PDA

View Full Version : வணக்கம் தீவிரவாதிகளே!



ஆதி
29-07-2008, 11:48 AM
யாதுங்கள் தேவை ?

இறப்பா.. ?

யாதுங்கள் குறிக்கோள் ?

வெடிப்பா... ?

சகோதர பூமியில்
சாமாதிகளை படைப்பதுதான்
உங்கள் லட்சியாமா ?

புனிதமற்ற செயலை
புனிதப் போரென்பவர்களே..

உண்மையில் புனிதமென்பது
நன்நிலையில் மக்களை
இன்னலின்றி வாழவைப்பதா ?
பொன்னுயிரை பறிப்பதா ?

புனிதம் தானுங்கள்
போரென்றால்

இரத்ததானம் செய்திருப்பீர்
இரத்தவெறி கொண்டிருக்க மாட்டீர்..

அடுப்புக்கு வழி சொல்லியிருப்பீர்
வெடிப்புக்கு வழி செய்திருக்க மாட்டீர்

குப்பைகளை எரித்திருப்பீர்
குடிசைகளை மாட்டீர்..

தொழிலை தேடியிருப்பீர்
துப்பாக்கி சுமந்திருக்க மாட்டீர்..

ஆயுதங்கள் போட்டிருப்பீர்
அன்பை ஏந்தியிருப்பீர்..
தாயுலகை காத்தெங்கும்
சாந்தியென்று முழங்க்யிருப்பீர்


இதிலெதையும் நீங்கள் செய்யவில்லை
குறைந்தபட்சம் மனிதனாகவும் இருக்கவில்லை..

கன்னிகளை மட்டுமல்ல
கர்ப்பினிகளையும்
பாலாத்காரம் செய்த
பெருமை உங்களுடையது..

பால் நனைக்கும்
பிஞ்சு அதரங்களை
தாயின் இரத்தம் நனைக்க
பார்த்து சிரிக்கும்
இதயம் உங்களுடையது..


கடவுளின் பெயர் சொல்லி
கடவுளின் கோயிலை தகர்க்கும்
புனிதம் உங்களுடைய தென்றால்
புனிதம் புனிதமற்று போகட்டும்..

யாருடைய தன்னலத்திற்கோ
வெட்டுபடுகிற பலியாடுகளே..

மதத்துக்கு தானுங்கள்
போரென்றால்

ஒட்டுமொத்த உலகும்
ஒரே இரவில்
ஒரு மதத்துக்கு ஏற்றமாகும்..

கொன்ற
ஒட்டுமொத்த உயிர்களையும்
அதே இரவில்
மீட்டு தருவீரோ ?

shibly591
29-07-2008, 11:52 AM
போருக்கெதிரான வன்முறைக்கவிதை....பாதிக்கப்பட்டவர்கள் மன விகாரங்களை சரியாகவே சித்தரித்துள்ளது...

வாழ்த்துக்கள் ஆதி

ஓவியா
29-07-2008, 11:57 AM
ஆதி,

சிறப்பான சிந்தனைவாதி நீங்கள்.

கண்கள் பனித்து, இதயம் கொதித்து மெய்சிலிர்த்தேன்.

உங்கள் கவிதையை பாராட்ட எனக்கு வார்த்தையில்லை, அதனால் மௌனியாகிறேன்.

சில கேள்விகளும் பதில்களும் செவிடன் காதில் ஊதிய சங்காய் போவதை கண்டு உள்ளம் குமுருகிறது. உங்கள் கேள்வியை கடவுள் அவர்களுக்கு எப்படியாவது உணர்த்தட்டும்.

கடசிவரி சாட்டையடி கேள்வி. நன்றிகளுடன் பாராட்டும்.

இளசு
29-07-2008, 12:04 PM
அவசரச் சிகிச்சை அளிக்கும் இடத்திலும் குண்டு வைப்பவர்கள்
மனம் எத்தனை விஷம் ஏறி இருக்கும்!!!!!

ஆதியின் விஷமுறிவு ஏறுமா அவர்கள் மனதில்?

மாறுமா மாக்கள் மனம்?

இதயம்
29-07-2008, 12:07 PM
கடவுளின் பெயரைச்சொல்லி தீவிரவாதம் செய்யும் எவனையும் கடவுள் விரும்புவதில்லை. அது கடவுளின் குணமும் அல்ல. அதன் பின்னணியில் இருப்பது சுயநலம், மதவெறி உள்ளிட்டவை. தீவிரவாதத்தை தடுக்க அரசின் தண்டனை எத்தனை முக்கியமோ, அதே போல் தீவிரவாதத்திற்கான காரணத்தை ஆராய்ந்து அதை களைவது. ஆதியின் கவிதைகள் அந்த பாவிகளுக்கு வைக்கும் தீ..!

சிவா.ஜி
29-07-2008, 12:10 PM
தான் உயிர்வாழ தினம் ஓருயிர் சாகவேண்டுமென வரம் பெற்று வந்தவர்கூட, பிஞ்சுக்குழந்தையைக் கொல்ல மாட்டார். ஆனால் இவர்கள்....கர்ப்பிணியைக் கொன்றால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என ரத்தம் குடித்து கொண்டாடும் ராட்ஷசர்கள். நல்ல மொழி காதில் விழாது. ஆதி உன்னுடைய சாட்டை அழுத்தமாகவே சுழன்றிருக்கிறது. ஆனால் மரத்துப்போனவர்களுக்கு வலிக்காதாமே...? இவர்கள் மரத்துப்போனவர்கள் மட்டுமல்ல மதத்துள்போனவர்கள். பாராட்டுக்கள் ஆதி.

shibly591
29-07-2008, 12:13 PM
மரத்துப்போனவர்கள் இருந்தென்ன..??இறந்தென்ன..???
அறுத்துப்போடுவோம் அத்தனை தலைகளையும்...

ஷீ-நிசி
29-07-2008, 02:20 PM
புனிதம் தானுங்கள்
போரென்றால்

இரத்ததானம் செய்திருப்பீர்
இரத்தவெறி கொண்டிருக்க மாட்டீர்..

அடுப்புக்கு வழி சொல்லியிருப்பீர்
வெடிப்புக்கு வழி செய்திருக்க மாட்டீர்


குப்பைகளை எரித்திருப்பீர்
குடிசைகளை மாட்டீர்..

தொழிலை தேடியிருப்பீர்
துப்பாக்கி சுமந்திருக்க மாட்டீர்..

ஆயுதங்கள் போட்டிருப்பீர்
அன்பை ஏந்தியிருப்பீர்..
தாயுலகை காத்தெங்கும்
சாந்தியென்று முழங்க்யிருப்பீர்

வீரியமான வரிகள்.... ஆனால் இந்த தீவிர வாதிகளுக்கு இவைகள் எல்லாம் வீணாகிப்போகும் வரிகள்...

அறிஞர்
29-07-2008, 02:25 PM
கொன்ற
ஒட்டுமொத்த உயிர்களையும்
அதே இரவில்
மீட்டு தருவீரோ ?
உயிர்களின் மேன்மை
அறியாத கூட்டம்..

அழிக்கும் மனித கூட்டம்
அழிய வேண்டும்....

Narathar
29-07-2008, 03:11 PM
யாருடைய தன்னலத்திற்கோ
வெட்டுபடுகிற பலியாடுகளே........




தங்களின் கவிதையில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இவைதான்! உலகிலுள்ள எல்லாபயங்கரவாதியின் பின்னாலும் யாருடையதாவது தன்னலம் இருக்கும்!

ஆதி
30-07-2008, 08:24 AM
பின்னூட்டமிட்டு தங்களின் ஆற்றாமைகளை கோபத்தை வெறுப்பை இன்ன பிற உங்களின் உணர்ச்சிகளுடன் நானும் கைக்கோர்க்கிறேன்..

வாழ்த்திய பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள் பல..

---------------------------

எனக்கு தெரிந்த ஒருவர் கடைசி வரியை வாசித்துவிட்டு.. அப்படியானால் என் அப்பா வந்துவடுவார்.. என்று சொன்னது என் கண்களை ஈரமாகவும் என் சுவாசத்தை கனமாகவும் ஆக்கிவிட்டது..

meera
30-07-2008, 08:44 AM
அப்பாவி மக்களின் கதறல் இவர்களின் காதில் மட்டும் விழாமல் போனது எப்படி? மற்றவர் வலி உணரா இவர்கள் மிருகங்களா?

என்று தான் திருந்துவார்களோ ???
ஆதி அழுத்தமான வ(லி)ரிகள்.

செல்வா
30-07-2008, 10:32 AM
மரத்துப்போனவர்களை திருப்பவியலாதெனினும்
இவ்வரிகளால் இனியாரும் மரத்துப்போகாமல் செய்யவியலும்.
மனிதகுலம் படித்திருக்கக் கூடாத கவிதை .... படிக்க வேண்டியச் சூழல் வந்துவிட்டது...
இனியும் படிக்காமலிருப்பது இன்னும் ஆபத்து.
இவற்றை நினைக்கும் போது கவிதைக்கு வாழ்த்து இல்லையடா ஆதி
நன்றி மட்டுமே... என்னால் இயலாததை நீ செய்யும் போது வரும் நன்றியுணர்வு.

lenram80
30-07-2008, 08:59 PM
பூமி என்றாவது அழியட்டும்.
மதங்கள் இன்றோடு அழியட்டும்!!!

கவிதையின் வழி உங்கள் உணர்வை ஊற்றிய ஆதிக்கு வாழ்த்துகள்