PDA

View Full Version : விஞ்ஞானி தொடர் கதை (இறுதி பாகம்):



மதுரை மைந்தன்
25-07-2008, 12:35 AM
முகவுரை:

இது ஒரு விஞ்ஞான சம்பந்தமான கற்பனைக் கதை. காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்னைக்கு எவ்வாறு ஒரு விஞ்ஞானி தனது கண்டு பிடிப்பின் மூலம் தீர்வு காண்கிறார், அதில் அவருக்கு ஏற்படும் இடையூறுகள், இன்னல்கள் எத்தனை எத்தனை? என்பதை இக் கதையின் மூலம் விளக்குகிறேன்.. இக்கதைக்காக கற்பனையாக ஒரு இயந்திரத்தை உருவாக்கனேன் சில வருடங்களுக்கு முன். இன்று அந்த இயந்திரம் அமெரிக்காவில் வேறு ஒருவரால் கண்டு பிடிக்கப் பட்டு விற்பனைக்கும் தயார் என்பதை பார்த்து பூரிப்படைகிறேன். தலை சிறந்த விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களின் அறிவுரைப் படி அறிவியலில் நான் கண்ட கனவு தான் இந்த இயந்திரம். கதை தொடர தொடர இந்த இயந்திரத்தைப் பற்றி புகைப்படங்களுடன் விளக்குகிறேன். இந்த கதையில் வரும் சமபவங்கள் பெயர்கள் அனைத்தும் கற்பனையே. இனி கதைக்குச் செல்வோம்.

காவிரி ஆற்றுப் படுகையில் அமைந்திருந்த ஒரு கிராமத்தின் விடியற் காலைப் பொழுது. கிராமத்து மங்கையான அஞ்சலை அவசரமாக எழுந்தாள். வழக்கம் போல் வாசல் தெளித்து கோலம் போடுவதற்கு அன்று சற்று தாமதமாகி விட்டது. ஒரு பானையில் தண்ணீர், விளக்குமாறு மற்றும் கோலப் பொடியுடன் வாசலுக்கு வந்த அஞசலையின் கவனத்தை கிராமத்து மக்கள் சிறு சிறு கும்பலாக நின்று கொண்டு பேசிக் கொண்டிருப்பதை ஈர்த்தது. மேலும் சிலர் கிராமத்திலிருந்து புகைவண்டி நிலையம் செல்லும் பாதையில் செல்லத் துவங்கியதையும் அவள் பார்த்தாள். ஆவல் மேலிட அருகிலிருந்த ஒரு சிறுவனிடம் என்ன விஷயம் என்று கேட்டாள். பையன் சொன்னான்

" டேசனுக்குப் பக்கத்து ஆல மரத்தடியில பட்டணத்திலிருந்து ஒரு சாமியார் வந்திருக்காரு. அவரைப் பார்க்கத் தான் எல்லாரும் போய்க்கிட்டு இருக்காங்க. நானும் அங்கே தான் போறேன்".

கோலம் போடுவதை கை விட்டு விட்டு அஞ்சலையும் அவனுடன் சென்றாள். ஆலமரத்தடியை நெருங்க அதை பலர் சூழ்ந்திருப்பதை அவள் பார்த்தாள். எட்டிப் பார்த்தில் அவர்களுக்கு நடுவில் தாடி மீசையுடன் பாண்ட் ஷர்ட் அணிந்த ஒரு மனிதர் அமர்ந்திருப்பதை அவள் பார்த்தாள்.

கூட்டத்திலிருந்த ஒரு பெண்மணி " சாமி எதுவும் பேச மாட்டேங்குது. எல்லாரும் விழுந்து கும்பிட்டா கூட சாமி சிரிச்சுக் கிட்டே இருக்கே ஒழிய ஒரு விபூதி குங்குமம் கொடுத்துச்சுனா நம்ம கஷ்டம் போய் ஒரு விடிவு வரும். ஊம் என்னத்தை சொல்ல?" என்றாள்.

ஊர் பெரியவர்களில் சிலர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு அந்த மனிதரின் அருகில் சென்றனர். அதில் ஒருவர் பய பக்தியுடன் தன் வாயை கையால் பொத்திக் கொண்டு " சாமி எங்கிருந்து வருது? சாமிக்கு தமிழ் தெரியுமா?" என்று கேட்டார். சாமியார் என்று அழைக்கப் பட்ட அந்த மனிதர் பெரிதாக சிரித்து " நான் சாமியார் இல்லை. என் தாடி மீசையை வைச்சு அப்படி நினைக்காதீங்க. நான் ஒரு விஞ்ஞானி. மும்பையிலிருந்து வருகிறேன்" என்றார்.

அவர் அப்படி கூறியவுடன் அதுவரை சத்தம் போடாமல் அவர் பேச்சைக் கேட்ட மக்களிடயே கசமுச கசமச என்று பேச்சு சத்தம் துவங்கியது. எல்லோரிடயேயும் பொதுவில் எழுந்த சந்தேகம்
" விஞ்ஞானி எனறால் யார்?".

தொடரும்

இங்கு நான் தொடரும் என்று போட்டதின் காரணம் மன்றத்து நண்பர்களும் விஞ்ஞானி எனபவர் யார் என்று பதில் அளிக்க ஒரு வாய்ப்பு வேண்டி

meera
25-07-2008, 03:53 AM
அண்ணா, அழகான தொடக்கம். விஞ்ஞான சம்பந்தமான கதையா? ஆவல் மேலிட காத்திருக்கிறேன் அடுத்தடுத்த பாகங்களுக்காக.

நம்ம ஆளுங்களுக்கு தாடி மீசை வைச்ச எல்லாரும் சாமியார் தானா? திருந்தமாட்டாங்களேஏஏஏஏஏஎ

மயூ
25-07-2008, 04:58 AM
விஞ்ஞானி என்றால் யார்? நல்ல கேள்வி... கலக்கல் ஆரம்பம் தொடருங்க.. வாசிக்க காத்திருக்கின்றோம்

மதுரை மைந்தன்
27-07-2008, 02:09 AM
விஞ்ஞானி என்பவர் யார்? இந்த கேள்விக்கு மன்றத்து நண்பர்கள் இதுவரை பதிலளிக்காதது எனக்கு சற்று ஏமாற்றமே. இருந்தும் மனம் தளராமல் கதையைத் தொடருகிறேன்.

விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 2)

விஞ்ஞானி என்பவர் யார்? இந்த கேள்வி அங்கு குழுமியிருந்த அனைவரது மனத்திலும் எழுந்து ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டனர்.

ஓரு விடலைப் பையன் முன் வந்து "எனக்குத் தெரியும் யார் விஞ்ஞானி என்று" சொல்லவும் அனைவரும் அவனை சூழ்ந்து கொண்டனர்.

அவன் சொன்னான் " விஞ்ஞானி ஒரு பெரிய வெள்ளை கோட்டு போடடிருப்பார். குறுந்தாடி வெச்சிருப்பார். சோடா பாட்டில் கண்ணாடி போடடிருப்பார். அவரு பெரிய ரகசியத்ததை கண்டுபிடிச்சுருவாரு. இப்படித் தான் நம்ம ஊர் கொட்டாயில உலகம் சுற்றும் வாலிபன் எம்.ஜி.அர் படத்தில காண்பிச்சாங்க".

சென்னைக்குச் சென்று திரும்பியிருந்த இன்னொரு பையனும் இதை ஆமோதித்தான். அவன் மிஸ்டர் இந்தியா என்ற ஒரு இந்தி படத்தில் எப்படி ஒரு விஞ்ஞானி மனிதனை மாயமாய் மறைந்து போகச் செய்யும் வித்தையைக் கண்டுபிடித்தார் என விவரித்தான்.

இதைக் கேட்டு மும்பையிலிருந்து வந்த விஞ்ஞானி பெரிதாக சிரித்துச் சொன்னார் " விஞ்ஞானி என்பவர் ஒரு மந்திரவாதி இல்லை. அவரது கண்டுபிடிப்புக்களும் ரகசியங்கள் இல்லை. அவர்களின் கண்டுபிடிப்பக்கள் ஏற்கனவே கடவுளால் உருவாக்கப்பட்ட உண்மைகள். விஞ்ஞானி கனவு காண்கிறான். இயற்கையின் நியதிகளை ஆராய்ந்து ஏற்கனவே இயற்றப்பட்ட சூத்திரங்களைக் கொண்டு பரிசோதனைகளை நடத்தி தர்க்க ரீதியான முடிவுகளுக்கு வருகிறான்".

அங்கு குழுமியிருந்தோருக்கு அவர் சொன்னது ஒன்றும் விளங்கவில்லை.

அங்கிருந்த பெரியவர் ஒருவர் " அய்யா நீங்க சொன்னது ஒன்னும் விளங்கலை. இந்த பையன் சொன்ன மாதிரி விஞ்ஞானி என்பவர் ரகசியங்களை கண்டபிடிக்கிறாங்கனா நீங்க என்ன ரகசியத்தை கண்டபிடிச்சிருக்கீங்க?" எனறார்.

விஞ்ஞானி கூறினார் " எனது கண்டுபிடிப்பைப் பற்றி கூறுமுன் என்னைப் பற்றிய விவரங்களைக் கூறுகிறேன்.நானும் இந்தக கிராமத்தைச் சேர்ந்தவன். எனது பாட்டனார் இங்குள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர். எனது தந்தையார் உத்தியோக நிமித்தமாக மும்பை சென்றவர் அங்கேயே தங்க நேரிட்டது".

"என் பெயர் ராமன். சர் சி.வி. ராமனைப் பொல் நானும் ஒரு சிறந்த விஞ்ஞானியாக வரவேண்டும் என்று விரும்பி எனது பெற்றோர்கள் இந்தப் பெயரை எனக்கு வைத்தனர்".

"நான் மும்பையில் பிறந்து வளர்ந்தவன். விஞ்ஞானத்தில் நாட்டம் கொண்டு அதற்கான படிப்பை முடித்தவுடன் மும்பையில் உள்ள ஒரு பெரிய ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வந்தேன். இந்தக் கிராமத்தைப் பற்றி எனது பாட்டனாரும் தந்தையாரும் என்னிடம் கதை கதையாகக் கூறுவர். இங்குள்ள கரை புரண்டு ஓடிய காவிரி ஆற்றைப் பற்றியும் அதன் பாசனத்தில் எப்படி இந்த கிராமம் செழித்திருந்தது என்றும் கேட்டிருக்கிறேன்".

விஞ்ஞானி இவ்வாறு கூறிக் கொண்டிருக்கையில் கூட்டத்தில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. சலசலப்பின் காரணம் ஒருவர் கையிலிருந்த அன்றைய செய்தித் தாள். அதில் போடப்பட்டிருந்த ஒரு விளம்பரமே சலசலப்பிற்கு காரணம். விளம்பரத்தில் போடடிருந்த செய்தி:

எச்சரிக்கை

மும்பையிலுள்ள பிரபல மனநோய் மருத்துவ மனையிலிருந்து நோயாளி ஒருவர் தப்பியுள்ளார். அவர் தன்னை ஒரு விஞ்ஞானி என்று கூறிக் கொள்வார். அவரிடம் அரிய கண்டுபிடிப்பு ஒன்று இருப்பதாகவும் கூறுவார். இவர் அபாயகரமானவர். சமயங்களில் வன்முறையிலும் ஈடுபடுவார். இவரைப் பார்த்தால் உடன் அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் கொடுக்கவும்.

இவ்வாறு கூறப்பட்டிருந்த அந்த விளமபரத்தில் விஞ்ஞானி ராமனின் புகைப்படமும் இருந்தது.

தொடரும்........

மதி
27-07-2008, 02:59 AM
ஆஹா.. மதுரைவீரரே...விஞ்ஞானி என்றால் என்ற கேள்வியில் ஆரம்பித்து இப்போது கதை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது...

சீக்கிரமே தொடருங்கள் கதையை.. ஆவலோடு காத்திருக்கிறோம்.

சிவா.ஜி
27-07-2008, 04:47 AM
விஞ்ஞானி என்பவர் யார் என்பதற்கான விளக்கம் மிக அருமை. எல்லா அறிவியல் மேதைகளையும் உலகம் ஆரம்பத்தில் பைத்தியக்காரர்களாகத்தான் பார்க்கிறது. யாரென்று தெரிந்தபின் தலையில்தூக்கி வைத்துக்கொள்ளும். இது சரித்திரம். கதையை சொல்லும் விதம் அருமை. வாழ்த்துகள்.
(ஒரே ஒரு வேண்டுகோள்....எல்லா பாகங்களையும் ஒரே திரியில் கொடுத்தால் முந்தைய பாகங்களைப் படிக்க வசதியாய் இருக்கும். தொடர்கதை வடிவத்தில் இருக்கும்)

இளசு
27-07-2008, 07:41 AM
அறிவியல் கதைகள் பஞ்சத்தைப் போக்க வந்த மதுரை வீரருக்கு வரவேற்பு..

விஞ்ஞானி யார் - என்ற வினாவுக்கு இங்கே மன்ற நண்பர்கள் பதிலளிக்காதது ஏமாற்றம் என இரண்டாம் பாகத்தில் நீங்கள் பட்டிருக்கும் வருத்தம் நியாயமானதே!

கே டிவியில் எப்பவோ அரைமணி நேரம் அறிவியல் நிகழ்ச்சி வந்தவுடன், சாளரம் மாற்றி சன்னில் அரதப்பழசான சினிமா சிரிப்பு பார்க்கும் சராசரியாய்த்தான் இன்னும் நான்..

இப்படிப்பட்ட நுகர்வோரைக் கட்டியழுதோ, கட்டியிழுத்தோ போகவேண்டிய நிலை - நல்ல எழுத்தாளருக்கு..

நீங்கள் நல்ல படைப்பாளி..

பின்னூட்ட உற்சாகம் 'இப்படி/அப்படி'' என்றாலும்
உள்ளுற்சாகத்தோடு தொடருங்கள்..

காலக்காற்று சொல்லும் - நிலைப்பவை நல்லவை என!

இளசு
27-07-2008, 07:45 AM
சுவாரசியமான தொடரல்..
திடுக் வரும்போது ''தொடரும்''!

பாராட்டுகள் மதுரை வீரரே!

விஞ்ஞானி பற்றிய உங்கள் பார்வை - உண்மை!

''முருகன் .. நீங்க மா......மேதை'' என அசோகன் அறிமுகப்படுத்திய உலகம் சுற்றும் விஞ்ஞானி பிம்பமே
ஆழமாய் பதிந்துவிட்ட எனக்கு நல்ல பாடங்கள் இக்கதையில் கிடைக்கும்..

நன்றி!

செல்வா
27-07-2008, 09:06 AM
இப்போதான் இதைப் பார்த்தேன் மதுரை வீரரே....
அருமையான ஆரம்பம்...
தொடருங்கள் தொடர்ந்து வருகிறோம்.
மன்றத்திற்கு வருபவர்கள் பலரும் பலவித வேலைகளில் பலவித மனநிலைகளிலிருந்து வருவர். அதனால் கேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் பதில் உடனடியாகக் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது ஐயா. அதனால் கவலைப்படாமல் தொடர்ந்து எழுதுங்கள்.
முயற்ச்சி மெய்வருத்தக் கூலிதரும்.

செல்வா
27-07-2008, 09:10 AM
ஆகா திடுக்கிடும் திருப்பத்தோடு கதைத் தொடருகிறது.... சீக்கிரம் தொடருங்க.... தொடர்ந்து எழுதுங்க.
உரையாடல்களில் இன்னும் சற்று கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.
வாழ்த்துக்கள்.

சிவா அண்ணா கூறியது போன்று ஒரே திரியில் தொடர்ந்து கொடுத்தால் வாசிக்கவும் பின்பு தொகுக்கவும் வசதியாக இருக்கும். நீங்கள் அனுமதித்தால் பொறுப்பாளர்கள் மாற்றித் தருவார்கள்.

மதுரை மைந்தன்
27-07-2008, 03:45 PM
அண்ணா, அழகான தொடக்கம். விஞ்ஞான சம்பந்தமான கதையா? ஆவல் மேலிட காத்திருக்கிறேன் அடுத்தடுத்த பாகங்களுக்காக.

நம்ம ஆளுங்களுக்கு தாடி மீசை வைச்ச எல்லாரும் சாமியார் தானா? திருந்தமாட்டாங்களேஏஏஏஏஏஎ

அன்பு மீரா

உங்களது ஆவல் எனது கற்பனைக்குத் தீனி.

எத்தைத் தினறால் பித்தம் தெளியும் எனறிருக்கும் அப்பாவி மக்களை சாமியார்கள் விபூதி குங்குமம் கொடுத்து நம்பிக்கை ஊட்டுவதால் மக்கள் சாமியார்களிடம் செல்கிறார்கள். அவர்கள் போலிச் சாமியாராக இருந்து மக்களை ஏமாற்றாத வகையில் சரி.

உங்களது பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

மதுரை மைந்தன்
27-07-2008, 03:48 PM
விஞ்ஞானி என்றால் யார்? நல்ல கேள்வி... கலக்கல் ஆரம்பம் தொடருங்க.. வாசிக்க காத்திருக்கின்றோம்


அன்பு மயூ

கேள்வியைப் பாராட்டியதற்கு நன்றி. இக்கேள்விக்கான எனது பதிலை இரண்டாம் பாகத்தில் நீங்கள் காணலாம்.

மதுரை மைந்தன்
27-07-2008, 03:55 PM
அறிவியல் கதைகள் பஞ்சத்தைப் போக்க வந்த மதுரை வீரருக்கு வரவேற்பு..

விஞ்ஞானி யார் - என்ற வினாவுக்கு இங்கே மன்ற நண்பர்கள் பதிலளிக்காதது ஏமாற்றம் என இரண்டாம் பாகத்தில் நீங்கள் பட்டிருக்கும் வருத்தம் நியாயமானதே!

கே டிவியில் எப்பவோ அரைமணி நேரம் அறிவியல் நிகழ்ச்சி வந்தவுடன், சாளரம் மாற்றி சன்னில் அரதப்பழசான சினிமா சிரிப்பு பார்க்கும் சராசரியாய்த்தான் இன்னும் நான்..

இப்படிப்பட்ட நுகர்வோரைக் கட்டியழுதோ, கட்டியிழுத்தோ போகவேண்டிய நிலை - நல்ல எழுத்தாளருக்கு..

நீங்கள் நல்ல படைப்பாளி..

பின்னூட்ட உற்சாகம் 'இப்படி/அப்படி'' என்றாலும்
உள்ளுற்சாகத்தோடு தொடருங்கள்..

காலக்காற்று சொல்லும் - நிலைப்பவை நல்லவை என!

அருமை நண்பர் இளசு அவர்களே

உங்களது ஆதரவு எனக்கு தொடர்ந்து கிடைத்து வருவதை உங்களது பல பின்னோட்டங்கள் மூலம் அறிவேன். அதற்கு எனது மனமார்ந்த நன்றி.

மதுரை மைந்தன்
27-07-2008, 03:57 PM
இப்போதான் இதைப் பார்த்தேன் மதுரை வீரரே....
அருமையான ஆரம்பம்...
தொடருங்கள் தொடர்ந்து வருகிறோம்.
மன்றத்திற்கு வருபவர்கள் பலரும் பலவித வேலைகளில் பலவித மனநிலைகளிலிருந்து வருவர். அதனால் கேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் பதில் உடனடியாகக் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது ஐயா. அதனால் கவலைப்படாமல் தொடர்ந்து எழுதுங்கள்.
முயற்ச்சி மெய்வருத்தக் கூலிதரும்.

அருமை நண்பர் செல்வா

முயற்ச்சி மெய்வருத்தக் கூலிதரும் என்ற தங்கள் கூற்று என்னை ஊக்குவிக்கிறது. எனது முயற்ச்சிகள் கண்டிப்பாகத் தொடரும்.

மதுரை மைந்தன்
27-07-2008, 04:04 PM
ஆஹா.. மதுரைவீரரே...விஞ்ஞானி என்றால் என்ற கேள்வியில் ஆரம்பித்து இப்போது கதை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது...

சீக்கிரமே தொடருங்கள் கதையை.. ஆவலோடு காத்திருக்கிறோம்.


நண்பர் மதி அவர்களே

உங்களது ஆவலைப் பார்த்து எனக்குள் நிறைய உற்சாகம் பிறக்கிறது. தொடர்ந்து படியுங்கள். நன்றி.

மதுரை மைந்தன்
27-07-2008, 04:09 PM
விஞ்ஞானி என்பவர் யார் என்பதற்கான விளக்கம் மிக அருமை. எல்லா அறிவியல் மேதைகளையும் உலகம் ஆரம்பத்தில் பைத்தியக்காரர்களாகத்தான் பார்க்கிறது. யாரென்று தெரிந்தபின் தலையில்தூக்கி வைத்துக்கொள்ளும். இது சரித்திரம். கதையை சொல்லும் விதம் அருமை. வாழ்த்துகள்.
(ஒரே ஒரு வேண்டுகோள்....எல்லா பாகங்களையும் ஒரே திரியில் கொடுத்தால் முந்தைய பாகங்களைப் படிக்க வசதியாய் இருக்கும். தொடர்கதை வடிவத்தில் இருக்கும்)

அருமை நண்பர் சிவா.ஜி அவர்களே

உங்களது பாராட்டுக்கள் எனக்கு " வசிட்டர் வாயால் பிரம்ம ரிஷி' பட்டம் கிடைத்தது போல் உள்ளது. நன்றி.

எல்லா பாகங்களையும் ஒரே திரியில் கொடுத்தால் முந்தைய பாகங்களைப் படிக்க வசதியாய் இருக்கும். தொடர்கதை வடிவத்தில் இருக்கும் எனற உங்களது ஆலோசனை நன்றாக இருக்கிறது. இதில் தங்களின் உதவி கிடைக்குமா?

meera
29-07-2008, 10:59 AM
நல்லது நல்லது விஞ்ஞானின்னா இதான் அர்த்தமா?

சரியான சஸ்பென்ஸ்.

தொடருங்கள் அண்ணா.

சிவா.ஜி
29-07-2008, 11:36 AM
எல்லா பாகங்களையும் ஒரே திரியில் கொடுத்தால் முந்தைய பாகங்களைப் படிக்க வசதியாய் இருக்கும். தொடர்கதை வடிவத்தில் இருக்கும் எனற உங்களது ஆலோசனை நன்றாக இருக்கிறது. இதில் தங்களின் உதவி கிடைக்குமா?

பொறுப்பாளர்கள் முதல்பாகத்தையும் இந்த இரண்டாவது பாகத்தையும் இணைக்க தயவு செய்து உதவ முடியுமா?

மயூ
30-07-2008, 03:25 AM
அருமை தொடர்ந்து எழுதுங்க!!!
அது என்ன பம்பாய்ல இருந்து மட்டும்தான் விஞ்ஞானி வருவாரா? சென்னையில இருந்து வர மாட்டாரா?

மதுரை மைந்தன்
30-07-2008, 11:17 AM
நல்லது நல்லது விஞ்ஞானின்னா இதான் அர்த்தமா?

சரியான சஸ்பென்ஸ்.

தொடருங்கள் அண்ணா.

உங்களது பாராட்டுக்களுக்கு நன்றி மீரா

மதுரை மைந்தன்
30-07-2008, 11:28 AM
அருமை தொடர்ந்து எழுதுங்க!!!
அது என்ன பம்பாய்ல இருந்து மட்டும்தான் விஞ்ஞானி வருவாரா? சென்னையில இருந்து வர மாட்டாரா?

சென்னையிலிருந்து விஞ்ஞானி நிச்சயம் வருவார்.

நான் மும்பையில் விஞ்ஞானியாக பல ஆண்டுகள் பணியாற்றியதால் விஞ்ஞானி ராமனை மும்பையிலிருந்து வருவதாக எழுதியுள்ளேன். அவர் தன் கண்டுபிடிப்பிற்காக எத்தனை இன்னல்கள் இடையூறுகளைச் சந்திக்கிறார் என்று சித்தரிக்கும் போது எனது சொந்த அனுபவங்கள் கை கொடுக்கும்.

உங்களது பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.

மதுரை மைந்தன்
30-07-2008, 01:40 PM
பாகம்-3

கூட்டத்தில் இருந்த அனைவரும் ஒருவரையொருவர் முண்டி அடித்துக் கொண்டு செய்தித் தாளை பார்க்க முயல கிராம பஞசாயத்து தலைவர் அதை தன்னிடம் எடுத்துக் கொண்டு அனைவரையும் அமைதியாக இருக்கச் சொன்னார். பிறகு அந்த செய்தித் தாளை விஞ்ஞானி ராமனிடம் காட்டி " இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?" என்றார்.

ராமன் முகம் வெளிறிப் போயிருந்தது. சமாளித்துக் கொண்டு அவர் " நான் ஒரு மன நோயாளி என்பது முற்றிலும் பொய்யானது. எனது கனவு நிறைவேறாமல் தடுக்க எனது எதிரிகள் செய்யும் சதி" என்றார்.

கிராம பஞசாயத்து தலைவர் மூப்பனார் ராமன் கூறியதை நம்பின மாதிரி தெரியாததைப் பார்த்த ராமன் மேலும் தொடர்ந்தார்.

" நான் சொல்வதை தயவு செய்து நம்புங்கள். நான் எனது முழு வாழ்க்கையை விவரிக்கிறேன். அதன் பிறகாவது நீங்கள் என்னை நம்புவீர்களா? நான் ஏற்கனவே சொன்ன மாதிரி எனது பாட்டனார் மகாலிங்கம் இந்த கிராமத்தில் பள்ளித் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர்".

மகாலிங்கம் என்ற பெயரைக் கேட்டவுடன் வயது முதிர்ந்த பெரியவர்கள் சிலர் முன் வந்து ராமனைப் பார்த்து " மகாலிங்கத்தோட பேரனா நீங்க?" என்று ஆச்சரியத்துடன் பார்த்தனர். பிறகு அவர்கள் மூப்பனாரிடம் " நீங்க வயசில சின்னவங்க. உங்களுக்கு அந்தப் பெரியவரைத் தெரிந்திருக்காது. அவர் இந்த கிராமத்து மக்களுக்கு நிறைய சேவை செஞசிருக்கார். பலரது அறிவுக் கண்களை திறந்து வைத்தவர் அவர். அவரது பேரன் தப்பு பண்ண மாட்டார்னு நாங்க நம்பறோம்." எனறனர்.

இதைக் கேட்ட மூப்பனார் ராமனைப் பார்த்து " சரி. உங்க கதையை விலா வாரியா அப்புறம் கேட்கிறேன். இப்ப சொல்லுங்க நீங்க எதுக்காக மும்பையை விட்டு இந்த கிராமத்துக்கு வந்தீங்க?. அப்புறம் உங்க கனவை நிறைவேற்ற முடியாம சதி நடக்கிறதா சொன்னீங்னளே அந்த கனவு என்ன அதையும் சொல்லுங்க" என்றார்.

" என்னோட கனவு தடையில்லாமல் காற்றிலிருந்து தண்ணீரை உற்பத்தி செய்தல்".

ராமன் இவ்வாறு கூறியவுடன் கூட்டத்தினரிடையே பலத்த சிரிப்பொலி எழுந்தது.

" காத்திலிருந்து தண்ணீர் ஹா ஹா ஹா.. செய்தி தாள்ல போட்டிருக்கிறது சரியாகத்தான் இருக்கு".

கூட்டத்தினரின் அமளியை கையை உயர்த்தி அடக்கிய மூப்பனார் ராமனிடம் " எங்களுக்கு உங்க விஞ்ஞானத்தைப் பற்றியோ விஞ்ஞானிகளைப் பற்றியோ எதுவும் தெரியாது. இங்கே ஓடற காவிரி ஆத்தில தண்ணீர் வற்றிப் போயிருக்கு. இதால எங்க ஊர் பாசனம் நின்னு போயிருக்கு. காவிரில தண்ணீர் கர்நாடகா காரங்க திறந்து விடற மாதிரி தெரியலை. உங்க விஞ்ஞானம் மூலமா தண்ணியை க் கொண்டு வந்தீங்கனா நல்லது தான். ஆனா நீங்க உங்க உண்மையான நோக்கங்களை எங்களுக்கு நிரூபிக்கணும்". என்றார்.

மூப்பனார் சொன்னதை ஏற்றுக் கொள்ளாத ஒரு பெரியவர் " அது எப்படி நம்பறது? காவிரி தண்ணிர் பிரச்னையைத் தெரிஞசுக் கிட்டு நம்மளை ஏமாற்றி பணம் பறித்துச் செல்ல மாட்டார்னு எப்படி நம்பறது?".

அவர் சொன்னதை கூட்டத்தில் பெரும்பாலோர் ஆமோதிக்கவே ராமன் கையெடுத்து கும்பிட்டு கண்களில் நீர் வழியக் கூறினார் " "தயவு செஞ்சு என்னை நம்புங்க எனக்கு உங்களை ஏமாற்றும் எண்ணம் துளியும் கிடையாது. சாகும் தருவாயில் இருந்த எனது பாட்டனார் காவிரி நீர் பிரச்னையைக் குறித்து மிகவும் வருத்தப்பட்டார். என்னிடம் ஒரு வாக்குறுதி வாங்கிக கொண்டார். அவர் என்னிடம் நீ ஒரு உண்மையான விஞ்ஞானி என்றால் வாழ்க்கையில் ஏதேனும் சாதிக்க நினைத்தால் இந்த பிரச்னையை தீர்க்கும் அளவிற்கு வழியைக கண்டுபிடி". வள்ளுவரின் இந்த திருக்குறளையும் நினைவு படுத்தினார்.

தோன்றில் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலில் தோன்றாமை நன்று

அவர் காலமான பிறகு நான் கடுமையாக உழைத்தேன். பல இரவுகள் தூக்கமின்றி சிந்தித்தேன். வீட்டில் சரியாக கவனம் செலுத்தாததால் எனது மனைவி தனது பிறந்தகம் சென்று விட்டாள். ஆராய்ச்சி சிந்தனைகளில் மூழ்கியிருந்த எனக்கு என்னைச் சுற்றி நடந்தவைகளில் கவனம் இல்லாததால் பலர் என்னை ஏமாற்றினர். தயவு செய்து இந்த கண்டுபிடிப்புக்காக எனக்கு ஏற்பட்ட வலிகளையும் கஷ்டங்களையும் உணருங்கள்".

இவ்வாறு கூறிவிட்டு ராமன் தனது சூட்கேஸிலிருந்து ஒரு சிறிய மெஷினை வெளியே எடுத்து அனைவருக்கும் காட்டினார். அதனைப் பிரித்து உதன் உட பாகங்களையும் காட்டினார்.

"இது எனது கண்டுபிடிப்பின் முதல் படி.இந்த மெஷினுக்கு ஒரு மணி நேரத்தில் ஒரு லிட்டர் தண்ணிர் உருவாக்கும் சக்தி உள்ளது. காற்றிலிருந்து ஈரப் பசையை பிரித்து தண்ணீராக மாற்றி அதை சுத்தம் செய்து இதில் பொருத்தியுள்ள குழாயின் மூலமாக வெளியேற்றுகிறது".

அவர் மெஷினிலிருந்த ஒரு பொத்தானை அமுக்கியவுடன் விர் என்ற சத்தத்துடன் அது வேலை செய்ய ஆரம்பித்தது. ராமன் அதிலிருந்த குழாயின் கீழ் ஒரு டம்ளரை வைக்க அதில் தண்ணீர் விழ ஆரம்பித்தது.

தொடரும்...

மதுரை மைந்தன்
31-07-2008, 12:52 PM
விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)

இத் தொடர் கதையின் முகவுரையில் கூறியபடி நான் குறிப்பிடடுள்ள காற்றிலிருந்து தண்ணீரை உருவாக்கும் இயந்திரம் அமெரிக்காவில் பேடன்ட் செய்யப் பட்டு வர்த்தக ரீதியிலும் கிடைக்கிறது. ஈராக் போரில அமெரிக்க துருப்புக்களின் குடி நீருக்காக உருவாக்கப் பட்ட இந்த இயந்திரம் பிற் காலத்தில் ஒரு வரப்பிசாதமாக திகழப் போகிறது. இதன் புகைப் படத்தையும் செய்முறை விளக்கப் படத்தையும் இங்கு நான் தருகிறேன். இது ஒரு சிறிய இயந்திரம். இதே பாணியில் ஒரு நாளைக்கு 50000 லிட்டர் தண்ணீரை உருவாக்கும் இயந்திரங்களும் உள்ளன.

http://img243.imageshack.us/img243/6977/countertopillsj7yz6.jpg
http://img529.imageshack.us/img529/6310/howitworkszu3lm0.gif

மதி
31-07-2008, 01:26 PM
அழகாக கதையை நகர்த்தி செல்கிறீர்கள்.. உண்மையிலேயே இந்த விஷயம் எனக்குப் புதிது. இதைப் பத்தி மேலும் இணையத்தில் தேடிக் கொண்டிருக்கிறேன்...

நல்ல பல விஞ்ஞான விஷயங்களை பகிர்ந்து கொள்வதற்கு நன்றி பல.

மயூ
31-07-2008, 02:27 PM
தொடர்ந்து எழுதுங்க.. அறிவியல் உண்மைகளுடன் கதைகள்.. ஆங்கில நாவல்களில் அதுதான் பிடித்த விடையமாக இருக்கும்.. தொடர்ந்து எழுதுங்க.. முன் சீட்டில இருந்து பார்ப்பன்.. சீ வாசிப்பன்.

அறிஞர்
31-07-2008, 03:11 PM
சாமியார் மாதிரி வந்த விஞ்ஞானி பற்றி புதுக்கதையா...
கலக்குங்க.. மதுரைவீரன்.

அறிஞர்
31-07-2008, 04:18 PM
கதை அருமை...

உண்மையிலே இதற்கான சாத்திய கூறுகளும் உண்மை.

ஒரே ஒரு பிரச்சனை.. தண்ணீரை பிரித்தெடுக்க தேவைப்படும் சக்தி (எலக்ட்ரிக் பவர்).

Keelai Naadaan
31-07-2008, 04:32 PM
"விஞ்ஞானி என்பவர் ஒரு மந்திரவாதி இல்லை. அவரது கண்டுபிடிப்புக்களும் ரகசியங்கள் இல்லை. அவர்களின் கண்டுபிடிப்பக்கள் ஏற்கனவே கடவுளால் உருவாக்கப்பட்ட உண்மைகள். விஞ்ஞானி கனவு காண்கிறான். இயற்கையின் நியதிகளை ஆராய்ந்து ஏற்கனவே இயற்றப்பட்ட சூத்திரங்களைக் கொண்டு பரிசோதனைகளை நடத்தி தர்க்க ரீதியான முடிவுகளுக்கு வருகிறான்".
[/B][/COLOR]
சிறந்த விளக்கம்.
கதை விறுவிறுப்பாக மேலும் படிக்க ஆவலை தூண்டும்படி உள்ளது. அறிவியல் விஷயங்களை கதை வடிவில் தருவதற்கு மிக்க நன்றி.

தீபா
01-08-2008, 08:20 AM
அடடே!! விஞ்ஞானியா நீங்க மதுரை வீரன் அண்ணே!!! (மதுரை வீரன் தானே!! அவன உசுப்பிவிட்டேன்................. ஹி ஹி சும்மா பாட்டுங்க.....)

பொறுங்க, அடுத்த பதிவைத் தேடிப்பார்க்கிறேன்... அப்பத்தானே கதை புரியும்,... விஞ்ஞான அறிவு நமக்கு ரொம்பவே கம்மி,,,,,,,,

தீபா
01-08-2008, 08:31 AM
ஆஹா!! அட்சரசுத்தமான விஞ்ஞானியின் கையெழுத்து இது... இல்லையா.. மன்றம் வியக்கிறது திரு..மதுரை வீரன்

காற்றிலிருந்து நீர்
கானல் நீரென்று நினைத்திருந்தேன். இப்படி உண்மையிலேயே இருக்கிறதா விஞ்ஞானி?

அன்புடன்
தென்றல்

meera
01-08-2008, 08:36 AM
திருத்தமான படங்களுடன் விளக்க உரை அளித்து விளக்கிய மதுரைவீரன் அண்ணாவுக்கு நன்றி.

என்ன தான் படிச்சாலும் படம் போட்டு விளக்கினாதான் சீக்கிரமா மண்டைல ஏறுது..

மதுரை மைந்தன்
01-08-2008, 11:55 AM
அழகாக கதையை நகர்த்தி செல்கிறீர்கள்.. உண்மையிலேயே இந்த விஷயம் எனக்குப் புதிது. இதைப் பத்தி மேலும் இணையத்தில் தேடிக் கொண்டிருக்கிறேன்...

நல்ல பல விஞ்ஞான விஷயங்களை பகிர்ந்து கொள்வதற்கு நன்றி பல.

உங்கள் ஆர்வத்திற்கு எனது வாழ்த்துக்கள். பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி நண்பர் மதி அவர்களே

மதுரை மைந்தன்
01-08-2008, 12:02 PM
தொடர்ந்து எழுதுங்க.. அறிவியல் உண்மைகளுடன் கதைகள்.. ஆங்கில நாவல்களில் அதுதான் பிடித்த விடையமாக இருக்கும்.. தொடர்ந்து எழுதுங்க.. முன் சீட்டில இருந்து பார்ப்பன்.. சீ வாசிப்பன்.

அறிவியல் சம்பந்தப் பட்ட நல்ல பல நாவல்களை சுஜாதா அவர்கள் நமக்கு வழங்கியுள்ளார். நீங்கள் கூறுவது முற்றிலும் சரியே. ஆங்கிலத்தில் பல விஞ்ஞான அடிப்படையிலான நாவல்களும் திரைப் படங்களும் உள்ளன.

உங்களது ஆர்வம் பாராட்டுக்குரியது

மதுரை மைந்தன்
04-08-2008, 02:25 AM
கதை அருமை...

உண்மையிலே இதற்கான சாத்திய கூறுகளும் உண்மை.

ஒரே ஒரு பிரச்சனை.. தண்ணீரை பிரித்தெடுக்க தேவைப்படும் சக்தி (எலக்ட்ரிக் பவர்).

உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி அறிஞர் அவர்களே

தண்ணீரைப் பிரித்தெடுக்க தேவைப்படும் மின் சக்தி பற்றி உங்களது கேள்வி நியாயமானதே.

விஞ்ஞானிகள் அதற்கும் விடை கண்டு பிடித்துள்ளனர். ஹைட்ரஜன் பியூயல் செல்கள் எனப்படுபவை மின்சாரம் தயாரிக்க பயன் பட ஆராய்ச்சிகள் வெகு மும்முரமாக அமெரிக்காவின் பல்வெறு பல்கலைக் கழகங்களிலும் நடை பெற்று வருகிறது. இந்தியாவிலும் விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் பங்கேற்று வருகினறனர்.

ஹைட்ரஜன் பியூயல் செல்களில் மின் உற்பத்தியுடன் தண்ணீரும் உற்பத்தி ஆகிறது. ஹைட்ரஜன் காற்றிலுள்ள ஆக்ஸிஜனுடன் இணைவதால் இது நடை பெறுகிறது.

பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு மாற்றாக ஹைட்ரஜன் பியூயல் செல்களில் இயங்கும் வாகங்களைத் தயாரிக்கும் முயற்சி நடை பெற்று வருகிறது.

நான் பணியாற்றும் NIST ல் அமெரிக்க அரசாங்கம் ஆதரவில் பல கோடி டாலர்களில் இந்த ஆராய்ச்சி நடை பெற்று வருகிறது.

மதுரை மைந்தன்
06-08-2008, 02:20 AM
பாகம் 4

விஞ்ஞானி ராமனின் கையிலிருந்த மெஷினிலிருந்து தண்ணீர் வருவதைப் பார்த்து வியப்படைந்த மக்கள் அமைதியாயினர். மூப்பனார் ராமனிடம் " இது ஏதோ மாஜிக் மாதிரி இருக்கு. இந்த மெஷினிலிருந்து தண்ணிர் எப்படி வருதுன்னு விளக்க முடியுமா?" என்றார்.

ராமன் சிரித்துக் கொண்டே " இதில் மாஜிக் ஏதும் இல்லை. இந்த மெஷினில் பாட்டரிகளைக் கொண்டு இயங்கும் பம்பு ஒன்று இருக்கிறது. அந்த பம்பு காற்றை உள் வாங்கி மெம்பரேன் என சொல்லப்படும் ஒரு திரையின் மூலம் செலுத்தப் படும்போது காற்றிலுள்ள ஈரப்பசை நீக்கப்படுகிறது. ஈரப்பசையை குளிவிக்கும்போது தண்ணீராக மாறுகிறது. மாற்றப்பட்ட தண்ணீர் சுத்தகரிக்கப்பட்டு மெஷினில் உள்ள குழாயின் மூலம் வெளிவருகிறது." என்று அதன் செயல்பாட்டை விளக்கினார்.

மூப்பனார் மேலும் " அப்ப காற்றில் ஈரப்பசை இல்லைன்னா தண்ணிர் வராது?" என்று வினவினார். மேலும் ஒரு பெரியவர் " தண்ணி ரொம்ப கொஞ்சமா வருது. இதை வச்சு எப்படி காவிரி நதியை நிரப்பறது?" என்று தன் சந்தேகத்தை தெரிவித்தார்.

ராமன் சிரித்துக் கொண்டே சொன்னார் " உங்கள் சந்தேகங்கள் நியாயமானவையே. இச்த மெஷினை நான் காட்டியதற்கு காரணமே விஞ்ஞானத்தால் என்ன சாதிக்க முடியும் என்பதை உணர்த்தவே. காவிரி நீர் பிரச்னையைத் தீர்க்க வல்ல நான் கண்டபிடித்துள்ள இயந்திரம் மிக பெரியது. அதில் காற்றை உள்ளிழுத்து அதிலிருந்து ஆக்ஸிஜன் வாயுவையும் ஹைட்ரஜன் வாயுவையும் பிரித்து பின் அவற்றை இரண்டிற்கு ஒன்று என்ற விகிதத்தில் இணைக்கும்போது தண்ணீர் கிடைக்கிறது. இந்த இணைப்பில் மின்சக்தியும் உற்பத்தி ஆவதால் இயந்திரம் துவங்கியபின் அதை இயக்க மினசக்தி தனியாகத் தேவையிருக்காது. நான் இந்த இயந்திரத்தை உங்களது ஆதரவுடன் இங்குள்ள காவிரி ஆற்றின் அருகில் அமைத்து தண்ணீரை ஆற்றில் பாய்ச்சுவேன்"

ராமன் கூறியவை மூப்பனாருக்கும் ஒரு சில பெரியவர்களுக்கும் ஓரளவே புரிந்தாலும் அவர் பேச்சில் உண்மை இருப்பதை உணர்ந்தனர். வேறு சிலரோ "இது ஏதோ போகாத ஊருக்கு வழி சொல்வதைப் பொல இருக்கு" என்று முணுமுணத்தனர்.

மூப்பனாருக்கு ராமன் பிரயாண களைப்பு இருக்கும் என்று உணரவே சில விடலைப் பையன்களிடம் சைக்கிளிலில் சென்று கிராமத்திலுள்ள விருந்தினர்களுக்கான வீட்டை சுத்தம் செய்து செய்யச் சொன்னார். அவரே சில மகளிரிடம் ராமனுக்கான உணவைத் தயாரிக்கமாறு கூறி அனுப்பினார். பின் அவர் ராமனிடம் " உங்களுக்கு களைப்பாக இருக்கும். நாம் கிராமத்துக்குச் செலவோம். அங்கு இளைப்பாறி பின் உங்கள் வேலையைத் துவங்குங்கள். எங்களது ஆதரவு உங்களுக்கு நிச்சயம் உண்டு" என்றார்.

மூப்பனார் ராமனின் சூட்கேஸை ஒருவரிடம் கொடுத்து எடத்து வரச் சொன்னார். மூப்பனார் முன் நடக்க கிராமத்து மக்கள் பின் தொடர ராமன் கிராமத்தை நோக்கி நடந்தார்.

தொடரும்....

மதி
06-08-2008, 03:22 AM
நல்ல அறிவியல் விளக்கம் மதுரைவீரரே....
தொடருங்கள்.

சிவா.ஜி
06-08-2008, 04:24 AM
காற்றிலிருந்து தண்ணீர்...படிக்கவே ஆவலாக இருக்கிறது. சாத்தியப்பட்டால்...எத்தனை சந்தோஷம்? பல கண்டுபிடிப்புகள் சில எழுத்தாளர்களின் கற்பனையில் உதித்தவை என்று சரித்திரம் சொல்கிறது. உங்கள் எண்ணமும் ஈடேற வாழ்த்துகள். கதையை நன்றாகக் கொண்டு போகிறீர்கள். தொடருங்கள். உடன் வருகிறோம்.

யவனிகா
06-08-2008, 04:58 AM
முற்றிலும் வித்தியாசமான, நல்லதொரு தொடர்.
ஆரம்பத்தில் மூலிகை ராமனோ என்று நினைத்தேன்.
அறிவியல் குறிப்புகளோடும்,விளக்கப்படங்களோடும் கதை போன்ற வடிவில் சுவாரசியமாகப் போகிறது...தொடருங்கள் மதுரை வீரன்....வாழ்த்துக்கள்.

இளசு
06-08-2008, 07:10 PM
மேற்கு நாட்டுப் பெயர்களோடு விஞ்ஞானி வந்தால் நம்பும் நம்மவர்கள்..
உள்ளூர்ப் பெயரோடு வந்தால் நம்பத் தயங்குவார்கள்..

இந்த சாபம் நம்மை விட்டு மெல்ல மெல்ல விலகும்..

உங்கள் கதை அதற்கான கட்டியம்..

வாழ்த்துகள் மதுரை வீரன்..

அமரன்
17-08-2008, 01:20 PM
நான்கு பாகங்களும் இணைக்கப்பட்டன..
மதுரை வீரரே..
படித்துச் சுவைத்த பிறகு எனது கருத்துகளைத் தூவுகின்றேன். உற்சாகம் குறையாமல் தொடருங்கள்..

மதுரை மைந்தன்
17-08-2008, 01:20 PM
அன்பு நண்பர்களே

நான் புலம் பெயர்ந்து ஆஸ்திரேலியா செல்ல விருப்பதால் இந்த தொடர் கதையைத் தொடருவதில் சற்று தாமதம் ஏற்பட்டு விட்டது. மீதி பகுதியை விரைவில் பதிவு செய்வேன். தாமதத்திற்கு என்னை பொறுத்தருளவும். அனைவரது ஆதரவுக்கும் எனது நன்றி.

பாகம் 5

ராமன் மக்களுடன் கிராமத்தை நோக்கி நடக்கத் துவங்கியதும் கூட்டத்திலிருந்து பிரிந்து ஒருவன் மரத்திற்குப் பின் சென்று செல் போனை எடுத்துஇ " சார் ராமன் இந்த இயச்திரத்தை நிறுவப் போகிறார். அவரை ஒரு பைத்தியக்காரர் என்று மக்களிடையே நாம் பரப்பிய செய்தியை யாரும் நம்பவில்லை போலிருக்கிறது. ராமனின் பாட்டனாருக்கு கிராமத்து மக்களிடையே நல்ல செல்வாக்கு இருப்பதாலும் ராமன் அவர்களிடம் தான் ஒரு மன நோயாளி இல்லை என்று நம்ப வைத்து விட்ட தாலும் நமது திட்டம் பலிக்காது. நாம் இப்போது என்ன செய்யலாம்?" என்று மும்பையிலுள்ள தனது எஜமானரிடம் கூறினான்.

அதற்கு அவர் " இப்போது ஒன்றும் செய்ய வேண்டாம். ராமன் அந்த இயந்திரத்தை நிறுவட்டும். அதற்கு பின் நாம் அவரை தூக்கிட்டு அந்த இயந்திரத்தைக் கைப்பற்றுவோம். இயந்திரம் நிறுவப்பட்டதும் எனக்கு தெரிவி. நான் அங்கு வந்து மற்றவைகளைப் பார்த்துக் கொள்கிறேன்" எனறார்.

விருந்தாளிக்கான வீட்டை அடைந்ததும் அது சுத்தம் செய்யப் பட்டு ராமன் தங்குவதற்கு ஏற்ற வசதிகள் செய்யப் பட்டிருப்பதையும் கண்டு மூப்பனார் மகிழ்ச்சி அடைகிறார்.

ராமனுக்கான சாப்பாடும் ஒரு வாழை இலையுடன் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து மூப்பனார் ராமனிடம் " அப்ப நீங்க சாப்பிட்டு ஓய்வு எடுத்துக்கங்க. நான் உத்தரவு வாங்கிக்கிறேன்" என்றார். கூட வந்த ஒருவர் " ராமனுக்கு குடிக்க தண்ணீர் நாம் கொடுக்கத் தேவையில்லை. அதான் அவர் கிட்ட மெஷின் இருக்கே" என்று சொல்லி சிரித்தார்.

அவர்களை வழி அனுப்பி விட்டபின் ராமன் சாப்பிட்டு பிரயாண களைப்பில் சற்றே கண்ணயர்ந்த சமயம் ஒரு உருவம் அந்த வீட்டுக்குள் நுழைந்தது. ராமனின் சூட்கேஸைத் திறந்து அந்த தண்ணீர் மெஷினை எடத்துக் கொண்டு வெளியேறியது அந்த உருவம். அது வேறு யாருமல்ல அஞ்சலையின் கணவனே.

அஞ்சலையின் முன் அந்த மெஷினை வைத்து பெருமையாக மார் தட்டிக் கொண்டான் அவன். அஞசலைக்கு மிகுந்த கோபம் வந்தது. அவள் " அடப்பாவி. அந்த ஆளு கஷ்டப்பட்டு அந்த மெஷினைப் பண்ணினா அதை திருடிக்கிட்டு வந்திருக்கியேஇ வெட்கமாயில்லை உனக்கு. மெஷினை உடனே கொண்டு போய் திரும்ப வை. இல்லாட்டா காளியாத்தாவுக்கு பொலி போட்டுடுவேன் உன்னை" எனறதும் அவன் கதி கலங்கிப் பொய் விட்டான்.

"கோவிச்சுக்காதே புள்ளை நான் விளையாட்டா இதை செஞ்சேன். இப்பவே கொண்டு போய் திரும்ப வச்சுடறேன்" என்றான் அவன்.

நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த ராமன் திடீரென்று கண் விழிக்கையில் அங்கு அஞ்சலையின் கணவன் கையில் மெஷினுடன் இருப்பதைப் பார்த்து வியந்தார். " அய்யா என்னை மன்னிச்சுடுங்க. நீங்க தூங்கிகிட்டு இருக்கச்சே நான் இந்த மெஷினை அஞசலைக்கு காட்ட வேண்டி திருடிட்டேன்" என்றான் அவன்.

ராமனோ சிரித்துக் கொண்டே " உனக்கு அந்த மெஷின் தானே வேணும். எடுத்துக்கோ" எனறார்.

இதைக் கெட்டுக் கொண்டே அங்கு வந்த மூப்பனார் " இந்த மெஷினை ஒருத்தருக்கு மட்டும் கொடுப்பது சரியில்லை. அப்புறமா கிராமத்து சனங்க அத்தனை பேரும் ஆளுக்கொரு மெஷினைக் கேப்பாங்க. இந்த மெஷினை இந்த வீட்டு வாசலில் யாரும் எடக்கா வண்ணம் ஒரு கூண்டுக்குள் வைத்து இதிலுள்ள குழாயிலிருந்து தண்ணீரை மாத்திரம் குடிக்க ஏற்பாடு செஞ்சா நல்லாயிருக்கும்" என்றார்.

ராமனும் இது நல்ல யோசனை என்று ஒப்புக் கொண்டார்.

இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கையில் போலீஸ் ஜீப் ஒன்று அந்த வீட்டு வாசலில் வந்து நின்றது.

தொடரும்........

இளசு
17-08-2008, 03:40 PM
புதிய இடத்தில் பணி,வாழ்வு சிறப்பாய் அமைந்திட வாழ்த்துகள் நண்பரே.

------------------------------------------------

அறிவியல் அடித்தளம்.. வெள்ளந்தியான கிராமக் களம்.. பின்னணியில் கள்வர்கள் -

சுவையான தொடர். நேரம் அமைந்து தொடர்ந்து முழுமையடைய வாழ்த்துகள்!

மதுரை மைந்தன்
17-08-2008, 05:22 PM
புதிய இடத்தில் பணி,வாழ்வு சிறப்பாய் அமைந்திட வாழ்த்துகள் நண்பரே.

------------------------------------------------

அறிவியல் அடித்தளம்.. வெள்ளந்தியான கிராமக் களம்.. பின்னணியில் கள்வர்கள் -

சுவையான தொடர். நேரம் அமைந்து தொடர்ந்து முழுமையடைய வாழ்த்துகள்!

தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மன்றத்து இளைய ராஜா அவர்களே!

மதுரை மைந்தன்
09-09-2008, 02:18 AM
விஞ்ஞானி (பாகம்-6):


ஜீப்பிலிருந்து இறங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமன் தங்கியிருந்த வீட்டுக்குள் நுழைந்தார். நுழைந்தவர் அங்கு இருந்த மூப்பனாரைக் கண்டு தெப்பியைக் கழற்றி கையில் வைத்துக் கொண்டு " ஐயா இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருத்தர் இங்கிருக்கிற திரு. ராமனுக்கு எதிராக ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் ராமன் மும்பையில் உள்ள ஒரு மன நல மருத்துவ மனையிலிருந்து தப்பி வந்துள்ளதாகவும் அவரால் கிராம மக்களுக்கு தீங்கு விளையலாம் என்றும் ஆகவே அவரை கைது செய்து காவலில் வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்" என்றார்.

போலீஸ் ஜீப் ராமன் தங்கியிருந்த வீட்டுக்கு முன்னால் நிற்பதைக் கண்டு அங்கு கூடிய கிராமத்து மக்கள் இன்ஸ்பெக்டர் கூறியதைக் கேட்டு " ராமனைக் கைது செய்யாதே. போலீஸ் அராஜகம் ஒழிக" என்று கோஷங்கள் இட்டனர். ஜனங்களின் கோஷங்களைக் கேட்டு தர்ம சங்கடத்துக்குள்ளான இன்ஸ்பெக்டர் மூப்பனாரிடம் " ஐயா திரு. ராமனால் ஒரு தீங்கும் விளையாது அப்படி நடந்தால் அதற்கான முழு பொறுப்பையும் நான் ஏற்கிறேன் என்று நீங்கள் எழுதிக் கொடுத்தால் அதை ஏற்று ராமனை நான் கைது செய்ய மாட்டேன்" என்றார். மூப்பனாரும் அவ்வாறே எழுதிக் கொடுக்க இன்ஸ்பெக்டர் அங்கிருந்து விரைந்தார். கிராமத்து மக்களும் கலைந்து செனறனர்.

மூப்பனாரும் விடை பெற்று சென்றபின் ராமனின் நினைவுகள் பின் நோக்கிச் சென்றன. மும்பை ஆய்வுக் கூடத்தில் அவரது காற்றிலிருந்து தண்ணீரை உருவாக்கும் பரிசோதனை வெற்றி அடைந்த நாள் நடைபெற்ற வேதனை தரும் நிகழ்வுகள் அவர் கண் முன் விரிந்தன.

அவரது இயந்திரத்தில் முதல் முதலாக உருவாகிய தண்ணீரைக் கண்டு உற்சாகம் பெருகிய ராமன் அவரது மேலாளரது அறைக்குச் சென்று " சார் எனது காற்றிலிருந்து தண்ணீரை உற்பத்தி செய்யும் மெஷின் வேலை செய்யத் துவங்கி விட்டது. இனி இந்தியாவின் கிராங்களில் உள்ள குடி நீர் பற்றாக்குறை நீங்கிவிடும். குறிப்பாக தமிழ்நாட்டின் காவிரி நீர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணலாம்" எனறு ஆங்கிலத்தில் கூறினார் அந்த வட நாட்டு மேலதிகாரியிடம்.

அனுபவம் மிகுந்த அந்த மேலதிகாரி சிரித்துக் கொண்டே " ராமன் நீங்க ரொம்ப உணர்ச்சி வசப் படறீங்க. நிதானமாக செயல்படுங்கள். அந்த மெஷினை முழு அளவில் சோதித்து விட்டீர்களா? உருவாகும் தண்ணீர் காற்றில் உள்ள ஈரப் பசை குறைந்தால் நின்று விடுமா? நீங்கள் முழு அளவில் பரிசோதித்து மெஷினைப் பற்றிய ஒரு அறிக்கையை எனக்கு சமர்ப்பியுங்கள். அடுத்து என்ன செய்வது என்பதை ஒரு தேர்ந்த குழு தீர்மானிக்கும்" என்றார். அவர் கூறியதில் இருந்த நியாயங்களை உணர்ந்த ராமன் இருந்தாலும் மேலதிகாரி தன்னை பாராட்டத் தவறியதை நினைத்து வருந்தியவராய் தனது பரிசோதனைக் சூடத்திற்கு திரும்பினார்.

ராமன் அந்த மெஷினை பல் வேறு சோதனைகளுக்கு உட் படுத்தி ஒரு அறிக்கையை தயாரித்து மேலதிகாரியிடம் சமர்ப்பித்தார். மேலதிகாரி ஆய்வுக் கூடத்தைச் சேர்ந்த தேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்றை நியமித்து அவர்கள் முன் ராமனை அந்த அறிக்கையை சமர்ப்பிக்க சொன்னார். குறிப்பிட்ட நாளில் ராமன் அந்த அறிக்கையை சமர்ப்பித்த போது சிலர் தங்களுக்குள் பேசிக் கொண்டும் சிலர் கண்ணுறக்கம் கொண்டும் இருந்ததைப் பார்த்து மனம் வெம்பினார். ராமன் தனது அறிக்கையை முடித்ததும் ஒரு வயதான விஞ்ஞானி ராமனிடம் " இந்த மெஷினால் அப்படி என்ன பயன் விளையப் போகிறது?" என்று இளக்காரமாக கேட்டார். ராமன் பொறுமையாக காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சினையைப் பற்றியும் அதனால் பாதிக்கப்படும் விவசாயிகளின் நிலையைப் பற்றியும் இத்தகைய மெஷின்களைக் கொண்டு அப் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்று கூறினார்.

ஒரு விஞ்ஞானி " ராமன் சொல்வதைப் போல் செய்தால் கர்நாடக மக்கள் அதை எதிர்ப்பார்கள். மேலும் அவர்கள் தங்களுக்கும் இத்தகைய மெஷின்கள் வேண்டும் என்பார்கள். ஆகவே நாம் இந்த அறிக்கையை ஒரு ஆராய்ச்சி கட்டுரையாக ஒரு பத்திரிகையில் வெளியிட மட்டுமே வேண்டும். இந்த மெஷின்களை எங்கு நிறுவுவது என்பதை அரசாங்கத்திடம் விட்டு விடலாம் என்றார்".

மற்றுமோர் விஞ்ஞானி இதை ஆமோதித்து " நான் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவன். எங்களது கட்ச் மாநிலத்தில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. ஆகவே முதலில் இந்த மெஷின்களை அங்கு தான் நிறுவ வேண்டும் என்றார்".

இவ்வாறு பல விஞ்ஞானிகள் தங்களது வேறுபட்ட கருத்துக்களை கூறக் கேட்ட மேலதிகாரி " நமது ஆய்வுக் கூடம் ஒரு தேசீய நிறுவனம். நமக்கு மத்திய அரசாங்கத்திடமிருந்து பண உதவி கிடைக்கிறது. அரசாங்க அதிகாரிகள் இந்த மெஷினை அங்கீகாரம் செய்ய வேண்டும். மேலும் இந்த மெஷினை பெரும் அளவில் நிறுவத் தேவையான நிதி அரசாங்கமே தர முடியும். ஆகவே ராமன் இந்த மெஷினைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்". எனறார்.

மேலதிகாரியின் பேச்சைக் கேட்டு மனமுடைந்த நிலையில் இருந்த ராமனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது அப்போது அங்கு நுழைந்து பேசிய சக விஞ்ஞானி கிருஷ்ணனின் வார்த்தைகள்.

" அனுமதி இல்லாமல் இங்கு நுழைந்ததற்கு உங்களது மன்னிப்பைக் கோருகிறேன். நான் இங்கு வந்ததின் நோக்கம் ராமனின் முகத்திரையைக் கிழிக்கவே. அவர் இங்கு சமர்ப்பித்த மெஷின் எனது முயற்ச்சியில் உருவானது. அதைத் திருடி இங்கு உங்கள் முன் தனது முயற்ச்சியாக சமர்ப்பித்துள்ளார்".


தொடரும்........

மதி
09-09-2008, 04:43 AM
மீண்டும் வாருங்கள் மதுரை வீரன்.
பணியிடத்தில் சேர்ந்தாகிவிட்டதா...??

விட்ட இடத்திலிருந்து ஜிவ்வென்று ஆரம்பித்துள்ளீர் கதையை.. அடுத்தது என்னவென்று அறிய ஆவல். சீக்கிரமே தொடருங்கள்.!

மதுரை மைந்தன்
09-09-2008, 10:14 PM
அன்பு நண்பர் மதி அவர்களே

எனது இக்கதையில் நீங்கள் காட்டும் ஆர்வத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

நான் இன்னும் ஆஸ்திரேலியா சென்று அடைய வில்லை;. வாஷிங்டனிலிருந்து கிளம்பிய நான் வழியில் பீனிக்ஸ் நகரத்தில் மகளுடன் தங்கி உள்ளேன். இவ்வாரக் கடைசியில் ஆஸ்திரேலியா செல்கிறேன்.

மதுரை மைந்தன்
09-09-2008, 10:16 PM
விஞ்ஞானி (பாகம்-7):

ராமனின் உற்ற நண்பனான கிருஷ்ணனின் குற்றச்சாட்டு ராமன் நெஞசில் ஈட்டி பாய்ந்தது போல் இருந்தது. ராமன் தனது அப்பாவித் தனத்தில் கிருஷ்ணனிடம் தன்னுடய ஆராய்ச்சியைப் பற்றி பேசியது நினைவுக்கு வந்தது. கிருஷ்ணனும் அவரை ஆதரிக்கும் சில விஞ்ஞானிகளும் ஒரு வர்த்தக நிறுவனத்தின் அதிபரின் வலையில் வீழ்ந்து விட்டது ராமனுக்கு தெரியாது. அந்த அதிபர் கிருஷ்ணன் மூலமாக ராமனின் காற்றிலிருந்து தண்ணீர் உரவாக்கும் ஆராய்ச்சி பற்றிய விவரங்களை அறிந்து அந்த மெஷின்களை தனது நிறுவனம் உருவாக்கினால் பெரும் பொருள் ஈட்ட முடியும் என்ற போராசை கொண்டு கிருஷ்ணனை அந்த மெஷின் பற்றிய விவரங்களை ராமனிடமிருந்து அறிய முடிக்கி விட்டார்.

