PDA

View Full Version : Trojan.Dropper வைரஸ் நீக்க உதவுங்கள்.



ஸ்ரீதர்
27-07-2008, 07:19 AM
அன்பு நண்பர்களே ,

என்னுடைய கணிணி Trojan.Dropper என்ற வைரஸ்ஸால் பாதிப்படைந்துள்ளது. இதை சரி செய்ய உதவுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்.

அன்புரசிகன்
27-07-2008, 01:06 PM
உங்கள் கணினியில் antivirus இருக்கிறதா? எது? இற்றுவரை புதியதாக இருக்கிறதா??? விபரமாக கேட்டால் சுலபம். அனேகமான ட்ரோஜன்களை mcafee மற்றும் AVGfree ஆகியன நீக்கிவிடும்...

சூரியன்
27-07-2008, 01:13 PM
நீங்கள் என்ன வைரஸ் தடுப்பு மென்பொறுளை பயன் படுத்துகின்றீர்கள்?

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
27-07-2008, 03:38 PM
ஸ்ரீதர் உங்களுக்காக இதை சொல்கிறேன். அது மிக தீவிரமான வைரஸ். பொதுவாக அதை களைவது மிக சுலபம். என்னைப் போன்ற சிலருக்கு மட்டும்தான் அதைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. நான் சொல்லும் வழியை கவனமாக கையாளுங்கள். சுற்று பிசகினாலும் அதை நிவர்த்தி செய்வது மிக கஷ்டம். உங்கள் கண்ணியின் இணைத்தளத்திற்கு சென்று www.google.com என்று தட்டச்சு செய்யுங்கள். பிறகு how to remove Trojan Dropper Virus என்று தட்டச்சு செய்யுங்கள். வரும் விபரத்தை அப்படியே அச்சுப்பிசகாமல் பின்பற்றுங்கள். நீங்கள் கேட்டதற்காகத்தான் இதை சொல்லியிருக்கிறேன். தயவு கூர்ந்து இதை யாரிடமும் சொல்லி தர வேண்டாம். (காப்பி ரைட் உரிமை எனக்கு மட்டும் சொந்தம்)

மயூ
28-07-2008, 04:36 AM
இப்போது வரும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்களில் ஒன்றைப் பாவிக்கலாமே?
கஷ்பர்ஸ்கை என் தெரிவு.. இலங்கையில் 17 டாலருக்கு விற்கின்றார்கள். நல்ல மென்பொருள்.

பாலகன்
28-07-2008, 04:47 AM
இப்போது வரும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்களில் ஒன்றைப் பாவிக்கலாமே?
கஷ்பர்ஸ்கை என் தெரிவு.. இலங்கையில் 17 டாலருக்கு விற்கின்றார்கள். நல்ல மென்பொருள்.

இது தான் நண்பரே துபாயிலும் சிறந்தது,,,,

நான் பயன்படுத்துகிறேன்...

அன்புடன்

தங்கவேல்
28-07-2008, 05:41 AM
ஸ்ரீதர், உடனடியாக பார்மெட் செய்து சாஃப்ட்வேர் இன்ஸ்டால் செய்து விடுங்களேன். மொத்த பிரச்சனையும் தீரும். இல்லையெனில் ஆண்டிவைரஸை விலைக்கு வாங்கித்தான் பயன்படுத்தனும்.

selvamurali
28-07-2008, 10:13 AM
நண்பரே நீங்கள் இணையம் வைத்திருந்தால் மைக்ரோசாப்ட் வழங்கும் ஆன்லைன் லைவ்கேர் சேவையை பயன்படுத்தி பாருங்கள். முதலில் Hijack this என்ற சாப்ட்வேரை பயன்படுத்தி ரெஜிஸ்ட்டரியில் தேவையில்லாதததை நீக்குங்கள். முக்கால்வாசி ப்ரச்னை முடிந்தது. ஏனெனில் இந்த வகையான வைரஸ்கள் ரெஜிட்டரியில் உட்கார்ந்துக்கொண்டுதான் நமக்கு ஆட்டம் காட்டுகின்றன.

selvamurali
28-07-2008, 10:14 AM
அதோடு இந்த வைரஸ் மிக பழமையான வைரஸ் என்பதால் தற்போதைய ஆண்டிவைரஸ் னை பயன்படுத்தவும்

http://www.symantec.com/security_response/writeup.jsp?docid=2002-082718-3007-99&tabid=2

அக்னி
28-07-2008, 10:19 AM
ஸ்ரீதர் உங்களுக்காக இதை சொல்கிறேன். அது மிக தீவிரமான வைரஸ். பொதுவாக அதை களைவது மிக சுலபம். என்னைப் போன்ற சிலருக்கு மட்டும்தான் அதைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. நான் சொல்லும் வழியை கவனமாக கையாளுங்கள். சுற்று பிசகினாலும் அதை நிவர்த்தி செய்வது மிக கஷ்டம். உங்கள் கண்ணியின் இணைத்தளத்திற்கு சென்று www.google.com (http://www.google.com) என்று தட்டச்சு செய்யுங்கள். பிறகு how to remove Trojan Dropper Virus என்று தட்டச்சு செய்யுங்கள். வரும் விபரத்தை அப்படியே அச்சுப்பிசகாமல் பின்பற்றுங்கள். நீங்கள் கேட்டதற்காகத்தான் இதை சொல்லியிருக்கிறேன். தயவு கூர்ந்து இதை யாரிடமும் சொல்லி தர வேண்டாம். (காப்பி ரைட் உரிமை எனக்கு மட்டும் சொந்தம்)
நண்பரே...
உண்மையாகவே தீர்வு தேடி வரும் ஒருவருக்கு, இப்படிப் பதில் வழங்குவதைத் தவிர்த்துக் கொள்வோமே...

நன்றி!

பொறுப்பாளர்
~அக்னி

ஆதி
28-07-2008, 10:40 AM
ஸ்ரீதர், ied.exe அல்லது ied_s7m.cab என்னும் file-கள் உங்கள் C:\ driver-வில் உள்ளதா என்று தேடிப்பார்க்கவும்.. இருந்தல் அவற்றை delete செய்யவும்..

அந்த file இல்லை என்றால் இதை தேடிப்பார்க்கவும்

LS060E5.eXE இருந்தால் அதனை delete செய்யவும்..

இந்த இரண்டு file-களுமே உங்கள் கணினியில் இல்லை என்றால்..

உங்கள் கணினியை தாக்கி இருக்கும் வைரஸ் Trojan.Dropper இல்லை
Trojan.Dropper-Delf :)

ஸ்ரீதர்
30-07-2008, 06:32 AM
நன்றி. முயன்றுபார்த்துவிட்டு பதில் அளிக்கிறேன்.

அனைவரின் பதிலுக்கும் நன்றி. (சுனைத் ஹஸனீ க்கும் சேர்த்து)

புதியவன்
02-08-2008, 05:21 PM
இலவசமாக நீக்கிப்பாருங்கள்.
நான் மலேசியாவில் இதைத்தான் பயன் படுத்துகிறேன்.

நாள்தோறும் அப்டேற் (மன்னிக்கவும் தமிழில் வார்த்தை வரவில்லை) தருகிறார்கள். இதனை உள்ளீடு செய்து முதல் அப்டேற் செய்யவும். பின் ஸ்கான் செய்யவும். எனக்குத்தெரிந்தவரை இது ஒரு இலவச களஞ்சியம். Avira Anti vir (http://www.download.com/Avira-AntiVir-Personal-Free-Antivirus/3000-2239_4-10322935.html?part=dl-10322935&subj=dl&tag=button&cdlPid=10867326)நன்றி
thamizthai.bogspot.com
கண்ணிமைக்கும் நேரமே வெற்றியை நிர்ணயிக்கும்
:icon_rollout: