PDA

View Full Version : ஒருமையுணர்வு



நாகரா
23-07-2008, 02:56 AM
ஒரு பக்கம்
தலையாக மனிதனாம் நீ!
மறு பக்கம்
இருதயப் பூவாகக் கடவுளாம் நான்!
கூறு போட முடியாத
தங்க நாணயம்
நாம்!
தகதகவென மின்னும்
நம் ஒருமையுணர்வு!
உலகெங்கும் செல்லும்
நம் பொன்னொளி!
நீ
ஒரு செல்லாக் காசு
என்ற மனப்பிரமையை விட்டுத்
தங்க நாணயமாய்த்
தகதகவென எழு!
"ஐ"யாம்(I AM) ஒருமையுணர்வில்
ஓங்கி எழு!
இப்போதே!

ஓவியன்
23-07-2008, 05:33 AM
கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது, அதாவது நான் என்ற ஒருமை உணர்விலும், நாம் என்ற பன்மை உணர்வு நமக்கும் நம் நாட்டுக்கு நன்மை பயக்குமே அண்ணா...??

அப்படியிருக்க, ஒருமை உணர்வை எழுப்பச் சொல்வதன் காரணம் யாதோ..??

இளசு
23-07-2008, 06:32 AM
ஓவி,

அன்பே சிவம்
அன்பு உள்ள
நான் கடவுள்..

இந்த ஒருமை உணர்வை நாகரா அவர்கள் சொல்கிறார் என நினைக்கிறேன்..

நாகரா
23-07-2008, 07:16 AM
கொஞ்சம் குளபம்மாக இருக்கிறது, அதாவது நான் என்ற ஒருமை உணர்விலும், நாம் என்ற பன்மை உணர்வு நமக்கும் நம் நாட்டுக்கு நன்மை பயக்குமே அண்ணா...??

அப்படியிருக்க, ஒருமை உணர்வை எழுப்பச் சொல்வதன் காரணம் யாதோ..??


ஓவி,

அன்பே சிவம்
அன்பு உள்ள
நான் கடவுள்..

இந்த ஒருமை உணர்வை நாகரா அவர்கள் சொல்கிறார் என நினைக்கிறேன்..

"நான்" என்னும் தன்மை
அன்பெனும் ஒருமை
இளசுவின் விளக்கம் அருமை
அத்தன்மையிலிருந்து எழுவதே
"நீ" என்னும் முன்னிலை.
நான் சிவம்
"நீ" சக்தி
சக்தியாம் "நீ"
உலகமென்னும் "படர்க்கை"யின்
ஜனனீ.
சிவமும் சக்தியும் உலகும் ஒருங்கே
"நாம்" எனும் பன்மை.
இந்த "நாம்" என்னும் "யாம்" பன்மை
தம் மூலத் தன்மையாம்
ஆதித் தலைமையாம்
"நான்" என்ற 'ஐ'(I)யை
அன்பெனும் ஒருமையை
எப்போதும் நினைவு கூர்வதே
"ஐ யாம்"(I AM)

"ஐ யாம்" இருக்க பயமேன்!

இன்னும் குழப்புகிறேனா, ஓவியரே! குழப்பத்தின் உச்சத்தில் தெளிவு பிறக்கும்!

உமது இருப்பை அதாவது நீர் அன்பெனும் ஒருமையுணர்வாய் இருக்கின்ற தன்மையை, உமக்குத் தெற்றென விளக்குவதே "நான்" என்ற நற்சொல். நற்சொல் நச்சுச் சொல்லானது ஏன்? அன்பெனும் கடவுளுணர்வைக் குறிக்கும் "நான்" என்ற நற்சொல்லை நச்சுச் சொல்லாக்கி, உள்ளுறையும் கடவுளை வெளியே காட்சிப் பொருளாக்கி, உம்மைக் குழப்பினாலொழிய பொய்ம்மத வியாபாரம் எப்படி நடக்கும்!? ஆழ யோசியுங்கள், ஓவியரே!

"ஓவியன்" என்பது உம் பெயரென்றால், நீங்கள் யார்? நான் தான் என்பதே சரியான பதில், அதுவே நம் அனைவருக்கும் முதற்பெயர். பன்மைகளனைத்தும் எழுகின்ற அதுவே சிவமாம் அன்பெனும் ஒருமை.

உம் கேள்விக்கு நன்றி ஓவியரே!