PDA

View Full Version : இப்படியும் ஒரு காதல்.....விகடன்
29-07-2008, 07:39 AM
இப்படியும் ஒரு காதல்.... பகுதி (1)

அதிகாலைப்பொழுது, சூரியன் தோன்ற மாட்டான். ஆனால் அவனுடைய ஒளிக்கதிர்கள் மட்டும் ஒரு புள்ளியில் குவிந்த சிறகுகளைப்போல கிழக்குவானில், அதுவரை தென்பட்டிருந்த இருளை மறைத்திருந்தது. வானில் பட்டு தெறிக்கும் ஒளியால் ஓரளவு தெளிவாகி இருக்கும் பூமிப் பகுதி, சில்லிடும் பனிக்காற்று, எதிரே வருவது யாரென்றே துல்லியமாக தெரியாதிருக்கும் வண்ணம் மூடு பனி, இவைகளுக்கு நடுவில் கல என்று சிரித்துக் கொண்டே துவிச்சக்கர வண்டியில் (மிதிவண்டியில்)……… ஆமாம். நாட்டின் பொருளாதார நிலமைக்கும் பெற்றோலியத்தின் விலைவாசிக்கும் ஏற்ற போக்குவரத்துக்காரன் இவந்தான். அப்படிப்பட்ட உயர்தகு வாகனமாம் துவிச்சக்கர வண்டியில் காலைப்பொழுதிற்கான கல்விக்காக தனியார் கூடங்களை நோக்கி விரையும் பள்ளிப்பெண்கள். அதன் பின்னாலே கறுப்புப்பூனை போல பெடியங்கள் (பசங்கள்) . இந்த பெடியங்களின் அணிவகுப்பில் இறுதியில் அவங்கள் அடிக்கும் அரட்டையை கேற்பதற்காகவும், பசங்க பட்டாளத்தின் ஆட்பலட்தை அதிகரிப்பதற்காகவும் வருவதைப்போல அப்பாவியாக இன்னும் சில பெடியங்கள்..

இந்த மாணவர் பட்டாளத்திலே பிரமிக்கக்கூடிய ஒரு விடயம் இருக்கிறது.
அதிகாலை வகுப்பென்றால் சுமார் ஆறு மணிக்கெல்லாம் ஆரம்பித்துவிடும். மிஞ்சி மிஞ்சி போனால் ஐந்து நிமிடங்கள் தாமதமாகலாம். அந்த வகுப்பு முடிய ஏழுமணி தாண்டும். அதன் பின்னர் வீடு திரும்பி ஏழு முப்பதிற்கு ஆரம்பமாகும் பாடசாலைக்கு சென்றிடவேண்டும். பிந்தினால் தண்டனைக்கு ஆளாகவேண்டிவரும். சரியான நேரத்திற்கு பாடசாலைக்கும் செல்ல இருப்பதால் காலைப்பொழுதில் அமைந்த முதல் வகுப்பிற்கு செல்ல முன்னதாகவே பாடசாலைக்கும் செல்லக்கூடிய வகையில் தம்மை தயார்ப்படுத்தியிருக்க வேண்டும். கல்விக்கூடத்திற்கு வரும் மாணவர்களில் பெரும்பகுதியினர் ஏன் இரண்டு மூன்று பேரைத்தவிர ஏனையோரெல்லோரும் பாடசாலைச் சீருடனேயே வருவார்கள். ஏனெனில், காலை கல்வி முடிந்ததும், இருக்கும் அரை மணி நேரத்தில் மீண்டும் வீட்டை அடைந்து காலையாகாரத்தை முடித்து புத்தகத்துடன் பாடசாலை விரையவே மீதமிருக்கும் நேரம் சரியாக வரும்.
இவற்றையெல்லாம் செய்யின், சற்றே முன்னர் எழுந்திருக்க வேண்டும். அதற்குகந்த ஒரே ஒரு தோழன் அலாரந்தான். அதிகாலைப்பொழுதில் அலாரம் வைத்துதான் எழுந்தாக வேண்டும்.

அப்படி எழுந்த ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர், வகுப்பிற்கு வரமுன்னரே சந்தித்துக்கொள்கின்றனரே. அது மட்டுமின்றி தமது கல்விக்கூடத்தில் பயிலும் குறிப்பிட்ட அந்த பெண்கள் குழுக்களையும் தவறாமல் அழைத்து வந்து விடுகின்றனரே. இதெல்லாம் எப்படி முடிகிறது?

இவற்றையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதாதவன் போல மயூரன். அவனிற்கு மட்டும் எங்கிருந்து நேரம் வருகின்றதோ தெரியவில்லை. இவர்களை பார்க்கிலும் அதிக விடயங்களில் தலை கொடுத்தும் பள்ளிக்கு சரியான நேரத்தில் வந்தடைந்துவிடுகிறான்...

மயூரன்…..
அவன் யார்?
எங்கிருந்து திடீரென்று வந்தான்?
என்னத்தை வித்தியாசமாக செய்கிறான்?
தொடரலாமா...........?

அன்புரசிகன்
29-07-2008, 07:46 AM
மயூரன்…..
அவன் யார்?
எங்கிருந்து திடீரென்று வந்தான்?
என்னத்தை வித்தியாசமாக செய்கிறான்?

அவன் எனது அண்ணா.... திடீர் என்று ஒன்றும் வரல... வித்தியாசமா............................ :rolleyes:.............. அப்டி ஒன்றுமில்லை. ஆனா என்னோட வித்தியாசமா பார்த்தா ...................... அவன் நல்லா படிப்பான்....... :D :D :Dதொடரலாமா...........?அப்போ மாட்டீங்களா???

சும்மா நகைச்சுவைக்காக.... ஒருவனின் வரலாறு வரவிருக்கிறது என்பது மட்டும் புலனாகிறது.

தொடருங்கள் விராடரே....

விகடன்
29-07-2008, 07:50 AM
அவன் எனது அண்ணா.... திடீர் என்று ஒன்றும் வரல... வித்தியாசமா............................ :rolleyes:.............. அப்டி ஒன்றுமில்லை. ஆனா என்னோட வித்தியாசமா பார்த்தா ...................... அவன் நல்லா படிப்பான்....... :D :D :D


உங்க அண்ணாவினுடைய கதையினை எழுதவில்லை அன்பு. இது இன்னொரு மயூரன் (இன்னொரு ஒருப்பாளரும் முறுகுவது போல தெரிகிறதே....).
-------------------------------------------------------------------------------

ஒருவரின் வரலாறோ இல்லை பலரது வரலாறோ எனக்குத்தெரியாது. ஆனால் இந்த கதையில் வரும் சில சம்பவங்களை மையமாக வைத்து இழைக்கப்பட்டதே இக்கதை.
இன்னொரு முக்கிய விடயம் அன்பு....
கதை என்ற கட்டமைப்பில்த்தான் நான் எழுத முனைகிறேன். ஆனால் முடிவது எப்படி என்றுதான் எனக்கு தெரியவில்லை...

மதி
29-07-2008, 07:56 AM
தொடருங்கள் விராடரே...
தொடர்ந்து வருகிறோம்....

மயூரன்னா நம்ம மயூரேசனா?

விகடன்
29-07-2008, 08:05 AM
இப்படியும் ஒரு காதல்.... பகுதி (2)

மயூரன்;
இவனும் மற்றவர்களைப் போலவே ஒரு சாதாரண மாணவன். கட்டணக் கல்விக் கூடத்தில் கல்வி பயில்வதற்காக கடுமையாக உழைப்பவன். கட்டணத்தை கட்டுவதற்காக உழைக்கும் உழைப்பில்லை. அந்தக் கல்விக்கூடத்தை அணுகுவதற்காக உழைக்கும் உழைப்பு.
நகரத்தில் தடக்குப்பட்டு விழுமிடமெங்கும் கல்விக்கூடமிருக்கும்போது எதற்காக இப்படி ஓடி… ஓடி… படிக்க வேண்டும்?
காரணம் இருக்கிறது...
பாடசாலையில் பயிற்றுவிக்கும் ஒரு பிரபல கணித ஆசிரியர் கணிதம் பயிற்றுவிக்கும் கல்விக்கூடம்தான் அது. மயூரனின் தந்தையினை, மயூரனுடன் பாடசாலை வளாகத்தில் கண்டபோதுதான், அவன் தனது பாடசாலைத் தோழனின் மகன் என்பதை அறிந்துகொண்டார். அன்றிலிருந்து தனது வகுப்பில் மாணவனாக இருக்காத மயூரனையும், தன் வகுப்பில் கணித பாடமெடுக்கும் வேளைகளில் அழைத்து வந்து பாடம் சொல்லிக்கொடுத்தார். மயூரனின் வகுப்பில் பாடவேளைக்குரிய ஆசிரியர் வாராத போதெல்லாம் இப்படியாக கற்பித்துவந்தார். மற்றய மாணவர்களுடன் ஒப்பிடுகையில் அதீத அக்கறை செலுத்தினார் என்று சொல்லலாம்.. தவறாமல் சிறு பிழைகளுக்கும் அடிவாங்குவான். அடிப்பதிலும் கௌரவம் இருக்கும். பனை மட்டையினை அழகாகச் சீவி அதன் இரு அந்தங்களிலும் ஏதாவது விஷேடமான படங்களை ஒட்டி, எந்த முனையால் அடிக்க வேண்டும் என்று கேட்டு அடி வாங்குபவர் விருப்பத்திற்கிணங்கவே அடிப்பார்.

மயூரனைப் பொருத்தவரையில் தான் கற்பிப்பது போதாது என்று கருதிய அந்த ஆசிரியர் மயூரனின் தந்தையிடம் சொல்லி மயூரனிடமும் சொல்லி தன் கல்வி நிலையத்திற்கு கல்வி பயில அழைப்பு விடுத்திருந்தார். அதன் விளைவாகவே இந்த உழைப்பும் படிப்பும்.

ஆரம்ப கால கட்டங்களில், தன் தந்தையிடமே பாடசாலைக் கல்வியை கற்றுவந்த மயூரனிற்கு இது ஓர் வியாபார யுத்தியாகவே தோற்றிற்று. தன்னுடைய உழைப்பிற்கு தான் கல்வி பயிற்றுவிக்கும் கல்விக்கூடத்திற்கு படிக்க அழைத்திருப்பது....
ஆகையால், அங்கு கற்கும் சக மாணவர்கள், தோழர்கள், சூழல் அனைத்துமே அவனிற்கு கசப்பாகவே இருந்தது. காலத்தின் ஓட்டத்தில் அந்தக்கசப்பெல்லாம் கழுவப்பட்டு, அதிகாலைப் பொழுதில் அந்த ஆசிரியரின் பாடத்திற்கு சென்றால்த்தான் சந்தோஷமான நாள் என்ற நிலையும் உருவாகிவிட்டது. இதற்கு ஆசிரியரின் கற்பிக்கும் முறை, நகைச்சுவை கலந்த பேச்சு, தண்டிக்கும் அழகு மற்றும் சக மாணவர்களுடைய அந்த குரும்புத்தனமான சம்பாசனைகளும் அமையப்பெற்றிருந்தாலும் முக்கியமாக ஒரு காரணம் உண்டு. அவள்தான் நிதி என்ற ஓர் மாணவி.

