PDA

View Full Version : குழந்தைகளின் எதிர்காலம்



shibly591
28-07-2008, 06:32 AM
விளையாடிக்கொண்டிருக்கும்
என் குழந்தையின் கண்களில்
நிறையவே படிந்து கிடக்கின்றன
எனது பால்ய காலத்தின்
அதே நிழற்படம்...

அதனுள் ஒரு
டாக்டராக வேண்டும் என்கிற
திணிக்கப்பட்ட இலட்சியம்
ஓரமாய் ஒட்டிக்கொண்டிருக்கிறது..

சிலவேளை
உறுத்தல் மிகு எதிர்காலம் பற்றி
எந்தச்சிந்தனையுமற்ற
ஒரு வானவெளியில் அவன்
மிதந்துகொண்டிருக்கக்கூடும்..

சாக்லேட்டும்
என கண்டிப்பும்
அவன் அம்மாவின் அடிகளும்
குதர்க்கமான வினாக்கள் வழியாக
அவனை அவன் வளர்க்க முயற்சிக்கும்
ஒவ்வொரு கணத்தையும்
சிதறித்துக்கொண்டிருக்கிறது...

அவன்பெயரில்
வங்கிக்கணக்கொன்றை திறக்கச்சொல்லி
எனது அப்பா குடைகிறார்..

அவனுக்கு காதல் திருமணம் செய்துகொடுக்கவேண்டாம்
என்று அவன் பிறந்து உடனேயே எனது அம்மா
குட்டு வைத்து விட்டாள்..

மூன்றாவது வயதில்
பாடசாலையில்
சேர்த்துவிடட்டாம்
என்று சுற்றம் முழுக்க சொல்லிக்கொண்டிருக்கிறது.

அவனுக்கே தெரியாமல்
அவன் வருங்காலம்
யார் யாரோவால்
எப்படியெல்லாமோ கிறுக்கப்படுகிறது..

இவை எதைப்பற்றியும்
அறியமுடியாத அவன்
தொடர்ந்து விளையாடிக்கொண்டேயிருக்கிறான்
அவன்பாட்டில்....

இளசு
29-07-2008, 08:33 PM
முக்கியமான ஒரு கருவைக் கையாண்டமைக்கு
பாராட்டுகள் ஷிப்லி..

அன்றும் இப்பிரசினை இருந்தது போலும்..
கலீல் கிப்ரனின் கவிதை வாசியுங்களேன் -
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=297

அறிஞர்
29-07-2008, 11:23 PM
விளையாட்டு வயதில்....
திணிக்கப்படும் எதிர்காலம்.....

அருமை... ஷிப்லி..

shibly591
30-07-2008, 02:44 AM
நன்றி இளசு...

இந்த கவிதை எழத முன் கலீல் கிப்ரானின் கவிதையை நான் படித்திருந்தால்...வேறொரு கோணத்தில் இப்பிரச்சினையினை அணுகியிருப்பேன்...

பகிர்வுக்கும் லாழ்த்துக்கும் நன்றிகள்

shibly591
30-07-2008, 02:45 AM
நன்றி அறிஞரே....

வாழத்தியமைக்கு நன்றிகள் கோடி கோடி