PDA

View Full Version : ஐ.சி.சி. மினி உலகக் கோப்பை கிரிக்கெட்..!



ராஜா
28-07-2008, 10:38 AM
ICC CHAMPIONS TROPHY - SEP, 2008. போட்டி அட்டவணை.

Thu 11 Pakistan v West Indies, Group A-1st Match, Lahore

Fri 12 New Zealand v Sri Lanka, Group B-2nd Match, Karachi

Sat 13 Australia v India, Group A-2nd Match, Lahore

Sun 14 England v Sri Lanka, Group B-2nd Match, Karachi

Mon 15 South Africa v New Zealand, Group B-3rd Match, Rawalpindi

Tue 16 India v West Indies, Group A-3rd Match, Karachi

Wed 17 Pakistan v Australia, Group A-4th Match, Rawalpindi

Thu 18 South Africa v Sri Lanka, Group B-4th Match, Lahore

Fri 19 England v New Zealand, Group B-5th Match, Rawalpindi

Sat 20 Pakistan v India, Group A-5th Match, Lahore

Sun 21 Australia v West Indies, Group A-6th Match, Karachi

Sun 21 England v South Africa, Group B-6th Match, Rawalpindi

Wed 24 1st Semi Final, Karachi

Thu 25 2nd Semi Final, Rawalpindi

Sun 28 Final, Lahore

mania
28-07-2008, 11:08 AM
தொழில் படு சுத்தம்....:D:D:D
அன்புடன்
மணியா..:D

ராஜா
28-07-2008, 11:25 AM
கொஞ்ச நாளா இல்லையே சத்தம்..?

mania
28-07-2008, 11:49 AM
ஆமாம் ராஜா.... ஒரு மாதம் வெளிநாடு பயணம். வந்தவுடன் வேலை பளு....உங்க ஜோக் பக்கமே கூட வரலைன்னா பாருங்களேன்....!!!!!நலம்தானே ராஜா...????ஆமாம்.....மனசுக்கு பிடிச்ச மன்னார்குடி...???:rolleyes:
அன்புடன்
மணியா..:D

ராஜா
28-07-2008, 11:59 AM
அப்படியா... சரி.. சரி..!

அனைவரும் நலமா..?

மன்னார்குடி என் மனசுக்குப் பிடித்திருப்பதில் உங்களுக்கு அப்படியென்ன கேள்விக்குறி..?

ஹி..ஹி.. திருச்சியில் உங்களைப் போன்ற கலாட்டா பார்ட்டிகள்தான் இருக்கணுமா(ம்).. நாங்க இருக்கக் கூடாதா(ம்)..

போகச் சொல்லிட்டாங்க.. சொந்த ஊருக்கு வந்துட்டோம்..!

அய்யா
28-07-2008, 12:01 PM
உங்கள் பதிவைப் பார்க்கும்போது கோப்பையைப் போல தெரிகிறது.

mania
28-07-2008, 12:10 PM
அடேயப்பா.....ஏதோ தெரியாம ஒரு கேள்வி கேட்டதுக்கா இப்படி....!!!!! வாரி சுருட்டிகிட்டு பதில் சொல்றீங்களே....!!!!:D:D மன்னார்குடி எனக்கும் பிடிக்கும்....என்ன ஒரு கல் எறி தூரம்தானே....???!!!:rolleyes::D
அன்புடன்
மணியா...:D

ராஜா
28-07-2008, 12:20 PM
குடின்னு அண்ணா அழுத்தி சொல்லியிருக்காரு.. அதுக்கு விளக்கம் கேட்டால் எறிஞ்சாலும் எறிஞ்சுடுவாரு..! (கல்லை... கள்ளை அல்ல..!)

எதுக்கு வம்பு..?

:)

ஓவியா
28-07-2008, 12:21 PM
ரெண்ரு பெரியவக பேசும் போது நமக்கு என்ன வேலை இங்க, ம்ம் நடத்துங்க நடத்துங்க.

