PDA

View Full Version : வன்முறை தவறில்லை!!!



lenram80
28-07-2008, 03:42 PM
நாள்காட்டி கொண்டதில்லை!
என் கனவில் நீ வந்தால், அன்று நல்ல நாள்!
என் கண் முன்னே நீ வந்தால், அன்று முகூர்த்த நாள்!

என் பார்வையில் மற்றவர்கள்
தட்டித் தடவி நடக்கும் போது
யாருடா இவள்?
இப்படி எட்டிக் குதித்து ஓடுகிறாளே!

மற்ற பெண்களெல்லாம் மொட்டாக
இவள் மட்டும் எப்படி மலராக?

மற்ற விழிகளில் கண் பாவையும்!
இவள் விழிகளில் பொன் பாவையும் - என்பதாலா?

உன்னை பார்ப்பதற்கு முன் - என் இதயம்
எவளும் வந்து தங்கிப் போகும் விடுதி!
உன்னை பார்த்த பின் - என் இதயம்
நீ மட்டுமே வாழும் இன்ப இல்லம்!

என்னை பல விழிகள் எடுக்கும்!
சில விழிகள் திருடும்!
உன் விழி மட்டும் தான் கொள்ளை அடிக்கும்!

பேச ஆசைப்பட்டது பல!
பழக ஆசைப்பட்டது சில!
வாழ ஆசைப்பட்டது உன்னோடு மட்டும் தானடி!

குறையாய் பல!
பிறையாய் சில!
நீ மட்டும் எப்படி முழு நிலவாய்?

மற்றவர்கள் என்னில் தீக்குச்சி கொளுத்த
நீ மட்டும் தானடி மத்தாப்பு கொளுத்தினாய்!

சுட்டு எரியும் சூரியனும்
பட்டு ஒளிரும் சந்திரனும்
என்னைக் கவர்ந்ததில்லை!
சூரிய வெளிச்சமும், சந்திர குளுமையும்
கொண்ட கோள் நீ என்பதால்
இந்த துணைக் கோளைக் கவராமல் இருந்ததில்லை!

எல்லோரும் விழி வழியே வெடிகுண்டு வீச
என்னில் பட்டு வெடிக்காமல் விழுந்தது பல!
சிவகாசியாய் சிவந்தது சில!
பொக்ரானாய் சிதறியது உன்னால் தானடி!

என் அந்தப்புர இதயத்தை
அரண்மனை ஆக்கியவளே!

தாவிக் கொண்டிருந்த மனதில்
தாயத்து கட்டியவளே!

அலையாய் ஆடிக் கொண்டிருந்த மனதை
ஒரு புள்ளியில் அள்ளிக் குவித்தவளே!
குவியாடி* கொண்ட குயிலாடி நீ?

நீ செய்த வம்புகளால்
என் இதயத்தில் ஒரு பூக்காடு!
நீ கொய்த அம்புகளால்
என் முழுக்க நீ நூறு விழுக்காடு!

எனக்கு மட்டும் உன் வன்முறை தவறில்லை!
உன்னைக் காதலிக்க வரைமுறை தேவையில்லை!


குவியாடி* - குவியாடி ஒளியை குவிய தூரத்தில் ஒரு புள்ளியில் குவிக்கும்.
(A convex lens causes rays to converge on a single point at its focal length.)

இளசு
29-07-2008, 12:00 PM
காதல் தீண்டவே..
கடல் தாகம் தீர்ந்ததே!

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு...


-------------------------------

கண் தேர்தல், பின்..பழகித் தெரிதல்...
இப்படி முதல் சுற்று, அடுத்த சுற்று என
முறையாய் எப்போதும் நிகழ்வதில்லை!

சுனாமியாய், அணுகுண்டாய், வன்முறையாய்க் கொள்ளைபோவதும் உண்டு..

கொள்ளை போவோருக்கே கொள்ளை இன்பம் கிடைப்பதுதான்
இந்த வன்முறையில் புதுமை!

காதல் கவிதைகளுக்குள் மீண்டும் மீண்டும் என்னை இழுக்கும்
லெனினுக்கு மெல்லிய கண்டனமும், வல்லிய பாராட்டுகளும்..

shibly591
29-07-2008, 12:03 PM
நல்லதொரு கவிதை...

இயல்பான ஆனால் அழகான சொற்பிரயோகம்.

வாழ்த்துக்கள்

lenram80
29-07-2008, 11:51 PM
கவிதையைப் படிக்காமல் ரசிக்கும் 'எப்போதும் இளசு'வுக்கும், ஷிப்லிக்கும் நன்றி!!!

அறிஞர்
29-07-2008, 11:59 PM
சுட்டு எரியும் சூரியனும்
பட்டு ஒளிரும் சந்திரனும்
என்னைக் கவர்ந்ததில்லை!
சூரிய வெளிச்சமும், சந்திர குளுமையும்
கொண்ட கோள் நீ என்பதால்
இந்த துணைக் கோளைக் கவராமல் இருந்ததில்லை!

என் அந்தப்புர இதயத்தை
அரண்மனை ஆக்கியவளே!

அலையாய் ஆடிக் கொண்டிருந்த மனதை
ஒரு புள்ளியில் அள்ளிக் குவித்தவளே!
குவியாடி* கொண்ட குயிலாடி நீ?

நீ செய்த வம்புகளால்
என் இதயத்தில் ஒரு பூக்காடு!
நீ கொய்த அம்புகளால்
என் முழுக்க நீ நூறு விழுக்காடு!

எனக்கு மட்டும் உன் வன்முறை தவறில்லை!
உன்னைக் காதலிக்க வரைமுறை தேவையில்லை!


குவியாடி* - குவியாடி ஒளியை குவிய தூரத்தில் ஒரு புள்ளியில் குவிக்கும்.
(A convex lens causes rays to converge on a single point at its focal length.)
அலையும் மனதிற்கு..
குவியாடியான காதலியை
காதலிக்க வன்முறை தவறில்லை...

கலக்குங்க.. லெனின்

lenram80
30-07-2008, 12:37 AM
வரைமுறை இல்லாமல் வைர வார்த்தைகளால் பாராட்டும் அறிஞருக்கு நன்றி!