PDA

View Full Version : இது கவிதையல்ல



Keelai Naadaan
26-07-2008, 12:31 PM
பட்சிகளுக்கு வானமுண்டு
பாலூட்டிகளுக்கு கானகமுண்டு
மானிடர்க்கோ கால் வைக்க இடமில்லை

ஜன நெரிசலான சாலை
மாலை நேரம்
சாலையெல்லாம் சந்தை போல்
கடை விரித்தோரும்
கொள்வோரும்
வாகனங்களும்
பாதசாரிகளும்

உயிரை வளர்க்க
உறவுகளை காக்க
உண்ண நேரமின்றி
உறங்க நேரமின்றி
ஓடிஉழைக்கும் ஜீவன்கள்

திடீரென வினோதமாய்
படா..ரென சத்தம்

மின்னி மறைந்தது
செம்மின்னலாய் தீப்பிழம்பு

அடித்து ஓய்ந்தது
அனல் காற்று

கரும் புகை மூட்டம்
எதோ கருகிய நாற்றம்

என்ன ஆனது?

????!!!!!!!

வீதியிலே திட்டுதிட்டாய்
குருதி குளங்கள்
சிதைந்த குப்பைகளாய்
உடலின் பாகங்கள்

வெந்த உடல்களில் ஆவி பறக்கிறது.
ஆவி பிரிகிறதோ..?

பாதி உயிராய் முனகும் உடல்களில்
பரிதாப அலறல் ஓலங்கள்
மிஞ்சிய உயிரை காக்க

அழுகை.. அழுகை.. அழுகை..
உறவுகள் கதறும் ஒலி
ஏம் மகன்!!
ஏங் கொழந்த!!
என்னம்மா!!

யாரோ சொன்னார்
வெளிக்காட்டா சிரிப்புடன்
"ஆபரேஷன் சக்சஸ்"

பன்றி ஒன்று குட்டிகளுடன் ஒடியது
பிர்ர்..பிர்ர்..பிர்ர்ர்.. என கத்திக்கொண்டு
அருவருப்பாய் சொன்னது
மனுசன் குண்டு வைச்சுட்டான்

பத்திரிக்கைகள்
பக்கங்களை நிறைத்தன
செய்தி போட்டு.

அஞ்சலிகள்
அனுதாபங்கள்
ஆறுதல்கள்
கண்டனங்கள்
ஆத்ம சாந்தி பிரார்த்தனகள்

பழிவாங்கிய செயலுக்கு
நியாயம் சொல்கின்றன
தீவிரவாத இயக்கங்கள்

பாதிக்கபட்டவர்களே
தீவிரவாதிகளாகிறார்கள்
அதனால்

தீவிரவாதிகள் வாழ்க
தீவிரவாத தலைவர்கள் வாழ்க
தீவிரவாத கொள்கைகள் வாழ்க
தீவிரவாத பழிவாங்கல் வாழ்க
தீவிரவாத இயக்கங்கள் வாழ்க
தீவிரவாத அரசுகள் வாழ்க
அவர்களின் பேடித்தனமான வீரம் (!?) வாழ்க

என் அப்பாவி மக்களை
எப்படி காப்பது?

சிவா.ஜி
26-07-2008, 01:57 PM
சரியாகச் சொன்னீர்கள் கீழைநாடன். பேடிகள்தான் அவர்கள். மறைந்திருந்து அப்பாவி மக்களைக் கொல்லும் அவர்களை பேடிகள் என்று சொல்லாமல் வேறென்னவென்று சொல்வது. பாதிக்கப்பட்டவர்களுக்காக எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

இளசு
26-07-2008, 02:03 PM
உங்கள் பொங்கும் சினத்தில் நானும் பங்கு கொள்கிறேன் கீழைநாடன்..

குறிப்பாய் பன்றிகள் சொல்லும் வாசகம் - பேடி மனித மிருகங்களுக்கு உரைக்கட்டும்..

Keelai Naadaan
27-07-2008, 04:00 AM
நன்பர்களே உங்களின் பின்னூட்டங்களுக்கு நன்றிகள்

தீவிரவாதிகளை அப்பாவிகள் புரிந்து கொள்கிறார்கள்.
அப்பாவிகளைத்தான் தீவிரவாதிகள் புரிந்து கொள்வதில்லை.
பாவம் ஒருபக்கம் பழி ஒரு பக்கம் என்பது போல்
இவர்களின் கோபம் ஒரு பக்கம் கொலைகள் ஒரு பக்கம்