PDA

View Full Version : எனது காதல் கதைகள்....



shibly591
26-07-2008, 04:03 AM
காதல் கதை என்று எனது கதைக்கு தலைப்பிடுவது பொய்யாகிப்போய் விடும்...

காதல் கதைகள் என்று பன்மைப்படுத்தப்படுவதே சரியானது...

ஒன்பதாம் வகுப்பில் காதலித்த பெண்ணுக்கு ஒரு பொறியியலாளர் கணவராகிவிட்டார்..

பதினொன்றில் காதலித்த பெண் பற்றி இன்றுவரை தகவல் இல்லை..

பதின்மூன்றில் காதலித்தவளை எனக்கே பிடிக்கவில்லை..

பல்கலைக்கழகத்தில் என்னை காதலித்த இருவருமே எனக்கு 2 வருடத்துக்கு மூத்தோர்கள்..

இருபது வயதில் ஒரு முகம் காணா இறுக்கமான காதல்...இதை மட்டும்தான் எனது கதையில் உண்மையான அன்பிலும் பிணைப்பிலும் பூத்ததொரு காதல் எனச்சொல்வேன்..(உபயம்---செல்போன்)

எனது கவிதைகளின் ரசிகையாக அறிமுகமானவள்..அப்போதெல்லாம் தினகரன் வாரமஞ்சரியில் எனது கவிதைகள் தொடர்ந்து பிரசுரமாகி வந்த மல்லிகை நாட்கள்..கிறுக்கல்கள் பிரசுரமாவதாக சக நண்பர்கள் கிணடலடித்த நிலையில் இரத்தினபுரியிலிருந்து ஒர மடல்..."காதலிக்கிறேன்..உங்கள் கவிதைகளை.."என்று அவள் எழுதிய வரிகளை இதுவரை நான் குறைந்தது மூன்று லட்சம் தடவைகளாவது படித்திருப்பேன்...

அதுதான் எனது கவிதைகளை பாராட்டி வந்த முதல் மடல்..அதில் அவள் உயிர் செதுக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தேன்..(பாராட்டுக்களை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அப்போது வாய்க்காததால் வந்த வினை)

முடிவு...தினகரனுக்கு தபாலிட வேண்டிய எனது புதிய கவிதைகள் இரத்தினபுரிக்கு போகலாயிற்று...

180 நாட்கள்...7 மடல்கள் எங்கள் சொந்த விடயங்களின் சகலமம் பரிமாறப்பட்ட பிறகுதான் முதல் முதலில் தொலைபேசியில் உரையாடினோம்...(2005-06-04)

அவள் குரல் சத்தியமாய் என்னைக்கவரவில்லை..இருந்தும் குயில் போல (எல்லோரும் சொல்லும் பொய்தான்...இந்த விடயம் நல்லவேளை குயிலுக்கு தெரிய வாய்ப்பில்லை)என்று நான் சொன்னதை அவள் நம்பவில்லை..

பிறகு மடல்கள் பரிமாறப்படவில்லை..தொலைபேசியில் தேவையற்ற எல்லாமம் பேசத்தொடங்கினோம் காதலர்களைப்போல..(பிறகு..வேற சொல்லுங்க..மௌன இடைவெளிகள்..விஷேஷம்..?? நலமா..?ஹலோ என்று நூறுமுறை...என்ன செய்றீங்க என்று திரும்பத்தீரும்ப) பேசலானோம்...

எஸ்.எம்.எஸ் இன் துணையுடன் காதலையும் பகிர்ந்துகொண்டோம்...நல்லவேளை இதற்கு முன் அவளும் ஒருத்தரை விரும்பியிருக்கிறாள்..அதனால் எனது பழைய காதல்களைப்பற்றி அவள் அலட்டிக்கொள்ளவேயில்லை...

5 மாதங்கள் ஒருவரை ஒருவர் பாராமல் நல்லதொரு காதல் எங்களை ஆசிர்வதித்திருந்தது..

கொழும்பில் ஒருமுறை இருவரும் சந்திப்பதென்று முடிவெடுத்து 10 செக்கன் மட்டுமே பார்த்துக்கொண்டோம்..அவள் தாயுடன் சொப்பிங் வந்திருந்தாள்..அவள் சொன்ன நேரத்தில் அவள் சொன்ன இடத்தில் அவள் சொன்ன ஆடை நிற அடையாளத்தில் அப்போது இருந்த ஒருவளை அவளாக இருக்கக்கூடும் என்கிற ஊகத்தில் பார்த்துக்கொண்டோம்..அவளும் என்னை ஊகத்திலேயே பார்த்திருக்கிறாள்..நான் அவளுக'கு கொடுப்பதற்கென்று வாங்கிய அன்பளிப்பு இப்போதும் என்னிடமுண்டு..பின்னர் தொலைபேசியில் ஊகத்தை தெளிவாக்கிய பிறகுதான் சரியாகத்தான் அடையாளம் கண்டோம் என்று திருப்திப்பட்டோம்..அழகாகத்தான் இருந்தாள் அவள் தாயைப்போலவே..(?????????)

நாட்கள் நகர்கின்றன..காதலின் உள்ளார்ந்த அர்த்தத்தையும்..அதன் படிமங்களையும் தொடர்ந்து கற்றுக்கொண்டிருந்தேன்..அவளின் தூய அன்பின் வழியாக...

நாட்கள் நகர்கின்றன..

கனவுகளின் வாசலில் ஒவ்வொரு வினாடியும் கற்பனைக்கோலம் போட்டுக்கொண்டிருந்தேன்...அவள் மனைவியாக நான் கணவனாக....வாழ்வின் எல்லை வரை(நன்றி-வைரமுத்து) நாங்கள் இருவரும் மட:டம் தனித்து வாழ்வதாக நிறைய கற்பனைச்சிறகுகள்

ஒரே ஒரு மாறுதல்...அவள் பற்றியோ..அவள் அழகைப்பற்றியோ ஒரு கவிதைதானும் அந்த சர்க்கரைப்பொழுதுகளில் நான் எழுதவில்லை..(அவளைப்பிரிந்த பிறகு எழுதிக்குவிக்கிறேன் என்பது வேறு கதை)..

எங்கள் இருவருக்குமிடையலான காதலில் புயல் வீசத்தொடங்கிய அந்த சித்திரை மாதத்தின் முதல் தினம் விடிகிறது..

எனது வாழ்க்கையில் பாரிய சரிவொன்று எனக்காக காத்திருந்ததை எந்த அசரீரியும் எனக்குச்சொல்லவில்லை.

.தாங்கவொண்ணா பிரிவு பற்றி இன்று வரை நான் எழுதும் கவிதைகள் கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்கு முன்பு நேர்ந்த கொடூர வலிகளின் பூகம்ப அதிர்வுகளே...

மீள முடியாத அந்தப்பிரிவு எதனால்..?ஏன்..?யாரால...?எப்படி..?இப்பொழுது அவள் எங்கே..?காதலுக்கு என்ன ஆனது..?எல்லாமும் சொல்வேன்...சற்று பொறுங்கள்...

அதுவரை என் நிலையை ஒத்த சில பாடல் வரிகளை இரசியுங்கள்...

(என்ன நிகழ்ந்திருக்கக்கூடும் என்று ஊகிப்பவர்கள் உங்கள் ஊகங்களை பின்னூட்டமிடலாம்)

“மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து வானத்தில் உறங்கிட ஆசையடி...
நம்மாசை உடைத்து நார் நாராய் கிழித்து முள்ளுக்குள் எறிந்தது காதலடி..
கனவுக்குள்ளே காதலைத்தந்தாய அணுக்கள் தோறும் முத்தம்
கனவு கலைந்து எழுந்து பார்த்தால் கைகள் முழுக்க ரத்தம்..”