கிருஷ்ணனின் திடீர் பிரவேசத்தாலும் அவர் கூறியதைக் கேட்டு வந்த அதிர்ச்சியிலிருந்தும் மீண்ட ராமன் " இல்லை. இது பொய் குற்றச்சாட்டு. கிருஷ்ணன் இந்த ஆராய்ச்சியில் பங்கேற்கவேயில்லை. நான் இந்த ஆராய்ச்சியில் என் வியர்வை ரத்தம் சிந்தி இரவு பகலாக சிந்தித்து இந்த மெஷினை உருவாக்கினேன." என்று கத்தினார். ராமனின் மேலாளர் ராமனைப் பற்றி நன்கு அறிந்தவரானதால் அவர் கூறியதில் உண்மை இருக்கிறது என்று உணர்ந்தாலும் கிருஷ்ணனை ஆதரித்து பேசிய சில மூத்த விஞ்ஞானிகளை மறுக்க இயலாமல் போனார். அவர் ராமனிடம் " நீங்கள் இந்த ஆராய்ச்சி பற்றிய ஒரு கட்டுரை எழுதுங்கள். அதில் கிருஷ்ணனின பெயரையும் சேர்த்து விடுங்கள்" என்று சமாதானம் கூறினார். ராமனுக்கு என்ன சொல்வதென்றோ என்ன செய்வதென்றோ தெரியாமல் நின்றார். கிருஷ்ணனுக்கு மேலதிகாரியின் வார்த்தைகளால் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

ஆய்வுக் கூடத்தைவிட்டு வீடு நோக்கி நடந்த ராமனின் மனம் பெரும் சஞசலத்திற்குள்ளாகி இருந்தது. மனம் உடைந்த நிலையில் அவர் ரோட்டின் நடுவே நடக்க குறுக்கே வந்த வாகன ஓட்டிகள் அவரை " க்யா பாகல் ஹோ கயா க்யா? (என்ன பைத்தியமா பிடித்திருக்கு உனக்கு?)" என்று சரமாரியாக திட்டினர்.

வீட்டை அடைந்த ராமன் காலிங் பெல்லை பல முறை அழுத்தியும் ஒரவரும் வந்து திறக்காதது வேறு அவரது ஏமாற்றங்களை அதிகப் படுத்தியது. வழக்கமாக அவர் பெல்லை அழுத்தியதும் அவரது மகளோ மனைவியோ உடன் வந்து திறப்பார்கள். தன்னிடமிருந்த வீட்டுச் சாவியைக் கொண்டு கதவைத் திறந்து உள்ளே நுழைந்த ராமனுக்கு வீட்டு விளக்குகள் ஏற்றப்படாதது இன்னும் வியப்பளித்தது. முன்னறையின் நடுவில் இருந்த மேசையில் இருந்த ஓர் காகிதம் அவரது கவனத்தை ஈர்த்து.

அக்கடிதத்தை எழுதியிருந்தது அவரது மனைவி. அதில் அவர் " நான் இந்த முடிவை எடுத்தற்கு என்னை மன்னிக்க வேண்டும். கடந்த பல மாதங்களாக நீங்கள் ஒரு நிலையில் இல்லை. என்னை மட்டுமல்லாது நமது மகளையும் தாங்கள் புறக்கணித்து விட்டீர்கள். அவள் பாதி தூக்கத்தில் முழித்துக் கொண்டபோது நீங்கள் உஙகளுக்குள்ளாகவே பேசிக் கொண்டு இருந்ததை பல தடவை பார்த்து பயந்து விட்டிருக்கிறாள். மேலும் நீங்கள் உங்களது விஞ்ஞான தர்க்கங்களையும் வரை படங்களையும் அவளது ஸ்கூல் நோட் புத்தகங்களில் எழுத அதைப் பார்த்த அவளது டீச்சர் அவளைக் கண்டித்திருக்கிறாள். ஆகவே நான் உங்களை உங்களது விஞ்ஞான உலகத்திலேயே விட்டு விட்டு நமது மகளுடன் எனது பெற்றோர் வீட்டிற்கு செல்கிறேன். நீங்கள் பழைய நிலைக்கு திரும்பியவுடன் நாங்கள் திரும்ப உங்களுடன் வாழ வருகிறோம்" என்று எழுதியிருந்தார்.

கடிதத்தைப் படித்த ராமன் தலை சுற்றி மயங்கி கீழே சரிந்தார். வெகு ரேம் கழித்து கண் முழித்த ராமன் ஏதோ தீர்மானத்திற்கு வந்தவராய் வீட்டை விட்டு ஆய்வுக் கூடத்தை நோக்கி நடந்தார். வாசலில் இருந்த காவலாளி அரைத் தூக்கத்தில் இருந்ததால் மெதுவே அவனுக்குத் தெரியாமல் தனது பரிசோதனை சாலைக்குச் சென்றார். அவரிடமிருந்த சாவியைக் கொண்டு உட் புகுந்த ராமன் பரிசோதனை சாலையின் நடுவே வீற்றிருந்த அந்த மெஷினைத் தொட்டு தடவி சோகம் மேலிட அழத் துவங்கினார்

அரைத் தூக்கத்திலிருந்த காவலாளி எங்கிருந்தோ வந்த பலத்த சத்தத்தைக் கேட்டு அதை விசாரிக்க கிளம்பினார். ராமனின் பரிசோதனை சாலையிலிருந்து அந்த சத்தம் வரவே அங்கு சென்றடைந்த காவலாளி கண்ட காட்சி அவருக்கு அதிர்ச்சியைத் தந்தது.


தொடரும்........

மதி
10-09-2008, 01:50 AM
இது பல விஞ்ஞானிகளின் வாழ்க்கையில் நடப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆராய்ச்சி சுவாரஸ்யத்தில் குடும்பம் என்றே ஒன்றே மறந்துவிடும். பாவம் ராமன்... அடுத்த என்ன ஆயிற்று...??

மதுரை மைந்தன்
12-10-2008, 10:15 AM
நண்பர்களே

மெல்போர்ன் நகருக்கு புலம் பெயர்ந்து வீடு பிடித்து அமர சில நாட்களாகிவிட்டன. இந்த இடைக் காலத்தில் நான் மன்றத்திற்கு அவ்வப்போது வந்து போய்க கொண்டிருந்தாலும் இந்த கதையை தொடர முடியவில்லை; உங்களில் பலர் (நண்பர் மதி அவர்களைத் தவிர) இக்கதையை மறந்து விட்டாலும் இக்கதையை தொடந்து முடிப்பதில் எனக்கு கடமைகள் உண்டு. ஆகவை தொடர்கிறேன்

விஞ்ஞானி (பாகம்-8):



காவலாளி நடுங்கும் கரங்களுடன் ஜன்னல் கம்பிகளைப் பற்றி உள்ளே கண்ட காட்சியில் விரிந்த தலை முடியுடனும் பிதுங்கிய கண்களுடனும் ராமன் அந்த மெஷினை ஒரு இரும்புக் கம்பியைக் கொண்டு அடித்து நொறுக்கியது தான். அன்றைய நிகழ்வுகள் தந்த தந்த ஏமாற்றங்களும் கசப்புகளும் ராமனை வெறி கொள்ள செய்திருந்தன. ராமன் மெஷினை மட்டுமல்லாது அங்கிருந்த பரிசோதனைக்கான மற்றைய கண்ணாடி உபகரணங்களையும் தான். உடைந்து சிதறிய கண்ணாடிகளும் உரோகங்களும் ராமனின் உடலில் துளைத்து ரத்தக் கசிவுடன் இருந்ததைப் பார்த்த காவலாளி விரைந்து சென்று மேலாளரை தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டார்.

ஆய்வுக் கூடத்தில் நடந்த களேபரங்களைக் கேட்ட மேலாளர் சில மூத்த விஞ்ஞானிகளுடன் அங்கு விரைந்தார். எப்படியோ செய்தி அறிந்த கிருஷ்ணனும் அவர்களுடன் இணைந்து ஆய்வு கூடத்திற்கு விரைந்தார். ராமனின் பரிசோதனை சாலையை அடைந்த அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அங்கு ராமன் நினைவிழந்த நிலையில் கண்ணாடித் துகள்கள் உடைந்த மரத் துண்டுகள் இவற்றிற்கு நடுவே ரத்த காயங்களோடு கிடந்தார். மேலாளர் உடன் வந்த விஞ்ஞானிகளிடம் " உடன் நாம் ஒரு மருத்துவரையும் ஆம்புலன்ஸையும் கூப்பிடுவோம். ராமனை ஒரு நல்ல மருத்துவ மனையில் சேர்த்து அவரைக் குணப் படுத்த வேண்டும்" எனறார். உடன் இருந்த கிருஷ்ணன் மேலாளரிடம் " ராமன் காயங்களிலிருந்து குணமானவுடன் அவரை ஒரு மன நல மருத்துவ மனையில் சேர்க்க வேண்டும். ஒரு மன சோயாளி தான் இவ்வாறு மெஷினையும் மற்ற உபகரணங்களையும் சேதப் படுத்துவார்" என்றார். அங்கு வந்திருந்த சில விஞ்ஞானிகளும் அதை ஆமோதித்தனர். ராமனை மன நோய் சிகிச்சைக்கான மருத்துவ மனையில் சேர்த்து விட்டால் ராமனின் மெஷினை அவர்கள் அபகரித்து அவர்களுக்கு பணம் கொடுத்த தனியார் வர்த்தக நிறுவனத்திற்கு கொடுப்பது தான் அவர்களது திட்டம். நல்ல மனம் படைத்த மேலாளருக்கு ராமனை மன நோய் சிகிச்சைக்கு அனுப்புவதில் ஒப்புதல் இல்லை. ஆனால் மற்ற அனைவரும் ஒன்றாக சேர்ந்து சிபாரிசு செய்ததால் வேறு வழியின்றி ராமனை மன நோய் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்க்க ஏற்பாடுகள் செய்தார்.

மறு நாள் மருத்துவ மனையில் கண் விழித்த ராமன் தான் எப்படி அங்கு வந்தோம் என்றும் தன்னை ஏன் கட்டிலுடன் சேர்த்து கட்டி போட்டிருக்கிறார்கள் என்று அதிர்ச்சி அடைந்தார். அங்கு வந்த நர்ஸிடம் அவர் விசாரித்த போது நர்ஸ் கூறினார் " நேற்று இரவு மயக்க நிலையில் இருந்த உங்களை இங்கு கொண்டு வந்து சேர்த்த உங்களது நண்பர் கிருஷ்ணன் என்பவர் நீங்கள் மன நோயால் பாதிக்கப் பட்டிருப்பதாகவும் நீங்கள் வன்முறையில் ஈடுபடக்கூடும் என்று சொல்லவே பெரிய டாக்டர் உங்களது கைகளையும் கால்களையும் கட்டி போடுமாறு சொன்னார். டாக்டர் வந்து உங்களை பரிசோதித்த பின் அவர் கூறினால் கட்டுகளை அவிழ்த்து விடுவோம்". இதைக் கேட்ட ராமன் ஆத்திரம் அடைந்தவராய் " இல்லை. நான் பைத்தியக்காரன் இல்லை. எல்லாம் அந்த விஷமி கிருஷ்ணனின் வேலை. ஏய் கிருஷ்ணா நான் சும்மா விடப் போவதில்லை. என் கையில் கிடைத்தால் உன்னைக் கொன்று விடுவேன்" என்று கத்தினார். இதைக் கேட்டு பயந்த நர்ஸ் டாக்டரைக் கூப்பிட அவர் வந்து ராமனுக்கு தூக்க மருந்தை ஊசியாகப் போட ராமன் உறக்கத்தில் ஆழ்ந்தார்.

பரிசோதனை சாலையில் கூடிய கிருஷணண் மற்றும் அவரது சகாக்கள் தங்கள் வெற்றியை மது பானம் அருந்தி கொண்டாடினர். எல்லோரும் கிருஷண்னை அந்த காற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் மெஷினை உருவாக்க சொன்னார்கள்.

தொடரும்........

மதி
12-10-2008, 10:19 AM
அதான் அந்த பத்திரிக்கை செய்திக்கு காரணமோ..? ஏமாற்றப்படும் போது இத்தகைய உணர்ச்சிகள் சகஜம் தானே..??

கிருஷ்ணனால் அதை மீண்டும் உருவாக்க முடிந்ததா..?

மதுரைவீரரே.. ஆஸ்திரேலியாவிற்கு புலம் பெயர்ந்து மீண்டும் உங்கள் பதிவுகளைத் தொடர ஆரம்பித்தது மிக சந்தோஷம்.

சிவா.ஜி
17-10-2008, 09:32 AM
இடையில் ஏற்பட்ட பணிமாறுதலின் சுமையோடு இந்தக் கதையையும் தொடர்வது கண்டு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் விவரித்திருக்கும், ராமனின் மனநிலையை நன்றாக உணரமுடிகிறது. கிருஷ்ணனைப் போன்ற துரோக எண்ணம் கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

கதை சுவாரசியமாய் நகர்கிறது. தொடருங்கள் மதுரைவீரன். வாழ்த்துகள்.

மதுரை மைந்தன்
04-11-2008, 08:01 AM
பெரிய இடை வெளிக்குப் பின் தொடருகிறேன். தடங்கலுக்கு வருந்துகிறேன்.

விஞ்ஞானி (பாகம்-9):

சில நாட்கள் கழித்து ராமன் மனம் சோர்வுகளிலிருந்து தெளிவடைந்தது. வன்முறையில் அவர் ஈடுபடாததால் அவரை கட்டிப் போடவில்லை. ராமனின் மனைவியும் மகளும் அவரை பார்க்க வந்தனர். ராமனின் மனைவி அழுது கொண்டே " எல்லாம் அந்த பாழாய்ப் போன மெஷினால் வந்தது. நல்லதாச்சு அதை நீங்க உடைச்சுட்டேள்".

பரிசோதனை கூடத்தில் கிருஷணன் மெஷினை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். ஒரு கட்டத்திற்குப் பின் மெஷினின் சில நுணுக்கங்களை அவர் அறிய மாட்டாராதலால் அவரால் மேற்கொண்டு செல்ல முடியவில்லை. ராமன் தெளிவடைந்து விட்டதாக நர்ஸிங்ஹோமில் கூறவே அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரிடமிருந்து நைச்சியமாக அந்த நுணுக்கங்களை அறிந்து கொள்ளலாம் என்று அவரது சகாக்களுடன் திட்டம தீட்டினார். அப்படி ராமன் ஒத்துழைக்க மறுத்தால் அவரது மனைவியையும் மகளையும் பிணைக் கைதிகளாக எடத்து அவரை மிரட்டி காரியத்தை சாதித்துக் கொள்ளவும் திட்டம் தீட்டினார்.

சஞ்ஜய் என்ற இளம் விஞ்ஞானி ராமனிடம் உதவியாளராக பணியாற்றியவன். ராமனிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவன். ராமனும் அவனிடம் பரிவாக இருந்தார். அவனே கிருஷணணிடமும் உதவியாளராக இருந்ததால் கிருஷணனின் திட்டங்களை அவன் அறிய நேரிட்டது. அவன் ஒருவருக்கும் தெரியாமல் மன நோய் மருத்துவ மனைக்கு விரைந்து ராமனைக் கண்டு கிருஷணனின் திட்டங்களை அவரிடம் விவரித்தான்.

சஞ்சய் கூறியவற்றைக் கேட்டு ராமன் வருந்தினார். சிறிது யோசனைக்குப் பின் " எனக்கு உடனே எனது கிராமத்துக்கு செல்ல வேண்டும். அங்கு சென்று இந்த மெஷினை உருவாக்கி தண்ணீர் பற்றாக்குறையைப் போக்கி கிராமத்தை முன் போல் வளமாக்க செய்ய வேண்டும். நீ எனக்கு ரயில் டிக்கெட் வாங்க உதவுவாயாயா?" என்று சஞசயின் கைகளைப் பற்றிக் கேட்டார். அங்கிருந்த ராமனின் மனைவி தானும் உடன் வருவதாக கூறினாள். ராமன் அவளைத் தடுத்து மகளின் படிப்பு பாதிக்கப் படும் என்று கூறவே அவள் சமாதானமானாள். சில மணி நேரங்களுக்குப் பிறகு சஞ்சய் வாங்கிக் கொடுத்த டிக்கெட்டுடன் யாருக்கும் தெரியாமல் மருத்துவ மனையிலிருந்து வெளியேறி ரயில் நிலையம் சென்றார். அங்கு அவரது மனைவி அவரது துணிமணிகளுடன் கொடுத்த சூட்கேஸை எடுத்துக் கொண்டு ரயில் ஏறினார்.

கிருஷ்ணனும் அவரது சகாக்களும் ராமன் மருத்துவ மனையிலிருந்து தப்பித்து போனது அதிர்ச்சியை தந்தது. அவர்கள் உடனே செய்தி தாள்களில் கீழ்க்கண்ட விளம்பரத்தைக் கொடுத்தனர்.

எச்சரிக்கை

மும்பையிலுள்ள பிரபல மனநோய் மருத்துவ மனையிலிருந்து நோயாளி ஒருவர் தப்பியுள்ளார். அவர் தன்னை ஒரு விஞ்ஞானி என்று கூறிக் கொள்வார். அவரிடம் அரிய கண்டுபிடிப்பு ஒன்று இருப்பதாகவும் கூறுவார். இவர் அபாயகரமானவர். சமயங்களில் வன்முறையிலும் ஈடுபடுவார். இவரைப் பார்த்தால் உடன் அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் கொடுக்கவும்.

இவ்வாறு கூறப்பட்டிருந்த அந்த விளமபரத்தில் விஞ்ஞானி ராமனின் புகைப்படமும் இருந்தது.

ராமன் தனது கிராமத்திற்குத்தான் சென்றிருப்பார் என கிருஷ்ணன் யூகித்தார். தனக்குத் தெரிந்த ஒரு தமிழரை ராமனைக் கண்காணிக்குமாறு கிராமத்துக்கு அனுப்பி வைத்தார்.

தொடரும்........

சிவா.ஜி
04-11-2008, 09:51 AM
ஆரம்ப அத்தியாத்தை இந்த அத்தியாயத்துடன் இணைத்த தொடர்ச்சி அருமை. எல்லா ஃப்ளாஷ்பேக்கும் முடிந்துவிட்ட நிலையில், இனி ராமனின் இயந்திரம் முழு வீச்சில் வேலை செய்யுமா பார்க்கலாம். தொடருங்கள் மதுரை வீரன்.

மதுரை மைந்தன்
17-11-2008, 09:00 AM
ஆரம்ப அத்தியாத்தை இந்த அத்தியாயத்துடன் இணைத்த தொடர்ச்சி அருமை. எல்லா ஃப்ளாஷ்பேக்கும் முடிந்துவிட்ட நிலையில், இனி ராமனின் இயந்திரம் முழு வீச்சில் வேலை செய்யுமா பார்க்கலாம். தொடருங்கள் மதுரை வீரன்.


உங்களது பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சிவா.ஜி அவர்களே

மதுரை மைந்தன்
17-11-2008, 09:04 AM
விஞ்ஞானி (பாகம்-10):


தனது பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த ராமனை அவர் தங்கியிருந்த வீட்டுக் கதவை யாரோ தட்டும் சத்தம் நனவுலகிற்கு கொண்டு வந்தது. கதவைத் திறந்த ராமனின் முன் கைகளைக் கூப்பிய வண்ணம் மூப்பனார் எதிர் கொண்டார்.

" உங்களைத் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கணும். இந்த மெஷின் வேலையைத் தொடங்க உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்படுமா?"

" ஆமாம். முதலில் நாம் ஆற்றின் கரையோரமாக ஒரு பகுதியைத் தேர்ந.தெடுக்க வேண்டும். அருகாமையில் மின் இணைப்பு கிடைக்குமாறு அந்த இடம் இருக்க வேண்டும். உதாரணமாக பம்பு செட் ஒன்றின் அருகாமையிலிருந்தால் நன்றாக இருக்கும். ஏன் பம்பு செட் என்றால் அங்கு மின் வசதியும் இருக்கும் கூடவே நமது மெஷினிலிருந்து உற்பத்தியாமம் தண்ணீரை ஆற்றின் படுகையில் பாய்ச்ச முடியும். அந்த இடத்தைச் சுற்றி ஒரு ஷெட் போட்டு அதை தாளிட்டுப் பாதுகாக்கவும் வேண்டும். மெஷினுக்கு தேவையான மோட்டார்கள் உபகரணங்கள் மற்றும் சில கருவிகளை வாங்குவதற்கு பணம் வேண்டும். இதற்காக நான் என் வாழ்நாளின் சேமிப்பு அனைத்தையும் ஒரு தேசிய வங்கியில் போட்டு வைத்துதிருக்கிறேன். நான் பக்கத்து நகரத்திற்கு சென்று பணத்தை எடுத்து சாமான்களையும் வாங்கி வர நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். சாமான்கள் எல்லாம் வாங்கிய பிறகு இந்த ஊர் அம்மன் கோயிலில் ஒரு பூஜை நடத்தி பொங்கலிட்டு ஊர் மக்கள் அனைவருக்கும் உணவிட வேண்டும்" என்றார் ராமன்.

கிராமத்து மக்களுக்கு விருந்து படைக்க வேண்டும் என்று ராமன் சொன்னதைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்டவராய் மூப்பனார் ராமனின் கைகைளைப் பிடித்துக் கொண்டு உங்களுக்கு உயர்ந்த மனசு என்றார்.

" எங்களது ஒத்துழைப்பு நிச்சயமாக உங்களுக்கு கிடைக்கும். சரீர ஒத்தாசையுடன் தேவைப் பட்டால் பண உதவியும் நாங்கள் செய்வோம். எங்களுக்கு வேண்டியதெல்லாம் நிங்கள் அந்த மெஷினை நிறுவி முன் போல் பாசனம் செய்ய வேண்டும் என்பது தான். மெஷினிலிருந்து நீங்கள் பாய்ச்சப் போவது வெறும் தண்ணீரல்ல அது எங்கள் வயிற்றுக்கு பால்" எனறார் மூப்பனார்.

மூப்பனார் தன்னிடமிருந்த பழைய கார் ஒன்றை டிரைவருடன் ராமனை பக்கத்து டவுனுக்கு அனுப்பினார். அங்கிருந்த தேசிய வங்கி ஒன்றில் பணத்தை எடுத்து தேவையான சாமான்களையும் வாங்கிக் கொண்டு ராமன் திரும்பினார். ஒரு நல்ல நாளில் அம்மன் கோயிலில் பூஜையுடன் கிராமத்து மகளிரால் பெரிய மண் பானைகளில் பொங்கல் சமைக்கப் பட்டு ஊர் மக்களுக்கு விருந்தளிக்கப் பட்டது. குழாய் ஒலி பெருக்கிகளில் தமிழ் சினிமா பாடல்கள் ஒலிக்க கிராமத்து விடலை பையன்கள் அதற்கேற்றவாறு நடனமாடினார்கள்.

இந்த குதூகலங்களுக்கு நடுவில் ஒரு ஆள் எப்படி இந்த மெஷினை தகர்ப்பது அல்லது தேவைப்பட்டால் எப்படி ராமனை ஒழித்துக் கட்டுவது என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

தொடரும்

சிவா.ஜி
17-11-2008, 09:48 AM
சமூகக் கதைக்கு நடுவே விஞ்ஞானம், கூடவே சதி வேலைகள், அடுத்து என்ன ஆகும், அந்த இயந்திரம் எப்போது இயங்கும்...என ஆவல் மேலிட வைக்கிறது. வாழ்த்துகள் மதுரைவீரன். தொடருங்கள்.

மதுரை மைந்தன்
06-12-2008, 10:06 AM
விஞ்ஞானி (பாகம்-11):

ராமன் மெஷினை உருவாக்கும் வேலையைத் துவக்கினார். ஆரம்பத்தில் அவருக்கு மெஷினின் சில நுணுக்கங்கள் புரிபடவில்லை. மெஷினைப்பற்றிய விவரங்களை அவர் காகிதங்களில் குறிப்பெடுக்காமல் தனது ஞாபக சக்தியை மட்டுமே நம்பியதால் அவர் வேலையில் மும்முரமாக மூழ்கியவுடன் அந்த விவரங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் அவரது நினைவுக்கு வந்தன. கிராமத்து மக்கள் ஒவ்வொருவராக முறை வைத்து அவருக்கு வேண்டிய சாப்பாடு குடி நீர் காப்பி போன்றவற்றை தந்து வந்தனர். சில வாலிபர்களை ராமனுக்கு பாதுகாப்பு கொடுக்கவும் இரவு நேரத்தில் ரோந்து வந்து மெஷினை பாதுகாக்கவும் மூப்பனார் ஏற்பாடு செய்தார்.

இதன் நடுவில் ராமன் காற்றிலிருந்து தண்ணீர் வரும் மெஷினை உருவாக்கும் செய்தி காட்டுத்தீ போல் பக்கத்து கிராமங்களுக்கு பரவி அங்கிருந்து சாரி சாரி யாக மக்கள் வந்து ராமனிடம் தங்கள் கிராமத்துக்கும் அந்த மெஷினை உருவாக்க வேண்டும் என்று விண்ணப்பித்தனர். செய்தி பக்கத்து நகரங்களுக்கும் பரவ செய்தித்தாள் ரிப்போர்ட்டர்கள் ராமனை பேட்டி கண்டு தமிழ் நாடு முழுவதும் அந்த செய்தியை பரப்பினர்.

இரவு பகலாக முனைந்து வேலை செய்த ராமன் பல தினங்கள் கழித்து ஒரு நாள் மெஷின் வேலை செய்யத் துவங்கியதைக் கண்டு ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினார். மெஷின் தண்ணீரை உற்பத்தி செய்யத் துவங்கிய செய்தியை மூப்பனாருக்கு சொல்லி அனுப்பினார்.

மூப்பனார் வந்தவுடன் அவரிடம் " மெஷின் தண்ணீரை உற்பத்தி செய்யத் துவங்கி விட்டது. இப்போது நீங்கள் மக்கியமாக தீர் மானிக்க வேண்டியது இந்த தண்ணீர எப்படி பங்கீடு செய்வது என்று. என்னைக் கேட்டால் அருகிலிருக்கும் பம்பு செட்டின் மூலமாக ஏற்கனவே உள்ள கால்வாய்களின் மூலம் எல்லா வயல்களுக்கும் சம அளவில் தண்ணீரை பாய்ச்ச வேண்டும்" என்றார்.

" நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. முறையாக தண்ணீரைப் பங்கிடாவிட்டால் கிராமத்து மக்களிடையே சண்டை வந்து விடும். நான் அனைத்து மக்களையும் அழைத்து எப்படி பங்கிடுவது என்று ஒரு திட்டம் வகுக்கிறேன்" என்றார் மூப்பனார்.

அவ்வாறே திட்டம் ஒன்று தீட்டப்பட்டு கிராமத்து மக்களின் முன்னிலையில் மூப்பனார் மெஷினிலிருந்த ஒரு பட்டனை அமுக்க தண்ணிர் வெள்ளம் போல் கால்வாயில் பாய்வதைக் கண்ட மக்கள் ஆனந்த கூத்தாடினர்.

மெஷின் வேலை செய்யத் துவங்கியதைக் கண்ட கிருணனின் அள் அவருடன் செல் பொனில் தொடர்பு கொண்டு நடந்தவைகளை விவரிக்க கிருஷணண் அவரது சகாக்களுடன் ஆலோசித்து விட்டு தான் ஒரு திட்டம் தீட்டியிருப்பதாவும் உடனே விமானம் மூலம் சென்னை வந்து கிராமத்துக்கு வருவதாகவும் அந்த ஆளிடம் கூறினார்.

ராமனின் மெஷின் வேலை செய்யத் துவங்கிய செய்தி தமிழகம் முழவதும் பரவ பல செய்தி ஒளி பரப்பும் கூடங்கள் நிபுணர்களை அழைத்து இதை விவாதிக்க ஏற்பாடு செய்தனர். அனைவரும் ஒரு முகமாக ராமனைப் பாராட்டினாலும் அவர்களிடையெ இந்த நற் பணியை தமிழகம் முழுவதும் செயல் படுத்தவதைப் பற்றி கருத்து வேற்றுமைகள் எழுந்தன. ஒரு தரப்பினர் கிராமம் தோறும் இத்தகைய மெஷினை நிறுவ தேவையான பண வசதியும் மனித சக்தியும் தமிழக அரசிடமே உள்ளது என்றனர். இதை ஒப்புக் கொள்ளாதவர்கள் அரசு வேலைகளில் பண விரங்களும் வேலை முடக்கங்ளும் ஏறபட வாய்ப்பு உள்ளது என்றும் இந்த பணியை ஒரு பெரிய தொழில் நிறுவனத்திடரிடம் ஒப்படைத்தால் அவர்கள் திறம்பட செய்வார்கள் என்றும் வாதிட்டனர்.

ராமனின் மெஷினைப் பற்றிய செய்தி தமிழக தலமை செயலகத்திற்கு எட்ட முதலமைச்சர் அமைச்சர்கள் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். அதில் ராமனை வெகுவாக புகழ்ந்த முதலமைச்சர் ராமனுக்கு தக்க விருது வழங்க வேண்டும் என்று கூறினார். அமைச்சர்களில் மூத்தவராயிருந்த ஒருவர் இதை ஒப்புக் கொள்ள வில்லை. கடந்த தேர்தலில் ஆளும் கட்சி கர்நாடக அரசிடம் வாதிட்டு காவிரியில் தண்ணீர் வருவதற்கு ஏறபாடு செயததால் தான் பெரும்பான்மையான ஓட்டுக் களை பெற்றது என்று சுட்டிக் காட்டினார். மேலும் ராமன் ஒரு கிராமத்தில் மட்டும் மெஷினை நிறுவி இருப்பதால் தண்ணீர் பற்றாக்குறை உள்ள ராமனாதபுரம் கன்யாகுமரி போன்ற மாவட்டத்து மக்கள் தங்களுக்கும் இத்தகைய மெஷின் உடனே வேண்டும் என்று கோருவார்கள். அதற்கு செலவு செய்ய அரசிடம் பண வசதி இல்லை என்றார். ஆகவே மெஷினில் ஏதாவது குறை பாட்டைக் கண்டு பிடித்து ராமனுக்கு புகழ் கிட்டுவதை தடுக்க வேண்டும் என்றார் அவர். நல்ல உள்ளம் படைத்த முதலமைச்சருக்கு இது சரியல்ல என்று தோன்றினாலும் அரசியல் ரீதியாக அந்த மூத்த அமைச்சர் சொன்னதை ஒப்புக் கொண்டார்.

அதே நேரத்தில் மூப்பனார்ன் கிராமத்திலிருந்து ஒரு திடுக்கிடும் செய்தி வந்தது. அதில் ராமனின் மெஷினிலிருந்து வந்த தண்ணீர் வயல்களுக்கு நாசங்களை விளைவிப்பதாகவும்இ அந்த தண்ணீரைக் குடித்த சில கால் நடைகள் இறந்து விட்டதாகவும் தண்ணீரை பருகிய சில மக்கள் கவலைக்கிடமாக மருத்துவ மனைகளில் சேர்க்கப் பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. தண்ணீரில் அமிலக் கலப்படம் ஏறபட்டதால் தான் இவை நிகழ்ந்தன என்று அனுமானிக்கப் பட்டிருப்பாதக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. மேலும் அந்த செய்தியில் சில கிராமத்து மக்கள் " பைத்தியக்கார விஞ்ஞானியை உடனே கைது செய்" என்று கோஷமிடுவதாகவும் கூறப்பட்டது.

தொடரும்......

பாரதி
06-12-2008, 12:14 PM
எங்கள் அனைவரின் வேண்டுகோளையும் ஏற்று, கதையைத்தொடரும் மதுரை மைந்தருக்கு நன்றி. தொடருங்கள் நண்பரே.

மதி
06-12-2008, 04:02 PM
இந்த அரசியல்வாதிகளே இப்படித் தான். தண்ணீரில் என்ன பிரச்சனை..??? யாராச்சும் விஷமிகள் வேலையா..??

தொடருங்கள் மைந்தரே.

அக்னி
06-12-2008, 05:10 PM
இதுவரை வந்துள்ள அனைத்துப் பாகங்களையும் வாசித்தேன்.

முதலில் ஒரு தெளிவு வேண்டும்.
நீங்கள் நீர் உற்பத்தி இயந்திரத்தைப்பற்றிக் கற்பனையாகச் சிந்தித்த பின்,
அது தொடர்பாகக் குறிப்புகளையோ அல்லது பதிவுகளையோ ஏற்படுத்தி வைக்கவில்லையா?
அல்லது,
உங்களது விதையிலிருந்துதான், உண்மையான இயந்திரம் வளர்ந்ததா?

1480 களில் லியனார்டோ டா வின்சி,
தன் கற்பனையில் வரைந்துவைத்த படங்கள்தான்,
இன்றைய உலங்குவானூர்தியின் அடிப்படை எனலாம்.

அந்த வகையில்,
உங்களது அத்திவாரத்தில் இந்த இயந்திரம் எழாத பட்சத்தில்,
அதற்காக நான் நிச்சயம் வேதனைப்படுவேன்.

நிற்க, கதைக்கு வருவோம்.

விஞ்ஞானிக்கான வரைவு,
விஞ்ஞானக் கதைக்குள்ளும் புகுத்தப்படும் திருக்குறள்,
ஆர்ப்பாட்டமில்லாத, சரளமான எழுத்து நடை,
அதற்குள் இயல்பாகவே வரும் சூழ்ச்சிகள், திருப்புமுனைகள்,
என அனைத்துமே அருமை.

இன்றேனும் வாசிக்க இயன்றது, மிக மகிழ்வு.

மிகவும் பாராட்டுகின்றேன்.

பின்னூட்டங்கள் கிடைக்கத் தாமதமாகலாம்.
ஆனால்,
அவை உங்கள் மீதான, அல்லது, உங்கள் படைப்புக்கள் மீதான, புறக்கணிப்பல்ல.
காலப், பணிச், சூழல் நெருக்கடிகளே.
அதனால், இதற்காகத் தாங்கள், மனம்நோக வேண்டாம் என,
உரிமையாக, அன்பாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

உங்களைப் போன்ற பலருடனும், சமகாலத்தில் மன்றத்திற் பயணிப்பதே,
எனக்குப் பெருமையானதொன்று.

தொடருங்கள் மதுரை மைந்தன் அவர்களே... தொடர்ந்து(ம்) வருகின்றேன்...

அக்னி
06-12-2008, 05:26 PM
தண்ணீரில் என்ன பிரச்சனை..??? யாராச்சும் விஷமிகள் வேலையா..??


:food-smiley-015: :ernaehrung004: :icon_drunk:
தண்ணீரில் என்ன பிரச்சினை என்று,
மதிக்குத் தெரியாது என்று,
நான் நம்பிட்டன்... :rolleyes:

மதுரை மைந்தன்
07-12-2008, 09:55 AM
இந்த கதைக்கு பின்னூட்டங்கள் போட்ட நண்பர்கள் பாரதி மதி அக்னி ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மணியான நண்பர் என்ற திரியில் பின்னூட்டஙகள் வராதது குறித்து நான் போட்ட பதிவுக்கு வருந்துகிறேன். எளிதில் உணர்ச்சி வசப்படுவது எனது பெருங்குறையாக உள்ளது. அதை நான் திருத்த முயற்சிக்கிறேன். உண்மையில இதற்கு முன்னால் பதிவு செய்த கதைகளுக்கு பின்னூட்டங்களை நான எதிர் பார்க்கும் போது எனக்குள் இருந்து என்னை ஏளனம் செய்கின்ற மனசாட்சி ' இது என்ன அரச மரத்தை சுற்றி விட்டு அடி வயிற்றைத் தொட்டுப் பார்க்கிறாய்' என்று சிரிக்கும். நான் அதை இப்போது நினைவு கூர்கிறேன்.

சிவா.ஜி
07-12-2008, 02:34 PM
கதைக்கு வேகத்தைக் கூட்டிவிட்டு....அப்படியே தொடரும் போட்டுவிட்டீர்களே மதுரை மைந்தரே....இது நியாயமா....சீக்கிரம் அடுத்த பாகத்தைக் கொடுங்கள் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

மதுரை மைந்தன்
10-12-2008, 12:29 AM
விஞ்ஞானி (பாகம்-12):

திடீர் நிகழ்வுகளால் நிலை குலைந்து போன ராமன் கன்னத்தில் கை வைத்து உடகார்ந்திருந்தார். அப்போது அவரது பாட்டனார " கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில கை வைக்காதே" என்று சொன்னது நினைவுக்கு வந்தது. மெஷினில் உருவாகி வெளி வந்த நிரில் அமிலக் கலப்படம் நேர்ந்ததைக் குறித்து ராமன் அதிர்ந்து போனார்.

மூப்பனாரும் கிராமத்து மக்களும் ராமனுக்கு அதரவாக இருந்தார்கள். அவர் நிரபராதி யாரோ சதிகாரர்கள் தான் இச்செயலை செய்திருக்க வேண்டும் எனபது அவர்கள் கருத்து. இதற்கிடையில் தமிழக அரசு மெஷின் இருந்த இடத்ததை சீல் வைத்து காவலுக்கு போலீஸ் காரர்களையும் அங்கு நிற்க வைத்தது. ராமன் எந்த நேரத்திலும் கைது செய்யப் படலாம் என்ற வதந்தியும் உலவியது.

ராமன் கவலையுடன் அமர்ந்திருந்த இடத்திற்கு கிராமத்து பெண்மணி ஒரவர் வந்தார். அவரின் கணவர் மெஷினிலிருந்த வந்த நீரைக்குடித்து அதனால் பாதிக்கப்பட்டு மருத்தவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். அழுது கொண்டே அந்த பெண்மணி ராமனிடம் " நாங்க உங்களுக்கு என்ன கெடுதல் செஞ்சோம்? இந்த கிராமத்துக்கு உங்களை யார் வரச் சொன்னது? அங்காளம்மன் உங்களை சும்மா விடாது. எம் புருசனுக்கு ஏதாவது ஆச்சுன்னா நீங்க கொடுப்பீங்களா?" என்றார்.

சென்னையில் எதிர் கட்சிகள் ஒன்று கூடி நிலமையை விவாதித்தனர். அவர்களின் நோக்கம் இந்த சூழ்நிலையை பயன் படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவது தான். கூட்டத்தின் முடிவில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. அவை: முதலாவதாக ராமனை அரசு கைது செய்தால் அதற்கு எதிர்பு தெரிவித்து மாநில அளவில் பந்த் ஒன்று நடத்தவது. ( பந்த் நடந்தால் போலீஸ் தடியடி துப்பாக்கி சூடு நிகழ்ந்தால் அது அவர்களுக்கு சாதமாக அமையும் என்று எதிர் பார்த்தனர்). இரண்டாவதாக தமிழக அரசை டிஸ்மிஸ் செய்யக் கொரி கவர்னரிடம் மனு கொடுத்தல். மூன்றாவதாக மத்திய அரசை சி.பி.ஐ விசாரணைக்கு ஏற்பாடு செய்ய கோருதல்.

அதே நேரத்தில் தமிழக அரசு தலமை செயலகத்தில் கூடிய அமைச்சரவை ராமனை கைது செய்வது என்றும் ஆளும் கட்சியும் பந்தில் பங்கேற்பது என்றும் சி.பி.ஐ விசாரணைக்கு தாங்களும் கோரிக்கை வைப்பதன் மூலம் எதிர் கட்சிகளின் முயற்சிகளை முறியடிப்புது என்றும் தீர் மானிக்கப் பட்டது.

ராமன் கைது பற்றிய செய்தி காட்டுத் தீ போல பரவ மூப்பனாரின் கிராமத்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் ராமனை கைது செய்யக் கூடாது என்று. ஆனால் ராமனை கைது செய்ய வந்த போலிசார் கண்ணீர் புகை குண்டு வீசியும் தடியடி பிரயோகம் செய்தும் மறியலில் ஈடு பட்டிருந்தவர்களை அகற்றி ராமனை கைது செய்து வண்டியில் ஏற்றிச் சென்றனர்.

தொடரும்....

மதுரை மைந்தன்
13-12-2008, 08:27 AM
விஞ்ஞானி (பாகம்-13):

வெகு வேகமாக நடந்த நிகழ்வுகள் கிருஷ்ணனுக்கும் அவரது சகாக்களுக்கும் சற்று அதிர்ச்சியைத் தந்தது. ராமன் மீது அவதூறு வந்த பிறகு அவர் மெஷினை விட்டு விலகிடுவார் என்றும் அப்போது கிருஷ்ணனும் அவரது சகாக்களும் அதைக் கைப்பற்றி விடலாம் என்று நினைத்திருந்தனர். ஆனால் அரசு வெகு விரைவில் மெஷினை சீல் வைத்து அதற்கு போலிஸ் காவலையும் ஏற்படுத்தியிருந்தது அவர்கள்து திட்டத்தை குலைத்து விட்டது.

இருந்தாலும் விடாமல் அவர் மூப்பனாரை அணுகினார். தன்னை தானே அறிமுகம் செய்து கொண்டு அவரிடம் பேச ஆரம்பித்தார். " மும்பையில் ராமனும் நானும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். அவரது பாட்டனார் காலமான பிறகு ராமன் நிலை குலைந்து போனார். தனக்கு தானே பேசிக் கொள்வார். காற்றிலிருந்து தண்ணீர் உருவாக்கும் இயந்திரம் என்று முணு முணுத்துக் கொள்வார். ஆனால் உண்மையில் அந்த மெஷினை நான் தான் உருவாக்கினேன். ராமன் என்னுடன் ஒட்டிக் கொண்டு அதன் ரகசியங்களைக் கற்றுக் கொண்டார். நான் அவர் மீதிருந்த பரிவால் அதை பொருட் படுத்த வில்லை. உங்க கிராமத்துக்கு வந்து அந்த மெஷினை நிறுவி இங்கே இருக்கிற தண்ணீர் பிரச்னையை தீர்க்க வேணும் என்று சொல்வார். நானும் அதை வரவேற்றேன். ஆனால் எங்க ஆராய்ச்சி கூடத்து தலைவர் அதை ஒப்புக் கொள்ள வில்லை. இதனால் ஆத்திரமடைந்த ராமன் அந்த மெஷினை உடைத்து தன்னையும் காயப் படுத்திக் கொண்டார். நாங்கள் அவரை மருத்துவ மனையில் சேர்த்த போது அங்கிருந்த மருத்துவர்கள் அவருக்கு மன நோய் இருப்பதாகவும் சமயங்களில் வன்முறையில் ஈடுபடக்கூடும் என்று அவரை கட்டிலுடன் கட்டிப் போட்டனர். இருந்தும் அவர் எப்படியோ தப்பி இங்கு வந்து அந்த மெஷினை நிறுவியுள்ளார். மெஷினிலிருந்து வந்த தண்ணீரில் அமிலக் கலப்படம் வந்தது எனக்கு ஆச்சரியத்தை தரவில்லை. ஏனெனில் அவருக்கு அந்த மெஷினைப் பற்றி முழுமையாக தெரியாது. என்னை அந்த மெஷினை பார்வையிட அனுமதி வாங்கித்தந்தீரகளானால் நான் அதை சரி செய்து உங்களுக்கு தூய தண்ணீரை வழங்கச் செய்வேன்" என்று கூறினார்.

கிருஷ்ணன் டீபசிக் கொண்டிருக்கையில் மூப்பனார் நினைத்தார் " ராமன் எங்கே இந்த ஈளு எங்கே. குறுக்குபுத்தி காரராயிருப்பார் போல இருக்கு. ராமன் கஷ்டப்பட்டு உருவாக்கின மெஷினை இந்த சூழ்ச்சிக்காரர்கள் எப்படியாவது கைப்பற்றி தங்களுக்கு சாதகமா பயன் படுத்திக்க நினைக்கிறார்கள்".

அவர் கிருஷ்ணனிடம் கூறினார் " கவலைப் படாதீங்க. மெஷின் இப்போ சி.பி.ஐ விசாரணையில் இருக்கிறது. அதனால நான் உங்களை அதன் பக்கத்திலேயே போக அனுமதிக்க முடியாது. எங்க கிராமத்தில ஒரு பழமொழி இருக்கு. அது ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவனை மறைக்க முடியாது". மூப்பனாரின் பதிலைக் கேட்டு நிராசையுற்று கிருஷ்ணன் திரும்பினார்.

தேர்தல் நேரம் நெருங்கியதால் அரசு துரிதமாக செயல் பட்டது. சி.டிp.ஐ குழு கிராமத்தில் மக்களிடம் மெஷினைப் பற்றி விசாரித்த பின் கிருஷ்ணனையும் அவரது நகாக்களையும் விசாரித்தனர். ஒரு வாரம் கழித்து சென்னை திரும்பிய குழு ராமனையும் விசாரித்தனர். ராமன் ராமன் தன்னை போலிஸ்காரர்கள் நன்றாக நடத்தியதற்கு நன்றி தெரிவித்தார். அவருக்கு வேண்டிய உணவுஇ படுக்கை மின் விசிறி படிக்க புத்தகங்கள் என்று ராமனுடய தேவைகளை பூர்த்தி செய்தனர் போலீஸார்.

சி.பி.ஐ குழு ராமனிடம் அவர் மெஷினுடன் இருந்த போது யாராவது அவரை சந்தித்தார்களா என வினவிவுடன் ராமனுக்கு நினைவு வந்தது. அவரை ஒரு நபர் தன்னை கிராமத்து சுகாதார அதிகாரி என்று சொல்லிக் கொண்டு மெஷின் தண்ணிரில் குளோரின் கலக்க வேண்டும் அது தண்ணீரை சுத்தம் ஆக்குவதற்கு அவசியம் என்றும் கூறியதை நினைவு கூர்ந்த ராமனனுக்கு அமிலக் கலப்படம் எப்படி நிகழ்ந்திருக்கக்கூடும் என்று விளங்கியது. மெஷினில் உருவாகும் தண்ணீரை சுத்தப் படுத்த அர்ட்ரா வயலட் கதிர்களைப் பயன் படுத்தியிருந்தாலும் ராமனால் அந்த கிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்த போலி சுகாதார அதிகாரியைத் தடுக்க முடிய வில்லை. மெஷினுக்குள் செலுத்தப்பட்ட குளோரின் மெஷினில் உரவாகிய ஹைட்ரஜன் வாயுடன் இணைந்து ஹைட்ரோக்ளோரிக் என்ற அமிலமாக மாறிவிட்டது.

சி.பி.ஐ குழுவில் இருந்த விஞ்ஞானிகள் ராமனின் சுற்றை ஏற்றுக் கொண்டு அவர் நிரபராதி என்று அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உடனே அரசு அவரை விடுதலை செய்தது.

அடுத்த பாகத்தில் முற்றும்.....

