PDA

View Full Version : சாருவின் தப்புத்தாளங்கள் புத்தகத்திலிருந்து....



தங்கவேல்
26-07-2008, 03:44 PM
சாரு நிவேதிதா அவர்களின் தப்புத்தாளங்கள் புத்தகத்தை மிகச் சமீபத்தில் படிக்க நேர்ந்தது. அதில் ஒரு கட்டுரை ”உழைப்பே விடுதலை செய்யும் “ எழுதி இருக்கிறார். அதைப் படிக்கையில் வாழ்வின் மீதான பிடிப்பு என்னை விட்டு அகன்றோடியது போல இருந்தது.

மனிதனுக்காக மனிதனால் உருவாக்கப்பட்ட கொலைக்களத்தினை மிக விரிவாக எழுதியிருந்தார். ஜெர்மனியில் இருக்கும் ஷாஸன்ஹெளஸன் என்ற இடத்தில் இருக்கும் கொலைக்களத்தின் புகைப்படம் இத்துடன் பார்வைக்கு இணைத்துள்ளேன்.

Station Z, Site of the Gallows, Pathology போன்ற வார்த்தைகளைப் படிக்கும் போது எனக்குத் தோன்றிய உணர்ச்சியினை வெளியிட வார்த்தைகள் இல்லை.
http://www.tamilmantram.com/photogal/images/1640/medium/1_sachsen1.gif

poornima
27-07-2008, 06:44 AM
தப்புத்தாளங்கள் - மேற்குலகு நோக்கிய ஒரு இருத்தலியல் பார்வையும் சற்றே பின்நவீனத்துவ கருக்கட்டுரைகளையும் கொண்டது.நிறைய கட்டுரைகள் இதேபோல் திடுக் உணர்வுகளை தரக்கூடியது. என்னைப் பொறுத்தவரை அதில் வரும் மொராக்கோ விடுதலைக்கு முன்னதான கட்டுரையும் அதன் ஆட்சியாளர் ஹசன்( ? ) ஆண்ட கொடுமையான ஆட்சித்தனம் - அந்த சிறைச்சாலை எல்லாமே கொஞ்சம் நெஞ்சை உறைய வைப்பவை..

பாலியல் நோக்கு கலந்து எழுதுபவர் என்ற பார்வையாலேயே சாருநிவேதிதாவின் எழுத்துக்கள் நிராகரிக்கப்படுகின்றன என்பது மிகப்பெரிய வருத்தம்.ஆனாலும் விளக்கு எங்கிருந்தாலும் தன்னிறைவு கொண்டது.

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

மாதவர்
15-08-2008, 10:08 AM
எல்லாம் வியாபாரம்ம் தான்