வகுப்பறைகளில் ஆண்கள் இடதுபுறமாகவும் பெண்கள் வலது புறமாகவும் இருப்பது அந்த வகுப்பறைக்கே எழுதப்படாத ஓர் சட்டமாக வழக்கத்தில் இருந்தது. அங்கே பெண்கள் வரிசையில் ஆண்களிற்கு எதிர்த்திசையிலமைந்த இறுதியிலிருக்கும் கதிரையில்த்தான் அமர்வதை பழக்கமாக கொள்பவள். மயூரனிற்கு ஆசிரியர் அடிக்கும்போதெல்லாம் தனது இருப்பிடத்திலிருந்து எட்டி எட்டி பார்ப்பாள். மயூரனின் சிறிய சிறிய தவறுகளுக்கெல்லாம் தவறாமல் வாங்கும் அடியையும் அதற்கு அவனது துலங்கல்களையும் பார்த்து மனதினுள்ளே சிரிப்பாள். சிலவேளைகளில் நகைக்கவும் செய்திருக்கிறாள். அப்படி ஒர் தடவை நகைக்கையில், ஆசிரியரும் கண்டு அதற்காக அவளையும் தண்டிக்கையில்த்தான் தனக்குமோர் ரசிகை இருப்பதை அறிந்தான் மயூரன். அன்றிலிருந்து தனக்கு தண்டனை விழும்போதெல்லாம் மயூரன் நிதியை பார்க்கலானான். என்ன கொடுமை...... அந்த வேளைகளில் அவளும் பார்க்கலானாள். ஆரம்பகாலங்களில் அவள் பார்ப்பதை அவமானமாக உணர்ந்த மயூரன், காலப்போக்கில் அதுவே ஓர் சந்தர்ப்பமாக அமைதுவிட்டது. உண்மைதான்... இந்த நிகழ்ச்சியில் மட்டும் இருவர் பார்வைகளும் மோதிக்கொள்ளத் தொடங்கி, அதுவே இருவருள்ளங்களிலும் ஓருவித அன்பு உருவெடுக்க அத்திவாரமாகிவிட்டது.

இப்படி அடிவாங்கி அடிவாங்கியே, பழகிவிட்ட நிதியுடன் கதைக்க வேண்டும் என்று நினைத்தான்.. கல்வுக்கூடத்தில் வைத்து கதைக்க முடியாது. மீறினால் சக தோழர்களின் நகைப்பிற்கும், கிண்டலிற்கும் ஆளாகவேண்டிவரும். அதன் பின்னர் அவளோ பெண்கள் பாடசாலைக்கு சென்றுவிடுவாள். ஆகையால், கல்விக்கூடத்திற்கு வர முன்னரும், முடிந்த பின்னரும் வீதியில் செல்லும் அந்த சிறு நேர இடைவெளியில் கதைக்கலாம் என்று திட்டமிடலானான். தினமும் அதிகாலை அவளின் வீட்ட்டருகே இருக்கும் முடக்கில் தவமிருந்து, அவள் வரும்போது பேசலாம் என்று திட்டமிட்டான். அதன்படியே செய்யத் துணிந்து,தன் வீட்டிலிருந்து பாடசாலையினை கடந்து அடுத்து வரும் தனது கல்விக்கூடத்தினையும் கடந்து அமையப்பெற்றிருக்கும் நிதியின் வீட்டினருகே சென்றிடுவான். ஆனால், அவளுடன் இன்னும் சில மாணவிகள் சேர்ந்தே வருவதால் தடையாக இருந்தது. எப்போதாவது அத்தி பூத்தாற்போல் தனியாக வருவாள். ஆனால் கதக்க முனைவதில்லை. இரத்த அழுத்தம் அதிகமாக
மனதெல்லாம் படபடக்கும்.
இதயத்துடிப்பே பெரிய இடியாக உணருவான்.
காது அடைக்கும்.
களைப்பாக இருப்பது போல தோன்றும்.

மதி
29-07-2008, 08:09 AM
இப்படியும் ஒரு காதல்.... பகுதி ( 2 )

இரத்த அழுத்தம் அதிகமாக
மனதெல்லாம் படபடக்கும்.
இதயத்துடிப்பே பெரிய இடியாக உணருவான்.
காது அடைக்கும்.
களைப்பாக இருப்பது போல தோன்றும்.

அடிவாங்குவதில் ஆரம்பிக்கும் காதலா...? விராடரே...
பேச முடியாமல் தவிக்கும் உணர்ச்சிகள் அட்டகாசம்.. :)

விகடன்
29-07-2008, 08:17 AM
எல்லாம் பார்த்த அனுபவம்...
என்னோடு படித்த ஒருவன் காதலித்தான். ஆனால் கடைசிவரை சொல்லவில்லை. ஏண்டா சொல்லவில்லை என்று கேட்டால் இப்படித்தான் சொல்லுவான்....

அந்த பிட்டை இங்கே சேர்த்துவிட்டேன்.

எல்லாம் கேள்வி ஞானம். :D


அடிவாங்குவதில் ஆரம்பிக்கும் காதலா...?
ஏதோ நடந்திருக்கு. இல்லாவிட்டால் உங்களிடமிருந்து இப்படி ஒரு கேள்வி வந்திருக்குமா என்ன?

ம்ம்ம்ம்ம்ம்
நடக்கட்டும் நடக்கட்டும்.

மதி
29-07-2008, 08:51 AM
எல்லாம் பார்த்த அனுபவம்...
என்னோடு படித்த ஒருவன் காதலித்தான். ஆனால் கடைசிவரை சொல்லவில்லை. ஏண்டா சொல்லவில்லை என்று கேட்டால் இப்படித்தான் சொல்லுவான்....

அந்த பிட்டை இங்கே சேர்த்துவிட்டேன்.

எல்லாம் கேள்வி ஞானம். :D


ஏதோ நடந்திருக்கு. இல்லாவிட்டால் உங்களிடமிருந்து இப்படி ஒரு கேள்வி வந்திருக்குமா என்ன?

ம்ம்ம்ம்ம்ம்
நடக்கட்டும் நடக்கட்டும்.


:D:D:D:D:D:D:D
இதைப்படிக்கும் போது இப்போ புதிதாய் சக்கைப்போடும் பாட்டு ஞாபகத்துக்கு வருது...

"கண்கள் இரண்டால்..உன் கண்கள் இரண்டால்...
............
பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்...
பின்பு பார்வை போதும் என நான் மகிழ்ந்தே நகர்வேன்..."

அப்படியே உங்க கதாநாயகன பத்தி..

மயூ
29-07-2008, 09:14 AM
வடமராச்சியில் சென்று உயர்தரம் தனியார் கல்லிவிக்கூடங்களில் பயின்றேன். அந்தக் காலத்துக்கே போனது போல ஒரு உணர்வு.

சைக்கிள் மிதித்து போவது, ஒவொரு ஒவொரு நண்பராக சேர்த்துக்கோண்டு பருத்தித்துறையில் இருந்து நெல்லியடிக்கு செல்வது. ஆகா.. அருமை... அந்தக் காலத்து நினைவுகளுக்கு அப்படியோ போய்விட்டேன்.

சிவா.ஜி
29-07-2008, 12:29 PM
பள்ளிக்கூடக் காதல், சொல்லவியலா காதல், சொல்ல முடிந்ததா? அவள் மனதை வெல்ல முடிந்ததா...இனி வரப்போகும் விராட எழுத்துக்களில் காண ஆவலாய் இருக்கிறேன். தொடருங்கள் விராடரே. வாழ்த்துகள்.

அறிஞர்
29-07-2008, 02:19 PM
ஆஹா பள்ளிக்காதல் பருவம்...
இங்கு வரிகளில் விளையாடுகிறது...

அடி, காதல் இது இல்லாத பள்ளி வாழ்க்கையா...
கலக்குங்க... விராடன்..

mukilan
29-07-2008, 03:21 PM
அடுத்தவர் காதல் அனுபவம் போலத் தோன்றவில்லையே விராடன். உங்களோடது இல்லைனு தோணுது ஆனா இல்லை.. :)

காதல் வயப்படாத ஆணோ பெண்ணோ இருக்கவா செய்கிறார்கள்? கவிஞர்களாக இருந்தாலும் சரி, கதாசிரியர்களாக இருந்தாலும் சரி காதலைப் பற்றிய கற்பனை அபாராமாகச் செய்ய முடியும்.

உங்கள் காதல் கதை வெற்றிகரமாகச் செல்ல வாழ்த்துகள்.

இளசு
29-07-2008, 07:27 PM
வாழ்த்துகள் விராடா..

(எல்லாம் நினைத்துப் பார்க்கிறேன் -னு ஆரம்பிச்ச அறிஞரால் வந்தது..)

அடிவாங்குவதால் கிடைத்த ''ரசிகை''
அவள் கண்களைச் சந்திக்க அடிவாங்கி அடிவாங்கி....
ரொம்ப்ப்ப்ப்ப நல்லவன் நம்ம மயூரன்!

காதலியை நெருங்கும்போது தோன்றும் உடல் அவஸ்தைகள் -
மிகச் சரியான விவரிப்பு..

அதை என் நண்பன் சொன்ன பிட்டு எனக் கதை விட்டது நல்ல சமாளிப்பு..

தொடர்க விராடா!

அறிஞர்
30-07-2008, 12:00 AM
வாழ்த்துகள் விராடா..

(எல்லாம் நினைத்துப் பார்க்கிறேன் -னு ஆரம்பிச்ச அறிஞரால் வந்தது..)!
இது வரை வந்தது குறைவு தான் இளசு..

விகடன்
30-07-2008, 05:13 AM
வடமராச்சியில் சென்று உயர்தரம் தனியார் கல்லிவிக்கூடங்களில் பயின்றேன். அந்தக் காலத்துக்கே போனது போல ஒரு உணர்வு.

அந்தக் காலத்து நினைவுகளுக்கு அப்படியோ போய்விட்டேன்.

கதை எழுதி முடிந்ததும் "என் சுயசரிதை இது " என்று அடம்பிடிக்க மாட்டீர்களே... :D

ஏன்னா... உங்க பெயரும் மயூரன், கதையில் வரும் ஒரு பாத்திரத்தின் (கதாபாத்திரமா இல்லையா என்றது வேறு விடயம்) பெயரும் மயூரன். அதுதான் கேட்டேன்.

வரப்போகும் விராட எழுத்துக்களில் காண ஆவலாய் இருக்கிறேன். தொடருங்கள் விராடரே. வாழ்த்துகள்.

உங்கள் எதிர்பார்ப்பை கட்டாயம் பூர்த்தி செய்து விடுகிறேன். இன்றே என்பதை விட இப்பவே என்று சொல்வதுதான் நல்லது. இல்லையா?


அடி, காதல் இது இல்லாத பள்ளி வாழ்க்கையா...
கலக்குங்க... விராடன்..
:) :) :) :) :) :)காதல் வயப்படாத ஆணோ பெண்ணோ இருக்கவா செய்கிறார்கள்?
:) :) :) :) :) :)அதை என் நண்பன் சொன்ன பிட்டு எனக் கதை விட்டது நல்ல சமாளிப்பு..
:) :) :) :) :) :)தொடர்க விராடா!
அதுதான் அண்ணா கொஞ்சம் கடினமாக இருக்கிறது. தொடரவெல்லாம் எனக்கு எழுத்தாழுமை இருக்கிறதா?................ தெரியவில்லை.
முடித்துவிடுகிறேனே???

--------------------------
எனது இந்த கதை (என்னும் வகுப்பில் எழுதிய பதிவு) க்கு ஊக்கமளித்த அனைவரிற்கும் மிக்க நன்றிகள்.
இதை எழுத முனைந்தபோது எனக்குள்ளே பல கேள்விகள் உதித்தன....
எழுதப்படும் எழுத்துக்கள் படிப்போரை சென்று அடையுமா? எனது எழுத்து/ பேச்சு இவற்றின் வடிவம் அவர்களுக்கு புரியுமா? என்ற கேள்விகள்தான்.

உங்களுடைய ஊக்கத்தினை பார்த்து மனம் மகிழ்ந்தேன். தொடர்கதையாக கொண்டு செல்லாமல் இன்றோடு இதை முடித்துவிடுகிறேன்.

முடித்துவிடுகிறேன் என்று சொல்வதிலும் பார்க்க, முடிந்து விட்டது என்று சொல்வது சரி என்று நினைக்கிறேன். :D

விகடன்
30-07-2008, 05:49 AM
இப்படியும் ஒரு காதல்.... பகுதி (இறுதி)

மொத்தத்தில் கதைப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தும் கதைக்காமலிருந்து வந்தான். நாட்களின் சுழற்சியில் அவ்வழியிலிருந்து அதே வாகுப்பிற்கு வரும் சக மாணவர்கண்கள் சிலரின் விளிகளிலும் அகப்பட்டுக் கொண்டான். ஆரம்பத்தில் கிண்டல் அடித்தவர்கள் அவன் மனதை புரிந்தவர்களாக உதவ முன்வந்தனர்.
உதவி என்றால் மயூரனிற்காக அவர்கள் தூது செல்வதெல்லாம் கிடையாது. படிக்க கிளம்பும் நிதியின் கூட்டத்திற்கு பின்னால் இவர்களும் செல்லுதல். காதலை சொல்வதும் , சொல்லத்தயங்குவதும் மயூரனினை பொறுத்தது. இதற்காகவே தன் வீட்டிலிருந்து நிதியின் வீடு வரை சென்று அங்கே; ஒன்று சேரும் அந்த வட்டாரத்து நண்பர்களுடன் இணைந்து நிதியை பின் தொடர வேண்டும். அதேபோல், வகுப்பு முடிவடைந்ததும் அவள் வீடு வரை சென்று வரவேண்டும். இதன் பின்னர்தான் தன் காரியங்களும் பாடசாலை புறப்பாடும் அமையும். தன்னை அழகாகக்காட்டிக் கொள்ளவும், சக தோழர்களிலிருந்து வேறுபடுத்திக் கொள்ளவும் பாடசாலைச் சீருடையுடன் வருவதே இல்லை. தொடர்ச்சியாக பின்தொடர்வதை அறிந்து கொண்ட நிதியும், மயூரனின் சூட்சுமத்தை அறிந்துகொண்டாள். பச்சைக்கொடி காட்டுவதுபோல கடைக்கண்ணால் பார்த்து புன்முறுவலையும் உதிக்கலானாள். இப்படியாக சொல்லாமல் வளர்த்தனர் தம் காதலை.

காலமும் உருண்டோடியது. பரீட்சையில் தேர்ச்சி பெற்ற மயூரனும் தலை நகரத்தில் அமைந்திருந்த பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்று வந்துவிட்டான். தினமும் பார்ப்பது என்பது மறைந்து வாரமிருமுறையென்றாகிவிட்டது. பல்கலைக்கழகத்தில் என்னதான் தலை போகிற வேலை இருந்தாலும் வாரத்தில் அந்த இரண்டு விடுமுறை நாட்களும் தன் வீட்டிற்கு செல்லவே ஒதுக்கியிருந்தேன்.


தலை நகரில், தன்னுடன் பாடசாலையில் சிநேகிதமான ஒரு நண்பன் சுதாகருடன் அப்பப்போ சென்று கதைப்பது வழக்கம். அவ்வாறு ஒருநாள் சென்று இருக்கையில் அவனிற்கு ஓர் அழைப்பு அவன் வீட்டிலிருந்து வந்திருந்தது. கதைத்துக்கொண்டிருந்தவன், திடீரென்று "நான் இன்றிரவுக்கே வெளிக்கிட்டு வந்திடுறேன் அம்மா" என்று சொல்லி அலைபேசியிணைப்பைத் துண்டித்தான். மயூரனின் கேள்விக்கே இடமளியாதவனாய் "மச்சான். இப்ப கொஞ்சம் முதல்ல நம்மட வீட்டுக்கு போற வழியில வெடிச்ச கிளைமோரில சில அரசியல் கட்சி ஆதரவாளர்களுடன் என்னுடைய மச்சாள் ஒருத்தியும் தவறிவிட்டாள். அவளுடன் இன்னும் இரு சக தோழியர்களாம். வீட்டில தாய் தகப்பன் பைத்தியம் பிடிக்காத குறையா இருக்கினமாம். அதால நாளைக்கே வீட்ட நான் நிக்கவேணும்டா" என்று கூறினான்.

இன்று வியாழந்தானே. இன்னும் ஒரு நாள்த்தான் இருக்கிறது எனது ஊர்ப்பயணத்திற்கு. நாளை யூனியை கட்டடிச்சால் இந்த வாரம் மூன்று நாள். என்னுடைய வேலைக்கு ஒருநாள் அதிகமாக இருக்கும், அதோட நண்பனோட சேர்ந்தும் ஊருக்கு போகிறதாகிறது. அப்படியே அவனோட மச்சாளின் இறுதிச்சடங்கிற்கும் போகலாம். அவனுக்கும் ஆறுதலாக இருக்கும். என்று திட்டமிட்டவன் " நானும் வாறண்டா மச்சான்" என்று சொல்ல…

"அப்ப உன்னோட யூனி? " என்று கேட்டான் சுதாகர்.

"அது கிடக்குது மச்சான். நான் 9.00 மணிக்கெல்லாம் ரெயில்வே ஸ்டேஷனிற்கு வந்திடுவேன். எனக்கும் சேர்த்து டிக்கட் எடுத்து வையடா" என்று சுதாகரிடம் சொல்லிவிட்டு தன்னிருப்பிடத்தை நோக்கி விரைந்தான்.

அங்கே காயப்போட்டிருந்த உடைகள் சிலவற்றுடன் தனது பயணப்பொதியை தயார்ப்படுதிக்கொண்டு, யூனி பெடியள் ஒன்றாக சேர்ந்து படிக்கும் இடத்துக்கு சென்று தன் பயணத்தை சொல்லிவிட்டு இரெயில்வேஸ்டேஷனிற்கு விரைந்தான்.

நாற்பது நிமிட பேரூந்து பிரயாணத்தின் பின்னர் தலைநகரத்திலமைந்திருந்த ரெயில்வேஷ்டேசனை அடைந்தான். அங்கே ஓடிச்சென்று நண்பனை தேடினான். மயூரனின் வரவை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவன். "ஏண்டா மச்சான் இவ்வளவு லேட்? கொஞ்சம் வெள்ளன வந்திருந்தால் சிலிப்பரேட் கிடைச்சிருக்கும். இப்ப நோமல்தான் இருக்காம். வாங்கிட்டேன். உனக்கு ஓ.கே தனே?" என்று கேட்க மயூரனும் அதனை ஆமோதித்து தொடரூந்தை நோக்கி நகர்ந்தான். 9.45 மணிக்கெல்லாம் புறப்பட்டுவிடும் அந்த தபால் தொடரூந்து அன்றுமட்டும் புறப்படவில்லை. அதற்கு ஈடாக ஓர் அறிவித்தல் அதுவும் சிங்கள மொழியில், காற்றலைகளில் தவளவிட்டனர் தொடரூந்து நிலைய அதிகாரிகள்.

“தலை நகரை நோக்கி வந்த தொடரூந்து ஒன்று தடம் புரண்டிருப்பதால் புறப்பட தயார் நிலையிலிருக்கும் தபால்த்தொடரூந்து இன்னும் இரண்டு மணித்தியாலங்கள் தாமதமாகும்” என்று...
அமைதியாக ஓரிடத்திலிருந்த மயூரனும் நண்பனுன் சுதாகரும் அவரவர் பயணப் பொதிகளை தலைகளிற்கு அணையாக வைத்து தூங்கியேவிட்டனர். எப்போது தூங்கினர். எப்படித்தூங்கினர் என்று இருவரும் அறிந்திருக்கவில்லை. தொடரூந்து புறப்படும் முன்னராகவே தூங்கிவிட்டிருந்தனர். ஏதோ இடையில் அருண்டு விழித்திட்ட மயூரன், நண்பன் ஆழ்ந்து உறக்கத்திலிருப்பதை பார்த்துவிட்டு அவனை குழப்ப விரும்பாதவனாய் விடியலிற்காக காத்திருந்தான். அப்பொழுதுதான் அவதானித்தான், வழமையான பயணத்தில் இருக்கவேண்டிய இடத்திலிருந்து பின்னோக்கித் தொலைவிலிருப்பதை....

முன்னே இருந்த அம்மா ஒருவரிடம் தொடரூந்து புறப்பட்ட நேரத்தை வினாவினான். அது சொல்லப்பட்ட நேரத்தினை விட இன்னும் நேரம் தாழ்த்தியே புறப்பட்டதையும், வழிப்பயணத்தில் யாரோ ஷெயினை பிடித்தி இழுத்ததால் மேலும் 20 நிமிட தாமதமும் ஏற்பட்டதை அந்த அம்மா சொல்லி அறிந்து கொண்டன்.

ஒருவாறாக காலை ஆறு மணிக்கெல்லாம் வந்தடிந்திருக்கவேண்டிய அவன் நகரத்து இரயில்வே ஷ்டேசனை 11 மணிக்கு வந்தடைந்தனர். இன்னும் அரை மணி நேரத்தில் நண்பனின் வீட்டிலிருப்பதாக உறுதி மொழி கூறி அங்கிருந்த முச்சக்கர வண்டி (ஆட்டோ) ஒன்றை பிடித்துக்கொண்டு தன்வீட்டிற்கு விரைந்தான். முகத்தை அலசிவிட்டு மிதிவண்டியை எடுத்துக்கொண்டு காலை தேனீர்கூட அருந்தாது விரைந்தான் நண்பனின் வீட்டிற்கு. அங்கு அவன் வீடு பூட்டியிருந்தது. அவன் மட்டும் பயணப் பொதியுடன் இவன் வரவிற்காக காத்திருந்தான். என்னடாப்பா என்று கேட்க, " அம்மா அப்பா எல்லாரும் மாமா வீட்டுக்கு போயிட்டினம். நான் உனக்காக பார்த்துக்கொண்டிருக்கிறேன். சரிடா. வா போவம்." என்று சொல்லி சைக்கிளிலேயே முன்னமர்ந்து இடதுகாலால் இடது மிதி பலகைவில் பலம் சேர்த்தான் சுதாகர்.

அவன் பாதை சொல்ல சொல்ல அதற்கு ஏற்ப சைக்கிளை செலுத்தினான். அனைத்தும் பரீட்சயமான பாதைகள்தான். நிதியை பார்க்க என்று அளந்து திரிந்த பாதைகள். இன்றுவரை நிதியின் கதையை அவனிடத்தில் சொல்லாதிருந்த மயூரன் அன்றும்கூட சொல்ல முடியவில்லை. நண்பன் என்று இருந்துவிட்டு ஏன் இவ்வளவு காலம் மறைத்தாய் என்று கேள்வி கேட்டுவிட்டால்..... சோகத்தில் வேற இருக்கிறான். ஆகையால், தனக்கு புதிய இடம் போலவே பாவனை செய்துகொண்டு மிதிக்கலானான்.

ஓடியே வந்த மயூரனிடம். “இதுதான் வீடுடா” என்று ஓர் வீட்டினை காட்டி அங்கு செல்லச் சொன்னான்.

நிமிர்ந்து அவன் காட்டிய திசையில் பார்வையை விட்ட மயூரன் திடுக்குற்றான். மனமுடைந்தான்.

என்ன கொடுமை இது?
அவன் காதலித்த அந்த நிதியின் வீடுதான் அது.

அப்படியென்றால்....
இவனது மச்சாளா நிதி?
இறந்தது நிதியா?
இல்லை
நிதிவீட்டில் அவர்கள் வாடகைக்கு ஓர் பகுதி கொடுக்கப்படு அந்த இடத்தில் இருந்த இவனது மச்சாளா?

குழம்பியவனாய் எதுவித பேச்சுக்குமிடமளியாமல் உள்ளே நுழைந்தான். நிதி படித்த பாடசாலையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் சிலரும், அந்த பகுதியை சேர்ந்த மயூரனின் வகுப்பு (பழைய) மாணவிகள், அவர்களை விட ஓரிரு வருடத்தால் முன்னும், பின்னும் படித்தோர், தனியார் கல்விக்கூட ஆசிரியர்கள் சிலர் என்று இவனிற்கு தெரிந்த பட்டாளம் ஒன்றும் நின்றது. இவர்களைக்காண்டதும் அவனுக்கு ஒரு விதமான பதற்றமும், உடலெல்லாம் காய்ச்சல் போன்ற உணர்வும் ஏற்பட்டுவிட்டது. யாராக இருக்கும் என்று குழம்பியவன், தன்னுடைய நிதியாக மட்டும் இருந்துவிடக்கூடாது என்று கடவுளை வேண்டியபடி கண்ணீர் அஞ்சலி என்று தலைப்பிட்ட் பாடசாலை, கல்விக்கூடங்களால் தவள விடப்பட்டிருந்த சிறிய கடதாசிகளை பார்த்தான். அதில் பொறிக்கப்பட்டிருந்த படத்தையும் பார்த்தான்.
அது இவனுடைய நிதிதான்.

