PDA

View Full Version : விலைக்கு வருகிறது சதாமின் கார்..!

ராஜா
24-07-2008, 02:31 PM
http://www.aol.in/tamil/img/2008/07/Saddam-Rolls-Royce-car-250_24072008.jpg
______________________________________________________________________
லண்டன்: தூக்கிடப்பட்ட முன்னாள் இராக் அதிபர் சதாம் ஹூசேனின் ரோல்ராய்ஸ் கார் இபே இணையத் தளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.

185000 பவுண்ட் விலை கொண்ட இந்த மெரூன் கலர் ரோல்ஸ்ராய்ஸ், கிளைமட் கண்ட்ரோல் சிஸ்டம் கொண்டுள்ளது.

இங்கிலாந்தின் சர்சே நகரில் உள் கார் டீலரான ஆட்டோ காண்டிநென்டல் இதை வாங்கி இபே மூலம் விற்கவுள்ளது. இந்த கார் பாக்தாதில் இருந்து ஒரு மாதத்துக்குள் இங்கிலாந்து வந்து சேரவுள்ளதாம்.

இந்த காரில் இருந்த ஸ்டீரியோ சிஸ்டத்தை அமெரிக்கப் படை வீரர்கள் அகற்றிவிட்டதால், புதிய ஸ்டீரியோ பொருத்தப்படும் என ஆட்டோ காண்டிநென்டலின் உரிமையாளரான பிரவுன் தெரிவித்துள்ளார்.

இந்தக் காரை வாங்க இப்போதே பலரும் போட்டி போட ஆரம்பித்துவிட்டதாகவும், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கலோனல் காரில் உள்ள நம்பர் பிளேட்டை தனது காரில் பொருத்த ஆர்வமாகி விலை பேசி வருவதாகவும் பிரவுன் கூறியுள்ளார்.

இந்தக் காரை கடந்த மாதம் இராக் அரசு ஏலத்தில் விட்டது. அதை நண்பர் ஒருவர் மூலம் வாங்கியுள்ளார் பிரவுன்.

Source: Oneindia

சூரியன்
24-07-2008, 02:49 PM
நல்ல தகவல் ராஜா அண்ணா.

நம்ம மன்மதன் அண்ணாவுக்கு இந்த காரை வாங்கி தந்துடலாமா?:icon_rollout:

மன்மதன்
25-07-2008, 02:15 PM
நல்ல தகவல் ராஜா அண்ணா.

நம்ம மன்மதன் அண்ணாவுக்கு இந்த காரை வாங்கி தந்துடலாமா?:icon_rollout:

என்னிடம் ஏற்கனவே நல்ல கார் இருக்கு...இங்க பாருங்க..:D (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9027)

அறிஞர்
25-07-2008, 02:20 PM
காருக்கு தனி மவுசுதான்.....
காருக்கு ஏதும் சிறப்பு ராசி இருக்கா..

என்னிடம் ஏற்கனவே நல்ல கார் இருக்கு...இங்க பாருங்க..:D (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9027)
உங்க காருக்கும் முன் இதெல்லாம் ஜுஜுபி....

அன்புரசிகன்
25-07-2008, 02:39 PM
அந்தாளோட காரக்கூட விட்டுவைக்கலயா??? செத்தும் சதாமை வாழவைத்துள்ளது அந்த கார்...

சூரியன்
25-07-2008, 03:56 PM
என்னிடம் ஏற்கனவே நல்ல கார் இருக்கு...இங்க பாருங்க..:D (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9027)

பார்த்தேன் அண்ணா உங்க காருக்கு முன்னாடி இதெல்லாம் சும்மா.

மயூ
28-07-2008, 04:40 AM
அத வாங்கிப்போடலாம் என்று பார்த்தன் அதுக்குள்ள மற்றவர் வாங்கிட்டார். ச்சீ.. மிஸ் ஆகிட்டுது

தங்கவேல்
28-07-2008, 05:38 AM
கொடுமை என்னவென்றால், எவராலும் அசைக்க முடியாத என்று கருதிய சதாம் இன்று இல்லை. ஆனால் அவரின் கார் மட்டும் இருக்கிறது.

மாளிகைகள் மண் மேடுகள் ஆவதும், குப்பை மேடுகள் கோபுரங்கள் ஆவதும் விதியின் விளையாட்டில் வாஸ்தவம் தான்.

ஓவியா
28-07-2008, 12:39 PM
லண்டனில் இருக்கா!! விலைக்கு போகுதா!!!!

யாராவது தனிமடலில் கொஞ்சம் சொல்லியிருக்கலாமே
நானும் ஒரு அம்மாவுண்ட் போட்டு இபேயில் வாங்கும் பட்டியலில் உக்காந்திருப்பேனே!!! அடடா!

மன்மதன்
28-07-2008, 01:39 PM
லண்டனில் இருக்கா!! விலைக்கு போகுதா!!!!

யாராவது தனிமடலில் கொஞ்சம் சொல்லியிருக்கலாமே
நானும் ஒரு அம்மாவுண்ட் போட்டு இபேயில் வாங்கும் பட்டியலில் உக்காந்திருப்பேனே!!! அடடா!

ஆமா.. அம்மா வாங்கக்கூடிய பேமண்டில் தான் இருக்கு அது..:rolleyes::rolleyes:

ஓவியா
28-07-2008, 01:45 PM
ஆமா.. அம்மா வாங்கக்கூடிய பேமண்டில் தான் இருக்கு அது..:rolleyes::rolleyes:

டைமீங்க்கு உங்கள வெட்டிக்கவே முடியாதே!!!

அம்மா ஒரு ஒட்டியாணம் விற்றாலே, அடுத்த நிமிடம் கார் வீட்டில் நிற்க்கும். ஆமா அம்மாகிட்ட இன்னும் பைசா இருக்கா??

மன்மதன்
28-07-2008, 02:36 PM
டைமீங்க்கு உங்க வெட்டிக்க முடியாதே!!!

அம்மா ஒரு ஒட்டியாணம் விற்றாலே, அடுத்த நிமிடம் கார் வீட்டில் நிற்க்கும். ஆமா அம்மாகிட்ட இன்னும் பைசா இருக்கா??

பசங்ககிட்டேயே இருக்கும்போது அம்மா கிட்டே இருக்காதா...இருக்கும்..இருக்கும்..:rolleyes: