PDA

View Full Version : கபிலுக்கு யுவராஜ் அம்மா தந்த கும்மாங்குத்து..!ராஜா
22-07-2008, 03:56 AM
http://www.tribuneindia.com/2006/20060726/cth%20(11).jpg

யுவராஜ் பார்ட்டி: கண்டித்த கபிலுக்கு அம்மா கண்டனம்!


டெல்லி: கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பார்ட்டிகளில் கலந்து கொள்வதற்குப் பதிலாக ஆட்டத்தில் கவனம் செலுத்தி சச்சின் டெண்டுல்கரைப் போல அணியில் நிரந்தர இடம் பிடிக்க முயல வேண்டும் என முன்னாள் கேப்டன் கபில்தேவ் அறிவுரை கூறியுள்ளார். இதற்கு யுவராஜ்சிங்கின் தாயார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் நடந்த ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி, இலங்கையிடம் தோல்வி அடைந்து கோப்பையை கோட்டை விட்டது. அந்தப் போட்டிக்கு முதல் நாள் இரவு உள்ளூர் நண்பர்களோடு முன்னணிவீரர்களான யுவராஜ் சிங், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா ஆகியோர் பார்ட்டியில் கலந்து கொண்டு விடிய விடிய சந்தோஷமாக இருந்ததாக செய்திகள் வெளியாகின.

இதனால் அடுத்த நாள் சரிவர ஆட முடியாமல் பெவிலியன் திரும்பினர். இதனால் இந்தியா தோல்வி அடைய நேரிட்டது.

இதுகுறித்து சர்ச்சை எழுந்தபோதிலும், அதுகுறித்தெல்லாம் விசாரிக்க முடியாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கமுக்கமாகி விட்டது. என்ன நடந்தது என்பதை விசாரிக்க கூட கிரிக்கெட் வாரியம் மறுத்தது சர்ச்சையைக் கிளப்பியது.

இந்த நிலையில் இலங்கை தொடரில் யுவராஜ் சிங் சேர்க்கப்படவில்லை. இதுகுறித்து சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் கேப்டன் கபில்தேவ், யுவராஜ் சிங்அடிக்கடி பார்ட்டிகளுக்குப் போவதைத் தவிர்க்க வேண்டும் என்று அட்வைஸ் செய்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், யுவராஜ் திறமையான வீரர். இவர் இரவு பார்ட்டிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து விட்டு, கிரிக்கெட்டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவரது தந்தை யோகராஜ் மிகச் சிறந்த டெஸ்ட் வீரராக விளங்கினார். தந்தையை போல கடினமாக முயற்சி செய்தால், யுவராஜ் டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடிப்பதை யாரும் தடுக்க முடியாது.

சச்சின் டெண்டுல்கர் தொடர்ந்து சிறப்பாக விளையாடுவதன் மூலமே அணியிலிருந்து வெளியேற்றப்பட முடியாத அளவுக்கு நிரந்தர இடம் பிடித்துள்ளார். அவரைப் போல மாற யுவராஜ் முயல வேண்டும்.

இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி செல்ல, திறமை மிக்க முன்னாள் வீரர்கள் பலர் உள்ளனர். இவர்களை பயிற்சியாளராக நியமிக்கலாம். வெளிநாட்டினர் மட்டுமே சிறப்பான பயிற்சியை வழங்கமுடியும் என்று கூறமுடியாது. நானும் கவாஸ்கரும் இந்திய கிரிக்கெட் வளர்ச்சிக்காக பாடுபட தயாராக இருக்கிறோம்.

நிர்வாகம் எங்கள் அனுபவத்தை பயன்படுத்தி, வளர்ச்சிப் பாதையில் கிரிக்கெட் வெற்றிநடை போட வழிவிட வேண்டும். ஆனால் நிர்வாகத்தில் சுயநலவாதிகள் சிலர் இதற்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றனர்.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்), இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்) இரண்டு அமைப்புகள் கிரிக்கெட் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகின்றன. ஒரே அமைப்பால், விளையாட்டின் தரத்தை உயர்த்த முடியாது. இங்கிலாந்து கவுன்டி அணிகளில் இடம்பெற்றுள்ள ஐ.சி.எல். வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் போர்டு தடையாக இருப்பது துரதிருஷ்டவசமானது. மத்திய அரசுக்கு மட்டுமே இந்த உரிமை உள்ளது என்றார் கபில்தேவ்.

யுவராஜ் சிங் அம்மா கண்டனம்:

இந்த நிலையில் கபில்தேவின் அட்வைஸ் தேவையற்றது என்று யுவராஜ் சிங்கின் தாயார் ஷப்னம் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கபில்தேவின் கருத்துக்களைப் படித்து நான் வேதனை அடைந்தேன். ஒரு தாயாக, நான் மிகுந்த வலியை உணர்கிறேன். யுவராஜ் சிங் பிறந்தது முதல் அவரை கபில் தேவுக்குத் தெரியும். அப்படிப்பட்ட கபில்தேவே இப்படிக் கூறியது எனக்கு வருத்தமளிக்கிறது.

பத்திரிக்கைகளில் வந்துள்ள தவறான செய்திகளின் அடிப்படையில் கபில் பேசியிருப்பது தவறானது.

கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல் எறியும் வேலை வேண்டாம் என கபில்தேவை கேட்டுக் கொள்கிறேன். அவருடைய கடந்த காலத்தை அவர் நினைத்துப் பார்க்க வேண்டும்.

அவர் விளையாடிய காலத்தில் அவர் செய்த தவறுகளை திரும்பிப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நாம் நமது காலத்தில் தேவதையாக இருந்ததில்லை என்பது அவருக்குப் புரியும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரம் ஹனீப் முகம்மது, மேற்கிந்திய நட்சத்திர வீரர் சர் கர்பீல்ட் சோபர்ஸ் போன்றோரெல்லாம் யுவராஜைப் பாராட்டியுள்ள நிலையில் கபில்தேவ் என்ற மாபெரும் வீரர் இப்படிப் பேசியிருப்பது வருத்தம் தருகிறது என்று கூறியுள்ளார் ஷப்னம்.

Source: Oneindia

சிவா.ஜி
22-07-2008, 04:18 AM
கபில் ஏதும் தவறாக சொன்னதாகத் தெரியவில்லையே? யுவராஜின் வளர்ச்சியில் அக்கறையோடுதானே சொல்லியிருக்கிறார். அதுமட்டுமல்ல ஒரு மூத்த வீரரின் அறிவுரையை ஏற்க வேண்டுமே தவிர கண்டனம் தெரிவிப்பது அத்தனை நல்லதல்ல.

பூமகள்
22-07-2008, 05:30 AM
தாய் கண்டிக்காததை குரு கண்டித்தால் குற்றமா??!!

இதுலையும் விளம்பரம் தேடுகிறார்களோ அம்மாக்கள்??

இளசு
22-07-2008, 06:33 AM
தூக்க மருந்தினைப் போன்றவை
பெற்றவர் போற்றும் புகழுரைகள் - நோய்
தீர்க்கும் மருந்தினைப் போன்றவை
கற்றவர் கூறும் அறிவுரைகள்..

aren
22-07-2008, 06:43 AM
தூக்க மருந்தினைப் போன்றவை
பெற்றவர் போற்றும் புகழுரைகள் - நோய்
தீர்க்கும் மருந்தினைப் போன்றவை
கற்றவர் கூறும் அறிவுரைகள்..

ஒருவன் நல்லவனாவதும்
தீயவானதும்
அன்னை வளர்ப்பினிலே!!!

பூமகள்
22-07-2008, 06:43 AM
எதிலும் ஓர் சிந்தனை புகுத்தி எழுதும் திறன்..
பிரம்மிக்க வைக்கிறது பெரியண்ணா.....

தேன் துளிகளாக உங்களின் கசப்பு மருந்துகள் இனிக்கின்றன...
உண்டு குணமாகும் மனங்கள்..!! :)

ஓவியா
22-07-2008, 07:09 AM
தூக்க மருந்தினைப் போன்றவை
பெற்றவர் போற்றும் புகழுரைகள் - நோய்
தீர்க்கும் மருந்தினைப் போன்றவை
கற்றவர் கூறும் அறிவுரைகள்..


ஒருவன் நல்லவனாவதும்
தீயவானதும்
அன்னை வளர்ப்பினிலே!!!

ஏன் இப்படி இரண்டு உயிர் தோழர்களும் எக்ஸ்ட்ரா ஒரு வார்த்தைகூட எழுதாமல் காலையிலே கடன்வாங்கி பின்னூட்டம் போட்டிருகிறீர்கள்!!! :D:D:D:D

ஓவியன்
22-07-2008, 08:57 AM
கபில்தேவ், பி சி ஐ மட்டுமல்ல, நல்ல விளையாட்டு வீரர்களும் அவருடன் மோதிக் கொள்வதுதான் வேதனை...

ராஜா
22-07-2008, 10:12 AM
கபில்தேவ், பி சி ஐ மட்டுமல்ல, நல்ல விளையாட்டு வீரர்களும் அவருடன் மோதிக் கொள்வதுதான் வேதனை...கபில், ஐசிஎல் தலைமைப் பொறுப்பில் இருப்பதால், அவர் சொல்லும் நல்ல கருத்துகள்கூட, தவறான கண்ணோட்டத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன போலும்.

அறிஞர்
22-07-2008, 03:10 PM
கபில், ஐசிஎல் தலைமைப் பொறுப்பில் இருப்பதால், அவர் சொல்லும் நல்ல கருத்துகள்கூட, தவறான கண்ணோட்டத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன போலும். எது கூறினாலும் குற்றம் குற்றமே. என்ற பார்வை...

நல்ல அறிவுரையை பின்பற்றினால்.. அவருக்கு நல்லது.

இந்திய அணி தலைவராக வேண்டிய யுவராஜ்... சொதப்பல் ஆட்டத்தினால்.. விட்டுவிட்டார் என்பது அனைவரும் அறிந்ததே..

அணியில் தன் நிலையை தக்கவைக்க பார்ட்டிகள் ஆடுவதை குறைக்கவேண்டும்.

arun
22-07-2008, 07:29 PM
என்ன செய்ய ? பெரும்பாலும் உண்மையை சொல்ல போனால் கசப்பாக தான் தெரிகிறது

இதில் கபில் சொன்னது மட்டும் விதிவிலக்கா என்ன?

பாலகன்
22-07-2008, 08:15 PM
இருவரில் யார் தான் என்ற அகந்தையில் இருந்தாலும் சீக்கிரம் போகவேன்டிய இடத்திற்கு போய்விடுவார்கள்

வணங்குற புல்லே தக்கும்

தகவலுக்கு நன்றி ராசா

அன்புடன்

ஷீ-நிசி
23-07-2008, 01:21 AM
யுவ்ராஜ்-ன் மீது அக்கறை கொண்ட காரணத்தினாலேயே கபில் தன் அறிவுரையை வழங்கியுள்ளார்....

பைபிளில் வரும் ஒரு வசனத்தைப் போல ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு கூறும் அறிவுரைகள்.. "பன்றியின் மூக்கிலிருக்கும் பொன் மூக்குத்திக்கு சமானம்...

பன்றி குப்பைகளை கிளறிகொண்டிருக்க கூடியது, அதில் பொன்மூக்குத்தி இருந்தால் அந்த பொன் மூக்குத்தியும் குப்பையில் தான் சேரும். கபிலின் அறிவுரைகள் பொன் மூக்குத்தி போல....

மறத்தமிழன்
23-07-2008, 06:22 AM
அறிவுரைதானே சொன்னார்? அது தவறான அடிப்படையில் சொல்லப்பட்டதென்றால் அது எந்த வகையில் தவறென நிரூபித்து மறுப்பு சொல்லியிருன்ந்தால் அது அன்னையின் பெருமையாகியிருக்கும். அதைவிட்டுவிட்டு, சொன்னவரையே அவரின் தனிப்பட்ட கடந்த வாழ்க்கையை கிழறி ரணகளப்படுத்துவது, தாய்க்குலத்தின் மாண்பிற்கே அவமானமான செயல்.
கடந்தகாலத்தில் தவறிளைத்தவர் அந்த அனுபவத்தில் தான் பெற்ற அனுபவ பாடங்களிலிருந்துகூட அறிவுரை சொல்லலாமென்பதை அந்த தாய்க்குலம் உணராதது வேதனை.

இளசு
23-07-2008, 06:24 AM
பைபிளில் வரும் ஒரு வசனத்தைப் போல ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு கூறும் அறிவுரைகள்.. "பன்றியின் மூக்கிலிருக்கும் பொன் மூக்குத்திக்கு சமானம்...

....

பாறையில் விதை கேள்விப்பட்டிருக்கிறேன்..
இது இன்று கற்றேன்!

நன்றி ஷீ!

ஷீ-நிசி
23-07-2008, 01:43 PM
பாறையில் விதை கேள்விப்பட்டிருக்கிறேன்..
இது இன்று கற்றேன்!

நன்றி ஷீ!

நன்றி இளசு ஜி!

shibly591
23-07-2008, 01:46 PM
கபில் -------ஜீனியஸ்...

யுவராஜ் அம்மா ----சராசரி தாய்..