PDA

View Full Version : அழு!



நாகரா
25-07-2008, 12:21 PM
அருளே உப்பாகி
ஒளியே நீராகி
இருவிழி வழியே
வழிவதோ கண்ணீர்!

வழியுங் கண்ணீரில்
கழியும் அழுக்கெல்லாம்
நெற்றியுஞ் சுத்தமாகப்
பற்றுவீர் ஒருவிழி!

தயவாய் இருத்தலே
உயர்வான ஒரேவழி!
இருதய ஒருமையின்
கருணை மெய்வழி!

மெய்வழி திறக்கப்
பொழியட்டும் இருவிழி!
பொய்யெலாம் கரைய
வழியட்டும் அருளொளி!

இளசு
29-07-2008, 08:34 PM
காதலாகிக் கண்ணீர் மல்கிய நிலை!

பரவச வாழ்த்துகள் நாகரா அவர்களுக்கு!

அறிஞர்
29-07-2008, 11:27 PM
மெய்வழி திறக்கப்
பொழியட்டும் இருவிழி!
பொய்யெலாம் கரைய
வழியட்டும் அருளொளி!அழுதலின் மேன்மை சிலவரிகளில்..
வாழ்த்துக்கள் நாகரா..

நாகரா
30-07-2008, 02:53 AM
உம் வாழ்த்துக்களுக்கு நன்றி இளசு, அறிஞர்.

shibly591
30-07-2008, 02:55 AM
கண்ணீர் கொட்டப்படும் ஒவ்வொரு தடவையும் மனப்பாரமும் இறங்குவதாக நான் உணர்வதுண்டு....

அருமை நாகரா...

வாழ்த்துக்கள்

நாகரா
30-07-2008, 02:57 AM
உம் வாழ்த்துக்களுக்கு நன்றி ஷிப்லி.

நாகரா
30-07-2008, 04:28 AM
உம் உற்சாக வரிகளுக்கு நன்றி கிஷோர் தம்பி, உன் எதிர்பார்ப்பை நிறைவேற்ற எப்போதும் முயற்சி செய்வேன்