PDA

View Full Version : பெங்களூரில் அடுத்தடுத்து 7 இடங்களில் குண்டு வெடிப்பு



ஆதி
25-07-2008, 10:03 AM
பெங்களூர்: பெங்களூரில் 7 இடங்களில் அடுத்தடுத்து இன்று குண்டுகள் வெடித்தன. இதில் 3 பேர் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது. மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

ஒசூர் ரோட்டில் உள்ள மடிவாளா செக்போஸ்ட், மைசூர் ரோட்டில் உள்ள நாயந்தஹள்ளி, கோரமங்களா, ஆடுகோடி, கண்டோன்மென்ட் அருகே உள்ள லாங்போர்ட் டவுன், எம்.ஜி.ரோடு அருகே உள்ள விட்டல் மல்லையா ரோடு ஆகிய இடங்களில் இந்த குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன.

முதல் குண்டு 1.20 மணிக்கு மடிவாளா செக்போஸ்ட் அருகே வெடித்தது, 1.25 மணிக்கு மைசூர் ரோட்டில் நாயந்தஹள்ளியில் இரண்டாவது குண்டு வெடித்தது, 1.40 மணிக்கு ஆடுகோடியில் குண்டு வெடித்தது.

நான்காவது குண்டு 2.10 மணிக்கு கோரமங்களாவில் வெடித்தது, ஐந்தாவது குண்டு 2.25 மணிக்கு விட்டல் மல்லையா சாலையிலும், 6வது குண்டு 2.35 மணிக்கு லாங்போர்ட் டவுனிலும் குண்டு வெடித்தது.

7வது குண்டு ரிச்மண்ட் டவுனிலும் வெடித்தது. சுமார் 1 மணி நேர இடைவெளியில் இந்த குண்டுகள் வெடித்துள்ளன.

இதில் 3 பேர் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது. பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது.

ஆனால், ஒரு பெண் பலியானது மட்டுமே இதுவரை உறுதியாகியுள்ளது.

வெடித்தவை அனைத்துமே குறைந்த சக்தி கொண்ட குண்டுகளே என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டைமர்களைக் கொண்டு இவை வெடிக்கச் செய்யப்பட்டுள்ளன. 4 இடங்களில் வெடித்த குண்டுகளில் யாருமே காயமடையவில்லை எனவும் போலீசர் தெரிவித்துள்ளனர்.

குண்டு வெடித்த இடங்கள் அனைத்துமே ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகள் ஆகும்.

இந்த சம்பவத்தையடுத்து பெங்களூரின அனைத்து வர்த்தக மால்களும் மூடப்பட்டுவி்ட்டன. பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுவிட்டன. அதே போல திரையரங்குகளும் மூடப்பட்டுவிட்டன.

நன்றி : தட்ஸ்தமிழ்.காம்

ஓவியா
25-07-2008, 10:12 AM
அய்ய்கோ, :traurig001::traurig001:

பெங்ளூரில்தான் தாமரையண்ணாவின் குடும்பம் உள்ளது, அண்ணாவும் ஐடி கம்பெனிதான். மதியும் பெங்ளூர்தான்.

கடவுளே இவர்களும் மற்றும் அனனத்து பெங்ளூர்வாழ் மக்களும் ஏதும் பாதிப்பில்லாமல் நல்ல நிலையில் இருக்க வேண்டுமென்று உன்னிடம் வேண்டுகிறேன்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு என் அனுதாபங்கள்.

நன்றி ஆதி.

மயூ
25-07-2008, 10:29 AM
அனைவரும் நலம் என்று நம்புகின்றேன். விரைவில் அவர்களிடமிருந்து பதில் கிடைக்கட்டும்.

தாமரை
25-07-2008, 10:36 AM
கவலைப் படாதீங்க.. நாங்கள் அனைவரும் நலம்.

ஓவியா
25-07-2008, 10:36 AM
நல்லது,

கூப்பிட்ட குரலுக்கு பதிலா!!! சந்தோஷம்

மதி, தாமரையண்ணா, ஆதி, பெங்களூர் மக்கள் அனைவரும் வந்தாச்சு :)

.

ஓவியன்
25-07-2008, 10:39 AM
ஆதி, நலம் தானே...??

எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள், முடிந்தால் நம் மன்ற நண்பர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்...

______________________________________________________________________________________________________

குண்டுவெடிப்பில் பலியான அப்பாவிகளுக்கு என் இதய அஞ்சலிகள்..

இராஜேஷ்
25-07-2008, 10:39 AM
பெங்களுர் நன்பர்களே! இரண்டுநாட்களுக்கு வெலியில் செல்வதை தவிர்த்து கொள்ளுங்கள்.

ஓவியன்
25-07-2008, 10:41 AM
கவலைப் படாதீங்க.. நாங்கள் அனைவரும் நலம்.

நல்லது செல்வண்ணா, எதற்கும் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருந்து கொள்ளுங்கள்..

ஆதி
25-07-2008, 10:45 AM
ஆதி, நலம் தானே...??

எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள், முடிந்தால் நம் மன்ற நண்பர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்...

______________________________________________________________________________________________________

குண்டுவெடிப்பில் பலியான அப்பாவிகளுக்கு என் இதய அஞ்சலிகள்..

நலமே ஓவியன், எந்த பிரச்சனையும் எங்கள் பகுதியில் இல்லை..

-----------------------------------------------------------------

செல்போன்கள் ஜாம்:

இந்த குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து செல்போன்கள் உள்ளிட்ட தொலைபேசி சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. புரளி பரவுவதைத் தடுக்க போலீசாரே இந்த சேவைகளை ஜாம் செய்ததாகக் கூறப்படுகிறது.

-------------------------------

இதனால் உறவுகளை தொடர்ப்பு கொள்ள முயற்சிப்பவர்கள்.. தொடர்ப்பு கிடைக்கவில்லை என்றால் பதர வேண்டாம்..

SathyaThirunavukkarasu
25-07-2008, 10:46 AM
ஏனிந்த கொடூரம், அனைவரும் நலமாக இருப்பதை எண்ணி மகிழ்வோம்

பூமகள்
25-07-2008, 11:29 AM
பெங்களூரில் என் தோழிகள் பலர் உள்ளனர்...

அனைவரையும் தொடர்பு கொள்ளவே முடியாத நிலை...

தொலைக்காட்சியில் செய்தி பார்த்ததிலிருந்து வருத்தமாகவும் படபடப்பாகவும் உள்ளது..

அனைவரும் நலமாக இருக்க வேண்டுமென்று பிராத்தனை செய்கிறேன்..

மன்ற சொந்தங்கள் எச்சரிக்கையாக இருக்கவும்.

ஆதி
25-07-2008, 11:34 AM
செல்போன்கள் ஜாம்:

இந்த குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து செல்போன்கள் உள்ளிட்ட தொலைபேசி சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. புரளி பரவுவதைத் தடுக்க போலீசாரே இந்த சேவைகளை ஜாம் செய்ததாகக் கூறப்படுகிறது.

-------------------------------

அதனால் உறவுகளை தொடர்ப்பு கொள்ள முயற்சிப்பவர்கள்.. தொடர்ப்பு கிடைக்கவில்லை என்றால் பதர வேண்டாம்..

மதி
25-07-2008, 11:50 AM
அனைவரும் நலம். ஆதி கூறியதை போல செல்போன்கள் இணைப்பில் சிக்கல் உள்ளது. கவலை வேண்டாம்...

Narathar
25-07-2008, 01:21 PM
மன்றத்து சொந்தங்கள் நலமேயிருப்பதில் மகிழ்ச்சியென்றாலும். மடிந்த அந்த முகம் தெரியாத சொந்தங்களை நினைக்கும் போது வருத்தமாக உள்ளது....

மன்றம் சார்பில் அவர்கள் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்போமாக!

ஏன் இந்த கொலை வெறி????

அறிஞர்
25-07-2008, 01:35 PM
வன்முறைகள் மீண்டுமா.... இது என்றுதான் ஒழியுமோ..

மன்ற சொந்தங்கள்.... பத்திரமாக இருப்பது மகிழ்ச்சி..

மன்மதன்
25-07-2008, 01:49 PM
செல்போன்கள் ஜாம்:

இந்த குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து செல்போன்கள் உள்ளிட்ட தொலைபேசி சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. புரளி பரவுவதைத் தடுக்க போலீசாரே இந்த சேவைகளை ஜாம் செய்ததாகக் கூறப்படுகிறது.

அப்படி பண்ணியிருக்க மாட்டார்கள்.. புரளி எப்படியாவது பரவி விடும். ஆனால் இது மாதிரியான நேரத்தில் செல்போன் வேலை செய்யவில்லையென்றால்தான் மக்கள் இன்னும் கலவரமடைவார்கள்..

பெங்களூரில் நிறைய ஐ.டி கம்பெனிகள் இருப்பதால் , வர்த்தகத்தை குறி வைத்து இதை நடத்தியிருக்கலாம்..

ஷீ-நிசி
25-07-2008, 01:51 PM
ஏன் இப்படி கொஞ்சமும் இரக்கமில்லாமல் வெடிகுண்டுகளை வைத்து உயிர்பலி கேட்கிறார்களோ?!

இரக்கமற்ற மனிதர்கள்.

உறவுகளின் நலம் செய்தி கேட்டு நிம்மதியடைகிறேன்.
பொதுமக்களில் இறந்து போன அந்த சில நல் இதயங்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். அவர்களின் பெற்றோர்களும், உறவுகளுக்கும் இறைவன் ஆறுதல் அளித்திட வேண்டுகிறேன்..

அன்புரசிகன்
25-07-2008, 02:04 PM
திரும்பவும் தொடர் குண்டுவெடிப்பா??? என்னது.......... உலகமே குண்டுமயமாக வருகிறது.....

மன்றமக்கள் அனைவரும் நலம் என்பதில் மகிழ்வே... வேறு யாராவது விடுபட்டிருக்கிறார்களா,,,???

Keelai Naadaan
25-07-2008, 02:07 PM
:fragend005:

:icon_ush:

:traurig001:

ராஜா
25-07-2008, 02:57 PM
இன்று மதியம் என் மகன் என்னை இணையம் மூலம் தொடர்பு கொண்டு தானும், தன் ஊர்க்காரர்களும் நலமுடன் உள்ளதாகத் தெரிவித்தார்.

மகன், மகள்களை பெங்களூருவுக்கு அனுப்பி வைத்திருக்கும் மன்னை மக்கள் அனைவருடனும் நான் தொடர்பு கொண்டு, அவர்கள் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்தபோது, அவர்கள் அடைந்த நிம்மதி இருக்கிறதே..
அப்பப்பா..!!!

ஒரு விடயம் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்..!

இங்கிருக்கும் பெற்றோரைவிட, அங்கிருக்கும் வாரிசுகள் அனைவரும் தெளிவுடனும், தைரியமாகவும், இருக்கிறார்கள்..

மதியம் என் மகன் சொன்ன ஒரு வாக்கியம் இது..

"பி ஜே பி ஆட்சி வந்திருப்பதால் இந்த அநியாயம் இருக்கத்தான் செய்யும்..! கவலைப்படாதீங்க அப்பா.. நாங்க கவனமா இருப்போம்..!!"

ராஜா
25-07-2008, 03:01 PM
செல்போன்கள் ஜாம்:

இந்த குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து செல்போன்கள் உள்ளிட்ட தொலைபேசி சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. புரளி பரவுவதைத் தடுக்க போலீசாரே இந்த சேவைகளை ஜாம் செய்ததாகக் கூறப்படுகிறது.

.
குண்டுகளை செல்போன்கள் மூலம் இயக்கி வெடிக்கச் செய்வதைத் தடுப்பதற்காகக் கூட இப்படி செய்திருக்கலாம்..

ஷீ-நிசி
25-07-2008, 03:21 PM
குண்டுகளை செல்போன்கள் மூலம் இயக்கி வெடிக்கச் செய்வதைத் தடுப்பதற்காகக் கூட இப்படி செய்திருக்கலாம்..

உண்மைதான். இந்தக் காரணமாகவும் இருக்கலாம்..

சூரியன்
25-07-2008, 03:49 PM
எனது தாத்தாவும் அங்குதான் இருக்கின்றார் அவரை தொடர்புகொண்டு பேசிவிட்டேன் அவர்கள் இருக்கும் இடத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறினார்.

mathura
25-07-2008, 03:59 PM
இந்தியாவில் உளவுத்துறை என்று ஒன்று இருப்பதாக யாரோ எப்போதோ சொன்னதாக நினவு. அவர்கள் தூங்கிக்கொண்டு இருப்பார்களோ?

mukilan
25-07-2008, 04:05 PM
வருத்தமான செய்தி! திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

mukilan
25-07-2008, 04:07 PM
இந்தியாவில் உளவுத்துறை என்று ஒன்று இருப்பதாக யாரோ எப்போதோ சொன்னதாக நினவு. அவர்கள் தூங்கிக்கொண்டு இருப்பார்களோ?

அமெரிக்கவின் நியூயார்க்கிலும், இங்கிலாந்தின் லண்டனிலும் கூடத்தான் நண்பரே உளவுத்துறை இருக்கிறது. அங்கும் இது போல அசம்பாவித சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன.

மனமாற்றம் ஏற்பட்டால் மட்டுமே குற்றங்கள் குறையும்.

இளசு
25-07-2008, 05:37 PM
சாஃப்ட் டார்கெட்ஸ் எனப்படும் பொதுமக்கள் புழங்கும் இடங்களில்
இப்படி வன்முறை செய்யும் எவனும் பேடியே!

எவனாயிருந்தாலும் கண்டுபிடிக்கப்பட்டு, வெறிநாயாய் நடத்தப்படட்டும்..

பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் பதறுகிறது நெஞ்சம்..

அக்னி
25-07-2008, 07:45 PM
இப்படிக் குண்டுகளை வெடிக்கவைப்பதனால் எதைச் சாதிக்கின்றார்கள்...
பொதுமக்களையல்லவா பதற, சிதற வைக்கின்றார்கள்.

என்றுதான் ஒழியுமோ இந்தக் குண்டுக் கலாச்சாரம்...

மரணித்தவர்களுக்குக் கண்ணீர் அஞ்சலிகளும், பாதிப்புற்றவர்களுக்குப் பிரார்த்தனைகளும்...

அமரன்
25-07-2008, 07:48 PM
என்னவென்று சொல்லுவது இதயம் புசிக்கும் இவர்களை..
பாதிக்கப்பட்டவர்கள் வேதனையில் பங்கெடுக்கிறேன்..

ராஜா
26-07-2008, 04:08 AM
இந்தியாவில் உளவுத்துறை என்று ஒன்று இருப்பதாக யாரோ எப்போதோ சொன்னதாக நினவு. அவர்கள் தூங்கிக்கொண்டு இருப்பார்களோ?


பெங்களூரில் தீவிரவாதச் செயல்களுக்கான முகாந்திரம் இருப்பதாக மாநில அரசு அண்மையில் எச்சரிக்கப்பட்டது என்று நடுவண் அமைச்சர் கூறியிருந்தது இங்கு நினைவு கூரத்தக்கது.

இந்தியா போன்ற பெரிய பரப்பளவும், மக்கள் தொகையும் உள்ள நாட்டில், இதுபோன்ற அவலங்களைக் கட்டுப்படுத்துவது மிகக் கடினமான ஒன்று.

கட்டுப்பாடுகளும், சோதனைகளும் அதிகரித்தால், எங்கள் சுதந்திரம் பறிபோகிறதென்று புகார் எழும்.

அதே நேரத்தில், காவல் துறையும் பாதுகாப்பு அம்சங்களில் கவனக்குறைவாக இருப்பதையும் மறுக்க முடியாது. இன்னும் ஒரு வாரத்துக்கு கண்காணிப்பு தீவிரமாக இருக்கும்..பின்னர் பழைய குருடி.. கதவைத் திறடி..!

சிவா.ஜி
26-07-2008, 04:16 AM
இந்தியாவின் வளர்ச்சி இவர்களின் கண்களை உறுத்துகிறது. இதில் சர்வதேச அளவிலான சதி இருக்கிறது. ஆனாலும் அவர்கள் எண்ணம் ஈடேறப்போவதில்லை. இந்தியா எழுந்து நிற்பதை இந்த இழியவர்களால் தடுக்க முடியாது.

உயிரிழந்தோருக்கும், படுகாயமடைந்தவர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

ராஜா
26-07-2008, 01:43 PM
குஜராத் மாநிலம் ஆமதாபாத்திலும் இன்று 6 இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

இங்கும் பா ஜ க ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது..!

