PDA

View Full Version : இன்றுமுதல் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு..!



ராஜா
21-07-2008, 05:48 AM
தமிழகத்தில் மின் பற்றாக்குறையைச் சமாளிக்க இன்றுமுதல் மின்வெட்டு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக மாநில மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அறிவித்திருக்கிறார்.

மின் தேவையை சமாளிப்பது குறித்து தலைமைச் செயலகத்தில் அரசு அதிகாரிகளுடனும் தொழில் அதிபர்களுடனும் ஆலோசனை நடத்தியபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் தினமும் ஒரு மணிநேரமும் மற்ற நகரங்களில் இரண்டு மணிநேரமும் மின்வெட்டு அமலில் இருக்கும் என்று கூறினார்.

இதுகுறித்து ஆற்காடு வீராசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை பொய்த்து விட்டதாலும், காற்றாலை மூலம் குறைந்தஅளவிலான மின்சாரமே உற்பத்தி செய்யப்படுவதாலும், 1000 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாகி யுள்ளது.

சென்னை நகரம் எட்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஏதாவது ஒரு மணிநேரம் மின் தடை இருக்கும் என்றும் அவர் சொன்னார்.

இந்த நெருக்கடியை சமாளிக்க தமிழகத்தை ஆறு மண்டலமாக பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திலும் வாரம் ஒருமுறை ஒரு மணி நேரத்திற்கு மின்தடையை அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ருப்பினும் இந்த மின் விடுமுறையிலிருந்து, விவசாயிகள், குடிநீர் விநியோகம், பால் பண்ணைகள் ஆகியவற்றுக்கு விலக்கு அளிக்கப்படும்.

மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு 60 சதவீத மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. ஒரு நாளைக்கு 1000 மெகாவாட் மின்சாரம் பற்றாக்கு றையாக உள்ளது. இதே நிலைதான் அண்டை மாநிலங்களிலும் நிலவு கிறது,.

மின்சார விடுமுறை காரணமாக, 375 முதல் 400 மெகாவாட் மின்சா ரத்றத சேமிக்க முடியும். மேலும், தொகுப்பு மின்உற்பத்தி மூலம் 500 மெகாவாட் மின்சாரம் பெறமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்களின் நலன்கருதி இரவு நேரங்களில் மின்சாரம் தடை செய்யப்பட மாட்டாது. அதேபோல கிராமங்களுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும். காற்றாலை மூலம் 2700 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என அரசு நினைத்திருந்தது. ஆனால் 1800 மெகாவாட் மின்சா ரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.அதேபோல,நீர் மின் நிலையங் களிலும், பருவ மழை பொய்த்ததால் எதிர்பார்த்த மின் உற்பத்தி இல்லை.

சென்னை, மதுரை, திருச்சி, கோவை மாநகராட்சிகளில் ஒரு மணி நேர மின்சாரத் தடை அமல்படுத்தப்படும். நகராட்சிகளில் 2 மணி நேர மின் தடை அமல்படுத்தப்படும். இதன் மூலம் 300 மெகாவாட் மின்சாரம் மிச்சப்படுத்தப்படும்.

mgandhi
21-07-2008, 06:08 PM
தகவலுக்கு நன்றி