“கண்ணீரை கேட்கும்
காயங்கள் கூட்டும்
ஆயினும் காதலும் சாகுமா...???
உன்னோடு நீ மோதிடும் போர்க்களம்
அட அதுதானப்பா காதலும்...”

“கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்..
அதுபோல தானே உந்தன் காதல் எனக்கும்..
நடைபாதை விளக்கா காதல்
விடிந்தவுடன் அணைப்பதற்கு..??
நெருப்பாலும் முடியாதம்மா
நினைவுகளை அழிப்பதற்கு...”


“காதல் என்பது போதிமரம்
காயம் பட்டால் ஞானம் வரும்..
காதல் என்பது பாலைவனம்
ஆனால் அங்கும் நிலவு வரும்.

இது கண்ணால பேசி இரு இதயம்
தினம் ஆடிப்பார்க்கிற தாயமடா..
கண்ணாடி போல காதல்தான்
கையில் எடுக்கையில் கவனமடா....”

“காதல் தந்த வலி தீரும்
காதலினாலே....
கண்ணீரோடு முத்தங்கள்
கலந்ததினாலே...”


“தோற்றம் மாறலாம்
தொலைந்து போகலாம்
ஞாபக மேகம் மறையாதே.....”

“தவம் போதவில்லை என்றே
தேவதை வரவில்லையோ....”

“ஓடும் மேகங்கள் ஓய்வு கொள்ளலாம்..
மழையாய் பொழிந்தே தன் பாரம் தீர்க்கலாம்
அழுதால் கூட தீரா சுமையயே...
காதல் தீயில் கருகும் இமையே...

கண்கள் விளையாடி காதல் வந்தது
இதயம் களவாட துணிவு தந்தது
இதயம் தந்து இதயம் வாங்கும்
காதல் என்றும் வெல்லும் வெல்லுமே...”

“தூக்கி எறிய
தீயில் சரிய
காதல் மனம் என்ன காகிதமா..?
என்னை மீறி
உன்னை எண்ணினேன்..
ஒரு மின்னல் திரி இருள் அள்ளினேன்...

கைகள் கொடுத்து
தூக்கி நிறுத்து
வீழ்த்திச்சென்றவள் நீயல்லவா..?”

“வண்ணம் கலைந்து கிடக்கிறதே
வானவில்லே நீ எங்கே...?
வாசம் மட்டும் வருகிறதே...
பூவே உன் முகம் எங்கே..?
கொலுசின் ஓசை ஒலிக்கிறதே
கால்கள் சென்ற தடம் எங்கே..?
துடிப்பு மடடும் கேட்கிறதே
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே....?”

“அடி பெண்ணே பிரிந்தாய்
தேடும் போதே தொலைந்தாய்....”

“உன் விரல் பிடித்திடும்
வரம் ஒன்று கிடைக்க
உயிருடன் வாழ்கிறேன் நானடி..
என் காதலும்
என்னாகுமோ...
உன் பாதத்தில் மண்ணாகுமோ...????”

சுஜா
26-07-2008, 11:43 AM
"அமர்ந்து பேசும் நதியின் கரையும்
உன்னை கேட்கும் எப்படி சொல்வேன்
உதிர்ந்து போன மலர்கள் பேசுமா ?"
(இதையும் சேர்த்திருக்கலாம் )

நன்றாய் இருந்தது சிப்லி அண்ணா
இது நான் எழுதிய "புலம்பெயர்ந்த தேவதை கதை" கவிதையை நியாபகபடுத்துகிறது .

shibly591
26-07-2008, 12:13 PM
நனறி சுஜா..

அறிஞர்
26-07-2008, 05:15 PM
ஓவ்வொரு பருவத்திலும் ஒரு காதல்....