மதி
13-12-2008, 08:55 AM
பரபரன்னு...எழுதிட்டீங்க.. அப்படியே நேரில் பாக்குற மாதிரி இருக்கு.
முடிவை எதிர்நோக்கி...

மதுரை மைந்தன்
17-12-2008, 11:37 AM
விஞ்ஞானி- இறுதி பாகம்

ராமன் விடுதலை ஆனவுடன் அவரது மனைவியும் மகளும் வந்து அவருடன் சேர்ந்து கொண்டனர். ராமன் அவரது குடும்பத்தினருடன் இணைந்து மகிழ்ந்திருந்த அதே நேரம் அரசு மேற் கொண்டு என்ன செய்வது என்று யோசித்ததுக் கொண்டிருந்த வேளையில் கர்நாடகாவில் காவிரி உற்பத்தியாகும் இடத்தில் மழைக் கடவுள் தன் கண்ணைத் திறக்க மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது. கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி வழிய கரநாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீரை தர மறுத்தாலும் இயற்கை காவிரி ஆற்றில் வெள்ளமாக பெருக்கெடுத்தது. தமிழக அரசு இதை பயன் படுத்தி மழை வந்தது அரசின் நல்லாட்சிக்கு கடவுள் தந்த பரிசு என்று சென்னையில் சுவரொட்டிகள் தோன்றின.

ராமனுக்கு ஒரு பாராட்டு விழாவை அரசு ஏற்பாடு செய்தது. அந்த பாராட்டு விழாவில் பேசிய முதல்வர் " இத்தகைய அற்புதமான மெஷினைக் கண்டுபிடித்த விஞ்ஞானி நமக்கு கிடைத்தது நாம் செய்த பெரும் பேறு. தற்சமயம் காவிரியில் வெள்ளப் பெருக்கு இருந்தாலும் வருங்காலத்தில் வறட்சி வந்தால் இந்த மெஷின் அச்சமயம் பெரிதும் பயன் படும். இதைத் தவிர தமிழ் நாட்டில் ராமநாதபுரம் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் மக்கள் குடி நீர் பற்றாக்குறையில் தவிக்கிறார்கள். தண்ணீர் எடுத்து வர மகளிர் பல கிலோ மீட்டர் தூரங்கள் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இக்குறையை போக்க இந்த மாவட்டங்களில் ராமனின் மெஷின்களை நிறுவ அரசு முடிவு செய்துள்ளது. (கூட்டத்திலிருந்து பலத்த கைதட்டல் எழுந்தது முதல்வரின் இந்த அறிவுப்புக்கு). இது முதல் கட்ட நடவடிக்கையாகும். பின்னர் இத்திட்டம் தமிழகத்து அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவு படுத்துப்படும். மாநில அரசு இத்திட்டத்தை செயல் படுத்த ஒரு வாரியத்தை அமைத்து அதற்கு விஞ்ஞானி ராமனை தலைவராக நியமிக்கிறது. (கூட்டத்திலிருந்து மீண்டும் பலத்த கைதட்டல் எழுந்தது). இப்போது நான் திரு; ராமனுக்கு இந்த பொன்னாடையைப் போர்த்துகிறேன்" என்று சொல்லி காமெராக்கள் பளிச்சிட பலத்த கைதட்டலுக்கிடையே ராமனுக்கு பொன்னாடையை போர்த்தினார். முதல்வர் ராமனை பேச அழைத்தார்.

ராமன் சென்னார் " இன்று என் வாழ்வில் ஓர் பொன்னாள். காற்றிலிருந்து தண்ணீரை உருவாக்கும் மெஷினை எனது கிராமத்தில் நிறுவுவது எனது நெடு நாளான கனவாகும். விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள் மனித வாழ்வை மேம் படுத்தும் என்பதற்கு இந்த மெஷின் ஒரு உதாரணம். இன்று விஞ்ஞானக் கண்டு பிடிப்புகள் மூலம் கணிணி இணையதளம் தொலை தூர தொடரபுகள் ஆகிய முன்னேற்றங்கள் இருந்தாலும் மனித வாழ்விற்கு தேவையான அடிப்படை தேவைகளான குடி நீர் உணவு மற்றும் இருப்பிடம் பலருக்கு இன்னும் கிடைக்க வில்லை. இதற்கு தேவையான மெஷின்களை கண்டு பிடிப்பதில் என் ஆராய்ச்சியைத் தொடருவேன். முதல்வர் அவர்கள் தனது உரையில் புதிதாக அமைய விருக்கும் வாரியத்திற்கு என்னைத் தலைவராக நியமிப்பதாக கூறினார். நான் இந்த பொறுப்பை ஏற்க இயலாத நிலையில் இருப்பதை தாழ்மையுடன் கூறிக் கொள்கிறேன். நான் எனது கிராமத்திற்கு திரும்ப சென்று மக்களுக்கு கல்வி அறிவு தரும் சேவையில் என்னை ஈடு படுத்திக் கொள்ள விரும்புகிறேன். இந்த கிராமத்தில் ஒரு விஞ்ஞானக் கல்லூரியை எனது பாட்டனார் பெயரில் நிறுவி அதில் அனைவருக்கும் இலவசமாக கல்வியை அளிக்கவும் அங்கு எனது ஆராய்ச்சிகளைத் தொடரவும் விரும்புகிறேன். இதற்கு அரசு வேண்டிய வசதிகளை செய்து தருமாறு முதல்வரை வேண்டிக் கொள்கிறேன். எனது இந்த பணியில் எனது துணைவியாரும் துணை இருக்க விருப்பமாயுள்ளார்".

ராமனின் கோரிக்கையை ஏற்று அவரது கிராமத்தில் ஒரு கல்லூரியை அரசு நிறுவும் என்று முதல்வர் வாக்குறுதி அளித்து ராமனை புதிதாய் அமைய விருக்கும் வாரியத்திற்கு ஆலோசகாராவது இருக்க வேண்டும் என்று கூற ராமனும் அதை ஏற்றுக் கொண்டார். ராமன் மனைவி மகளுடன் முதல்வரிடம் விடை பெற்றுக் கொண்டு கிராமம் செல்ல எக்மோர் ரயில் நிலையத்திற்கு சென்றனர்.

ராமனை அரசு விடுதலை செய்ததும் கிராமத்தில் மெஷினுக்கு பாதுகாப்பாக இருந்து போலிசை அகற்றி விட்டது. இதை பயன் படுத்திக் கொண்ட கிருஷணனும் அவரது சகாக்களும் மெஷின் ஷெட்டிற்குள் நுழைந்து மெஷினின் பாகங்களை குறிப்பொடுத்துக் கொண்டிருந்தனர். இயற்கை தனது நீதியை பலத்த மழையாகவும் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்காக கொண்டு வந்து மெஷின் ஷெட்டையும் கிருஷ்ணனையம் அவரது சகாக்கiளுயும் அடித்து சென்றது.

காவிரி ஆற்றுப் படுகையிலிருந்த அந்த கிராமத்தில் மறு நாள் காலை மழை நின்று சூரியன் உதித்தான். அஞசலை வழக்கம் போல தாமதமாக எழுந்து அவசரமாக வாசலில் கோலம் போட வந்தாள். வெளியில் வந்த அவளுக்கு கிராமத்து மக்கள் கும்பலாக நின்று பேசிக் கொண்டிருப்பதையும் சிரல் ரயில் நிலையத்திற்கு செல்லும சாலையில் செல்லத் துவங்கியதையும் கண்டாள். அருகிலிருந்த ஒரு பையனை அழைத்து விசாரிக்கையில் ராமன் மனைவி மகளுடன் சென்னையிலிருந்து வருவதாகவும் அவரைகளை வரவேறகத்தான் அனைவரும் செல்வதாக அறிந்து அவளும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாள்.

முற்றும்
_______________________________________________________________________

பின்னுரை: அறிஞர் அவர்களைத் தலைவராகக் கொண்டு அறிவியியலில் ஈடுபாடுள்ள நண்பர்கள் பலர் இருப்பதை அறிந்து இந்த தொடர் கதையை நான் மன்றத்தில் பதிவு செய்தேன். ஆனால் மற்ற கதைகளுக்கு கிடைக்கும் ஆதரவு இந்த கதைக்கு இல்லாதது எனக்கு ஏமாற்றமே. இருந்தும் நண்பர்கள் மதி சிவா.ஜி போன்றவர்களின் பாராட்டுக்கள் என்னை இத் தொடரை பூர்த்தி செய்ய உதவியது. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

அக்னி
17-12-2008, 12:44 PM
முதற் பத்தியே முடிவிலும்...
:icon_b::icon_b::icon_b:

எனது கருத்தைப் பின்னர் பதிவு செய்கின்றேன்.

ராஜா
17-12-2008, 01:03 PM
அறிவியல், சமூக சிந்தனை, அடிப்படைத் தேவைகள் சார்ந்த விழிப்புணர்வு, அரசியல், அழுக்காறு, இறை நம்பிக்கை, நடப்பு வாழ்க்கை பிரச்னைகள், தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும்.. தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற முதுமொழியை உண்மையாக்கியமை... என்று சகல பிரிவிலும் தன் திறமையைக் காட்டியிருக்கிறார் அன்பு மதுரை..!

நல்ல விறுவிறுப்பான கதை.. ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.. சபாஷ் தலைவா..!!!

பாரதி
17-12-2008, 01:58 PM
நல்ல கதையைக்கொடுத்தமைக்கும், விடா முயற்சியுடன் எழுதி கதையை நிறைவு செய்தமைக்கும் இதயம்கனிந்த பாராட்டு மதுரை மைந்தரே!

சிவா.ஜி
18-12-2008, 03:54 AM
நிறைவாக நிறைவு பெற்றது இந்தத் தொடர். நடப்புக்கால அரசியல், நிகழ்வுகள் என எல்லாம் கலந்து நல்லதொரு விஞ்ஞானியின் கதையைக் கொடுத்த மதுரை மைந்தருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள்.

மதி
18-12-2008, 06:15 AM
அழகான முடிவு மதுரை மைந்தரே.. இப்போது தான் படிக்க முடிந்தது. எடுத்துக் கொண்ட கருவை பிசிறில்லாமல் படைத்துள்ளீர்.

பாராட்டுக்கள்...

மதுரை மைந்தன்
18-12-2008, 07:20 AM
பின்னூட்டங்கள் போட்டு என்னைப் பாராட்டி வாழ்த்திய அன்பு நண்பர்கள் அக்னி ராஜா பாரதி சிவா.ஜி மதி ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். என் முயற்சி வீண் போகவில்லை என்று அறிந்து மனம் நிறைவு பெறுகிறது.

அக்னி
18-12-2008, 05:55 PM
ராஜா, சிவா.ஜி அண்ணாக்கள் சொன்னதுபோல்,
வாழ்வியலின் அனைத்துப் பிரிவுகளையும் தன்னுள் அடக்கியபடி,
விரிந்த இந்தத் தொடர்கதை சிறப்பாகவும், சீரியதாகவும் இருந்தது.

தொடர்கதை எழுதுவதென்பது, இலகுவானதொன்றல்ல.
உறுதியும், ஊக்கமும் இருந்தாலே சாத்தியமானதாகும்.
அது உங்களிடம் நிரம்பவே, நிறைவாக இருந்தது.
அதற்கு முதலில் சபாஷ்...

ஒரு கிராமக் களத்திற் தொடங்கிய கதை,
பெரும் நகரங்களையும், உயர் விஞ்ஞான நுட்பங்களையும் சுற்றிவந்து,
மீண்டும் கிராமத்திலேயே நிறைவுபெற்றது.
அனைத்தையும் இணைத்ததில், இயல்பு இருந்தது.
அதற்கு அடுத்த சபாஷ்...

கதையில் சகல அம்சங்களும், சிறப்பாக விவரிக்கப்பட்டிருந்தன.
அவை உண்மையாகவும் இருந்தன.
அதற்கும் ஒரு சாபாஷ்...

உரையாடல்கள் இலக்கணத் தமிழில் இருப்பது,
கதையின் இயல்பையும், யதார்த்தத்தையும் சற்றே குறைப்பதாக எனக்குத் தோன்றுகின்றது.
உரையாடல்களின் போது பேச்சுவழக்குத் தமிழைப் பயன்படுத்தியிருப்பின்,
இந்த இயல்பும் யதார்த்தமும் முழுமை பெற்றிருக்கலாம்.

தொடரப்போகும் உங்கள் எழுத்துக்களைத் தொடரக் காத்திருக்கின்றேன்.

மிகுந்த பாராட்டுக்கள் மதுரையின் மைந்தரே...

நிரன்
20-12-2008, 11:44 AM
கதையை நான் முழுமையாக ஒரே இடத்தி்ல் இருந்து படித்து முடித்தேன்
மிகவும் நன்றாக உள்ளது கதை பாட்டனார் கூறியது போல்
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவனை மறைக்க முடியாது
ஒருவருக்கு கிடைக்க வேண்டிய பாராட்டையும் புகழையும் யாரும்
தட்டிப்பறிக்க முடியது அப்படிப்பறித்தாலும் அது என்றும் அவரிற்கு
நிலைக்காது என்பதனை கதையின் மூலம் நன்றாக தெரிகிறது.

அருமையான கதை பாராட்டுக்கள்:icon_b:

SureshAMI
17-03-2009, 08:51 AM
super

மதுரை மைந்தன்
18-03-2009, 10:06 AM
super

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி SureshAMI

நாஞ்சில் த.க.ஜெய்
14-08-2012, 06:08 PM
அடுத்து என்ன என்று ஆர்வத்தினை தூண்டி மிக அருமையான எழுத்து நடையில் இறுதிவரை கொண்டு சென்ற தோழர் மதுரை மைந்தன் அவர்களுக்கு என் வாழ்த்து ..அதே நேரம் கதை சொல் பேச்சு நடை வழக்கில் இருந்திருந்தால் இன்னும் மெருகு கூடியிருக்கும் ..இன்னும் கொஞ்சம் என்று ஆர்வத்தினை தூண்டிய அருமையான அறிவியல் புதினம் ..

கீதம்
19-08-2012, 06:14 AM
இன்றுதான் இக்கதையை முழுவதுமாய் வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது. ஒரே மூச்சில் முழுவதையும் வாசித்தேன். ஆராய்ச்சிக்கென தன்னை அர்ப்பணித்துவிட்டு, குடும்பத்தையும் மறந்து, புதிய கண்டுபிடிப்பொன்றை உருவாக்கிய ஒரு விஞ்ஞானிக்கு, அவர் துறையின் சக ஆய்வாளர்களின் போட்டி மனப்பான்மையினால் எதிர்கொள்ள நேரிடும் சிக்கல்களையும், பிரச்சனைகளையும் அருமையாய் விளக்கியுள்ளீர்கள்.

நன்றாயிருக்கும் ஒருவனைப் பைத்தியமாக்கவும் துணிந்துவிடுகிறது, புகழ்போதையும், பணத்தாசையும். ஒரு நல்ல விஞ்ஞானி சமுதாய நலனைக் கருத்தில் கொண்டே செயல்படுவான் என்பதை ராமன் மூலம் தெளிவாக்கியமை பாராட்டுக்குரியது. இறுதியில் ஆராய்ச்சியைக் கைவிட்டு ஆசிரியப் பணிக்கு ராமன் திரும்புவது சற்றே வருத்தமளிக்கும் திருப்பம்.

நல்லதொரு கருவை மையமாய்க் கொண்டு அறிவியல் தகவல்களையும் இடையில் தந்து, மனிதநேயம் கலந்து, கதையைக் கச்சிதமாய் முடித்தமைக்குப் பாராட்டுகள் மதுரை மைந்தன் அண்ணா. அரசியல் பின்னணியில் அலைக்கழிக்கப்படும் ஆராய்ச்சி முடிவுகள் பற்றிய விவரங்களையும் வெளிப்படுத்தியமை சிறப்பு.