PDA

View Full Version : தூணிலும் கேட்கும்! துரும்பிலும் கேட்கும்!



lenram80
25-07-2008, 05:29 PM
இனி இப்படி குலுங்கிச் சிரிக்காதே!
கோயில் உண்டியலை கொள்ளை அடித்து
குலுக்கிப் பார்ப்பது யார்? என்று
காவல் துறை கேட்கப் போகிறது!

இனி இப்படி மடைதிறந்து சிரிக்காதே!
கர்நாடகம் சந்தேகிக்கப் போகிறது!
காவிரி வரண்டும் எப்படி
தமிழகத்தில் தண்ணீர் சத்தம் என்று!

இனி இப்படி சத்தமாக சிரிக்காதே!
மேகம் மனிதர்களை சந்தேகிக்கப் போகிறது!
தாம் இல்லாமல் மழை பெறும் வித்தையை
மனிதர்கள் கண்டுபிடித்து விட்டார்களோ என்று!

இனி இப்படி கிக்கிக் கிக்கி என சிரிக்காதே!
"நான் வாயை குவிக்கிறன்! யாரோ டப்பிங் கொடுக்கிறார்கள்" என
தெனாலி கமல் போல் கிளிகள் கேட்கப் போகின்றன!

இனி இப்படி இனிப்பாக சிரிக்காதே!
நாட்டில் உப்பு விலைச்சல் அதிகமாகிவிடப் போகிறது!
சர்க்கரை தேவை இல்லாமல் அதனால் தீண்ட ஆளில்லாமல்
கரும்புகள் விடும் கண்ணீர் உப்பாவதால்!

இனி இப்படி கலகலப்பாக சிரிக்காதே!
அலைகளை கொண்டு கலகலவென சிரிக்கும் கடல்
உன்னை போட்டியாக நினைத்து விட்டு
இன்னொரு சுனாமியை சுண்டி விடப் போகிறது!

கர்ப்பிணிகள் பக்கத்தில் பலமாக சிரிக்காதே!
குறை மாதக் குழந்தை உன்னைக் காண
வெளியே குதித்து விடப் போகிறது!

இனி இப்படி திருவிழாக்களில் சிரிக்காதே!
திருவிழா உனக்கா? எனக்கா? என
ஆலய அம்மன் ஆத்திரப்பட்டு
அம்மனே சாமியாடப் போகிறது!

கரும்பிலும் உன் சிரிப்பு!
கார் முகிழிலும் உன் சிரிப்பு!
காவிரி கரை புரண்டும் உன் சிரிப்பு!
காவிரி தரை வரண்டும் உன் சிரிப்பு!
கிளியிலும் உன் சிரிப்பு!
மழலை இதழ் நுனியிலும் உன் சிரிப்பு!
அலை கடலிலும் உன் சிரிப்பு!
ஆலய மணியிலும் உன் சிரிப்பு!

எவன் தப்பாய் சொன்னது?
தூணிலும் இருப்பான்! துரும்பிலும் இருப்பான்!- என்று!
நான் திருத்திச் சொல்கிறேன் இன்று!
தூணிலும் கேட்கும்! துரும்பிலும் கேட்கும்!
காது மடல்களில் கரும்பாய் பூக்கும் - உன் சிரிப்பூ!!!

இளசு
25-07-2008, 05:31 PM
லெனின்

இனி இப்படி வசீகரிக்காதீர்கள்..

காதல் கவிதைகள் பக்கமே வரக்கூடாது என்ற என் எண்ணத்தை
''பிரசவ வைராக்கியமாக்கும்'' உங்கள் கவிதைகளால்...

lenram80
25-07-2008, 07:56 PM
எதற்காக இந்த வைராக்கியம் இளசுவே! எப்படியோ உங்களின் வைரக்கியம் உடைந்ததே... நன்றி இளசுவே!!
நீங்கள்,காதல் கவிதைகள் படிப்பதால் தான் இன்னும் இளசுவாகவே(இளமையாகவே) இருக்கிறீர்கள்!
ஞாபகம் இருக்கட்டும்!! :)

இளசு
25-07-2008, 08:06 PM
ஹாஹா! சாதுர்யமான பதிலை ரசித்தேன் லெனின்..

மன்றத்தில் பல பதிவுகளையும் படித்து பதிலளிக்க நேரம் அமையவில்லை..

எனவே இருக்கும் நேரத்தை '' ரேஷன்'' செய்ய ஆலோசித்து வருகிறேன்..

காதல் படைப்புகளுக்கு ஆதரவளிக்க சிறிசுகள் நிறைய்ய்ய்ய உண்டே!
அதனால் அவற்றை ஒதுக்கி நேரம் மிச்சம் பிடிக்க என் மனம் விரும்புகிறது - சில நாளாய்..

அந்த எண்ணத்தை மறக்கடித்து விடுகிறது - இதைப்போன்ற கவிதைகள்..

Keelai Naadaan
26-07-2008, 03:39 AM
பெண்ணின் சிரிப்புக்கு இத்தனை சக்தியா?
பாராட்டுக்கள் லெனின்.
மேலும் ஒரு சக்தி: கவிஞர்களை உருவாக்குவது.

lenram80
29-07-2008, 11:49 PM
நன்றி கீழை நாடான் அவர்களே!!

arun
31-07-2008, 07:30 PM
என்னவென்று பாராட்டுவது தங்களின் கவிதையை? மிகவும் ரசித்தேன்

அருமை அருமை வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை