PDA

View Full Version : தோசைகளையும் பாடுவேன்



ஆதி
25-07-2008, 09:04 AM
மெல்லிடைகளை விட
மெலிந்த தோசைகளை
வட்டங்களாய் வடிப்பதே
தனி கலை..

சுடுகல்லில் புரண்டு
எண்ணை மினுமினுக்க
சாம்பாருடன் அது
தரும் சுவை
வேறெதனுடனான உறவிலும்
அமைவதில்லை..

கருப்பு வெள்ளை என்ற
இரண்டு முகங்களும்
நிறசமத்துவத்தின் போதனைகள்
சில
வெள்ளை மனிதரகளின்
இருண்ட புறத்தின் உவமைகள்

சுட சுட
மொறு மொறு வென்று தீண்ட
விரும்பும் சில
ஏழைகளின்
எட்டாத கனவுகளாகவும்
இருப்பவை
இந்த தோசைகள்தான்..

அமரன்
25-07-2008, 12:05 PM
இப்பல்லாம் தோசை சுட கஷ்டப்பட வேண்டியதில்லை ஆதி.
அட அவ்வளவு ஏனுங்க, எவர் வீட்டிலும் உளுந்துத் தோசையைக் காண்பதே அரிதாகிவிட்டது..

எதைப்பற்றியும் பாடும் புலமை வாய்த்த வெகுசிலரில் நீங்களும்!

நாகரா
26-07-2008, 05:15 AM
மெல்லிடைகளை விட
மெலிந்த தோசைகளை
வட்டங்களாய் வடிப்பதே
தனி கலை..

சுடுகல்லில் புரண்டு
எண்ணை மினுமினுக்க
சாம்பாருடன் அது
தரும் சுவை
வேறெதனுடனான உறவிலும்
அமைவதில்லை..

கருப்பு வெள்ளை என்ற
இரண்டு முகங்களும்
நிறசமத்துவத்தின் போதனைகள்
சில
வெள்ளை மனிதரகளின்
இருண்ட புறத்தின் உவமைகள்

சுட சுட
மொறு மொறு வென்று தீண்ட
விரும்பும் சில
ஏழைகளின்
எட்டாத கனவுகளாகவும்
இருப்பவை
இந்த தோசைகள்தான்..

தோசையின் வட்டத்தைப் போன்றே
மனிதன் நீயும் பூரணம்

பூமியெனும் சுடுகல்லில்
உன்னைத் தன் வெள்ளங்கி எண்ணை
மினுமினுக்க
வார்த்திருக்கிறான்
பரம வள்ளல்

தோசையின் இரு முகங்களைப் போன்றே
உனக்கு இறைமையின் வெள்ளை முகம்
மனிதத்தின் இருண்ட முகம்.
இறைமையின் இருண்ட முகம்
நீ(பருப்பொருள்-Matter).
உன் வெள்ளை முகம்
இறைமை(நுண்பொருள்-Spirit).
இரு முகங்களும்
பிரியாத ஒருமையில்
பூமிச் சுடுகல்லில்
சுடச் சுடச் சுவைக்கும்
தோசை நீ.

உன்னை
ஏழையர் தட்டுகளில்
தன் அன்பின் பூரண
வட்ட வடிவமாய்ப்
பரிமாறவே
வார்த்திருக்கிறான்
பரமன்
தன்னையும்(தன் 'ஐ'யும்) சேர்த்து.
ஞாபகங் கொள்
ஏழையரின் பசி தீர்
சுடச் சுட
நீ
உயிர்ச்சுவையோடு
இருக்கும் போதே!

உமது தோசையைச் சுடச்சுடச் சுவைத்து, எனது தோசையை உமக்குப் பரிமாறுகிறேன் சுடச்சுடச் சுவையுடன், இது எப்படி இருக்கு, ஆதி

வாழ்த்துக்கள் ஆதி.

இளசு
26-07-2008, 05:49 AM
முதல் வரியில் சிற்பக்கலை..
பின் வரிகளில் தோசைக்கலை!

பௌர்ணமி நிலவைப்பார்த்து
பசித்தவன் முன் சோற்றுப்பானை
- சொன்னவர் பாரதிதாசன்..

தோசையைச் சாம்பாரில் முக்கிப் புரட்டிச் சுவைத்த கையுடன் -

நிறபேதம், மன இருள், வறுமைக்கோடு என பல சிந்தனைகள்!


வாழ்த்துகள் ஆதி!

சுவையான பாடுபொருள்! சுவைத்தேன்..!!

poornima
26-07-2008, 10:46 AM
ஆசையாய் அம்மா சுடுவதாய் பாட்டுண்டு
பூசையும் உண்டு அளவுக்கு மேல்போனால்
காசைக் கொடுத்தால் வகைகள்தான் எத்தனை
தோசையே உன்புகழ் தூள்

செல்வா
26-07-2008, 12:28 PM
இப்போ இருக்கிற நிலையில தோசையப் பார்த்தா அடிச்சி பி(டி)ச்சி வாயிலப்போட்டுக்கத்தான் தோணும். தோசையப் பாத்தே மூணு மாசம் ஆச்சு... தோசைய முன்னால வச்சுட்டு கவிதை எழுதறீங்களா....
அக்னி இந்த அநியாயத்தக் கேக்க கூடாதா?
கவிதை ரொம்ப நல்லாருக்கு ஆதி.... வாழ்த்துக்கள்..

சிவா.ஜி
26-07-2008, 02:02 PM
வட்ட தோசைகள்...சுட்டவருக்கே சில நேரம் எட்டா தோசைகள். கல்லோடு அப்படியென்ன காதலோ...நான் சுடும்போதெல்லாம் அமராவதியை விட்டுப் பிரியாத அம்பிகாபதியாக பாதி உடல் ஒட்டிக்கொள்ளும் காதலனாய், அல்லது காதலனுக்காக தீக்குளித்த காதலியாய் கருகி...இப்படித்தான் இம்சிக்கிறது. ஆதிக்கு அது கவிதையைக் கொடுத்திருக்கிறது. அருமை ஆதி. வாழ்த்துகள்.

இளசு
26-07-2008, 02:05 PM
ஆசையாய் அம்மா சுடுவதாய் பாட்டுண்டு
பூசையும் உண்டு அளவுக்கு மேல்போனால்
காசைக் கொடுத்தால் வகைகள்தான் எத்தனை
தோசையே உன்புகழ் தூள்

இங்கேயும் வெண்பா வார்த்த பூர்ணிமாவுக்கு - சபாஷ்!