கடைசியாக வந்தவள் வாழ்க்கை துணையாகி...
மாற்றங்கள் பல ஏற்படுத்தி சென்றுவிட்டாள்...
அவளை எதிர்பார்த்து மன்னவன்.. காத்திருக்கிறான்..

அருமை ஷிப்லி..

shibly591
27-07-2008, 11:30 AM
நன்றி அறிஞரே..........

மற்ற யாருக்குமே எனது காதல் கதை பிடிக்கவில்லை போல...

சரி சரி இனி நான் இந்தக்கதையை தொடரவில்லை..

நன்றிகள்

அகத்தியன்
27-07-2008, 11:56 AM
..

பல்கலைக்கழகத்தில் என்னை காதலித்த இருவருமே எனக்கு 2 வருடத்துக்கு மூத்தோர்கள்..
இருபது வயதில் ஒரு முகம் காணா இறுக்கமான காதல்...இதை மட்டும்தான் எனது கதையில் உண்மையான அன்பிலும் பிணைப்பிலும் பூத்ததொரு காதல் எனச்சொல்வேன்..(உபயம்---செல்போன்)

எனது கவிதைகளின் ரசிகையாக அறிமுகமானவள்..அப்போதெல்லாம் தினகரன் வாரமஞ்சரியில் எனது கவிதைகள் தொடர்ந்து பிரசுரமாகி வந்த மல்லிகை நாட்கள்..கிறுக்கல்கள் பிரசுரமாவதாக சக நண்பர்கள் கிணடலடித்த நிலையில் இரத்தினபுரியிலிருந்து ஒர மடல்..."காதலிக்கிறேன்..உங்கள் கவிதைகளை.."என்று அவள் எழுதிய வரிகளை இதுவரை நான் குறைந்தது மூன்று லட்சம் தடவைகளாவது படித்திருப்பேன்...

...????”
இது எப்ப சொல்லவே இல்ல.
இப்பவாவது சொல்லுங்களேன்.

கென்ரீன் பக்க மாமரத்திற்கிட்ட மண் தோண்டும் போது எனக்கு மைல்டா ஒரு சந்தேகம்.:D :D :D பிறகு "சேச்சே.. சேச்சே அப்படி இருக்காது, அக்கா தம்பி உறவ இப்படி நினைக்கப்படாது." எண்டு எண்ணி விட்டா, இப்பதானே புரியுது.;) ;)

அட அவதானா அது? மத்தது எவ அவ? :redface::sprachlos020:

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
27-07-2008, 03:24 PM
படிக்க படிக்க திகட்டாத ஒரு வித்தியாசமான எழுத்தாக்கல். இன்னும் தொடருங்கள். நன்றி

யவனிகா
27-07-2008, 04:03 PM
உணர்ச்சிகரமாக இருக்கிறது...அழகான பாடல்களுடன் கால்மாற்றி நிற்க வைத்து போயிருக்கிறீர்கள்....தொடருங்களேன்!

அறிஞர்
27-07-2008, 09:32 PM
நன்றி அறிஞரே..........

மற்ற யாருக்குமே எனது காதல் கதை பிடிக்கவில்லை போல...

சரி சரி இனி நான் இந்தக்கதையை தொடரவில்லை..

நன்றிகள்
சில நேரங்களில் இங்கு இந்த நிலை ஏற்படுவதுண்டு......
அதை பெரிது படுத்தவேண்டாம்...
எழுதுங்கள்..

இன்னும் சில நாட்களில் தங்களின் பதிவுகள் பலரை கவரும்.

பென்ஸ்
27-07-2008, 10:56 PM
இது கதையா... காதல் காவியமா...!!!!

ஷிப்லி... காவியங்கள் வாசிக்கும் போது அதில் நாயகனாய் நம்மை நிறுத்தி பார்ப்பது வழக்கம். அதற்க்காகவே சில பொது குண நலங்களையும், சம்பவங்களையும் ஆசிரியர்கள் கொடுப்பார்கள்...
இங்கேயும்...
தொடருங்கள்...
ஒவ்வொரு பதிவையும் எதிர்ப்பார்த்து....

உங்கள் பேட்டி முடுவதும் பார்த்தேன்... உங்கள் பேச்சுவழமும் என்னை கவர்ந்திருந்தது....உங்கள் ரசிகர்கள் என்னிக்கையில் இன்னும் ஒருவரை கூட்டி கொள்ளுங்கள்...

நன்றி...

shibly591
28-07-2008, 03:54 AM
நன்றி அறிஞரே...
சில வேளை நிறையப்பேர் எனது காதலியாகியிருக்கிறார்கள் என்பது சிலருக்கு பிடிக்கவில்லையோ.....என குழம்பி விட்டேன்..

ஆறுதலுக்கு நன்றிகள்

shibly591
28-07-2008, 03:55 AM
நன்றி பென்ஸ்.....

எனது படைப்புக்களை ரசிக்கின்ற பாங்கை சொன்ன விதத்தை நானும் ரசிக்கிறேன்..

நன்றிகள் மீண்டும் மீண்டும்

sinnavan
28-07-2008, 02:51 PM
சில வேளை நிறையப்பேர் எனது காதலியாகியிருக்கிறார்கள் என்பது சிலருக்கு பிடிக்கவில்லையோ.....என குழம்பி விட்டேன்..

ஆறுதலுக்கு நன்றிகள்
பலர் வாழ்க்கையில்... பல காதலிகள் இருந்திருக்கிறார்கள்....

அமரன்
28-07-2008, 03:02 PM
ஷில்பி...
இது உங்கள் வாழ்க்கையில் கடந்து சென்ற ஒரு புயலின் பதிவு.. ஆறாத காயங்களுடன் எமக்காக..

அலைபேசும் காதல் வெகு சிலருக்குத்தான் காலுடைந்து கதலியாகிறது.. பலரின் நிலை சொல்லத்தேவை இல்லை...

காதலில் சோகமும் சுகம் என்று சொல்லக்கேள்வி..
தமிழ் உங்கள் மீது கொண்ட மோகமும் சேர்ந்தால்...
தேன் மழை மொழியுது தன் காதலை..
இதைவிடச் சிறப்பாகச் சொல்ல என்னிடம் திறமை இல்லை..

உங்கள் தொடரைத் தொடருங்கள்.. தொடர்ந்து வரக் காத்திருக்கிறோம்..

அகத்தியனுக்கு கொக்கி போட்டால் இன்னும் பல மாட்டும் போலிருக்கிறதே..

அறிஞர்
28-07-2008, 04:21 PM
காலத்தின் சூழ்நிலை.. ஓவ்வொரு வயதில் நம்மை கவர்வோர் சிலரே.. அவர்மீது காதல் வயப்படுதில் தவறில்லை.

எல்லாரும் சராசரி மனிதனே....

எழுதுங்கள் உங்கள் அனுபங்களை..

arun
28-07-2008, 06:51 PM
அடுத்து தங்களின் காதல் கதையா? தொடருங்கள்...

shibly591
29-07-2008, 03:39 AM
அகத்தியனுக்கு கொக்கி போட்டால் இன்னும் பல மாட்டும் போலிருக்கிறதே...

அகத்தியனுக்கு கொக்கி போடும்முன்னே...நானே சரணடைந்து விடுகிறேன்...

shibly591
29-07-2008, 03:40 AM
நன்றி நண்பர் கிஷோர் அவர்களே...

படைப்பின் யதார்த்தத்தை புரியும்படி சொல்லியிருந்தீங்க..

ரொம்ப நன்றி

தொடர்கிறேன் விரைவில்

மலர்விழி
29-07-2008, 12:34 PM
காதலின் வலி
கவர்ந்திழுக்கிறது அண்ணா...
வைரமுத்துவின் 'காதலித்துப்பார்' கவிதை
கண் முன் நிழலாடுகிறது...:rolleyes:

கடைசியா என்னா ஆச்சு???:frown:

shibly591
29-07-2008, 12:36 PM
பிரிஞ்சு போச்சு...எப்படி என்பதை விரைவில் சொல்கிறேனே மலர்விழி

பொறுத்திருங்கள்..

மலர்விழி
29-07-2008, 12:47 PM
அய்யோ!!!

பூமகள்
29-07-2008, 02:32 PM
சில கால உறவுகள்..
பல நேரங்களில்..
இறுதி வரை அடி மனதில் இருந்து
ரணப்படுத்திக்கொண்டே இருக்கும்..!!

காயம் ஆறட்டும்..!
வலி தீரட்டும்..!

உங்கள் கதை படித்ததும் இது தான் தோன்றியது..!

இங்கே தோள் சாய நிறைய தோழர்கள் உண்டு.
தொடருங்கள் ஷிப்லி அண்ணா..!!

shibly591
29-07-2008, 03:55 PM
நன்றி பூமகள்...

சில மறக்க முடியாத நிகழ்வுகள்
மறந்தேயாக வேண்டிய நினைவுகள்
எவ்வளவு முயற்சித்தாலும் மறக்க முடியாத உறவுகள்
இப்படி எல்லாமே...எல்லார் வாழ்விலும் சகஜம்தான்...

எது எவ்வாறாயினும் வலி வலிதான் இல்லையா...?

யாழ்_அகத்தியன்
29-07-2008, 10:01 PM
//முடிவு...தினகரனுக்கு தபாலிட வேண்டிய எனது புதிய கவிதைகள் இரத்தினபுரிக்கு போகலாயிற்று...//

உன்னோடு நீ மோதிடும் போர்க்களம்
அட அதுதானப்பா காதலும்...”


தொடருங்கள்

shibly591
30-07-2008, 02:41 AM
நன்றி யாழ் அகத்தியன்....

உங்கள் பாராட்டுக்கள் எனக்கு உற்சாகத்தை தருகிறது..

மீண்டும் நன்றிகள்

logini
30-07-2008, 04:13 AM
மனதை தளரவிடாமல் தொடர்ந்து எழுதுங்க ஷிப்லி.

shibly591
30-07-2008, 05:19 AM
நன்றி லோஜினி...

அகத்தியன்
30-07-2008, 05:27 AM
எங்கே நண்பரே உமது இரண்டாம் பகுதி?

உமது முதல் ரசிகன் நானல்லவா? சீக்கிரம் தாரும்.;) ;) ;)

எங்களுக்கு வேல இருக்கில்ல. (சிண்டு முடிய வேணாம்:D :D :D :D)

shibly591
30-07-2008, 05:35 AM
ஆமா......

இடையில புகுந்து ஒத்து ஊதி வம்புல மாட்டி விடுறதுக்குத்தான் இந்த அவசரமோ..............

தொடர்கிறேன் மிக விரைவில்...(என்ன பெரிய வேலை..???தூங்குறததானே..)

அகத்தியன்
30-07-2008, 05:41 AM
ஆமா......

இடையில புகுந்து ஒத்து ஊதி வம்புல மாட்டி விடுறதுக்குத்தான் இந்த அவசரமோ..............

தொடர்கிறேன் மிக விரைவில்...(என்ன பெரிய வேலை..???தூங்குறததானே..)

புத்திசாலிப்பா

எத சொன்னாலும் கண்டுபிடிச்சுடுவார். எனக்கு அதுதான் ரொப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப பிடிச்சிருக்கு:frown: :frown: :frown:

இளசு
30-07-2008, 06:38 AM
ஷிப்லி,

சுயக்கேலி என்னும் இனிப்பைப் பூசி
உங்கள் உள்ள உணர்வுகளைப் பரிமாறும் பாங்கு அருமை!

தொகுத்தளித்த கவிதை வரிகள் - ரத்தினங்கள்.

யவனிகா சொன்னதுபோல் கால்மாற்றி நிற்கவைத்து விட்டீர்கள்..

தொடருங்கள்..

shibly591
30-07-2008, 06:41 AM
ஷிப்லி,

யவனிகா சொன்னதுபோல் கால்மாற்றி நிற்கவைத்து விட்டீர்கள்..

தொடருங்கள்..

கால்மாற்றி நிற்கவைத்து விட்டீர்கள்.....அது என்ன கால்மாற்றி...................????

இளசு
30-07-2008, 06:43 AM
கால்மாற்றி நிற்கவைத்து விட்டீர்கள்.....அது என்ன கால்மாற்றி...................????

(அடுத்த பாக வரவை) எதிர்பார்த்து நின்றுகொண்டே இருக்கும் நிலை..

shibly591
30-07-2008, 07:43 AM
விரைவில் தொடர்கிறேன்..

நன்றி இளசு

தீபன்
10-08-2008, 01:51 AM
இன்றுதான் உங்க கதை படித்தேன் நண்பரே. சோகத்தை ரசனையோடு பகிர்கிறீர்கள். ஆனாலும் காதல் இளவரசனென்ற உங்க எண்ணம் கொஞ்சம் ஓவர்தான்... சரி போகட்டும், ஒன்னும் கிடைக்காத பொறாமயில சொல்றதெயெல்லாம் கவனத்தில எடுக்காதிங்க நண்பரே. மிச்ச கதய படிச்சிட்டு வாறன்.

sukanya
26-09-2008, 04:46 AM
அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்.

மௌனி

shibly591
26-09-2008, 04:57 AM
நன்றி மௌனி....

rajatemp
05-10-2008, 01:29 PM
தொடருங்கள் மற்றவர்களை பற்றி நினைக்காமல்
நல்ல பதிவு

அனுராகவன்
07-10-2008, 12:03 PM
அருமை நண்பரே!!

வசீகரன்
10-10-2008, 04:27 AM
ஷிப்லி உங்கள் காதல் ஞாபகங்கள் அவ்வளவுதானா..? பின்னூட்டங்கள் இடாமல் நிறையபேர் இந்த ஞாபகங்களை வாசித்துகொண்டிருக்கிறார்கள் என்னைப்போல்..! தொடருங்கள்....
நிறைய பேர் பழைய நினைவுகளுக்கு செல்ல காத்திருக்கிறார்கள்...

poo
11-10-2008, 06:05 AM
ஆரம்பத்தில் விளையாட்டாய் தோணுவது உண்மை.... ஏனெனில், ஒன்பதிலிருந்து பதிமூன்று வரை வந்தது காதல் இல்லையென கடைசியாய் உணர்ந்தும் அதை காதலென சொல்லியதால் ஒட்ட மறுத்தது உண்மை.. ஆனால் உருக்கமான, உச்சமான கவிதைப் பாடல்களில் ஒன்றியவுடன் எல்லாம் மறந்து.. மறைந்து, முடிவின் முடிவை ஆவலாய் எதிர்ப்பார்க்க வைக்கிறது... (முடிவை முன்னரே சொல்லியிருக்க வேண்டாம் என்பது என் கருத்து.....!!)

வாழ்த்துக்களுடன் தொடருங்கள் நண்பரே..

shibly591
13-10-2008, 08:11 AM
ஷிப்லி உங்கள் காதல் ஞாபகங்கள் அவ்வளவுதானா..? பின்னூட்டங்கள் இடாமல் நிறையபேர் இந்த ஞாபகங்களை வாசித்துகொண்டிருக்கிறார்கள் என்னைப்போல்..! தொடருங்கள்....
நிறைய பேர் பழைய நினைவுகளுக்கு செல்ல காத்திருக்கிறார்கள்...

நன்றி வசீகரன்

நேரம் மற்றும் இணையத்தள பிரச்சினைகளால் தாமதம் நேர்கிறது

விரைவில் தொடர்கிறேன்..

shibly591
13-10-2008, 08:12 AM
வாழ்த்துக்களுடன் தொடருங்கள் நண்பரே..

நன்றி பூ

arun
26-12-2008, 05:10 PM
ஷிப்லி என்ன ஆயிற்று இந்த திரி தங்களை எதிர்பார்த்து காத்து கிடக்கிறது நாங்களும் தான் காத்து கொண்டிருக்கிறோம் சீக்கிரம் தொடருங்கள்

shibly591
27-12-2008, 10:55 AM
ஷிப்லி என்ன ஆயிற்று இந்த திரி தங்களை எதிர்பார்த்து காத்து கிடக்கிறது நாங்களும் தான் காத்து கொண்டிருக்கிறோம் சீக்கிரம் தொடருங்கள்

அதுதான் காதல் கதைகள்-02 மற்றும் எனது காதல் கதைகள்-03 வழர தொடர்ந்து விட்டதே...உங்களுக்காக இத்திரியுடன் அதனை இணைக்கிறேன்...

மன்னிக்கவேண்டும்

shibly591
27-12-2008, 10:58 AM
பின்வரும் இணைப்புகளை சொடுக்குங்கள்..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16956

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17986

சசிதரன்
27-12-2008, 11:57 AM
இப்பொழுதுதான் படிக்கிறேன் நண்பரே உங்கள் காதல் கதையை... உண்மையில் மிக அருமையாக உங்கள் உணர்வுகளை பதிந்திருக்கிறீர்கள். உங்கள் எழுத்துக்களை காட்சியாக உருவகப்படுத்த முடிவது... உங்கள் எழுத்துக்கு கிடைத்த வெற்றி... தொடர்ந்து எழுதுங்கள்... :)

நிரன்
27-12-2008, 12:57 PM
வலிகளையும் வாழ்க்கையில் கடக்கவேண்டும்
நிச்சயம் உங்கள் காதலி கிடைப்பார் என் வாழ்த்துக்கள்

உங்கள் அடுத்த பகுதிக்காய காத்திருக்கிறோம் விரைவில்
தரமுடியுமா!!!:confused:

shibly591
28-12-2008, 02:55 AM
வலிகளையும் வாழ்க்கையில் கடக்கவேண்டும்
நிச்சயம் உங்கள் காதலி கிடைப்பார் என் வாழ்த்துக்கள்

உங்கள் அடுத்த பகுதிக்காய காத்திருக்கிறோம் விரைவில்
தரமுடியுமா!!!:confused:

கதையின் இரண்டாவது பாகத்தை படிக்க பின்வரும் இணைப்பை சொடுக்குங்கள்...

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16956

தொடர்ந்து மூன்றாவது தொடரை படிக்க பின்வரும் இணைப்பை அழுத்துங்கள்

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17986

குறிப்பு :-இக்காதல் கதையை நான் எழுதி முடித்துவிட்டேன்.புதிதாக படிப்பவர்களின் இலகுக்காக தொடர்ந்த இணைப்பை தந்துள்ளேன்...உங்கள் அனைவரின் ஆவலுக்கு நன்றிகள் நண்பர்களே.

நிரன்
28-12-2008, 12:00 PM
குறிப்பு :-இக்காதல் கதையை நான் எழுதி முடித்துவிட்டேன்.புதிதாக படிப்பவர்களின் இலகுக்காக தொடர்ந்த இணைப்பை தந்துள்ளேன்...உங்கள் அனைவரின் ஆவலுக்கு நன்றிகள் நண்பர்களே.


ஒரு கதையை படித்தவுடன் மற்றைய தொடரையும் படிக்க ஆவலாக இருந்தது
அதனை இப்பகுதியில் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை
அடுத்த பாகத்திற்கான தொடர்பை தந்தமைக்கு நன்றி நண்பரே!