PDA

View Full Version : நான் கவிஞனில்லை



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
23-07-2008, 07:47 AM
ஓன்றாய் கூடி பேசித் தீர்த்த
ஆயிரத்தெட்டு மாலைகளில்
எதையென்று சொல்வது

தனிமைச் சருகுகளில்
எண்ணத் தீ வார்த்த
தினசரி ஆஜரிட்டுச் செல்லும்
எந்த இரவுகளை நொந்து கொள்வது

உன் காதலைச் சொல்லும் முன்பே
நீடூழி வாழும் இந்த ஜோடி என்று
காசு வாங்கி சென்ற
எந்த குடுகுடுப்பை காரனை தேடுவது

தெரியாமல் தீண்டிச்செல்லும்
உன் விரல் ஸ்பரிசத்திற்காய்
இடித்து இடித்து கட்டிய
கடற்கரை மணல் வீடுகளின்
எந்த துகள்களை
குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவது

விழி சுற்றுமிடமெல்லாம்
விரோதிகள் தெரிய
உன்னை மட்டும் அறைந்தெழுதும்
சராசரி கவிஞனில்லை நான்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி

poornima
23-07-2008, 07:57 AM
//தெரியாமல் தீண்டிச்செல்லும்
உன் விரல் ஸ்பரிசத்திற்காய்
இடித்து இடித்து கட்டிய
கடற்கரை மணல் வீடுகளின்
எந்த துகள்களை
குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவது
//

எப்படி எல்லாம் சிந்திக்கிறீங்க..? பாராட்டுக்கள்
*

உங்கள் கையெழுத்தில் ஒரு சின்ன திருத்தம் இருப்பதாக அறிகிறேன்.
பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க தான் மட்டும் உண்பவன் நம்மைச்
சார்ந்தவன் அல்ல என்பது நபிமொழி.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
23-07-2008, 01:48 PM
பாராட்டியதற்கு நன்றி பூர்ணிமா

shibly591
23-07-2008, 01:54 PM
சுனைத் உங்கள் கவிதைகள் ரொம்ப அழகு..பாராட்டுக்கள்..

இளசு
23-07-2008, 05:58 PM
பூர்ணிமா சுட்டிய அதே இடம் என்னையும் ஈர்த்தது..

பாராட்டுகள் ஜூனைத்!

(காதல் கவிதைகள் பக்கம் நகர்த்தலாமே..)

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
24-07-2008, 07:09 AM
உற்சாக பின்னூட்டத்திற்கு நன்றி இளசு அவர்களே.

சுகந்தப்ரீதன்
24-07-2008, 01:11 PM
உங்க கவிதைகள் எல்லாமே வித்தியாசமான கோணத்தையும் வார்த்தைகளையும் உள்ளடக்கியிருக்கிறது..!!

வாழ்த்துக்கள் சுனைத் அண்ணா..!! தொடருங்கள்..!!

அக்னி
24-07-2008, 03:35 PM
ஓன்றாய் கூடி பேசித் தீர்த்த
ஆயிரத்தெட்டு மாலைகளில்
எதையென்று சொல்வது
கூடியிருந்த மாலைகள்,
சூடிக்கொள்ளாத மாலைகளால்,
வதைக்கும் மாலைகளானதை,
யாரிடம் சொல்வது..?



தனிமைச் சருகுகளில்
எண்ணத் தீ வார்த்த
தினசரி ஆஜரிட்டுச் செல்லும்
எந்த இரவுகளை நொந்து கொள்வது
வளர்த்து என்று வந்திருக்க வேண்டுமோ...

நிதம் தீயிட்டுப் போவது,
இனிமையாயிருந்த தருணங்களல்லவா...
வெந்து போகும் வரை
நொந்து வாழ்ந்திடுவேன்...



உன் காதலைச் சொல்லும் முன்பே
நீடூழி வாழும் இந்த ஜோடி என்று
காசு வாங்கி சென்ற
எந்த குடுகுடுப்பை காரனை தேடுவது
உன்னிடம் என்று வந்திருக்க வேண்டுமோ...

”நீடூழி வாழும் இந்த ஜோடி...”
என்று குடுகுடுப்பை சொன்னது,
என்னையும்.., உன் நினைவுகளையும்தானோ...
உன்னை(யென)த்
தவறி விளங்கியது நான்தானோ..?



தெரியாமல் தீண்டிச்செல்லும்
உன் விரல் ஸ்பரிசத்திற்காய்
இடித்து இடித்து கட்டிய
கடற்கரை மணல் வீடுகளின்
எந்த துகள்களை
குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவது
தெரிந்தே விடுவித்துச் சென்ற
உன் விரல்கள்
உராய்ந்த தடம்,
தளும்பாக என் மனதில்...

காலம் கரைக்க,
கடற்கரை மணலல்ல..,
என் மனது...



விழி சுற்றுமிடமெல்லாம்
விரோதிகள் தெரிய
உன்னை மட்டும் அறைந்தெழுதும்
சராசரி கவிஞனில்லை நான்.
அணைத்த பொழுதுகளில்,
உன்னை மட்டும்
எழுதியபோது,
சராசரி கவிஞனாய்
நான்...

அணைத்த போதிலும்,
உன்னை மட்டும்
அறைந்தெழுதிட,
சராசரி கவிஞனல்ல
நான்..,

காதலன்...

பாராட்டுக்கள் எஸ்.எம். சுனைத் ஹஸனீ அவர்களே...
(ஹசனீ என்று சொல்லலாம்தானே...)

நிர்வாகக் குறிப்பு:
காதல் கவிதைகள் பகுதிக்கு இக்கவிதை நகர்த்தப்படுகின்றது.

பூமகள்
24-07-2008, 03:39 PM
மணற் துகள்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி நிறுத்த முற்படும் உங்கள் கவித்துவ சிந்தனை அசர வைக்கிறது...

சொக்கினோம்..!!

அழகான கவிஞர் தானய்யா நீங்கள்..!! அசாதாரணமான கவிஞரும் தான்...!

பாராட்டுகள் ஜூனைத் அண்ணா. :)

Keelai Naadaan
24-07-2008, 03:54 PM
உங்க கவிதைகள் எல்லாமே வித்தியாசமான கோணத்தையும் வார்த்தைகளையும் உள்ளடக்கியிருக்கிறது..!!

வாழ்த்துக்கள் சுனைத் அண்ணா..!! தொடருங்கள்..!!
நானும் அதையே சொல்கிறேன். உங்களுடைய கவிதைகள் வித்தியாசமான கோணங்கள், வித்தியாசமான வார்த்தைகள்