PDA

View Full Version : வீரத்தாய்



மறத்தமிழன்
27-07-2008, 05:58 PM
மாவீரத்தாய்

கருவறையில் இருக்கும்போது
களவாய் பேசியவள்.
கைகளில் தவழும் போது
கனிவாய் பேசியவள்.
காளையாக திரிந்த போது
கண்டிப்பாய் பேசியவள்.
இன்றும்.............
கனக்க பேச வேண்டும்.
கட்டி அணைக்க வேண்டும்.
முத்தம் பொழிய வேண்டும்.
காத்திருக்கிறாள்...
காவல் தெய்வங்களின்
கல்லறைகள் முன்னால்.
வீரக்கண்மணி ஒரு தடவை
விழித்து பார்க்க மாட்டானா என்று......!

-- ஈழத்தில் ஒரு வீரனை பெற்று அவன் களத்திலே தன் சுற்றத்தாரை காக்கும் பணி கண்டு மகிழ்ந்து, பின் சமராடி மாவீரனாய் கல்லறையில் உறங்கும் மகவை அகம் உருகி மகிழ்ந்து கண்ணீரால் அரவணைக்கும் தாயின் பிரதிபலிப்பு.---

இளசு
27-07-2008, 10:01 PM
வீரத்தாய்க்கு எங்கள் ஈரவந்தனம்..!

இனி இந்நிலை எம் தாய்களுக்கு வாராமலே போகாதோ?



(குறுங்கவிதைகள் பக்கம் நகர்த்த என் ஆலோசனை..)

பென்ஸ்
27-07-2008, 11:10 PM
நல்ல கவிதை மறத்தமிழன்....
வீரத்தாய்க்கு என் வணக்கங்கள்...
வீரமகனுக்கு என் அஞ்சலிகள்
இந்த கவிதைக்கு என் வாழ்த்துக்கள்...


(இளசு ...கவிதையை மாற்றிவிட்டேன்)

அமரன்
28-07-2008, 11:13 PM
அவர்கள் இமைகள்
ஒன்றுடன் ஒன்று
உரசுவது கூட இல்லை!

விடியலை நோக்கி
எம்மினம் எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியையும்
கண்டு களிக்கின்றார்கள்..

வீழ்ந்தாலும் வாழும்
அமரர்களின் அம்மாக்கள்
புறநானூற்றுத் தாயை விஞ்சியவர்கள்..

சிவா.ஜி
29-07-2008, 04:54 AM
கிஷோர் சொன்னதைப்போல அந்த வீர உடல்கள் புதைக்கப்படுவதில்லை...விதைக்கப்படுகின்றன. இந்த வீரத்தாயின் மகனாய் பிறந்து, மண்ணுக்காக தன்னுயிர் நீத்த வீரனை வணங்குகிறோம். அவனைப் போல ஆயிரமாயிரம் வீர நெஞ்சங்களைப் பெற்ற வீரத்தாய்களைப் போற்றுகிறோம். பாராட்டுகள் மறத்தமிழன்.

தீபன்
12-08-2008, 04:20 AM
விதைக்கப்பட்டவன் விழிக்கும்போது
தாய்மையின் காத்திருப்பு மட்டுமல்ல,
அனைத்து தமிழர்களின் காத்திருப்பும் நிறைவுக்கு வரும்.

ஈரமான படப்பு... சற்று நீளமாக தந்திருக்கலாம்.

tamilambu
12-08-2008, 05:00 AM
விழிகளை ஈரமாக்கும் படைப்பு!

சந்தர்ப்பத்தை தவறவிட்டதாய் ஒரு தவிப்பு!