PDA

View Full Version : எனது மணப் பெண்ணே



மதுரை மைந்தன்
21-07-2008, 11:28 AM
உனது உயரத்தைப் பற்றி எனக்கு கவலையில்லை
நற்குணத்தில் மற்ற ஆண்களிடையே என்னை
உயரமானவனாக என்னை காண்பாய்
நாமிருவரும் இணைந்தால் மகிழ்வுக்கு குறையேது?

உனது நிறத்தைப் பற்றி எனக்கு கவலையில்லை
கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு என்றாலும்
நாணத்திலும் கோபத்திலும் நீ சிவக்கிறாய்
நாமிருவரும் இணைந்தால் பொறாமையில்
மற்றவர்கள் முகம் வெளுக்கும்

உனது சாதியைப் பற்றி எனக்கு கவலையில்லை
ஆண் பெண் தவிர வேறு சாதி இல்லை என்று
நாமிருவரும் இணைந்து சாதிப்போம்

உனது நேற்றையை வாழ்வைப் பற்றி
எனக்கு கவலையில்லை
உனது இனறைய வாழ்வை
என்னுடன் பகிர்ந்து கொள்
மகிழ்ச்சிகரமான நாளை நமதே

ஷீ-நிசி
23-07-2008, 02:32 PM
வாழ்த்துக்கள் தோழரே!

தொடர்ந்து எழுதுங்கள்... கவிதை கைகோர்த்துகொள்ளும்!

மதுரை மைந்தன்
23-07-2008, 03:10 PM
வாழ்த்துக்கள் தோழரே!

தொடர்ந்து எழுதுங்கள்... கவிதை கைகோர்த்துகொள்ளும்!

உங்களுடய பாராட்டுக்கள் என்னை உற்சாகப் படுத்துகின்றன.

மிக்க நன்றி நண்பரே.