PDA

View Full Version : தயக்கக் காதலி..!



சிவா.ஜி
24-07-2008, 05:16 AM
தயக்கத்தைக் காதலியாய் கொண்டதால்
எங்கும் என்னுடன் வருவதை
எப்படி முயன்றும் தவிர்க்க முடியாதிருந்தது!

எப்படியோ ஒரு நாள்
எனக்கும் அவளுக்கும் பிணக்கு
தயங்காமல் தீர்த்துவிட்டேன் அவள் கணக்கு!

தைரிய மனைவிக்கு மாலையிட்டேன்
வெற்றி, புகழ் எனும்
இரு பிள்ளைகள் இன்றெனக்கு!

shibly591
24-07-2008, 07:05 AM
ரசித்தேன்

ரசித்தேன்..

ரசத்தேன்..

ரசித்தேன்..

சிவா.ஜி
24-07-2008, 07:06 AM
நன்றி

நன்றி

நன்றி

நன்றி.......................ஷிப்லி!

இளசு
24-07-2008, 07:25 AM
நெடுநீர், மறவி, மடி, துயில் இந்நான்கும்
(மட்டுமல்ல)
கெடுநீரார் காமக்கலன்..

ஐந்தாவதாய் - தயக்கம்!

அதை உதறியவருக்கு வெற்றி,புகழ் கிட்டியதில் வியப்பில்லை!

பாராட்டுகள் சிவா!

சிவா.ஜி
24-07-2008, 07:35 AM
ஒவ்வொரு முறையும் புதுப்புது கருத்துக்களை என் ஞானப்பெட்டகத்துக்கு ஈந்து கொண்டே இருக்கும் இளசு...இங்கும் எனக்களித்தது சாலச் சிறந்தது.

நன்றி இளசு.

meera
24-07-2008, 08:54 AM
அண்ணா அருமை, தயக்கமே வெற்றியின் முதல் எதிரி என்பதை புரிந்தேன்.

தீபா
24-07-2008, 09:59 AM
தயக்கத்தைக் காதலியாய் கொண்டதால்
எங்கும் என்னுடன் வருவதை
எப்படி முயன்றும் தவிர்க்க முடியாதிருந்தது!

எப்படியோ ஒரு நாள்
எனக்கும் அவளுக்கும் பிணக்கு
தயங்காமல் தீர்த்துவிட்டேன் அவள் கணக்கு!

தைரிய மனைவிக்கு மாலையிட்டேன்
வெற்றி, புகழ் எனும்
இரு பிள்ளைகள் இன்றெனக்கு!

சில இடங்களில் தயக்கத்தைத் தயக்கத்தோடு கைத்தலம் பற்றவேண்டியிருக்கிறது. ஆனால் எல்லா இடங்களிலும் தயக்கம் தயங்குமா?

அக வலு தயக்கத்தினை எடைபோடும் நேரத்தில் புற வலுவும் தயக்க நீக்கத்திற்கு பெரிதும் உபயோகப்படும். நீங்கள் கவனிக்கலாம். உடற்கட்டுள்ள ஆண்பிள்ளைகள் அவ்வளவாக தயங்குவதில்லை.. ஆனால் அவர்களில் சிலருக்கு வாய்த்த புற வலு, அகத்தில் இல்லையெனில் தயக்கம் காண்பிப்பதையும் காணலாம்.

தயக்கம் ஒரு மாயபோதை. முற்றிலும் நீக்குவதைக் காட்டிலும் தவிர்ப்பது சுபம். புறக்கணித்தால் நாளை ஏற்றுக் கொள்ளலாம். நிராகரித்தால் ஏற்றுக்கொள்ளுதல் கொஞ்சம் கடினம்தான்..
இருபிள்ளைகள் கொண்ட கவிஞருக்கு என் வாழ்த்துகள்.

சிவா.ஜி
24-07-2008, 10:42 AM
நன்றிம்மா மீரா. தயக்கம் நிச்சயம் ஒரு தடைதான். அதைத் தவிர்த்தால் நலமே.

சிவா.ஜி
24-07-2008, 10:44 AM
அக வலிவையும், புற வலுவையும் ஆராய்ந்தெழுதிய தென்றலின் பின்னூட்டம் இதமாய் இருக்கிறது. உண்மைதான் சில இடங்களில் தயக்கம்...சரி, எல்லா இடங்களிலும் சரியில்லை.

அதே இரு பிள்ளைகளால் நீங்க ஆசீர்வதிக்கப்பட வாழ்த்துகிறேன் தென்றல். நன்றி.

சுகந்தப்ரீதன்
24-07-2008, 12:39 PM
ஒன்றை இழந்து ஒன்றை பெறுவதுதான் நான் கேள்விப்பட்டிருந்தேன்..!!
உங்கள் புண்ணியத்தில் ஒன்றை இழந்து இரண்டை பெறும் வித்தை அறிந்தேன்..!!

நன்றியண்ணா.. நலமான கவிதைக்கு என் வாழ்த்துக்கள்..!!

ஷீ-நிசி
24-07-2008, 04:00 PM
நல்ல கருத்து...... நன்றாக உள்ளது... சிவா. ஜி

உங்கள் கவிதைகள் படித்திருக்கிறேன். ஆனால் இந்த கவிதை உங்களின் பழைய கவிதைகளோடு ஒப்பிட்டுப்பார்த்தால் மிக சாதாரணமாக உள்ளது.

நல்ல கருத்து கிடைத்தும், கவிதைப்படுத்த அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லையோ?!

மீண்டும் உங்கள் பழைய கவிதைகளில் இருக்கும் வசீகரத்தை காண விரும்புகிறேன்.

வாழ்த்துக்கள்!

சிவா.ஜி
24-07-2008, 04:41 PM
உண்மைதான் ஷீ. மீண்டு வர முயற்சிக்கிறேன். கரு தோன்றியதும் எழுதி பதிந்துவிட்டேன். நன்றி ஷீ-நிசி.

சிவா.ஜி
24-07-2008, 04:45 PM
ஒன்றை இழந்து ஒன்றை பெறுவதுதான் நான் கேள்விப்பட்டிருந்தேன்..!!
உங்கள் புண்ணியத்தில் ஒன்றை இழந்து இரண்டை பெறும் வித்தை அறிந்தேன்..!!

நன்றியண்ணா.. நலமான கவிதைக்கு என் வாழ்த்துக்கள்..!!

அந்த ஒன்றை விடுவதால் சிறப்பான வேறிரண்டு கிடைக்கும்போது விட்டு விடுதல் சரிதானே சுபி. ரொம்ப நன்றி சுபி.

அக்னி
24-07-2008, 05:11 PM
(அ)(சட்டுத்)தைரியத்தைக் காதலித்தேன்...
தயக்கமாய் (பொறுமையாய்) க் கைப்பிடித்தேன்...
வெற்றி, புகழ் என, இரு பிள்ளைகள்,
என்றுமெனக்கு...

இப்படியும் பார்க்கலாமோ...

பாராட்டுக்கள் சிவா.ஜி...
ஆனால், உங்களுடைய கவிதைகளின் வழமையான வசீகரம் இக்கவிதையில் இல்லை.

அறிஞர்
30-07-2008, 07:19 PM
தயக்கத்துக்கு விடை கொடுத்து.. தைரியமாய் கைபிடித்ததின் விளைவு.. வெற்றியும் புகழும்..

அருமை சிவா..

arun
30-07-2008, 07:27 PM
தயக்கம் தான் தோல்வியை தடுக்கும் முயற்சி என்று கூட சொல்லலாம் தயங்காமல் செய்யும் காரியங்கள் வெற்றியில் தான் முடியும் என்பதனை எடுத்து காட்டுகிறது

சிவா.ஜி
31-07-2008, 05:13 AM
ஆனால், உங்களுடைய கவிதைகளின் வழமையான வசீகரம் இக்கவிதையில் இல்லை.

உண்மைதான் அக்னி. சொல்லவந்ததை சொல்லிவிடவேண்டுமென்ற முனைப்பில் வசீகரத்தை விட்டுவிட்டேன். விமர்சனத்திற்கு மிக்க நன்றி.

சிவா.ஜி
31-07-2008, 05:14 AM
தயக்கத்துக்கு விடை கொடுத்து.. தைரியமாய் கைபிடித்ததின் விளைவு.. வெற்றியும் புகழும்..

அருமை சிவா..
பல சமயங்களில் வெற்றியை எட்டிப்பிடிக்கத் தடையாக இருப்பது தயக்கம்தானே அறிஞர். அதை தேவைப்பட்ட சமயங்களில் விட்டொழித்தால் வெற்றியை நிச்சயம் அடையலாமல்லவா? நன்றி அறிஞர்.

சிவா.ஜி
31-07-2008, 05:15 AM
தயக்கம் தான் தோல்வியை தடுக்கும் முயற்சி என்று கூட சொல்லலாம் தயங்காமல் செய்யும் காரியங்கள் வெற்றியில் தான் முடியும் என்பதனை எடுத்து காட்டுகிறது
மிகச் சரியாகச் சொன்னீர்கள் அருண். பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.