப்படியே அமிர்தமாய் வடித்துள்ளாய். சபாஷ்.
ரசித்தேன்.ஹி..ஹி.. அப்ப அக்காவுக்கு ஃபீலீங்ஸ் இருக்குது போலிருக்கே...!!:confused: அப்படின்னா நீங்களும் இங்க ஒரு கவிதையை கிறுக்கி போடலாம்ல்ல..!!:sprachlos020: மிக்க நன்றியக்கா.. சபாஷ் போட்டமைக்கு..!!
தினமும் இப்படி கேள்வியா கேட்டுக்கிட்டு இருந்தா....
சிவாண்ணா சொல்றது உண்மைன்னா.. வாழ்த்துகள்.. :)தோடா.. மதி.. சிவாண்ணாதான் எதிர்காலத்தை இப்பவே கணிச்சி ஜாதகம் பாக்குறார்ன்னா.. நீ மந்திரமே ஓதி என்னை உட்காரவே வச்சிருவ போலிருக்கே..!! உனக்கு முதல்ல ஆசிர்வாதம் பண்ணிட்டுதான் நான் அமருவேனாக்கும்..!!
கண்ண முழிச்சி உலகத்த பாருங்க..... யாருன்னு புரியும்..(உங்கட அம்மா தண்ணீர் ஊற்ற முன் எழும்பிடுங்க)நண்பரே... எப்படி இப்படி சொல்லுறீங்க..?? என்னைவிட அதிக அனுபவம் உங்களுக்கிருக்கு போலிருக்கு..!! ஹி..ஹி..எங்க அம்மா இண்டியாவுலயும் நான் டுபாயிலயும் இருக்கறதால எனக்கந்த பிரச்சனையே இல்லை..!! நானா எழுந்தாதான் உண்டு..!!
''தமிழ் மன்றம்'' என ஒளிரும்
கணினித் திரையா சுகந்தா?
கவிதைக்கு வாழ்த்துகள்! ஆஹா அண்ணா.. அப்படியே பொருந்துகிறது இக்கவிதை மன்றத்துக்கும்..!! எப்படி அண்ணா இப்படியெல்லாம் யோசிக்க முடியுது உங்களால மட்டும்..??:mini023:

மிக்க நன்றி அண்ணா..!!

நாகரா
30-07-2008, 04:24 AM
தூரத்துப் பறவையாய்
பிறந்து..
வானத்தில் பலவிதமாய்
பறந்து..
உன் உதிரத்தில் பரந்து..
உளத்தில் நிறைந்திருக்க..
எங்கே தேடுகிறாய்?

உன்னை நீ அறியலையோ??

அமரனின் பின்னூட்டக் கவிதை அருமையிலும் அருமை.

தூரத்துப் பறவையாய்
பிறந்து..

வெட்டவெளியில் அருளொளியாய்த் தோன்றி

வானத்தில் பலவிதமாய்
பறந்து..

பருவெளியில்(Material Space) பல்வேறு அண்டங்களாய்(Universes), நட்சத்திர மண்டலங்களாய்(Galaxies), நட்சத்திரங்களாய்(Stars, Suns), கிரகங்களாய்(Planets), உபக்கிரகங்களாய்ச்(Moons) சுற்றி

உன் உதிரத்தில் பரந்து..

உன் இருதய உணர்வில் பரந்து

உளத்தில் நிறைந்திருக்க..

உன் மனத்தில் எண்ணமாய் நிறைந்திருக்க

எங்கே தேடுகிறாய்?

உன்னை நீ அறியலையோ??

இவ்வாறாகக் கடவுளாம் நான் உன்னில் இருக்க
நான் இருக்கும் மெய்யான இடமான என்னை விட்டு
நான் இல்லாத இடந்தேடி எங்கெங்கோ அலைகின்றாயே
ஞானத் தங்கமே!
உன்னை அறிந்து
உனக்குள் இருக்கும்
என்னை அறியாயோ
நீ??

சுகந்தத் தம்பியின் குறுங்கவிதையின் தலையில் சூட்டிய
மகத்தான மகுடம் அமரனின் குறுங்கவிதை!

வாழ்த்துக்கள் இருவருக்கும், பர மெய்ஞ்ஞானப் பால் இகத்திலேயே பருகக் கொடுத்த அதிசயஞ் செய்ததற்கு!

நன்றி சுகந்தா, நன்றி அமரா!

சுகந்தப்ரீதன்
30-07-2008, 04:32 AM
ஆழமான குறியீட்டுக் கவிதையைத் தந்து மெய்ஞ்ஞானம் புகட்டி அசத்தி விட்டாயே சுகந்தத் தம்பி! சபாஷ்! கவிதை நனி மிகச் சிறிது, அது சொல்லும் மெய்ஞ்ஞானம் அரிது, பெரிது! ப்ரீதத் தம்பி, அண்ணன் தலை வணங்குகிறேன், நன்றிஅய்யோ.. அண்ணா.. என்னயிது தலை வணங்குகிறேன்.. அப்படி இப்படின்னு சொல்லி அநியாயத்துக்கு சின்னபய என்னை பயமுறுத்துறீங்க..!! உங்களின் மெய்ஞான விளக்கம் கண்டு வாயடைத்துப்போனேன் அண்ணா..!! என் கவிதையில் இத்தனை குறீயிடுகள் இருப்பதைகூட உணராமல்தான் நான் அதை எழுதியிருக்கிறேன்..!! என்னையறியாமல் என்னுள்ளும் ஞானம் வந்துவிட்டதோ என்னவோ..??:fragend005:

மிக்க நன்றியண்ணா.. உங்களின் ஞானம் விரைவில் எங்களையும் வந்தடையட்டும்..!!
அண்ணாச்சி வயசுக்கு வந்துட்டார்.. அவருக்கு காதல் வந்துடுச்சி... வாழ்த்துகள்... சீக்கிரமே முடிவ கேட்டு எங்களுக்கும் தெரியப்படுத்துங்க :Pடேய்..டேய்..டேய்.. ஏண்டா..ஏண்டா..மயூ.. இப்படியெல்லாம் பண்ணுறீங்க..?! எல்லோருமா சேர்ந்து மாட்டிவிடறதுலேயே இருங்கானுங்கப்பா..:aetsch013:
சுகந்தப்ரீதன் கவிதை
ஐஸ்கிறீம் என்றால்...
நாகரா அண்ணா அதற்கு ஹனி (honey) சேர்த்திருக்கிறார்.நன்றாயிருக்கிறது.உண்மைதான் கிஷோரண்ணா..!! நாகரா அண்ணாவின் பதிவைக்கண்டு மிகவும் வியந்தேன் நானும்..!!
அப்புறம் எனக்கு இப்படி ஐஸ்வைக்கிறீங்களே.. அதுல உள்நோக்கம் ஏதுமில்லையே..??:lachen001:
உங்க அவதாருக்கு ஏத்த கவிதை தான். முகம் மூடி வெக்கம் வந்தது இதனால் தானா?
ம்ம் தொடரட்டும் சுகந்தன்....ஹய்யோ மீரா.. என் அவதாருமேலியே கண்ணா இருக்குற நம்ப கண்மணி குருப்ல நீங்களும் சேர்ந்துட்டீங்களா..??:traurig001:

அமரன்
30-07-2008, 10:25 AM
நாகரா அய்யா..
அசந்தேன் உங்கள் கருத்துழவு கண்டு..
அசல்த்தேன்..
மகிழ்ச்சியுடன் பராட்டுகிறேன்..
நெகிழ்ச்சியுடன் நன்றி நவில்கிறேன்..

செல்வா
30-07-2008, 11:03 AM
தூங்குறதுக்கு முன்னால தமிழ் சினிமாப் பாடல்கள் பாத்துட்டு + கேட்டுட்டு தூங்காதண்ணு எத்தனத் தடவ சொல்றது கேக்கவே மாட்டிங்குறியே... அண்ணாத்த.
அடடே கனவுல உளறினாலும் கவிதையாவே உளறிருக்கியே...
நல்லாருக்குப்பா.... ஞானம் + காதல் + ஏக்கக் கவிதை...

சுகந்தப்ரீதன்
30-07-2008, 11:51 AM
அடடே கனவுல உளறினாலும் கவிதையாவே உளறிருக்கியே... நல்லாருக்குப்பா.... ஞானம் + காதல் + ஏக்கக் கவிதை...செல்வா அண்ணாத்தே...ஆரு ஆருக்கு அண்ணாத்தே..?! சரி..சரி..நான் கவிதையா உளறேன்னு ஒத்துக்குறேன்.. நீங்க தூக்கத்துல பெணாத்துறது சிவாண்ணா தூக்கத்தை கெடுக்குதுன்னு சொல்லுறாரே அது உண்மைதானா..??:fragend005:

மிக்க நன்றியண்ணே..??:lachen001:

செல்வா
30-07-2008, 12:08 PM
நீங்க தூக்கத்துல பெணாத்துறது சிவாண்ணா தூக்கத்தை கெடுக்குதுன்னு சொல்லுறாரே அது உண்மைதானா..??:fragend005:

ஏதோ... என்னால முடிஞ்சது....

சுகந்தப்ரீதன்
30-07-2008, 12:15 PM
ஏதோ... என்னால முடிஞ்சது....எலே அவரு பாவம்லே.. ஏற்கனவே அவரு முடில்ல..முடில்லன்னுகிட்டு இருக்காரு.. இதுல நீ வேற முடிச்சுபோட பாக்குறீயாலே..??:aetsch013:

செல்வா
30-07-2008, 01:54 PM
இதுல நீ வேற முடிச்சுபோட பாக்குறீயாலே..??:aetsch013:
ஏதோ என்னால முடிஞ்சது..... :aetsch013: