PDA

View Full Version : நான் இங்கு தான் இருக்கிறேன்



மதுரை மைந்தன்
25-07-2008, 11:40 AM
காதலி என்னைப் பார்
நமது இடைவெளிகள் குறைந்தவிட்டன
நான் இங்கு தான் இருக்கிறேன்
உன் அருகில் தான் இருக்கிறேன்

எத்தனை இடையூறுகள்
எத்தனை நிர்பந்தங்கள் இருந்தும்
நான் இங்கு தான் இருக்கிறேன்
உன் அருகில் தான் இருக்கிறேன்

உன்னால் மறைக்க முடியாத
ரகசியங்கள் நான்
உன்னால் மறக்க முடியாத
அனுபவங்கள் நான்
கேட்க முடிந்தால் கேட்டுப்பார்
உன் இதயத் துடிப்பின் வார்த்தைகளை
அவை சொல்லும்

நான் இங்கு தான் இருக்கிறேன்
உன் அருகில் தான் இருக்கிறேன்

உன் இதயத்தில் நான் உலவுவதைக் கண்டு
ஏன் அஞ்சுகிறாய்
நான் உன் இதயத்தின் குரல் தானே
நீ எங்கு என்னைத் தேடுகிறாய்
நான் இங்கு தான் இருக்கிறேன்
உன் அருகில் தான் இருக்கிறேன்

(வீர் ஜாரா என்ற இந்திப் படத்தில் வந்த பாட்டின் தமிழாக்கம்)

அறிஞர்
26-07-2008, 04:58 PM
காதலி பக்கத்தில் காதலன்...
நல்ல மொழி பெயர்ப்பு..
நன்றி நண்பரே..

மதுரை மைந்தன்
26-07-2008, 05:04 PM
காதலி பக்கத்தில் காதலன்...
நல்ல மொழி பெயர்ப்பு..
நன்றி நண்பரே..

ஒரு சிறு திருத்தம். காதலி பக்கத்தில் மானசீகமாக காதலன்.

நன்றி நண்பர் அறிஞர் அவர்களே.

arun
01-08-2008, 08:09 PM
மொழிபெயர்ப்பு அருமை பாராட்டுக்கள்

ராஜா
21-07-2012, 03:23 PM
உன்னால் மறைக்க முடியாத
ரகசியங்கள் நான்
உன்னால் மறக்க முடியாத
அனுபவங்கள் நான்

நேர்த்தியான தமிழாக்கம்..

பாராட்டுகள் அண்ணா..!