PDA

View Full Version : ஆமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு காட்சிகள்அய்யா
28-07-2008, 06:08 PM
பெங்களூரை அடுத்து அகமதாபாத்தில் சனிக்கிழமை தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.


http://cmsdata.webdunia.com/tm/contmgmt/photogalleryimg/Photo/4858B_28_vehicle.jpgகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அடுத்தடுத்து 17 இடங்களில் குண்டுகள் வெடித்தன.http://cmsdata.webdunia.com/tm/contmgmt/photogalleryimg/Photo/4857B_28_rush.jpgகுண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த 145 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


http://cmsdata.webdunia.com/tm/contmgmt/photogalleryimg/Photo/4856B_28_injure.jpg17 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவனிடம் ஆறுதல் கூறுகிறார் குஜராத் முதலமைச்சர் மோடி.http://cmsdata.webdunia.com/tm/contmgmt/photogalleryimg/Photo/4855B_28_child.jpgஅகமதாபாத் பொதுமக்கள் கூடும் இடங்களில் குண்டு வெடித்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.http://cmsdata.webdunia.com/tm/contmgmt/photogalleryimg/Photo/4854B_28_bombblast1.jpgஅகமதாபாத்தில் குண்டு வெடிப்பு நடந்த இடங்களை பார்வையிடும் உயர் அதிகாரிகள்.http://cmsdata.webdunia.com/tm/contmgmt/photogalleryimg/Photo/4853B_28_blood.jpg

அறிஞர்
28-07-2008, 10:38 PM
கொடுமையான காட்சிகள்... இன்னும் பல படங்கள் பார்க்க இயலவில்லை...

தமிழ் மகன்
29-07-2008, 04:16 AM
கொடுமையான காட்சிகள் மீண்டும் குஜராத்தில் ரத்தஆறை ஓட்ட நினைகின்றனர் ரத்த வெறி பிடித்த ஓணாய்கள்.

இறைவன் தான் காப்பாற்றவேண்டும்.

ஓவியா
29-07-2008, 10:43 AM
மனம் கணக்கிறதே!!

பகிர்வுக்கு நன்றி.

shibly591
29-07-2008, 10:53 AM
இவைகட்கெல்லாம்
மலருமா கடைசி நாள்..

செத்துப்போனவர்களுக்கு
எதற்காகச்செத்தோம் என்பது தெரியாமலேயே போயிருக்கும்..

படுகொலைப்பிணங்கள் மலிந்து போயிற்று சில்லறையாய்...

நம்மால் முடிந்தது பிரார்த்தனைகளும்..சில சொட்டு கண்ணீருமே;;;

சுகந்தப்ரீதன்
29-07-2008, 01:06 PM
அக்கிரமக்காரர்கள் ஆடும் ஆட்டத்தில் அவ்வப்போது பகடைக்காயாய் உருட்டப்படுவது அப்பாவி மக்களின் உயிர்கள்தான்..!! அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தில் இருக்கும் பிரச்சனை போதாதென்று மக்களுக்கு இப்படி வேறு பிரச்சனை..!!

அஹிம்சை அழிந்துப்போனதா...?? மானுடம் மடிந்து போனதா..??
வேதனையும் வெஞ்சினமுமே மிஞ்சுகிறது... அக்கிரமக்காரர்களின் மீது..!!

மதி
29-07-2008, 01:15 PM
இன்று சூரத்தில் இதுவரை 17 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டது... சூரத்தே திகிலில் உறைந்திருப்பதாக செய்தியில் கூறினார்கள்..

ஜெயாஸ்தா
30-07-2008, 06:13 AM
ஏற்கெனவே நிகழ்ந்த மதக்கலவரத்தில் 20,000 அதிகமோனோர் இறந்தனர். இப்போது... குண்டுவெடிப்பு.... முன்பு பூகம்பம்..... குஜராத்திற்கு பிடித்த சாபக்கேடா இது...! நெஞ்சுபொறுக்குதில்லையே.....!

shibly591
30-07-2008, 06:22 AM
கடந்த சில ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புகளின் விவரம்:

2008 ஜூலை 26: பெங்களூரில் 9 இடங்களில் குண்டுகள் வெடித்து 2 பேர் பலியாகினர். 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மே 13: ஜெய்ப்பூரில் 8 இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 65 பேர் பலியாகினர். 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2008 ஜனவரி: ராம்பூரில், சிஆர்பிஎப் முகாமில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 8 பேர் இறந்தனர்.

2007 அக்டோபர்: ராஜஸ்தானில், ஆஜ்மீர் தர்கா வளாகத்தில் குண்டு வெடித்து 2 பேர் பலியாகினர்.

2007 ஆகஸ்ட்: ஹைதராபாதில் லும்பினி பூங்கா மற்றும் உணவகம் ஒன்றில் குண்டுகள் வெடித்து 30 பேர் பலியாகினர். 60 பேர் காயமடைந்தனர்.

2007 மே: ஹைதராபாதின் மெக்கா மசூதிக்குள் குண்டு வெடித்து 11 பேர் பலியாகினர்.

2007 பிப்ரவரி 19: இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் சென்ற ரயிலில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்து 66 பயணிகள் உயிரிழந்தனர்.

2006 செப்டம்பர்: மாலிகோன் மசூதியில் நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பில் 30 பேர் இறந்தனர்.

2006 ஜூலை: மும்பை புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து 7 குண்டுகள் வெடித்து 200 பேர் பலியாகினர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2006 மார்ச்: வாரணாசியில் உள்ள கோயில் மற்றும் ரயில் நிலையத்தில் வெடித்த குண்டுகளில் 20 பேர் பலியாகினர்.

2005 அக்டோபர்: தில்லி மார்க்கெட் பகுதிகளில் 3 குண்டுகள் வெடித்ததில் 62 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்


நன்றி---விழிப்பு

மனச்சாட்சியில்லாத நாய்களை (நாய்கள் இவ்வளவு குரூரமானவை இல்லை...)
நடுத்தெரிவில் உயிரோடு கொளுத்த வேண்டும்...

செத்த பிறகும் மீண்டும் மீண்டும் எரித்து சாம்பலை எரிமலைக்குள் கொட்ட வேண்டும்