PDA

View Full Version : IP Address யிலிருந்து - நாட்டைக் கண்டுபிடிக்கலாமா..?



மஸாகி
20-07-2008, 08:22 AM
அன்பு நண்பர்களே,

ஒருவர் இணையத்தைப் பயன்படுத்தும்போது,
அவருடைய IP Address யிலிருந்து
அவர் இணையத்தை பயன்படுத்திய நாட்டைக் கண்டுபிடிக்கலாம் என்கிறார்களே - அதனை எவ்வாறு கண்டுபிடிக்கிறார்கள்
என்பதை யாராவது விளக்க முடியுமா..?

(தெரியாததைக் கேளுங்கள் - என்ற திரியில் கேட்டதை இங்கே மறுபதிப்புச் செய்துள்ளேன்)

நட்புக்கு - மஸாகி
20.07.2008

ஓவியன்
20-07-2008, 08:39 AM
இதற்கு இணையத்தில் எத்தனையோ இணையத் தளங்கள் உள்ளன மஸாகி (கூகிளில் தேடிப் பாருங்கள்), உங்களுக்கு ஒரு ஐபி எண் தெரியுமிடத்தில் இந்த தளங்களின் உதவியுடன் அந்த ஐபி எண்ணுக்குரிய நாட்டினைக் கண்டு பிடித்து விடலாம்...

இளசு
20-07-2008, 09:39 AM
நன்றி ஓவியன்

ஆனால் பிராக்ஸி மூலம் உலவினால் இது சாத்தியப்படாது என்கிறார்களே?

சூரியன்
20-07-2008, 01:14 PM
நன்றி ஓவியன்

ஆனால் பிராக்ஸி மூலம் உலவினால் இது சாத்தியப்படாது என்கிறார்களே?

ஆமாம் அண்ணா நானும் இதை கேள்விபட்டுள்ளேன்.

அன்புரசிகன்
20-07-2008, 01:26 PM
கண்டுபிடிக்கலாம். அதாவது உங்கள் இணையத்தில் ஐபி மொனிட்டறிங் செய்தல் அவசியம். அதன் மூலம் ஐபி விலாசத்தை பெற்றால் பின் கண்டுபிடிக்க முடியும்...

உ-ம் -
http://www.geobytes.com/IpLocator.htm
தவிர உங்களுக்கு வரும் மின்னஞ்சல் கூட எந்தநாட்டிலிருந்து வந்துள்ளது என கண்டுபிடிக்க முடியும்.... ஆனால் gmail ல் சரிவர காட்டாது. அது அனைத்திற்கும் அமெரிக்காவிலுள்ள google ன் வழங்கியின் ஐபி விலசம் தான் தரும்....

yahoo ல் ஒருவரின் மின்னஞசலை படிக்கும் போது full header என்பதை அழுத்தினால் மின்னஞ்சல் அனுப்பப்பட்ட வழங்கியின் ஐபி விலாசம் தரும்.

ஐ.பீ அட்டஸை... (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7882) என்ற திரியில் நாம் முன்பு அடித்த அரட்டை உள்ளது. அங்கு சென்றும் பாருங்கள்....


நன்றி ஓவியன்

ஆனால் பிராக்ஸி மூலம் உலவினால் இது சாத்தியப்படாது என்கிறார்களே?

சாத்தியப்படும். ஆனால் சாத்தியப்படாது. :D

அதாவது உபபாதை இணையங்கள் மூலம் பாவிக்கும் போது அந்த இணைய வழங்கிகளின் நாட்டை தான் காட்டும்.

ஓவியன்
20-07-2008, 03:16 PM
புரோக்ஷி என்ற உப பாதை இணையங்கள் (நல்லதோர் தமிழுக்கு நன்றி அன்பு) மூலம் வந்தால் கண்டு பிடிக்க முடியாதுதான்...

இதே போல் சில நாடுகளில் நிலையான ஐபி எண்கள் இல்லாது, சுழற்சி முறையிலான ஐபி எண்களும் வழக்கத்திலுள்ளன, இவ்வகை ஐபி எண்களிலிருந்து வருபவர்களது நாடுகளையும் கண்டு கொள்வது கடினமே...

