PDA

View Full Version : உயிர் காக்க மறந்து...



நாகரா
22-07-2008, 08:49 AM
மரத்தின் மேலமர்ந்து
எல்லாத் திசைகளிலும் கேட்கும்
உரத்த தமிழில்
கரைகின்றன காக்கைகள்
'கா', 'கா', 'கா'
'கா', 'கா', 'கா'
'கா', 'கா', 'கா'
'கா', 'கா', 'கா'

மரத்தைச் சுற்றி
முற்றுகையிடுகின்றன
கோடரிக் கைகளோடு
இரு கால் மிருகங்கள்

காக்கைகள் கரையும்
தமிழுக்குச் செவிடாகி
உயிர் காக்க மறந்து
மனிதம் அழிந்து

இளசு
29-07-2008, 08:36 PM
எம்மைக் கா!

தமிழில் சொல்லியும் இரங்கவில்லை என்னும்
நயமான நேயமான பார்வைக்குப் பாராட்டுகள் நாகரா அவர்களே!

அறிஞர்
29-07-2008, 11:26 PM
காப்பதற்கு.... கத்தும்
கா கா குரல்...
மனிதனின் செவிக்கு எட்டவில்லை..

அருமை நாகரா..

நாகரா
30-07-2008, 02:56 AM
உம் ஊக்க வரிகளுக்கு நன்றி இளசு, அறிஞர்.

shibly591
30-07-2008, 03:41 AM
அருமை நாகரா...

உங்கள் இணையத்தளத்தில் பயணம் செய்தேன்...

கொள்ளை அழகு

வாழ்த்துக்கள்...

நாகரா
30-07-2008, 03:49 AM
உம் வாழ்த்துக்களுக்கு நன்றி ஷிப்லி