இருட்டியது....மூச்சடைத்தது.... அழமட்டும் முடியவில்லை.

பேசாமல் அங்கே வைக்கப்பட்டிருந்த ஓர் கதிரையில் சென்று அமர்ந்து கொண்டான்.

அப்போது சுதாகரின் தாய் சொன்னார்.... " தம்பி. இப்பதான் உடலை தகனம் செய்ய கொண்டு போனவர்கள். தகப்பன் பைத்தியம் பிடிக்காத குறையாக இருந்தார். புதைத்தால் அவர் சுடலைக்கு போய் அந்த இடத்திலிருந்து அழுவார். அப்படிப்பட்ட சுபாவமுடையவர். அதுதான் எரிக்க முடிவெடுத்து கொண்டு போயிட்டினம். இவனால உங்களுக்கும் சிரமம். என்ன?” என்று …… அவனும் சிறிய புன்முறுவலை விடுத்து மொனமாக இருந்துவிட்டான். அன்று மட்டுமல்ல .... என்றுமே!!!

சிவா.ஜி
30-07-2008, 06:02 AM
பொங்கிப் பிரவாகிக்கும் என்று நினைத்தது இப்படி நீர்க்குமிழியாய் தோன்றி மறைந்துவிட்டதே...மனதை கனக்கச் செய்துவிட்டீர்கள் விராடன். மலருவதற்கு முன்னே கருகிவிட்ட மலரை எண்ணி வேதனையாக இருக்கிறது.
கதையென்பதால், அதை உண்மையாய் தோற்றமளிக்கும் விதத்தில் சொன்னதற்கு பாராட்டுகள் விராடன்.

மதி
30-07-2008, 06:15 AM
மனம் கனத்து விட்டது விராடரே... இளமைத்துள்ளலோடு இருந்த முதல் இரண்டு பாகங்களை இந்த மூன்றாம் பாகம் மறக்க செய்து விட்டது. இவர்கள் காதல் சொல்லாமலேயே முடிந்து விட்டது. இதுபோல் வெடிகுண்டில் சிக்கி சொல்லாமலே போன காதல் எத்தனை எத்தனையோ...!

இளசு
30-07-2008, 06:25 AM
அடடா... என்ன இது!

கண்களைக் குளமாக்கி விட்டாயே விராடா..

சிரிக்க சிரிக்கத் தொடங்கியதால் - இந்த
சட்டெனக் கருகிய சோக முடிவு
அதிகம் உ(ள்)ள வலி தருகிறது!

அமரன்,அன்பு,ஓவியன்,அக்னி வரிசையில் உன் எழுத்துகளும்
என் நெஞ்சில் நங்கூரமாகிவிட்டன.

என் அன்பு உனக்கு விராடா!

விகடன்
30-07-2008, 07:48 AM
பொங்கிப் பிரவாகிக்கும் என்று நினைத்தது இப்படி நீர்க்குமிழியாய் தோன்றி மறைந்துவிட்டதே...மனதை கனக்கச் செய்துவிட்டீர்கள் விராடன். மலருவதற்கு முன்னே கருகிவிட்ட மலரை எண்ணி வேதனையாக இருக்கிறது.

கதைதான் சிவா.ஜி.
எந்நாட்டில் தினந்தோறும் மலரும் கிளைமோர் என்னும் ஆபத்தான மலரால் சிதைந்து போகும் எத்தனையோ உயிர்களின் கதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு புத்தகத்தின் அளவில் சற்றே ஒரு பக்கமாக குவிந்து சிறிய பெட்டி வடிவில் இருக்கும் அந்த நாசகாரியின் உதவியால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேவைக்காக பொது இடங்களில் வைத்து வெடிக்க வைக்கின்றனர். அந்தவேளைகளில் எந்த இடைஞ்சல்களுக்கும் போகாத பலர் கூடவே பலியாகின்றனர். இதனால் ஏற்படும் பல்தரப்பட்ட உழைச்சல்கள். அதில் இது ஒரு சிறிய வருத்தத்தை தரும் நிகழ்ச்சியே இந்த மயூரனின் கதை.. உறுதிப்படுத்தப்படாத காதல் என்றும் சொல்லலாம். அதற்காக மயூரனின் இழப்பு மட்டும் ஈடு செய்ய முடியுமென்றோ, பொருட்படுத்த முடியாதது என்று சொல்ல வரவில்லை. ஒப்பீட்டளவில் இதை விட சோகமான விடயங்களும் கதையில் மறைந்திருக்கின்றன.

கதையில் வரும் நிதியின் பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், உற்றா உறவினர்கள் அடைந்திருக்கும் வேதனையின் அளவை சிந்தித்துப்பாருங்கள்.
கதையென்பதால், அதை உண்மையாய் தோற்றமளிக்கும் விதத்தில் சொன்னதற்கு பாராட்டுகள் விராடன்.
கதைதாங்க. அதிலும் நிஜத்தன்மை வேண்டும் என்பதற்காக சில உண்மைச் சம்பவங்களும் சேர்த்துள்ளேன்.

பாராட்டுக்கு மிக்க நன்றி சிவா.


மனம் கனத்து விட்டது விராடரே... இளமைத்துள்ளலோடு இருந்த முதல் இரண்டு பாகங்களை இந்த மூன்றாம் பாகம் மறக்க செய்து விட்டது. இவர்கள் காதல் சொல்லாமலேயே முடிந்து விட்டது. இதுபோல் வெடிகுண்டில் சிக்கி சொல்லாமலே போன காதல் எத்தனை எத்தனையோ...!
உண்மைதான்.
ஆனால் காதல் மட்டும் சாகடிக்கப்படுவதில்லை.
எத்தனையோ மனக்களில் செழித்து இருந்த வாழ்க்கை மீதான பற்றினையும் கூடத்தான் சாகடிக்கப்படுகிறது.