நாம வந்தாதான் பார்க்க யாரும் இருக்க மாட்டாங்க. :cool::cool:

ராஜா
28-07-2008, 01:00 PM
நாம வந்தாதான் பார்க்க யாரும் இருக்க மாட்டாங்க. :cool::cool:
:sauer028::sauer028::sauer028::sauer028::sauer028::sauer028::sauer028::sauer028:
:sprachlos020::sprachlos020::sprachlos020::sprachlos020::sprachlos020::sprachlos020::sprachlos020:
:fragend005::fragend005::fragend005::fragend005::fragend005::fragend005::fragend005:

ஓவியா
28-07-2008, 01:07 PM
:sauer028::sauer028::sauer028::sauer028::sauer028::sauer028::sauer028::sauer028:
:sprachlos020::sprachlos020::sprachlos020::sprachlos020::sprachlos020::sprachlos020::sprachlos020:
:fragend005::fragend005::fragend005::fragend005::fragend005::fragend005::fragend005:

உங்களுக்கு தெரியாதா!!! அடப்பாவமே!! :traurig001::traurig001::traurig001:

மன்மதன்
28-07-2008, 01:29 PM
என்ன ஒரு கல் எறி தூரம்தானே....???!!!:rolleyes::D


சேட்டிலைட்டில் இருந்துதானே..:rolleyes::D

மன்மதன்
28-07-2008, 01:30 PM
Sun 28 Final, Lahore


சண்டே 28ல் இந்தியா விளையாடுமா??:rolleyes:

அமரன்
28-07-2008, 01:38 PM
சண்டே 28ல் இந்தியா விளையாடுமா??:rolleyes:

சன்டே லீவு நாள் என்கிறதால யோசிக்க வேண்டிய விசயந்தான்.. ஓடி (ஓவர் டைம்) வேலை பார்த்தால் விளையாடலாம்.. பாகிஸ்தானில் சண்டே என்றால் அவுஸ்திரேலியா நியூசிலாந்தில் மன்டே.. அவுங்க விளையாடுவாங்களோ..

ராஜா
28-07-2008, 01:45 PM
சண்டே 28ல் இந்தியா விளையாடுமா??:rolleyes:

எண்டே மன்மதேட்டா..

ஒரு சண்ட இப்போதன்னே கழிஞ்சு..

இனி சண்டே குறிச்சு மிண்டருது.. மனசிலாயோ..?

மன்மதன்
28-07-2008, 02:27 PM
சன்டே லீவு நாள் என்கிறதால யோசிக்க வேண்டிய விசயந்தான்.. ஓடி (ஓவர் டைம்) வேலை பார்த்தால் விளையாடலாம்.. பாகிஸ்தானில் சண்டே என்றால் அவுஸ்திரேலியா நியூசிலாந்தில் மன்டே.. அவுங்க விளையாடுவாங்களோ..

சரி..சரி.. இந்தியா வர்லேன்னு சொன்னா புரிஞ்சிக்க மாட்டேனா..என்ன???:D

அறிஞர்
28-07-2008, 02:29 PM
ஆரம்பம் மட்டும் கிரிக்கெட்...
மற்றதெல்லாம் ஒரே விசாரிப்பாக இருக்கு....

(இலங்கை தொடரை மறந்துவிட்டு) நம்பிக்கையுடன் இந்தியாவை எதிர்ப்பார்ப்போம்

மன்மதன்
28-07-2008, 02:30 PM
எண்டே மன்மதேட்டா..
ஒரு சண்ட இப்போதன்னே கழிஞ்சு..
இனி சண்டே குறிச்சு மிண்டருது.. மனசிலாயோ..?

ஆயி ..ஆய்யி..
(இதிலே ரெண்டு இன்னிங்க்ஸு இல்யா...ஜாலி..:lachen001:)

ராஜா
28-07-2008, 02:45 PM
ஆயி ..ஆய்யி..
(இதிலே ரெண்டு இன்னிங்க்ஸு இல்யா...ஜாலி..:lachen001:)



ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப லொள்ளுப்பா உனக்கு..!

mukilan
28-07-2008, 02:48 PM
சண்டே 28ல் இந்தியா விளையாடுமா??:rolleyes:

இந்தியாவோட முதல் மேட்சே ஆஸ்திரேலியா கூட இருக்கே. :sauer028::fragend005::sprachlos020:

அப்போ உக்கார்ந்துதான் யோசிக்கனும். :confused:

ஓவியா
28-07-2008, 02:50 PM
ஆரம்பம் மட்டும் கிரிக்கெட்...
மற்றதெல்லாம் ஒரே விசாரிப்பாக இருக்கு....


எல்லாம் நம்ப கிரிக்கெட் மாதிரிதான், ஆராபம் அசத்தல் பின் சொதப்பல்..... எண்டிங் கோமாளிஸ் :)

(மன்னிக்க மக்களே)

அமரன்
28-07-2008, 02:51 PM
கப் யாருக்குன்னு வாக்கெடுப்பு நடத்திடலமா..

மன்மதன்
28-07-2008, 03:10 PM
கப் யாருக்குன்னு வாக்கெடுப்பு நடத்திடலமா..

இதே திரியிலே நடத்தலாமே..

அமரன்
28-07-2008, 03:14 PM
இதே திரியிலே நடத்தலாமே..

அஃதே அஃதே...
கோப்பை யாருக்குன்னு கேட்கலாமா.... இறுதிப்போட்டியில் இந்தியா ஆடுமான்னு கேட்கலாமா
எதுவானாலும் ராஜா அண்ணாவின் அனுமதி இன்னும் கிடைக்கலையே..

ராஜா
28-07-2008, 03:25 PM
நடத்துங்க அமர்..!

நம்ம மக்கள் கணிப்பையும் பார்த்துடுவோமே..!

ஃபைனலுக்கு முந்தியே வாக்கெடுப்பு முடியறாப்பல பார்த்துக்கோங்க..!

அமரன்
28-07-2008, 03:28 PM
நடத்துங்க அமர்..!

நம்ம மக்கள் கணிப்பையும் பார்த்துடுவோமே..!

ஃபைனலுக்கு முந்தியே வாக்கெடுப்பு முடியறாப்பல பார்த்துக்கோங்க..!


கேள்வி என்னண்ணா..
கோப்பை யாருக்கா அல்லது வேறு ஏதாவதா..

ராஜா
28-07-2008, 03:36 PM
கோப்பையை வெல்லும் அணி எது..?

அமரன்
28-07-2008, 03:50 PM
கோப்பையை வெல்லும் அணி எது..?
ஆச்சு.. ஆச்சு..

ஓவியா
28-07-2008, 03:52 PM
ஏன் The results are hidden என்று வகுத்துள்ளீர்கள்???

நாம் தானே காணப்போகிறோம். புரியவில்லையே?

ராஜா
28-07-2008, 04:49 PM
ராஜா, Today, 09:06 PM : கோப்பையை வெல்லும் அணி எது..?

Poll Options
கோப்பையை வெல்லும் அணி எது..?
பாகிஸ்தான்
மேற்கிந்தியா
நியூசிலாந்து
ஸ்ரீலங்கா
ஆஸ்திரேலியா
இந்தியா
இங்கிலாந்து
தென்னாபிரிக்கா.

அமரன், Today, 09:20 PM : ஆச்சு.. ஆச்சு..

அறிஞர்
28-07-2008, 06:55 PM
என்னத்தான் அடிப்பட்டாலும் இந்தியாவை விட்டுக்கொடுக்கிறதா இல்லை..

arun
07-08-2008, 10:08 PM
மகேந்திர சிங் தோனி (கேப்டன்), சச்சின் தெண்டுல்கர், கவுதம் கம்பிர், வீரேந்தர் சேவாக், யுவராஜ் சிங், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, விராத் கோக்லி, இர்பான் பதான், ப்ரவீன் குமார், கர்பஜன் சிங்க், சாகீர் கான், R.P சிங், ப்ரக்யன் ஓஜா,இஷாந்த் சர்மா.

புதுமுகம்:விராத் கோக்லி (களத்தில் இறங்க வாய்ப்பு கிடைக்குமா?)

வழக்கம் போல கங்குலியும்,திராவிட்டும் இடம் பெறவில்லை :icon_p:

காயத்திலிருந்து மீண்ட சச்சினுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது:icon_b:

துவக்க வீரர் யார் என்பதில் தான் குழப்பமாக உள்ளது :wuerg019:

aren
08-08-2008, 04:46 AM
ஆஸ்திரேலியாவும் இலங்கையும் கடைசி சுற்றுக்கு வருவார்கள் என்று நினைக்கிறேன். பிச் ஸ்பின் எடுத்தால் இலங்கை வெற்றி பெரும், இல்லையேல் ஆஸ்திரேலியா வெல்லும்.

shibly591
08-08-2008, 05:55 AM
* பாகிஸ்தானுக்கு புதிய சிக்கல்
பாதுகாப்பு பிரச்சினை காரணமாக அவுஸ்திரேலிய தொடர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பரில் இங்கு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த மினி உலகக் கிண்ணத் தொடரும் இலங்கைக்கு மாற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அணி இம்மாத இறுதியில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்பதாக இருந்தது. சமீபத்தில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவுஸ்திரேலியா இத்தொடரில் பங்கேற்க தயக்கம் காட்டியது.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கான அவுஸ்திரேலிய தூதர் தொடரை கைவிடும்படி கூறியதை அடுத்து, தொடரை வேறு இடத்துக்கு மாற்றுமாறு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை கேட்டுக் கொண்டது. இதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (பி.சி.பி.,) ஏற்க மறுத்துவிட்டது. இதனால் இத்தொடர் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 15 ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் குண்டு வெடிப்பு நடந்தது. இதனால் இங்கு செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்த மினி உலகக் கிண்ணத் தொடர் இலங்கைக்கு மாற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தற்போது டுபாயில் நடந்துவரும் ஐ.சி.சி., நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து ஐ.சி.சி., அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில், வெளிநாட்டினர் மீது குறிவைத்து தான் இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இதனால் மற்ற அணிகள் இங்கு போட்டிகளில் பங்கேற்க தயக்கம் காட்டலாம். அவுஸ்திரேலிய அணி பாகிஸ்தான் தொடரை ரத்துச் செய்யப் போவதாக அறிவித்திருப்பது சரியென்பதை தான் இது நிரூபித்துள்ளது.

மினிஉலகக் கிண்ணம் செப்டம்பரில் நடப்பதால் இப்போதுள்ள சூழ்நிலையை வைத்து தொடரை ரத்து செய்ய முடியாது. இருந்தாலும் பாகிஸ்தானில் அந்நிய வீரர்களுக்கு போதிய பாதுகாப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் மற்ற அணியினரின் நம்பிக்கையை பெற பி.சி.பி., முயற்சிக்க வேண்டும். இல்லையென்றால் இத்தொடர் இலங்கைக்கு மாற்றப்படும்.

போட்டிக்கான வேலைகளை கவனிக்க இலங்கை கிரிக்கெட் சபைக்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களாவது தேவைப்படும் என்பதால் பி.சி.பி., நிலைமையை விரைவில் சீராக்க வேண்டும். பாதுகாப்பு அற்ற சூழ்நிலைகள் தொடர்ந்தால் பாகிஸ்தானின் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடுமென்றார்.

shibly591
08-08-2008, 06:10 AM
இலங்கைக்கே கிண்ணம் என நினைக்கிறேன்....