ஓவியா
26-07-2008, 01:59 PM
குஜராத்திலுமா?? அடப்பாவமே!!!

தீபன்
26-07-2008, 02:07 PM
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அநுதாபங்கள்.

ப ஜ க ஆட்சியில் குண்டு வெடிப்பதால் அதை நடத்துவது எதிர்கட்சிகளெனசொல்ல வருகிறீர்களா ராஜா அண்ணா... ஏனெனில் தங்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் குலைகிறதென காட்ட எந்த கட்சியும் விரும்பாதுதானே...?

தங்கவேல்
26-07-2008, 02:37 PM
நிம்மதி... பார்த்து இருங்க நண்பர்களே....

ராஜா
26-07-2008, 02:39 PM
அறிவாளர்கள் நிரம்பிய அவையில் இரண்டு சம்பவங்களுக்கும் உள்ள சிறு ஒற்றுமையை சுட்டிக்காட்டினேன். அவ்வளவே..!!

இதில் எதுவும் உள்நோக்கமில்லை என்பதறிக..!

நாராயணா..!

தாமரை
26-07-2008, 02:58 PM
வழக்கமாக மன்றச் சந்திப்பு நடக்கும் ஃபாரம் மாலில் இன்று ஒரு பாம் கைப்பற்றப் பட்டு செயலிழக்கப்படச் செய்யப்பட்டது.

சற்று எச்சரிக்கையாய் இருப்பது அவசியம்..

ஓவியன்
26-07-2008, 03:01 PM
வழக்கமாக மன்றச் சந்திப்பு நடக்கும் ஃபாரம் மாலில் இன்று ஒரு பாம் கைப்பற்றப் பட்டு செயலிழக்கப்படச் செய்யப்பட்டது..

நேற்றும் ஃபாரம் மாலுக்கு அருகே ஒரு பாம் வெடித்ததாகக் ஆதி கூறும் போதே நான் மன்ற சந்திப்புக்களையே நினைத்தேன்....

எச்சரிக்கை அவசியமே செல்வண்ணா..!! :frown:

mathura
26-07-2008, 03:56 PM
குஜராத் மாநிலம் ஆமதாபாத்திலும் இன்று 6 இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

இங்கும் பா ஜ க ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது..!


6 மணி வரை "6 இடங்களில்" என்ற செய்தி, 9 மணிக்கு 15 இடங்களாக ஏறிவிட்டது

மதி
26-07-2008, 04:08 PM
இதுவரை 17 இடங்களில் குண்டுவெடித்துள்ளது...15 பேருக்கும் மேல் இறந்துவிட்டதாக சொல்கிறார்கள்...

அமரன்
26-07-2008, 04:11 PM
என்னய்யா இது.. வெடி கெட் சீசனா..
இந்த நூல் ரன்னிங்க கமென்றியாக மாறாதிருக்க "ஆண்டவன்" அருள் புரியட்டும்..

பூமகள்
26-07-2008, 04:23 PM
அப்பாவி மக்கள் மீது இவ்வகை வன்முறை பரப்பும்
வெடி வைத்தவர்களும்... காரணமானவர்களும்..
நைந்து நொடிந்து பிணியில் உழன்று சாகட்டுமென சாபமிடுகிறேன்..!!

யவனிகா
26-07-2008, 04:31 PM
தண்ணியில்லாம சாகிறவங்க...சோறில்லாம சாகிறவங்க பத்தாதுன்னு குண்டுவெடிப்புகள் வேற...பெங்களூர்வாழ் சகோதர்கள் நலமுடன் இருப்பது கண்டு மகிழ்ச்சி...

mathura
26-07-2008, 04:31 PM
பெண் சாபம் பொல்லாது என்பர்க்ள். உங்கள் சாபம் பலிக்க இறைவன் அருள் புரியட்டும்

இதயம்
27-07-2008, 04:50 AM
பெங்களூரு, குஜராத்தில் நடத்தப்பட்டிருக்கும் குண்டுவெடிப்புகள் கடுமையான கண்டனத்திற்குரியவை. ஒன்றுமறியா அப்பாவி பொதுமக்களை குறி வைப்பதன் மூலம் நாசகாரர்களுக்கு கிடைப்பது என்ன..? தீவிரவாதம் ஒழியும் நாள் எந்நாளோ..? பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.