பாலகன்
20-07-2008, 03:38 PM
நண்பர்களே நல்லதொரு தகவல் இது,

http://whatismyipaddress.com/

இதையும் பாருங்களேன், வரைபடமே தெரியுது.

அன்புடன்

selvamurali
20-07-2008, 04:02 PM
நல்ல தகவல்கள்.
ஆனால் நண்பர்களே, ப்ளாக் செய்யப்பட்ட இணையங்களையும் அனானிமஸ் மற்றும் இன்டர்நெட் ப்ராக்சி வழியே ஓபன் செய்யலாம். சில நேரங்களில் இவை ஆபத்பாந்தவான்கள் என்றே சொல்லலாம்.
உதாரணத்திற்கு நமது நிறுவனத்தில் வேலை வழங்கும் தளங்களை நம்மால் பார்க்க இயலாது. ஆனால் அந்த மாதிரியான தளங்களை இந்த ப்ராக்சி தளங்களின் வழியாக ஒபன் செய்யலாம்.
ஆனால் ஒன்று நல்ல விஷயத்துக்கு செய்யலாம் இந்த மாதிரியான சில விஷயங்களையும் :)

மஸாகி
21-07-2008, 11:12 AM
நன்றிகள் - இவை வெறும் வார்த்தைகள் அல்ல..

நட்புக்கு- மஸாகி
21.07.2008

நிரன்
07-11-2008, 04:48 PM
நண்பரே புரோக்ஷி முலம் SSL CIRTIFICATE
முலம் பாதுகாப்பு செய்யப் பட்ட தளங்களை
நீங்கள் புரோக்ஷி முலம் பார்வையிட மட்டுமே
முடியும். அதனுள் password , username பயன்படுத்தி
லொகின் செய்ய முடியாது. ஏன் எனில் SSL SECURITY
பயன்படுத்தும் தளங்கள் புரோக்ஷியை அணுமதிக்காது
hotmail,yahoo,gmail போன்ற பெரிய தளங்களில்
பாதுகாப்புக் கருதி இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அதனால் ip address புரோக்ஷி முலம் மாறுவதற்கு
சந்தர்ப்பம் இல்லை. ஆனாலும் சில ip hide சாப்ட்வேர்
பாவிப்பதன் முலம் எமது இருப்பிடத்தை மறைக்க முடியும்
இது ஓரு சாதரண விடயம். சிலர் நினைப்பார்கள்
ip address மறைப்பதன் மூலம் தமது இருப்பிடத்தை
முற்றிலும் மறைத்து வி;ட்டதாக. ஆனால் அது முற்றிலும்
தவறான முடிவு. எமது இன்டர்நெட் க்கு என்று தனி
MAC ADDRESS
என்று ஓன்று உள்ளது. ip address இல்லாவிட்டாலும்
MAC ADDRESS ஐ வைத்து கண்டு பிடிக்கலாம்
ஆனால் இது சாதரண ip address போல கண்டுபிடிக்க
முடியாது.



மற்றும் ip address ஒருவருடைய வீட்டு
முகவரி தொடர்பு இலக்கம் போன்றவற்றையும்
எடுக்க முடியும்.

anna
07-11-2008, 05:11 PM
பில்லா கொடுத்த தகவல் பயனுள்ளதாக உள்ளது

sujan1234
17-12-2008, 04:42 PM
ஜபி முகவரியை கொண்டு தொலைபேசி இலக்கத்தை கண்டுபிடிக்க முடியுமா

நிரன்
17-12-2008, 07:07 PM
ஜபி முகவரியை கொண்டு தொலைபேசி இலக்கத்தை கண்டுபிடிக்க முடியுமா

கண்டிப்பாக முடியும் நண்பரே இதனை சதரணமாக எவரும் செய்ய முடியாது.
இதனை ஆங்கிலத்தில் HACK என்று கூறுவார்கள். நீங்கள் பயன்படுத்தும் இணையதளம்
உங்கள் வீட்டு தெலைபேசியினுடகவே வருகிறது என்றால் தொலைபேசி இலக்கம் எடுப்பதும் சாத்தியமே. எனக்கு நடந்த ஒரு அணுபவத்தை வைத்தே இதை நான்
உறுதியாக கூறுகிறேன்