PDA

View Full Version : எம்மக்களின் வரிப்பணங்கள் எதெற்கெல்லாமோ போகின்றது



அகத்தியன்
20-07-2008, 08:02 AM
ஏழை மக்களின் வரிப்பணங்கள்

இலங்கையின் முக்கிய அமைச்சர் ஒருவரான மகிந்த விஜயசேகர.
அமெரிக்காவின் லொஸ் வெகாஸ் சூதாட்ட விடுதிகளில் தன் மனைவியுடன் பொழுதினை கழித்தாரம்.

அது தொடர்பான படங்கள் இவை.
(மின்னஞ்சலில் கிடைக்கப்பெற்றது)

எம்மக்களின் வரிப்பணங்கள் எதெற்கெல்லாமோ போகின்றது. எமது நலனினை தவிர

http://bp3.blogger.com/_dSjWyO0FKMc/SILvcz88aMI/AAAAAAAAADo/1HKSlS11d4Y/s400/MahindaWijesekara1.jpg


http://bp1.blogger.com/_dSjWyO0FKMc/SILvdFGlFrI/AAAAAAAAADw/JzpRVY67HXI/s400/MahindaWijesekara2.jpg

http://bp2.blogger.com/_dSjWyO0FKMc/SILvdYWlvEI/AAAAAAAAAD4/0PVk4AFr_jE/s400/MahindaWijesekara3.jpg

ஓவியன்
20-07-2008, 08:17 AM
அவர் தன் சொந்தப் பணத்தில் உல்லாசமாக இருந்திருந்தால் பிரச்சினை இல்லை, மாறாக மக்களின் வரிப்பணத்தில் / அரசாங்கப் பணத்தில் உல்லாசமாக இருந்திருந்தால் அது கண்டிக்கத் தக்கதே..!!

தீபன்
20-07-2008, 10:39 AM
எப்படி தெரியும் அது வரிப்பணம்தானென...? அமைச்சர்களும் மனிதர்கள்தானே... அனுபவிக்கட்டுமே... ஊசி போற இடம் இது... உலக்கை மட்டுமல்ல உரல்களே போஇக்கிட்டு இருக்கு... இதப்போய் பெரிசு பண்ணிக்கிட்டு...

அகத்தியன்
20-07-2008, 10:53 AM
எப்படி தெரியும் அது வரிப்பணம்தானென...? அமைச்சர்களும் மனிதர்கள்தானே... அனுபவிக்கட்டுமே... ஊசி போற இடம் இது... உலக்கை மட்டுமல்ல உரல்களே போஇக்கிட்டு இருக்கு... இதப்போய் பெரிசு பண்ணிக்கிட்டு...

அமைச்சர்களின் வெளிநாட்டுச்சுற்றுலாக்கள்.
யார் பணத்தில் இடம்பெறுகின்றது?
அரச செலவில்தானே? அரசுக்கு நிதியளிப்பது எது? சாதாரண பொதுமக்களின் வரிப்பணம் இல்லாமல் வேறு என்ன நண்பரே?

அகத்தியன்
20-07-2008, 10:54 AM
அவர் தன் சொந்தப் பணத்தில் உல்லாசமாக இருந்திருந்தால் பிரச்சினை இல்லை, !!

சொந்தப்பணத்தில்.......
அரசியல்வாதிகள்......
ம்.....
உமக்கு வர வர ஓவர் நக்கலாயிற்று:lachen001: :lachen001:

உதயசூரியன்
20-07-2008, 11:46 AM
மனிதாபிமானம் உள்ளவன் தமிழன்..
தவறு தான்.. மன்னிப்போம்..மறு உதவியாக.. அவர்களும் மரியாதையை தந்தால் சரி...
வாழ்க தமிழ்

இளசு
20-07-2008, 03:01 PM
மேற்கு நாடுகளில் மந்திரிகள் இவ்வாறு உல்லாசப்பயணம் சென்றால்
முன்னரே அதன் முழு நிதி ஆதாரத்தை மக்களுக்குச் சொல்லிச்செல்லும் நியதி உள்ளது..

நம்மவர்கள்..?

பனைமரத்தடியில் பால்தான் அருந்துகிறார்கள் எனப் பொதுமக்களுக்குச்
சொல்லவேண்டிய கட்டாயம் அப்பதவியால் வருகிறது என என்று உணர்வார்கள்?

தீபன்
21-07-2008, 01:01 PM
அமைச்சர்களின் வெளிநாட்டுச்சுற்றுலாக்கள்.
யார் பணத்தில் இடம்பெறுகின்றது?
அரச செலவில்தானே? அரசுக்கு நிதியளிப்பது எது? சாதாரண பொதுமக்களின் வரிப்பணம் இல்லாமல் வேறு என்ன நண்பரே?


அது அவரின் தனிப்பட்ட பயணமாய் இருந்திருக்கலாம். அல்லது, அரச செலவில் சென்றாலும் அதை பயன்படுத்திக் கொண்ட தனிப்பட்ட செலவில் நடைபெற்ற களியாட்டமாகவும் இருக்கலாமே...

நான் வக்காலத்து வாங்கவில்லை நண்பரே... இப்படியும் இருக்கலாமென்றுதான் சொல்லவந்தேன்...

அதோடு, மக்களின் வரிப்பணத்தில் இதுவெல்லாம் ஜுஜூபி... நம்ம பணத்தில்தானே நமக்கே குண்டு போடுறாங்க... வான்ல வந்து கடத்துறாங்க... சுதந்திரமா நடமாடவிடாம தடுக்கிறாங்க... சுட்டுத்தள்ளுறாங்க...
இவராவது நம்ம பாதிக்காத மாதிரி தன்னளவில் சந்தோசப்பட்டுக்கிறார்... இல்லைன்னா அந்தப் பணமும் நம்ம மேலதானே வந்து விழ்ந்திருக்கும்... குண்டா...:sprachlos020: அந்தவகையில இவரப்போல அமைச்சர்கள் நமக்கு மறைமுகமா உதவிதானேப்பா பண்றாங்க...:lachen001:

அகத்தியன்
21-07-2008, 01:19 PM
சரி அப்பு..
உதுகளத்தான் சொல்ல வந்தன். :icon_b: :icon_b: :icon_b:

நீர் வக்காலத்து வாங்குகின்றீர் என்று யார் சொன்னது?