PDA

View Full Version : உயிர் கசியும் வேதனை



நாகரா
22-07-2008, 11:30 AM
ஒவ்வொரு கோடரி அடியிலும்
விட்டுப் போகுது
என் இதயத் துடிப்பு

இளசு
22-07-2008, 12:29 PM
பிசினாய், பாலாய், ஈரமாய்
மரமும் அழத்தான் செய்கிறது..

சகமனிதன் வேர்வையைக் குடித்தவன்
மர(த்த) கண்ணீருக்கா மருகுவான்?

சூழல் காப்பு தொடரட்டும் நாகரா அவர்களே!

சுஜா
22-07-2008, 01:44 PM
மரங்களின் வலிகள்
நன்றாகவே வலிக்கிறது .

நாகரா
22-07-2008, 03:11 PM
உம் பின்னூட்டங்களுக்கு நன்றி இளசு, சுஜா

அமரன்
22-07-2008, 03:23 PM
என்னைக்கொண்டு
என்னை வெட்டும் போதே
பாதி செத்தேன்..
வேகமாய் சரித்துவிடு
இனத்தை இனம் அழிக்கும்
ஈனம் சகிக்கவில்லை.

பூமகள்
22-07-2008, 04:51 PM
வெட்டுகளில்...
கட்டப்படுகிறது
எனது சமாதி...
என் உடற்சில்லுகளால்..!!

மரம் அழுதால் இந்த பூ தாங்காது...

மலரோடு மட்டுமல்ல.. மரமோடும் பேசும் மனம்... தாங்காது இவ்வகை அநீதிகள்..

மரத்தோடு நானும் குமைந்தேன்..

பாராட்டுகள் நாகரா அண்ணா.

Keelai Naadaan
22-07-2008, 05:33 PM
செங்குருதி சிந்த கண்டும்
சாவின் ஓலம் ரசித்த படியும்
மாமிசம் சுவைக்கும்
மனிதர்கள் நாங்கள்.

வெண்குருதி கசியும்
மரங்களின் துடிப்பு
மனதில் பதியுமா..?

நாகரா
23-07-2008, 02:28 AM
இளசு, அமரன், பூமகள், கீழை நாடான், உம் பின்னூட்டக் கவிகள் அருமை. நன்றி.

meera
23-07-2008, 03:05 AM
காக்க வேண்டிய
கரங்களே காயபடுத்தும் போது
கதறுவதில் பயன் எண்ண?


அழகிய வரிகள் அண்ணா. வாழ்த்துகள்.

நாகரா
23-07-2008, 04:24 AM
காக்க வேண்டிய
கரங்களே காயப்படுத்தும் போது
கதறுவதில் பயன் என்ன?


அழகிய வரிகள் அண்ணா. வாழ்த்துகள்.

தமிழைக் காக்க வேண்டிய
கரங்களே தமிழைக் காயப்படுத்தும் போது
தமிழ் சாகிறதே என்று கதறுவதில் பயன் என்ன?

உன் குறுங்கவிக்கும் வாழ்த்துக்கள் தங்காய்!

meera
23-07-2008, 11:22 AM
தவறை உணர்ந்தேன் அண்ணா. வேண்டுமென்று செய்யவில்லை இந்த தவறை. கவனிக்காமல் வந்த பிழை. இருதாலும் தவறு தவறே. சுட்டிகாட்டியமைக்கு நன்றி அண்ணா.