PDA

View Full Version : ஓர்கூட் கொள்கை கொடுமை



மயூ
29-07-2008, 08:16 AM
ஓர்குட்டில் ஒருத்தர் என்பெயரையும் ஒரு புகைப்படத்தையும் தவறாகப் பயன்படுத்தியிருந்தார். இது பற்றி ஆர்கூட்டுக்கு நான் அறிவித்திருந்தேன். அது பற்றி ஓர்கூட் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதைப்பற்றி கிட்டத்தட்ட இப்ப நான் மறந்தே விட்ட நிலையில் ஓர்கூட்டிடம் இருந்து ஒரு மெயில்.

ஹாய் Mayu,
orkut இல் முறைகேடு என்று “2007-10-02″ தேதியில் புகார் அளித்ததற்கு நன்றி.
எங்கள் மதிப்பாய்வு மற்றும் orkut சேவை விதிமுறைகளை பரிசீலித்து பார்த்த பின், இந்த உள்ளடக்கம் தற்போது orkut இல் எந்த கொள்கையையும் மீறவில்லை என்று புரிந்து கொண்டோம். இது தவறு என்று நீங்கள் கருதினால், கூடுதல் விவரங்களுடன் உங்கள் புகாரை மீண்டும் சமர்ப்பிக்கவும். இதனால் எங்களுடைய ஆதரவு குழு இந்த உள்ளடக்கத்தைப் பற்றிய உங்கள் கருத்தை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
orkut இல் முறைகேடுகள் பற்றிய எங்கள் கொள்கைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்பைக் காணவும்.
http://help.orkut.com/support/bin/answer.py?answer=16198&hl=ta
மதிப்பாய்வு செய்யப்பட்ட உள்ளடக்கம்: “தமிழ்மன்றம்”
என்ன கொடுமை சார்? என் புகைப்படத்தை மற்றவர் பயன்படுத்துவது ஓர்கூட் கொள்கையா? சரி அதைவிடுங்க என் புகாருக்கு பதில் அளிக்க ஒரு வருடமாச்சா? வாழ்க கூகிள் வாழ்க ஓர்குட்.
இதைவிட வினோதமான நிகழ்வு (http://mayuonline.com/eblog/vulnerability-of-facebook/) ஓன்று பேஸ்புக்கில் நடந்தது. சமூக வலைப்பின்னல் தளங்களில் தேவையில்லாமல் எங்கள் படங்கள், தனிப்பட்ட தகவல்களை பகிராமல் விடுவதே நன்று.

பூமகள்
29-07-2008, 08:26 AM
ஆர்குட் மட்டுமல்ல எந்த ஒரு தளத்திலுமே... Privacy நன்கு இருக்குமென சொன்னாலும்.. புகைப்படங்கள் மற்றும்..தனிப்பட்ட விவரங்கள் எதுவும் தராமல் இருப்பதே இருபாலருக்கும் நன்மை பயக்கும்..

கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள் மயூ அண்ணா..!

கூகில் அமைப்புக்கு நாம் தான் அந்த படத்தில் இருப்பவர் என்று அறிய ஏதும் ஆதாரம் காட்டினால் என்ன?? (அதாவது ஐடி ப்ஃரூப்.. பாஸ்போர்ட்)

ஆனாலும்.. ஒரு வருடம் கழித்து இதைச் சொல்வது தான் நடவடிக்கை எடுப்பதா??

இது அநியாயம் தான்..

அன்புரசிகன்
29-07-2008, 08:48 AM
ஓர்க்கூட்டை நம்பி றிப்போட் பண்ணிய உங்களை சொல்லவேண்டும்.

இன்னும் நம்புறியளா???

ஓவியா
29-07-2008, 10:29 AM
அடப்பாவமே!!! அப்ப அந்த பதிவும் படமும் அப்படியே இருக்குமா!!

செய்யவேண்டியவர்களே கைவிட்டப்பின் இனி என்னதான் செய்ய முடியும்.

shibly591
29-07-2008, 11:04 AM
அட அப்படியா?????

நம்பவே முடியலயே....

விகடன்
29-07-2008, 11:29 AM
ஓர்குட்
எனக்கு என்ன என்றே தெரிந்திருக்கவில்லை சில தினங்கள் வரை.
ஒருவருடன் கதைக்கையில்த்தான் அதுபற்றிய அறிமுகமே கிடைத்தது. அப்போதே தெரிந்துகொண்டேன்.. என்னை பிரபல்யப்படுத்திக்கொள்ள இதுதான் சரியான தளம் என்பதை :D .

கலைவேந்தன்
29-07-2008, 12:30 PM
:) :) :) :) :)

ஓவியா
29-07-2008, 12:32 PM
:) :) :) :) :)

கலையண்ணா சொல்ல மறந்த வரி இதுதான், ஸ்மலிய வச்சு கண்டுக்கொண்டேன்.


மயூ உன்கதை இங்கே சிரிப்பா சிரிக்குது..


:lachen001::lachen001:

மயூ
29-07-2008, 12:54 PM
கலையண்ணா சொல்ல மறந்த வரி இதுதான், ஸ்மலிய வச்சு கண்டுக்கொண்டேன்.


மயூ உன்கதை இங்கே சிரிப்பா சிரிக்குது..


:lachen001::lachen001:
உலகமே சிரிக்குபடியா ஆகிச்சு.. இப்ப இதப் பார்த்து சிரிச்சா என்ன ஆகப்போது எனக்கு :p:p:p

மயூ
29-07-2008, 12:54 PM
ஓர்குட்
எனக்கு என்ன என்றே தெரிந்திருக்கவில்லை சில தினங்கள் வரை.
ஒருவருடன் கதைக்கையில்த்தான் அதுபற்றிய அறிமுகமே கிடைத்தது. அப்போதே தெரிந்துகொண்டேன்.. என்னை பிரபல்யப்படுத்திக்கொள்ள இதுதான் சரியான தளம் என்பதை :D .
நிச்சயமாக.. ஆனால் எப்படி எந்த துறையில் பிரபலமாவீர்கள் என்பது உங்களுக்கே தெரியாமல் பிரபலமாவீர்கள்.... :icon_p::icon_p::icon_p::icon_p:

அறிஞர்
29-07-2008, 02:03 PM
இது மாதிரி பல நிறுவனங்கள் செய்கிறது.

உள்ளூர் போலீஸில் (சைபர் கிரைமில்) புகார் கொடுத்தால்.. அவர்கள் தொடர்பு கொண்டால் மாத்திரமே.. ஓர்கூட் அழிக்கிறது.

ஷீ-நிசி
29-07-2008, 02:26 PM
மயூ! இப்படி பலருக்கும் நிகழ்கிறது ஆர்கூட்டில்... நாம் முடிந்தவரை நம் தனிப்பட்ட விவரங்களை இணையத்தில் பகிர்ந்துகொள்ளாமலிருப்பது நல்லது.

arun
29-07-2008, 06:12 PM
ஆர்க்குட் மட்டுமல்ல பல வலை தளங்களில் இது போல நடை பெறுவதாக கேள்விப்பட்டு இருக்கிறேன்

பொதுவாக நமது தனிப்பட்ட விவரங்களை கொடுப்பது அவ்வளவு நல்லதல்ல

வெற்றி
30-07-2008, 12:09 PM
ஆட்கூட்டில் தங்கள் நிஜ புகைபடத்தை வைத்து இருப்பவர்களைப்பார்த்தான்ன்ன் எனக்கு பாவமாக இருக்கும் முன்பெல்லாம் அவர்களிக்கு சொல்லுவேன் ..வேண்டாம் என ஆனால் அதிலும் சிலர் நக்கலாக பதில் போட்ட பின்...மனோகரா பட வசனத்தை மனதுக்குள் சொல்லிக்கொண்டு போய் விடுவேன்..(இப்போது சுத்தமாக அங்கே போவதே இல்லை)

சூரியன்
30-07-2008, 02:38 PM
நான் இதுநாள் வரை ஆர்குட்டில் எந்த கணக்கும் தொடங்கவில்லை.

(தப்பிச்சான் சூரியன்)

மயூ
30-07-2008, 03:55 PM
ஆட்கூட்டில் தங்கள் நிஜ புகைபடத்தை வைத்து இருப்பவர்களைப்பார்த்தான்ன்ன் எனக்கு பாவமாக இருக்கும் முன்பெல்லாம் அவர்களிக்கு சொல்லுவேன் ..வேண்டாம் என ஆனால் அதிலும் சிலர் நக்கலாக பதில் போட்ட பின்...மனோகரா பட வசனத்தை மனதுக்குள் சொல்லிக்கொண்டு போய் விடுவேன்..(இப்போது சுத்தமாக அங்கே போவதே இல்லை)
அது என்ன அந்த மனோகரா வசனம்?? சொல்லுங்க பிளீஈஈஈஈஸ்

ராஜா
30-07-2008, 05:22 PM
ஆர்க்குட் இன்னுமொரு விசித்திர கொள்கையும் வைத்திருக்கிறது..

ஒரு தனியின (கம்யுனிட்டி) உறுப்பினர் எண்ணிக்கை 1000 என்ற அளவைத் தாண்டிவிட்டால், அந்த உறுப்பினர்கள் தங்களுக்குள் தனிமடல் அனுப்பிக்கொள்ள இயலாது.

இந்த தொல்லைக்காகவே (ஒவ்வொரு தனியின உறுப்பினர் எண்ணிக்கையும் 990 என்ற அளவில் வைத்து, உறுப்பினர் சேர்க்கையை தடைசெய்துவிட்டு அடுத்து புதிதாக ஒன்று.. பிறகு இன்னொன்று என..!) நகைச்சுவை 1, 2, 3, என்று நான் பல தனியினங்களைப் பராமரிக்க வேண்டியிருக்கிறது.

வெற்றி
12-08-2008, 11:44 AM
அது என்ன அந்த மனோகரா வசனம்?? சொல்லுங்க பிளீஈஈஈஈஸ்

"இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகபோகட்டும் "
இது தான் அந்த வசனம்

ராஜா
12-08-2008, 11:49 AM
ஏங்க.. எதிலங்க இந்த வஜனம்..?