அடடா... என்ன இது!

கண்களைக் குளமாக்கி விட்டாயே விராடா..

சிரிக்க சிரிக்கத் தொடங்கியதால் - இந்த
சட்டெனக் கருகிய சோக முடிவு
அதிகம் உ(ள்)ள வலி தருகிறது!
எழுதிய வரிகளில் வெற்றி என்று சொல்லுங்கள்.
-------------------------
கதையேதோ எழுத ஆரம்பித்துவிட்டேன். கருவினை விட்டு விலத்தாது போகவேண்டும் என்று கருத்திற்கொண்டேன். ஆனால் என்ன செய்வதண்ணா.? அதிகமாக சொல்ல முயற்சித்து அறவே விளங்காமல் போய்விட்டால்!!!!!
ஆகையால் விரைவாக சொலவந்ததை சொல்லி முடித்துவிட்டேன்.

அதோடு, பாகம் ஒன்று, இரண்டு.... என்று எழுதிக்கொண்டே போனால், எழுதும்போது படிப்பவர்களுக்கு, படிக்க நன்றாக இருக்கும். அனைத்தையும் எழுதி முடித்த பின்னர் படிக்க வருபவர்களுக்கு அது ஓர் சினத்தை கொடுக்கும் அல்லவா?
அதுதான் ஒரு பக்கத்திலேயே எல்லா கதையை முடித்தும் விட்டேன்.


அமரன்,அன்பு,ஓவியன்,அக்னி வரிசையில் உன் எழுத்துகளும்
என் நெஞ்சில் நங்கூரமாகிவிட்டன.
கேற்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. ஏதா பதக்கம் பெற்றதைப்போல உணர்வு இருக்கிறது. ( "பதக்கம் பெற்ற அனுபவம் இருக்கிறதா விராடன்?" என்று கேட்கப்படாது... :D) .

அதோடு இன்னொன்றையும் நினைத்துப்பார்த்தேன்.....
தம்மோடு விராடனையும் ஒப்பிட்டுவிட்டாரே இளசு அண்ணா என்று அவர்கள் நினைத்தா கவலைப்படுவார்களே ......


என் அன்பு உனக்கு விராடா!
நன்றி அண்ணா.

பூமகள்
31-07-2008, 05:53 PM
விராடன் அண்ணா,

கண்களில் நீர் திரையிட்டு மறைத்துவிட்டது..!!

ஏனோ தெரியலை... சொல்லவே படாத அந்த அன்பு...
சொல்லப்படாமலே.. முடிவுரை எழுதப்பட்டுவிட்டதே...!!

மயூரன் வரும் நாள் வரை கூட.. காத்திருக்காமல் நிதி தீயுடன் சென்றுவிட்டாளே..!!

முதலிரு பாகத்தில் மனம் படபடக்கும் பட்டாம்பூச்சியானது..

இறுதி பாகம் படித்ததும்...
தீயில் விழுந்த விட்டில் பூச்சி நிலை..

மனம் கனத்துவிட்டது..

அழிக்க இயலா சோகம்..!!
நிலையான அச்சை நெஞ்சில் வார்த்துவிட்டது உங்கள் கதை..!!

மிகச் சிறந்த கதாசிரியரை உங்களுக்குள் ஒளித்து வைத்திருந்தீர்களா??

எப்படி வாழ்த்தவென்றே தெரியவில்லை..
மனமார்ந்த பாராட்டுகள் விராடன் அண்ணா..!!

மயூ
01-08-2008, 04:19 AM
அட போங்கையா.. இப்படி அழ வைச்சிட்டீங்களே...!

விகடன்
02-08-2008, 07:39 PM
அழிக்க இயலா சோகம்..!!
நிலையான அச்சை நெஞ்சில் வார்த்துவிட்டது உங்கள் கதை..!!
உங்களை சோகத்தில் ஆழ்த்துவது என் நோக்கமல்ல. நம் தேசத்தில் கண்ணிற்கு புலப்படும் பல இழப்புக்கள் இருக்கும்போது, இப்படிப்பட்ட மனதால் ஏற்படும் இழப்புகளுக்கும் பஞ்சமில்லை என்பதை சொல்வதே நோக்கமாக கொண்டேன்.

இதுவரை வந்த பின்னூட்டங்களிலிருந்து ஒன்றுமட்டும் தெரிந்துகொண்டேன்.
அதாவது, சொல்ல வந்ததை விளங்கும் வகையில் சொல்லிவிட்டேன் என்பதுதான்.

அன்புரசிகன்
03-08-2008, 01:58 AM
இழப்புகளை கேட்டிருக்கிறேன். கண்டிருக்கிறேன். அதில் காதலும் சிக்கியிருக்கிறது என்பது பனையால் விழுந்தவரை மாடு மிதித்ததற்கு ஒப்பானது....

நம்மூர் காதலுக்கு இனப்பிரச்சனையும் ஒரு எதிரியாக இருந்திருக்கிறதா.... வாழ்க நம் நாடு...............

கண்களின் முன் நினைவாடல்களால் கதை தந்த விராடனுக்கு நன்றிகள்... தொடர்ந்து எழுதுங்கள் விராடரே.....

விகடன்
03-08-2008, 10:09 AM
அட போங்கையா.. இப்படி அழ வைச்சிட்டீங்களே...!

கண்ணீரை துடைக்க மாற்று வழி இருக்கிறதா என்று ஜோசிக்கிறேன். இருந்தால் அதையும் தந்துவிடுகிறேன்... பிறிதொரு பதிவாக...

MURALINITHISH
14-08-2008, 08:44 AM
சொல்லமலே முடிந்தாலும் காதல் காதல்தானே அது துயரத்தில் முடிந்தாலும் காதல் என்றும் வாழும்தானே