PDA

View Full Version : புரியாமலும் புன்னகைக்காமலும்



சுகந்தப்ரீதன்
27-07-2008, 07:43 AM
சிலநேரம் சில சிந்தனைகள்....
உணரமுடியா ஒருசில உணர்வுகள்
ஏற்றுக்கொண்ட சில கொள்கைகள்
எதிர்பாராத எத்தனையோ தடங்கல்கள்
இறக்கமுறும் போதெல்லாம் இழிக்கப்பட்டும்
ஏற்றம்பெற தினம் ஏக்கப்பட்டும்
நீந்தி திரியும் என் நினைவலைகள்....

உலகமே நழுவிவிட்டதாய் ஓர் எண்ணம்
அதை எட்டிப்பிடிக்க துள்ளும் உள்ளம்
துள்ளலில் துவண்டுப் போன துயில்கள்
மௌனமே பலநேரம் மௌனமாய் உறவாடும்
இரவோடு நட்பும் உறவோடு வெறுப்பும்
உயிரோடு கொல்லும் ஒருசில நினைவும்...

இன்னும் ஏனிந்த போராட்டம்
புரியாமலும் புன்னகைக்காமலும்..?!

இளசு
27-07-2008, 07:52 AM
உளைச்சல்.. அழற்சி.. தளர்ச்சி..

இவை தடைக்கற்களா? படிக்கற்களா?

நீ சோர்கிறாயா?
மீறிப் பாய்கிறாயா?

எத்தனை முறை வீழ்ந்தோம் என்பது கணக்கில்லை!
எத்தனை முறை எழுந்தோம் என்பதே !


சோதனைகள் புரியாவிட்டால் என்ன சுகந்தா?
புன்னகையால் ஒதுக்கிவிட்டு முன்னே செல்!


பாராட்டுகள் கவிதைக்கு..
வாழ்த்துகள் வாழ்வில் வெற்றிக்கு!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
27-07-2008, 09:36 AM
உங்கள் ஆக்கம் அருமை என்றால் அதை விட அருமை இளசுவின் பின்னூட்டம்.

சுகந்தப்ரீதன்
27-07-2008, 12:24 PM
எத்தனை முறை வீழ்ந்தோம் என்பது கணக்கில்லை!
எத்தனை முறை எழுந்தோம் என்பதே !!
உண்மைதான் அண்ணா...!! உங்கள் வரிகளை கண்டதும் எனக்கு நான் எப்பவோ படித்த "நீ எத்தனை புயல்களை கடந்து வந்தாய் என்று மற்றவர்களுக்கு கவலை இல்லை... கப்பலை கரைசேர்த்தாயா என்பதே கவலை" என்ற இந்த வரிகள்தான் ஞாபகம் வருகிறதண்ணா..!!


பாராட்டுகள் கவிதைக்கு..
வாழ்த்துகள் வாழ்வில் வெற்றிக்கு
தங்களின் அன்பான ஆசிர்வதிப்பினை கண்டு தலைவணங்குகிறேன் அண்ணா..!!

உங்கள் ஆக்கம் அருமை என்றால் அதை விட அருமை இளசுவின் பின்னூட்டம்.மிக்க நன்றி சுனைத் அண்ணா... பின்னூட்ட வேந்தரண்ணா நமது இளசு அண்ணா..!!

சிவா.ஜி
27-07-2008, 01:03 PM
தளர்வு உடலில் இருக்கலாம் உள்ளத்தில் இருக்கவே கூடாத ஒன்று அது. எண்ணங்களுக்கென்ன அவை பாட்டுக்கு தன் ஆட்டத்தைப் போடத்தான் செய்யும். ஆனால் அப்போதெல்லாம் அதன் ஆட்டத்துக்கு தாளம் போடாமல், புரிதலோடும், புன்னகையோடும் முன்னேறிச் செல்ல வேண்டும். வாழ்த்துகள் சுபி.

சுகந்தப்ரீதன்
27-07-2008, 02:22 PM
தளர்வு உடலில் இருக்கலாம் உள்ளத்தில் இருக்கவே கூடாத ஒன்று அது. எண்ணங்களுக்கென்ன அவை பாட்டுக்கு தன் ஆட்டத்தைப் போடத்தான் செய்யும். ஆனால் அப்போதெல்லாம் அதன் ஆட்டத்துக்கு தாளம் போடாமல், புரிதலோடும், புன்னகையோடும் முன்னேறிச் செல்ல வேண்டும். வாழ்த்துகள் சுபி. உண்மைதான் அண்ணா.. அனுபவசாலிகள் நீங்கள் சொன்னால் மறுக்க முடியுமா என்னால்... உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்கிறேன்.. மிக்க நன்றி சிவாண்ணா..!!

செல்வா
27-07-2008, 08:18 PM
"ofcourse அப்புறம் காலம்... காலம் எல்லாத்தையும் பார்த்துக்கும்......
நீங்க போய் படுத்துக்குங்க .... சந்தோசமா...
எதப்பத்தியும் நினைக்காதீங்க....
காலைல எல்லாம் சரியாயிடும்....
நான் அப்படித்தான் நெனச்சுப்பேன்..."

--நன்றி கெளதம், வேட்டையாடு விளையாடு.

சுகந்தப்ரீதன்
28-07-2008, 04:41 AM
"ofcourse அப்புறம் காலம்... காலம் எல்லாத்தையும் பார்த்துக்கும்......
நீங்க போய் படுத்துக்குங்க .... சந்தோசமா...
எதப்பத்தியும் நினைக்காதீங்க....
காலைல எல்லாம் சரியாயிடும்....
நான் அப்படித்தான் நெனச்சுப்பேன்..."

--நன்றி கெளதம், வேட்டையாடு விளையாடு.இதுக்கூட நல்லாதானிருக்கு... எடுத்துகாட்டி குத்தியமைக்கு நன்றி செல்வாண்ணே..!!:wuerg019: