PDA

View Full Version : மலரும் நினைவுகள்



மதுரை மைந்தன்
24-07-2008, 04:12 PM
அலுவலகம் செல்ல பஸ் நிலையத்தில்
காத்து நின்றேன்

கல்லூரி செல்ல தோழியுடன் நீ
அங்கு வந்தாய்

உன் நடையைப் பார்த்து நான்
'ஆஹா மெல்ல நட மெல்ல நட
மேனி என்னாகும்' என்று மனதுக்குள் பாடினேன்

தோழியுடன் பேசிய உன் பேச்சைக் கேட்டு
'பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா'
என்று மனதுக்குள் பாடினேன்

கனத்த புத்தகங்களை நீ சுமந்ததைப் பார்த்து
'உங்க பொண்ணான கைகள் புண்ணாகலமா
உதவிக்கு வரலாமா' என்று மனதுக்குள் பாடினேன்

நான் உன்னை ஸைட் அடிப்பதை காண சகிக்காதவர்கள்
பஸ் நிலையத்தில் என்னை முறைத்த போது
'மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல்
கூடுமோ' என்று மனதுக்குள் பாடினேன்

திடீரென்று நீ உன் திருமணப் பத்திரிகையை
உன் தோழியிடம் கொடுத்த போது
என் ஒரு தலை ராகத்தில் இடி விழுந்தது
அப்போது 'எங்கிருந்தாலும் வாழ்க' என்று
என்று மனதுக்குள் பாடினேன்

அந்த சமயத்தில் நீ போகும் பஸ் வர
என்னை அறியாமல் நானும் ஏறப் போக
'கண் போன போக்கிலே கால் போகலாமா'
என்ற பாட்டு என்னை தடுத்தது

இறுதியாக நான் செல்லும் பஸ் வர
'காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன்'
என்று மனதுக்குள் பாடிக்கொண்டு அலுவலகம்
சென்றேன்

இளசு
24-07-2008, 06:09 PM
பாட்டாலே நானும் சொன்னேன் - உங்க
பா(ட்)டுகள் பல ரகந்தான்..!

பா(ரா)ட்டுகள் மதுரை வீரன்..!

காதல் களஞ்சியம் பக்கம் நகர்த்தலாமே!

shibly591
24-07-2008, 06:51 PM
ம்ம்ம் பலரது காதல் இப்படித்தாக் நிகழ்கிறது..

ரசிக்பும்படியிருந்ததால் வெகுவாய் ரசித்தோம்...

பாராட்டுக்கள்

தீபன்
25-07-2008, 05:16 AM
மதுரை வீரரின் காதல் தோல்வி உங்களுக்கு ரசிக்கும்படி இருக்கிறதா சிப்லி...:frown:
என்னா ஒரு வில்லத்தனம்....:wuerg019:

அறிஞர்
26-07-2008, 04:57 PM
ஆஹா..,. பாட்டு வரிகளில்
பலே காதல் கதை...

அருமை நண்பரே..

மதுரை மைந்தன்
26-07-2008, 05:06 PM
பாட்டாலே நானும் சொன்னேன் - உங்க
பா(ட்)டுகள் பல ரகந்தான்..!

பா(ரா)ட்டுகள் மதுரை வீரன்..!

காதல் களஞ்சியம் பக்கம் நகர்த்தலாமே!


பாராட்டுக்களுக்கும் உரிய இடத்தில் நகர்த்தியமைக்கும் நன்றி நணபர் இளசு அவர்களே!

மதுரை மைந்தன்
26-07-2008, 05:07 PM
ம்ம்ம் பலரது காதல் இப்படித்தாக் நிகழ்கிறது..

ரசிக்பும்படியிருந்ததால் வெகுவாய் ரசித்தோம்...

பாராட்டுக்கள்

சரியாகச சொன்னீர்கள். இது ஒரு நடை முறை காதல்.
பாராட்டுக்களுக்கு நன்றி.

மதுரை மைந்தன்
26-07-2008, 05:13 PM
மதுரை வீரரின் காதல் தோல்வி உங்களுக்கு ரசிக்கும்படி இருக்கிறதா சிப்லி...:frown:
என்னா ஒரு வில்லத்தனம்....:wuerg019:

நண்பர் தீபன் அவர்களே!

காதலில் தோல்வி சகஜம். அதுவும் இதைப் போன்ற ஒரு தலைக் காதல் பெரும்பாலும் தோல்வியில் தான் முடிகின்றன. அந்த வலியிலும் ஒரு சுகம் இருக்கிறது. நீங்கள் அனுபவித்தது உண்டா?

மதுரை மைந்தன்
26-07-2008, 05:18 PM
ஆஹா..,. பாட்டு வரிகளில்
பலே காதல் கதை...

அருமை நண்பரே..

நான் பள்ளியில் படித்த காலத்தில் இலங்கை வானொலியில் பாட்டும் கதையும் என்று ஒரு நிகழ்ச்சி வரும். அதை மனதில் கொண்டு இக்கதையை எழுதினேன்

பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி அறிஞர் அவர்களே!

மலர்விழி
27-07-2008, 04:28 AM
சூப்பர்...
முதலில் பட்டாம்பூச்சியெல்லாம் பறக்க செய்து பின்....
முகாரி பாடிவிட்டீரே...
இருப்பினும் அருமை=)

ஒற்றை ரோஜா,
ஒற்றை நிலா,
ஒரு தலை காதல்,
ஒற்றுமையாய் தனிமையை ரசிக்கின்றன=(

shibly591
27-07-2008, 07:52 PM
மதுரை வீரரின் காதல் தோல்வி உங்களுக்கு ரசிக்கும்படி இருக்கிறதா சிப்லி...:frown:
என்னா ஒரு வில்லத்தனம்....:wuerg019:

எலிக்கு வலியாம்...பூனைக்கு விளையாட்டாம்...ஹி ஹி ஹி

arun
01-08-2008, 08:13 PM
ஆ பாட்டாவே பாடிட்டீங்களா பலே பலே புதிய முயற்சி

கௌதமன்
09-07-2011, 07:23 PM
ஆக ஒரு எஃம்.எம். வானொலி நிகழ்ச்சியையே நடத்தி விட்டீர்கள்.

innamburan
09-07-2011, 10:02 PM
நான் மதுரை மைந்தனாக இருந்தால்... வேண்டாம், திரிசமன்!

நாஞ்சில் த.க.ஜெய்
10-07-2011, 06:10 PM
மதுரை வே(மை)ந்தனின் கொஞ்சும் சலங்கைகள் ...

கீதம்
11-07-2011, 03:35 AM
கதைக்குப் பொருத்தமான பாடல்களைத் தேர்ந்தெடுப்பதன் கடினம் உணர்ந்தவளாதலால் உங்களுடைய இம்முயற்சியை மனதாரப் பாராட்டுகிறேன், மதுரை மைந்தன் அவர்களே.

sarcharan
12-07-2011, 09:01 AM
பாட்டாலே புத்தி சொன்னார் -மதுரை மைந்தன்
பாட்டாலே புத்தி சொன்னார்